அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம் M.A.ஹனீபா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம், அடியார் தனது நெற்றியை நிலத்தில் வைத்து சிரம் பணியும் மிகவும் தாழ்ந்த நிலையான ஸஜ்தாவாகும். ஸஜ்தாவில் அதிகம் துஆச் செய்யுங்கள் என்பது நபி(ஸல்) அவர்களின் ஏவலாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில்  மிக நெருக்கமானது, அவர் ஸஜ்தாவிலிருக்கும்போதேயாகும். எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்)  அதிகமாகப்  பிரார்த்தியுங்கள். […]

தலையங்கம் : இஸ்லாத்தில் நாட்டுப் பற்று! உண்மையான தேசபக்தி… நாட்டுப் பற்று என்பது ஒரு நாட்டின் வரைபடத்தையோ, பூகோள அமைப்பையோ மண்ணையோ, கடலையோ, ஆறுகளையோ பாரத்மாதா என்று உருவபடுத்தி நேசிப்பதை விட அந்நாட்டைச் சேர்ந்த  மக்களை  நேசிப்பதுதான். இந்திய நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக  உழைப்பதும்  தான்  உண்மையான  இந்தியா  தேசப்பற்று. இந்திய நாட்டில் ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் […]

மறுமையில்…. சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்! அபூ அப்தில்லாஹ் இவ்வுலகில், உளப்பூர்வமாக நம்பிக்கை கொண்டிருந்தாலும் உதட்டளவில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயல்களான சமாதி வழிபாடுகளில் ஈடுபட்டாலும், ஏன்? சபரிமலை, திருப்பதி போன்ற கோயில்களுக்கே சென்று வந்தாலும், அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில், அவுலியாக்கள், அஆபிரீன்கள், சதாத்துகள், இமாம்கள் போன்ற இறந்தவர்களை இடைத் தரகர்களாகக கொண்டாலும், மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் மார்க்க மேதைகள், […]

பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 ஏப்ரல் தொடர்ச்சி… மூதாதையர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவது மார்க்கமா? மதத்தின் தொடர்பாகும் சம்பந்தப்பட்ட ஐயங்களுக்கு இங்கே ஓரளவு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். நியாயமாகத்தான் படுகின்றது. ஆனாலும் எங்கள்  முன்னோர்கள் எதில் இருக்கக் கண்டோமோஅதில் தான் எங்களுக்குப் பெருமை இருக்கிறது. சொர்க்கத்தில் இருந்தாலும், நரகத்தில் இருந்தாலும் அவர்களோடு இருக்கத்தான் விருப்பப்படுகிறோம் என்று சிலர் சொல்லலாம். அவர்கள் சொல்லில் உண்மை இல்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக் கூடியவர்கள், […]

முஸ்லிம்களுக்கு இன்றைய தேவை ஒருங்கிணைந்த பைத்துல்மாலும்! ஒன்றாக இணைக்கப்பட்ட கல்வியுமே!! S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த அந்த ஒரே இறைவன் உங்களுக்கு  அருள் புரியட்டும். இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த வாழ்வியல் நெறியும், வழிகாட்டுதலும் ஆகும். அதில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ்வொன்றும் இஸ்லாத்தில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) காட்டி தந்த ஒன்றை விட்டு விடுவதும் […]

ஜமாத் அல் முஸ்லிமீன்…. சுன்னத் வல் ஜமாத்தாக மாறியது சரியா? S. ஹலரத் அலி நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து நான்கு கலீஃபாக்கள் வரை முஸ்லிம்கள் “ஜமாத் அல் முஸ்லிமீன்” என்றே அறியப்பட்டனர். அதாவது, “முஸ்லிம்களின் சமுதாயம்” என்று பொருள். அப்போது எந்தப் பிரிவுகளோ அல்லது தனித்துவமான பெயர்களோ இருக்கவில்லை. “சுன்னத் வல்ஜமாத்” என்ற பெயர் பிற்காலத்தில் உருவானது. இதற்கான காரணங்களையும், எப்பொழுது உருவானது என்பதையும்  விரிவாகப்  பார்ப்போம். சுன்னத் வல் ஜமாத் என்ற பெயர் உருவாகக் காரணம் […]

இஸ்லாம் கூறும் உண்மையான  “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்றால் என்ன?  எஸ். ஹலரத் அலி, திருச்சி. இஸ்லாமிய சமுதாயத்தில் ஒற்றுமை என்பது மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்றில், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து, அவர்களை ஒரு உறுதியான சமுதாயமாக (உம்மத்தாக) உருவாக்கினார்கள். இந்த ஒற்றுமை வலியுறுத்தி, “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” (முஸ்லிம்களின் கூட்டம்) என்ற கருத்து இஸ்லாமிய சிந்தனையில் மையமான இடத்தைப் பெறுகிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற […]

இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்!! நபி(ஸல்) கால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் சிந்திப்போம்!  சீர்பெறுவோம்!! 1. குருடனும் பார்வையுடையவனும் ஒப்பாகமாட்டார்கள். (அதுபோல) ஈமான் கொண்டு அதற்கேற்ப நற்செயல்கள் செய்பவர்கள் தீமை செய்பவர்களுக்கு ஒப்பாகமாட்டார்கள். உங்களில் குறைவானவர்களே (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள். (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய  இறைவாக்குகள்) அல்முஃமின் 40:58) 2. குருடரும், பார்வையுடையவரும் சமமானவரல்ல, இருளும், ஒளியும் (சமமானது) அல்ல. நிழலும், வெயிலும் (சமமானது) அல்ல. உயிருள்ளவையும், இறந்தவையும் சமமானவை அல்ல. நிச்சயமாக […]

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025  ஏப்ரல்  மாத  தொடர்ச்சி… இதனால் தொடராக நாற்பது நாட்கள் நோன்பிருந்து தூர்சீனா மலையின் புனித பள்ளத்தாக்கிற்குச் சென்று படாதபாடு பட்டுப் பெற்றுவந்த தவ்ராத் நெறிநூல் எழுதப்பட்ட புனித பலகை ஏட்டை நிலத்தில் வீசி எறியும் அளவிற்குப பொறுமையை இழந்து இறைததூதர் மூஸா(அலை) அவர்களுக்கு மன வேதனையையும், கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு […]

வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி! அய்யம்பேட்டை A. நஜ்முதீன்  ஏப்ரல்  மாத  தொடர்ச்சி…. இறையருளால் இந்த ஆண்டு 2025, ஜனவரி மாதம் முதல் வெளிவரும் “வருமுன் காப்போம்‘ கட்டுரை பரவலாக வாசகர்களிடமிருந்து எதிர்பார்த்தத்திற்கு மேலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அல்ஹம்துலில்லாஹ். பொதுவாக மார்க்க ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சரியான விழிப்புணர்ச்சி இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மார்க்க ரீதியாக  சரியான விழிப்புணர்ச்சி ஏற்பட சுமார் 40 ஆண்டுகளாக அந்நஜாத்தில் […]

அறிந்து கொள்வோம்!  மர்யம்பீ, குண்டூர் 1. ஊசி துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை சொர்க்கத்தில் நுழையாதவர்கள் யார்? அல்லாஹ்வின்வசனங்களைபொய்ப்பித்துபெருமையடிப்பவர்கள். 2. நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் என்ன  கேட்பார்கள்? தண்ணீர்அல்லதுஅல்லாஹ்வழங்கியவற்றையோஎங்கள்மீதுஊற்றுங்கள். அ.கு. 7:50 3. வெட்கத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன  கூறினார்? ஈமான்என்னும்இறைநம்பிக்கையின்  ஒரு  கிளை  ஆகும்.  புகாரி: 4. நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒன்று என்று எதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? அன்சாரிகளை : வெறுப்பது.   புகாரி: 17 5. நூஹ்(அலை) அவர்கள் சமூகத்தின் பிரமுகர்கள்   […]

இறைநூல் (குர்ஆன் !)  அய்யம்பேட்டை A. நஜ்முதீன் குர்ஆனின் வரலாறு என்பது வந்து, வாழ்ந்துவிட்டுப் போனவர்களின் வாழ்க்கை வரலாறு போல் அல்ல; மாறாக சாதனைகளைத் தந்து பல சரித்திர மனிதர்களை உருவாக்க உறுதுணையாக அன்றும், இன்றும், என்றும் இருப்பதாகும். எப்படி சுடப்படாத தங்கம் ஆபரணமாவதில்லையோ, துளையிடப்படாத மூங்கில் புல்லாங்குழலாக ஆவதில்லையோ, உளியின் வலிக்கு பயந்த கற்கள் சிற்பமாவதில்லையோ அதுபோல் குர்ஆனை படிக்காத அதிலுள்ளதை சிந்திக்காத அதை பின்பற்றாத எந்த மனிதனின் வாழ்க்கையும் முழுமைப் பெற்றதாக  ஆவதில்லை. குர்ஆனை […]

புதிய வக்ப் மசோதா திருத்தவா? திருடவா? தற்பொழுது மீடியா, சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் மக்கள் மத்தியிலும் TRENDING  NEWS  (தலைப்புச் செய்தியாக) இருப்பது புதிய வக்ப் மசோதாவைப் பற்றியே. (இது சில வாரங்கள்தான், பின்பு இதற்கு முன்பு நடந்த பல விடயங்களை கடந்து போனது  போல் இதையும் கடந்து போய்விடுவார்கள்) வக்ப் மசோதா இப்போதுதான் புதிய தாக திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு திருத்தம் செய்யப்படவே இல்லையா? என்றால் பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது  என்பதே  உண்மை. ஆனால், […]

கல்வியின் பயன்! M. சையத் முபாரக், நாகை கல்வியின்  அவசியம் : “…(நபியே!) அறிந்தவர்களும், அறியாதவர் களும் சமமாவார்களா? என்று நீர் கேட்பீராக! அறிவுத்திறனுடையோர்தான்  உபதேசம்  பெறுவர்.”   (அல்குர்ஆன் 39:9) அல்குர்ஆன் உண்மை; அது நேர்வழி காட்டி  (பார்க்க : 34:6)  என்றும் அல்லாஹ்விடமிருந்து அருளப்படுவது உண்மை என்று அறிபவர் பார்வையில்லாதவரைப் போலாவாரா? (பார்க்க : 13:19) என்றும் அல்குர்ஆன் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது ஒவ் வொருவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்பதற்காக. ஆகவே, நாம் கல்வியறிவு […]

தலையங்கம் : அந்நஜாத்தும்! நாற்பதாம் ஆண்டும்! அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அந்நஜாத் தனது 39ம் ஆண்டுகள் பணியை தொய்வின்றி முடித்துக்கொண்டு 40ஆம் ஆண்டில் பணியை துவக்குகிறது. அல்ஹம்துலில்லாஹ். மர்ஹும் அபூ அப்தில்லாஹ் மற்றும் சில தனி மனிதர்களின் முயற்சிக்கு பிறகே பல தெளிவுக்கு பிறகே “”அந்நஜாத்” 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் இதழ் ஆரம்பிக்கப்பட்டு வெளிவரத் தொடங்கி இறைவன் கிருபையால் இன்றும் “”பாதை மாறா  பயணம்”  தொடர்கிறது. இதுவரை பயணம் […]

பல்சமயச்  சிந்தனை! ஆசிரியர் குழு 2025 மார்ச் தொடர்ச்சி… சிதறிய  சிந்தனை  ஒன்றுபடும்போது! இதுபோல் ஒரு மனிதன், ஒரு கல்லையோ ஒரு சிலையையோ, ஒரு மகானையோ, வேறெதையோ மையமாக வைத்து, அவனது சிதறும் சிந்தனையை ஒன்றுபடுத்தினால், இந்த நிலைகளும், தோற்றங்களும், காட்சிகளும் ஏற்படவே செய்யும். அவனிடத்தில் சில, பல அதிசயங்களும் நிகழ்ந்து விடலாம். இதில் வியத்தற்கொன்றுமில்லை, இது அனைத்து மதவாதிகளிடமும் காணப்படும் ஒன்றாகும். இதனால்தான் அவரவர்கள் இருக்கக்கூடிய மதங்களிலேயே உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தங்களது மதம் தங்களுக்கு […]

மிகவும் ஆபத்தான  (Danger) மனிதர்கள் யார்? அய்யம்பேட்டை  A. நஜ்முதீன் பொதுவாக மனிதர்களில் ஆண், பெண் என இரு சாரார்கள் உண்டு. இந்த இரு சாரார் களையும் சாராத மூன்றாவதாக ஒரு சாரார் உண்டு. திருநங்கை என்ற பெயரில் உலகம் முழுவதும் சிலர் பரவியுள்ளனர். இந்த மூன்றாம் வகுப்பினரால் பல அனாச்சாரங்கள் நடைபெற்று வருவது பலரும் அறிந்த ஒன்று. இவர்களை நாம் அடையாளம் காணமுடியும். (அவர்களின் செயலாலும், பேச்சாலும் ஆடை அலங்காரங்களாலும் அவர்களை (திருநங்கைகளை) இலகுவாக அடையாளம் […]

ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம் நபிகால இஸ்லாமிய ஒற்றுமை;  பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்! முஹிப்புல் இஸ்லாம் மறு பதிப்பு : (இறைத்தூதர் நுஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ அதையே (அந்த இஸ்லாத்தையே) உங்களுக்கும் (அந்த அல்லாஹ்)  மார்க்கமாக்கியிருக்கின்றான். (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் (இறைத்தூதர்கள்) இப்ராஹீம், மூஸா ஈஸா ஆகியோருக்கும் (இறைக் கட்டளையாக)  அறிவுறுத்தியதும், (இஸ்லாம்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்து விடாதீர்கள்  என்பதுதான். இணை வைப்போரை எதன் (இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ […]

குர்ஆன், ஹதீதைப் பற்றிப் பிடித்துக்கொள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜிலானி(ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளை விட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய் யான கதைகள் உலவுகின்றன. இறைவனுக்கு இணை வைக்கக் கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப்  பிரசாரமும்  செய்யப்படுகின்றது. “என்னை ஆயிரம் முறை அழைத்தால் நான் ஓடோடி […]

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!  எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025  மார்ச்  மாத  தொடர்ச்சி… மதீனாவாசிகளுக்கும் அங்கு குடியேறிய யூதர்களுக்கும் சண்டை மூளும்போது “கடைசி காலத்தில் ஒரு நபி வருவார்” அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்” என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதைப் பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருக்கின்றார் கள். (ஜாதுல் மஆது, இப்னு […]