கலீஃபா அபூபக்கர்(ரழி)

in 1996 அக்டோபர்,பொதுவானவை

நபித் தோழரின் வாழ்க்கையில் நடந்தவை….

M.S. கமாலுத்தீன்

    மனிதர்களில் சிறந்தோர் என் காலத்தவர், அதற்கடுத்துச் சிறந்தோர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அவர்களை அடுத்து கொழுத்த ஒரு கூட்டத்தினர் வருவார்கள் – கொழுத்திருப்பதை அவர்கள் விரும்புவார்கள் என்ற சொன்ன நபி(ஸல்) அவர்கள், எனக்குப் பின் பன்னிரெண்டு அமீர்கள் தோன்றுவார்கள்; அவர்கள் அனைவரும் “குரைஷ்” குலத்தவர்கள். எனது சமுதாயத்தில் கிலாபத் ஆட்சி காலம் முப்பது ஆண்டுகளாகும். அதன் பின்னர் மன்னராட்சி ஏற்படும் என்றெல்லாம் முன்னறிவிப்பு செய்த நபி(ஸல்) அவர்கள் ‘கிலாபத்’ சம்மந்தமாக எந்த வஸீயத்தும் செய்யவில்லை. அதற்குக் காரணம் இருந்தது. அலீ(ரழி) அவர்களுக்கு கிலாபத் மீது ஆசையிருந்தது. அதே சமயம் அச்சமும் இருந்தது.

    நபி(ஸல்) அவர்கள் நோயுற்று இருந்தபோது, அப்பாஸ்(ரழி) அவர்கள், அலீ(ரழி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக, நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் இந்த சுகவீனத்தில் இறந்து விடுவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன். எனவே நீங்கள் என்னுடன் வாருங்கள். இந்த (கிலாஃபத்தின்) காரியம் எவருடைய பொறுப்பில் இருக்கிறது என்பதை நாம் அவர்களிடம் விசாரிப்போம்.அது நம்மிடம் இருக்குமானால் நாம்  அதை விளங்கிக் கொள்வோம். பிறரிடம் அது இருக்குமானால் அதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் பேசி – அவர்கள் நமக்கே அதனை மரண சாசனம் செய்து தந்து விடுவார்கள் என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரழி) “நாம் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு பின்னர் அதனை அவர்கள் மறுத்து விட்டால் மக்கள் பின்னால் நமக்கு கிலாஃபத்தை அளிக்க (முன்) வரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கிலாஃபத் பற்றி கேட்கவே மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.”

    நபி(ஸல்) அவர்கள் தனக்குப் பின்னால் இன்னார்தான் கலீஃபா என்று நேரிடையாகச் சொல்ல விட்டாலும் சூசகமாகச் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஏதோ ஒரு விஷயமாகப் பேசினார். அப்போது நபிஸல்) அவர்கள் பிறகு வருமாறு கூறினார்கள். அதற்கு அந்த பெண் “நான் தங்களை அடையாவிட்டால்” என்று நபி(ஸல்) அவர்களின் இறப்பைப் பற்றி எண்ணியவராகக் கூறினார். “நீ என்னை அடையாவிட்டால் அபூபக்கர்(ரழி) அவர்களிடம் செல்லும் என்று (தங்களுக்குப்பின் கலீஃபாவாக ஆக வேண்டியவரைப் பற்றி சூசகமாகக்) கூறினார்கள். அறிவிப்பவர் :- ஜுபைர் இப்னுமுத்இம்(ரழி), ஆதார நூல்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ.

    பல சந்தர்பங்களில் அபூபக்கர்(ரழி) அவர்களை மக்களுக்கு தொழ வைத்ததுக் கொடுக்கும்படி ஏவி உள்ளார்கள்….எனக்குப் பின்னர் (உயிரோடு) இருக்கும் அபூபக்கர்(ரழி) அவர்களையும், உமர்(ரழி) அவர்களையும் பின்பற்றி நடங்கள் என்று கூறினார்கள். (ஹுதைஃபா(ரழி) திர்மிதீ). நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க கலீஃபாவை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

    மக்காவின் அகதிகள் (முஹாஜிர்கள்) அனைவரும் அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) அவர்களின் பக்கம் ஒன்று சேர்ந்திருந்தார்கள். மதீனாவின் ஆதரவாளர்கள் பனூஸாயிதாவுடைய வீட்டின் உள்ளறையில் ஒன்ற கூடிவிட்டனர். அங்கு ஸஃத் துப்னு உபாதா(ரழி) அவர்களுமிருந்தனர்.

