மிகமிக அற்பமான இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கையே!

in 2015 நவம்பர்

அபூ அப்தில்லாஹ்

சென்ற அக்டோபர் இதழில் “”இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு இடம் அணுவளவும் இல் லவே இல்லை”. மதகுருமார்களை, இயக்கத் தலை வர்களை, அரசியல் தலைவர்களை வழிகாட்டிக ளாகக் கொள்வது 9:31 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத ´ஷிர்க்-இணை வைத்தல் எனும் பெருங்குற்றம் என்பதை எண்ணற்ற குர் ஆன் வசனங்களைக் கொண்டு விளக்கி இருந்தோம்.
இந்த இதழில் அதே வி­ஷயத்தை இன்னொரு கோணத்திலும் அலசுவோம். உலகளாவிய அளவில் எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பரீட்சை மூலம் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் அவர்கள் வெற்றி பெறுவார்களா? தோல்வி அடைவார்களா? என்பதை நிலைநாட்டி விடலாம். எனவே பரீட்சைகளில் மற்றவர்களின் ஊடுருவலுக்கு இடம் அறவே இல்லை. அனுமதி அறவே இல்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந் தாலும் சுயமாகக் கேள்வியை விளங்கி அதற்குரிய பதிலை எழுத வேண்டும். அதற்கு மாறாகப் பக்கத்திலிருப்பவர், அவர் 0 புள்ளி எடுப்பவரோ, 35 புள்ளி எடுப்பவரோ, அல்லது நூற்றுக்கு நூறு புள்ளி எடுப்பவரோ அவரைக் காப்பி அடித்தால், தோல்வியே கிட்டும். ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்பதை மறுப்பார் உண்டா?

அதே சமயம் அவர் வெற்றி அடைய விரும்பினால், பரீட்சைக்கு முன்னர், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமோ, அல்லது திறமையான மாணவனிடமோ எப்படிப்பட்டக் கேள்விகள் வரும்? அதற்கு என்ன பதில் எழுத வேண்டும்? என்று கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை. தாராளமாக அனுமதி உண்டு. அதேசமயம் கேட்கப்பட்டவர் கையளவு அல்ல, சாத்தியமே இல்லாத உலகளவு கற்ற மேதையாக இருந்தாலும்(?) பாடத்திட்டத்தி லுள்ள (றீதீயியிழிணுற்வி) பாடங்களை மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டும். அம்மேதை அதை விட்டுத் தனது கற்பனைகளையும், சுய கருத்துக்களையும் சொல்ல, கேட்பவர் அதையே அப்படியே ஏற்று பரீட்சையில் எழுதினால் கிடைப்பது 0 புள்ளியே. பெருந் தோல்வியே!

ஆக பரீட்சை எழுதுபவர் சுயமாகப் பாடத் திட்டத்திலுள்ள பாடங்களைப் படித்து விளங்கி அதன்படி எழுதினால் மட்டுமே 35 புள்ளியிலிருந்து 100 வரை கிடைத்து அவர் பரீட்சையில் வெற்றி பெற்றுத் தன் இலட்சியத்தை அடைய முடியும். இதை மறுப்போர் மவ்லவிகளில், இயக்கத் தலைவர்களில் அரசியல் தலைவர்களின் யாரும் உண்டா?

இப்போது நிதானமாகச் சுயமாகச் சிந்தியுங்கள். அல்லாஹ் 67:2ல் “”உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்….” என்று நேரடியாகவே கூறியுள்ளான், மேலும் 21:35 வசனத்தில்

“”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்ப தாகவே இருக்கிறது. பரீட்சைக்காகக் கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம்….” என்று பரீட்சையை உறுதிப் படுத்துகிறான். இன்னும் 2:124,155,249, 3:152,154, 186, 5:48,94, 6:165, 7:141,163, 8:17, 10:30, 11:7, 14:6, 16:92, 18:7, 27:40, 33:11, 37:106, 44:33, 47:31, 68:17, 76:2, 89:15,16 இந்த அனைத்து குர்ஆன் வசனங்களையும் யார் பொறுமையாக நிதானமாக பெரும் ஜிஹாதாக (பார்க்க 29:69) படித்து விளங்குகிறார்களோ அவர்கள் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், மற்றப் பெரும் பெரும் கோள்களுடன் ஒப்பிடும் போது அற்பமான சின்னஞ்சிறிய ஒரு சிறிய புள்ளி யளவில் உள்ள பூமிப் பரீட்சை மண்டபத்தில் இருந்து பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்பதை எளிதாக விளங்க முடியும்.

ஆம்! பரீட்சை, சோதனை என்றால் ஒவ்வொரு தனி நபரும் சுயமாக, தனியாகச் சந்தித்தே தீர வேண்டும். அப்போதுதான் பரீட்சைகளில், சோதனை களில் வெற்றி பெற முடியும் என்பதை அறியாத மக்கு மண்டூகங்கள் இருக்க முடியுமா? உலகியல் பரீட்சைகளில் உலகின் ஒரு துக்கடாவான ஒரு சிறு மண்டபத்தில் பரீட்சை எழுதுகிறோம். மறு உலகில் தேர்வு பெற அதேபோல் பெரும் பெரும் கோள்களுடன் ஒப்பிடும் போது இந்த உலகு ஒரு துக்கடாவான சின்னஞ்சிறு மண்டபம்தான். மறு உலகோடு ஒப்பிடும்போது இவ்வுலக மனித வாழ்க்கையும் ஒரு சில மணித்துளிதான். (பார்க்க : 9:38)

ஆனால் மனிதனோ பல்லாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் வாழப் போவதாகக் கற்பனை செய்து கொண்டு மறுமையை மறந்து இவ்வுலகே சதம் என எண்ணி தனது வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறான். பரீட்சைக்காக, சோதனைக் காக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்து தான்தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதனால் இவ்வுலகி யல் ஆதாயங்களை மட்டுமே அசல் லட்சியம்-குறிக்கோள்களாகக் கொண்டு மதகுருமார்கள், இயக்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என நரகை நோக்கி அழைத்துச் செல்லும் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள் (பார்க்க : 2:256,257, 4:51,60,76, 5:60, 16:36,39:17) பின்னால் செல்கின்றான். ஆம்! பரீட்சை யில் காப்பி அடிக்கிறார்கள். காப்பி அடிப்பவர்கள் வெற்றி பெறுவார்களா? தோல்வி அடைவார்களா? நிச்சயம் தோல்வியே தோல்விதான். இதை நாம் சொல்ல வில்லை. 33:36,66-68, 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இறை வாக்குகள் கூறுவதை நீங்களே நேரடியாகப் படித்து உறுதி செய்து கொள்ளுங்கள். இவற்றில் 34:31,32,33, 40:47,48 வசனங்கள் பெருமையடிக்கும் மதகுருமார் கள், இயக்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இவர்களையே குறிப்பிடுகின்றன.

மதகுருமார்கள் எனப் பெருமை பேசும் மவ்லவி களிடம் மார்க்கம் பற்றிக் கேட்பதில் தவறில்லை. ஆனால் பரீட்சை சமயம் ஒரு மாணவன் ஆசிரியரி டம் கேள்விகள் பற்றி விளக்கம் கேட்கும்போது, அவர் தனது சுய கருத்தைச் சொல்லாமல், எப்படிப் பாடத் திட்டத்திலுள்ளவற்றை மட்டுமே எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறாரோ, அதேபோல் இந்த மவ்லவிகள் தங்கள் சொந்தக் கருத்தையோ, முன் சென்றவர்களின் சொந்தக் கருத்தையோ சொல்லாமல் குர்ஆனில், சுன்னாவில் இருப்பதை மட்டுமே எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கி றார்கள். ஆனால் 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழியை, தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே தங்களின் பிழைக்கும் தொழிலாகக் கொண்டுள்ள இம்மவ்லவிகள் பல கோணல் வழிகளாக்கி அவற்றை நியாயப்படுத்த, தங்களின் புரோகித முன் னோர்களின் சுய கருத்துக்களை, அவர்களை வான ளாவப் புகழ்ந்து 33:36 குர்ஆன் வசனத்தை நிராகரித்து மனித சுய கருத்துக்களை இஜ்மா கியாஸ், லாஜிக் பாலிஸி என்றும் பிக்ஹு சட்டங்கள் என்றும் மார்க்கமாக்க முற்படுகின்றனர்.

மனிதச் சுய கருத்துக்களை மார்க்கமாக்க இம் மவ்லவிகளுக்குக் கிடைத்த பெரிய ஆதாரம் 16:43, 21:7 இறைவாக்குகளே. அவற்றின் நேரடிக் கருத்து இதோ :

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்தத் தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர். ஆகவே “”நீங்கள் அறியாதிருந்தால் திக்ரை-இறை அறிவிப்பை உடையவர்களிடம் கேளுங்கள்”
(16:43, 21:7)

இந்த இறைவாக்குகளை 2:159 இறைவாக்குச் சொல்வது போல் எப்படித் திரித்து வளைத்து மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள் இம்மவ்லவிகள் என்று பாருங்கள்.

“”நீங்கள் அறியாதவர்களாக இருந்தால், அறிந்த வர்களிடம் கேட்டு அறிந்தது கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்லி இருக்கிறான். நாங் கள்தான் ஆலிம்கள்-அறிந்தவர்கள். எங்களிடம் கேட்டுத்தான் அவாம்கள் மார்க்கத்தை அறிய வேண்டும் என்று துணிந்து பொய் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையானால் குர்ஆனில் எப்படி இருக்க வேண்டும்!

“”ஃபஸ்அலூ அஹ்லல் இல்மி” என்றிருக்க வேண் டும். இந்த மவ்லவிகள் சொல்வதை அப்படியே கண் மூடி ஏற்றுச் செயல்படவேண்டும் என்றால், “”கல் லிதூ அஹ்லல் இல்மீ” என்றிருக்க வேண்டும். அப் படி இல்லவே இல்லை. அப்படியானால் குர்ஆன் 16:43, 21:7 இறைவாக்குகளில் எப்படி இருக்கிறது?
“ஃபஸ்அலூ அஹ்லஃத்ஃதிக்ரி” என்றே இருக்கி றது. அப்படியானால் ஃதிக்ரையுடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்றே இருக்கிறது.

ஃதிக்ரையுடையவர்கள் என்றால் யாரைக் குறிக்கிறது. ஜபூர், தவ்றாத், இன்ஜீல், குர்ஆன் போன்ற இறைச் செய்திகளை உடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்றே அல்லாஹ் கட்டளை யிடுகிறான்.
இந்த 16:43, 21:7 இறைவாக்குகளின் முற்பகுதி என்ன கூறுகிறது?

“”நாம் அனுப்பி வைத்தத்தூதர்கள் அனைவரும் ஆடவர்களே” என்றே கூறுகிறது. இந்தச் செய்தி மனித அறிவில் அவர் எப்படிப்பட்ட அல்லாமா வாக இருந்தாலும் வரும் செய்தியா? அல்லது அல்லாஹ் அறிவித்துத் தெரிய வரும் செய்தியா? இந்த இறைவாக்குகளே திட்டமாக மார்க்கம் என்றால் அது கண்டிப்பாக அல்லாஹ்வால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்தவில்லையா?

2:186, 7:3, 18:102-106, 47:33, 59:7 போன்ற இறைவாக்குகளும், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். அவனது தூதருக்கும் வழிப்படுங்ள் என்று சுமார் 19 இடங்களிலும், அல்லாஹ் அவனது தூதர் கருத்துக்கு மாறாக மனிதக் கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்து வது பகிரங்கமான வழிகேடு என்றும், நம்பிக்கையாளர்களே நீங்கள் மார்க்கத்தில் சுய கருத்துக்கொண்டு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள் என்று 8:27 இறைவாக்கிலும், ஆளா ளுக்குச் சுயகருத்துக்களை கூறி உங்களுக்குள் முரண் படாதீர்கள், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கீழ்ப்படியுங்கள். இல்லை என்றால் நீங்கள் கோழைகளாகி, உங்கள் பலம் குன்றிவிடும் என்று 8:46 இறைவாக்கிலும் கண்டித்துக் கூறுகிறான் அல் லாஹ். வஹியின் தொடர்பிலும், (53:2-4) அல்லாஹ் வின் நேரடிக் கண்காணிப்பிலும் (52:48) இருந்த நபி (ஸல்) அவர்களே தமது சுய கருத்துக்களை மார்க்கத் தில் நுழைக்க முடியாது. அல்லாஹ் வஹி மூலம் அறி வித்ததை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும், மக்க ளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துக் கூறுவதை கீழ் காணும் குர்ஆன் வச னங்களை நீங்களே நேரடியாகப் படித்து உறுதி செய்து கொள்ளுங்கள். 4:140, 5:49, 6:68, 11:12, 12:108, 17:39,73-75,86, 25:52, 28:85-88, 30:30, 33:1,2, 34:50, 40:35, 42:52, 43:43, 45:18, 66:1,2, 69:44-47.

இந்த இறைவாக்குகள் அனைத்தையும் 47:24 வசனம் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் போட்டிருக்கும் பூட்டைக் கழற்றி எறிந்து விட்டு, நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள்-ஆராய்கிறவர்கள், இறுதி நபி- முத்திரை நபிக்கே சுய விளக்கம் கொடுக்க அனுமதி இல்லாதபோது, அல்லாஹ்வே நேரடியாகத் தடுத்தி ருக்கும் நிலையில், கலீஃபாக்கள், நபி தோழர்கள், தாபியீன்கள், தபஅ தாபியீன்கள் என ஸலஃபுஸ்ஸா விஹீன்கள், அவுலியாக்கள், இமாம்கள், மேதைகள் என மனிதர்களில் யாருக்கும் மேல்விளக்கம், சுய விளக்கம் கொடுக்கும் தகுதி இருப்பதாக நம்பினால் அவர்கள் 33:36 இறைவாக்குக் கூறுவது போல் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். நரகை அடைவார்கள். 33:66-68 இறைவாக்குகள் கூறுவது போல் நரகில் அவர்கள் நம்பிக்கை வைத்துச் செயல் பட்டவர்களைச் சபிப்பார்கள். இரு மடங்கு வேதனைக் கொடுக்கும்படி அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள் என்பதைக் குன்றிலிட்டத் தீபமாக அறிய முடியும்.

16:89 இறைவாக்குக் கூறுவது போல் மார்க்கத்தில் அதாவது குர்ஆனில் ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் அல்லாஹ்வே இறக்கி அருளிய பின் குர்ஆனுக்கு மேல் விளக்க மான தஃப்ஸீர்-விரிவுரை தேவையா? அல்லாஹ்வால் விளக்க முடியாததையா இம்மேதைகள் விளக்குகிறார்களா? 49:16 இறைவாக்குக் கூறுவதுபோல், அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கிறார் களா? 42:21 இறைவாக்குக் கூறுவது போல் இம் மேதைகள் அல்லாஹ் விதிக்காததை விதித்து அல் லாஹ்வுக்கும் மேலான அல்லாஹ்வாக (நவூதுபில்லாஹ்) ஆகிவிட்டார்களா? மவ்லவிகளே பதில் தாருங்கள்.

இங்கு நாம் தஃப்ஸீர் என்ற பெயரால், 2:159 இறைவாக்குச் சொல்வது போல் அல்லாஹ் மனிதர் களுக்கென்றே மார்க்கத்தை மிகத் தெளிவாக விளக்கிய நிலையில், நேரடிக் கருத்துக்களை மறைத்து, இருட்டடிப்புச் செய்து சுய விளக்கம் கூறுவதையே வன்மையாகக் கண்டிக்கிறோம். வழிகேடு, நரகில் சேர்க்கும் என்கிறோம். அதுவும் 33:36 இறைவாக்குக் கூறுவதையே கூறுகிறோம். மற்றபடி குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை வலியுறுத்திக் கூறும் விளக்கங்களை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை.

20:129, 42:21 இறைவாக்குகள் கூறுவது போல், இறைவனிடமிருந்து ஒரு வாக்கும், (தண்டனைக் கான) குறிப்பிட்ட ஒரு தவçணையும் முந்தி இரா விட்டால், ஒட்டுமொத்த மதகுருமார்களும் இவ் வுலகிலேயே தண்டிக்கப்பட்டு நரகில் எறியப்பட் டிருப்பார்கள். அல்லாஹ் 3:187 இறைவாக்கில் யூத நசாரக்களை கடுமையாக கண்டித்திருப்பது போல் இந்த மவ்லவிகளும் அல்லாஹ்வுக்கு அளித்த உறுதி மொழிக்கு மாறாக குர்ஆனைப் புறக்கணித்துவிட்டு, முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டு, அதற்குப் பகரமாக மக்களிடம் அற்ப, சொற்ப கிரயத்தை வாங்கி மகிழ்வடைந்து கொண்டிருக்கிறார்கள். அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக நாங்கள்தான் ஆலிம்கள். எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும்; நீங்கள் எல்லாம் அவாம்கள். குர்ஆன் உங்களுக்கு விளங்காது. குர்ஆனின் நேரடிக் கருத்தைத் தமிழில் தந்தாலும் உங்களால் விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசுவதால் இந்த ஆலிம்களை, அன்றைய தாருந் நத்வா ஆலிம்களை குர்ஆனை விளங்க முடியாமல் அல்லாஹ் தடுத்தது போல் அல்லாஹ்வே தடுக்கிறான். இந்த வசனங்கள் அனைத்தையும் நீங்களே நேரடியாகப் படித்து இந்த உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

பெருமையடிப்பவர்கள் பற்றி குர்ஆன் கூறுவது என்ன? ஆம்! பெருமையடிப்பவர்களுக்குக் கூலி நரகமே என்று கூறும் குர்ஆன் வசனங்கள். 2:34, 4:36, 7:36-40,146,206,11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 34:31-33, 35:10, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:1-3, மேலும் ஹதீஃத்களையும் பாருங்கள். புகாரீ, 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் 2620

இதற்கு மேலும் கடமையான மார்க்கப் பணிக் குக் கூலி-சம்பளம் ஒருபோதும் வாங்கக் கூடாது என்று 14 குர்ஆன் வசனங்கள், இந்த இறைக் கட் டளைகளை நிராகரித்துச் சம்பளத்திற்குப் பணி புரி கிறவர்கள் ஒருபோதும் நேர்வழியில் இருக்க முடி யாது என்று 36:21 இறைவாக்கும், சம்பளத்திற்கு மார்க்கப் பணி புரியும் மதகுருமார்கள் துணிந்து பொய் கூறி குர்ஆன் வசனங்களைப் பொய்யாக்கி, செய்து வரும் அராஜகங்கள், அட்டூழியங்கள், பொய்ப் பித்தலாட்டங்கள், வழிகேடுகள், பெருங் கொண்ட மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் கொடுமை, அந்த மக்களின் பாவங்களையும் 16:25 குர்ஆன் வசனம் கூறுவது போல் இந்த மவ்லவிகளே சுமக்கும் கொடுமை இவை அனைத்தையும் பற்றி சுமார் 336 இறைவாக்குகளில் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றான் அல்லாஹ்.

7:146 இறைவாக்குக் கூறுவது போல், அவர்க ளின் வீண் பெருமை காரணமாக அல்லாஹ்வே அவர்களை குர்ஆனை விட்டும் திருப்பி விடுகிறான். குர்ஆன் வனங்களை நேரடியாகக் காட்டினாலும் நம்பி ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழி என அடம் பிடிப்பார்கள் என்று அல்லாஹ்வே நேரடியாகக் கூறி இருக்கும் நிலை யில், இந்த மவ்லவிகள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், அவர்கள் மட்டுமே நேர்வழியைக் காட்ட முடியும் என்று குருட்டுத்தனமாக நம்பி, அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்வோர், நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அலறிப் பிதற்றுவதை, ஒப்பாரி வைப்பதைக் கீழ்க்கண்ட இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நீங்களே நேரடியாகப் படித்து உண்மையை உணருங்கள்.

7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45. இவற்றில் 34:31-33, 40:47, 48 ஐந்து இறைவாக்குகளில் பெருமையடித்தோர் என்று கூறுவது இந்த மவ்லவிகளைக் குறித்தே. இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நாம் மீண்டும் மீண்டும் எடுத்து எழுதுவது 51:55 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தின் ஈமான்-இறை நம்பிக்கை இருப்பவர்களுக்கே; அதற்கு மாறாக 49:14 இறை வாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் நுழையாத, நாளை நரகை நிரப்ப இருக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கும், இந்த மவ்லவிகளுக்கும் கடும் கோபத்தையும், ஆத்திரத்தையுமே ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்த நிலையிலேயே மேற்கண்ட குர்ஆன் வசனங்களை மீண்டும் மீண்டும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.

நரகை நோக்கி நடைபோடுகிறவர்களான 47:24 உள்ளத்திற்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு இம் மவ்லவிகள் பின்னால் செல்பவர்களுக்கு இந்த குர் ஆன் வசனங்கள் வேம்பாகக் கசக்கும், எம்மீது ஆத்திரப்படுவார்கள் என்பதையும் அல்லாஹ் நேரடியாக 17:41,45-48,89, 22:72, 25:60, 39:45 ஆகிய இறைவாக் குகளில் கூறி எம்மை அமைதி கொள்ளவும், துணிந்து மீண்டும், மீண்டும் நரகிற்குப் பெருங்கொண்ட மக்களை இட்டுச் செல்லும் ஆலிம் எனப் பெருமை பேசும் இம்மவ்லவிகளை அடையாளம் காட்டும் துணிவையும் தந்துள்ளான் அல்லாஹ்.

“”…. அவர்கள் மீது நம்முடைய தெளிவான வச னங்கள் படித்துக் காட்டப்பட்டால், மறுப்பாளர்களின் முகங்களில் வெறுப்பையே நீர் பார்ப்பீர். அவர்களிடம் நம் வசனங்களைப் படித்துக்காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் நெருங்குவார்கள்…” (22:72)

2:186 இறைவாக்குக் கூறுவது போல், அல்லாஹ் வையே முற்றிலும் நம்பி, 7:3, 18:102-106, 59:7, 53:2-4 இறைவாக்குகள் கூறுவது போல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆன், சுன்னாஹ் இரண்டை மட்டுமே மார்க்கமாக-நேர்வழியாக வாயளவில் அல்ல, மனப்பூர்வமாக ஏற்று, மனிதர்களில் யாருடைய சுய கருத்து, மேல்விளக்கம், விரிவுரை என எந்தப் பெரிய மேதை சொன்னாலும் அவை பித்அத்-வழிகேடு நரகில் சேர்க்கும் என விளங்கி மனிதக் கூற்றுக்களை நிராகரிப்பவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கம் நுழைபவர்கள்.

எனவே, தர்கா மவ்லவிகள் பின்னால் செல்பவர்களும் 67:2 வசனம் கூறும் பரீட்சையில் தோல்வி யுற்று நரகம் புகுபவர்களே. தரீக்கா மவ்லவிகள் பின்னால் செல்பவர்களும் 67: 2 வசனம் கூறும் பரீட்சையில் தோல்வியுற்று நரகம் புகுபவர்களே! சுன்னத் வல் ஜமாஅத் ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி என மத்ஹபு மவ்லவிகள் பின்னால் செல்பவர்களும் 67:2 கூறும் பரீட்சையில் தோல்வி அடைந்து நரகம் புகுபவர்களே. நாங்கள் முகல்லிதுகள் இல்லை. ஃகைர முகல்லிதுகள் எனக் கூறும் அஹ்ல ஹதீஃத் மவ்லவிகள் பின்னால் செல்பவர்களும் 67:2 கூறும் பரீட்சையில் தோல்வியுற்று நரகம் புகுபவர்களே! முஜாஹிது மவ்லவிகள் பின்னால் செல்பவர்களும் 67:2 கூறும் பரீட்சையில் தோல்வியுற்று நரகம் புகுபவர்களே.

தங்களை ஸலஃபிகள் என்று கூறிக்கொண்டு குர் ஆனை நேரடியாக நாம் விளங்க முடியாது. கலீஃபாக்கள் நபிதோழர்கள் போன்ற முன் சென்ற ஸலஃ புஸ்ஸாலிஹீன்கள் விளங்கியதையே நாமும் ஏற்று நடக்க வேண்டும் என