    எங்களில் ஒரு தலைவரும் – குரைஷிகளாகிய உங்களில் ஒரு தலைவரும் இருக்கட்டும் என்று ஸஃதுப்னு உபாதா(ரழி) அவர்களிடம் அன்ஸாரிகள் கூறுவதாகக ஒரு செய்தியை அபூபக்கர்(ரழி) கேள்விப் பட்டார்கள். உடனே உமர்(ரழி) அவர்களையும், அபூஉபைதா(ரழி) அவர்களையும் அழைத்துக்  கொண்டு அங்கு சென்றார்கள். அவர்கள் மத்தியில் உமர்(ரழி) பேச முற்பட்ட போது, அபூபக்கர்(ரழி) அவர்கள் வெறுமனே இருக்கச் செய்துவிட்டு, அபூபக்கர்(ரழி) பேசினார்கள். (நான் என்னவெல்லாம் பேச எண்ணியிருந்தேனோ அவற்றையெல்லாம் என்னை விட மிகச் சிறப்பாக பேசினார்கள் என்று உமர்(ரழி) சில காலத்துக்கு பின்னர் குறிப்பிட்டார்கள். (புகாரீ) நாங்கள் தலைவர்களாவோம். நீங்களோ அமைச்சர்களாவீர்கள் என்று கூறிய போது கப்பாப் இப்னு முன்சிர்(ரழி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் அப்படியிருக்க விரும்பவில்லை. உங்களில் ஒரு தலைவரும், எங்களில் ஒரு தலைவரும் இருப்பதையே விரும்புகிறோம் என்று மீண்டும் சொல்ல – இதைக் கேட்ட கூட்டத்தினரிடையே பெரும் கூச்சல் ஏற்பட்டது. மீண்டும் அபூக்கர்(ரழி) பேசினார்கள். இதுபற்றி குரைஷிகளை விட வேறு எவருக்கும் உரிமை கிடையாது. அவர்கள்தான் அரபு நாட்டின் தாயமாகிய மத்திய இடத்தில் குடியிருக்கின்றனர். சிறந்த வழியில் தோன்றியவர்களாகவும் உள்ளனர். எனவே நீங்கள் உமர்(ரழி) அவர்களிடமோ அல்லது அபூஉபைதா(ரழி) அவர்களிடமோ கைபிடித்து உறுதிப் பிரமாணம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

    முஸ்லிம்களிடையே பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு பெரும் கூச்சல் ஏற்பட்டது. நிலைமை உணர்ந்த உமர்(ரழி) அவர்கள், “நாங்கள் உங்களிடமே கைபிடித்து உறுதிப் பிரமாணம் செய்கிறோம். நீங்களே எங்கள் தலைவர். மேலும் எங்களில் மிக மேலானவர்; நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் உவப்பானவர்கள் என்று கூறி அபூபக்கர்(ரழி) அவர்களின் கைபிடித்து உறுதிப் பிரமாணம் செய்தார்கள்.” பின்னர் முஹாஜரீன்களும் அன்ஸாரிகளும் உறுதிப்பிரமாணம் செய்தார்கள்.

    அப்போது ஒருவர் உமர்(ரழி) அவர்களை நோக்கி நீங்கள் ஸஃதுப்னு உபாதா(ரழி) அவர்களை தலைமைப் பதவியை அடைய விடாது கொன்று விட்டீர்கள் என்று கூறினார். அதற்கு உமர்(ரழி) அவ்விதம் ஆகாமல் அல்லாஹ் கொன்று விட்டான் என்று கூறினார்கள்.

    இவ்விருவரின் பேச்சுக்களினால் அல்லஹ் நன்மையே செய்தான். மக்களிடையே நிலவி வந்த நயவஞ்சகத் தன்மையை அல்லாஹ் நீக்கி விட்டான். பின்னர் அபூபக்கர்(ரழி) அவர்கள் மக்களுக்கு  அல்லாஹ்வின் வழியைக் காட்டினார்கள்; அன்றி அவர்களும் உண்மை நிலையை உணர்ந்து கொண்டு விட்டார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் தூதரேயன்றி (வேறு) இல்லை.அவருக்கு முன்னரும் பல தூதர்கள் (காலம்) சென்று விட்டார்கள்.அவர் இறந்து விட்டாலோ அல்லது வெட்டப்பட்டு விட்டாலோ நீங்கள் புறமுதுகிட்டு ஓடிவிடுவீர்களோ….என்ற 3:144 வசனத்தை ஓதியவர்களாக அங்கிருந்து புற்பபட்டார்கள்.(ஆயிஷா(ரழி, புகாரீ, நஸயீ) முதல் கலீஃபாவின் ஆட்சி இவ்விதமே துவங்கியது. அவர்கள் ஆட்சியும் சிறப்பாக இருந்தது.

இறைவழியில் நிலைத்திருக்க! இறைவனையே வேண்டுவீர்!

    அன்றியும், மனிதனுக்கு  நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான். ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.

(அல்குர்ஆன் 41:51)

    நான் ஒருமுறை உம்முஸலமா(ரழி) அவர்களிடம் மூமின்களின் தாயே! நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் இருந்து கொண்டிருக்கும் போது எந்த துஆவை அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “உள்ளங்களை மாற்றுபவனே! எனது உள்ளத்தை உனது தீனில் – மார்க்கத்தில் நிலைக்கச் செய்வாயாக!” என்பதே அவர்களின் பெரும்பாலலான துஆவாக இருந்தது என்றார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ருபின் ஷவ்ஷா(ரழி) நூல் : திர்மிதீ

Previous post:

Next post: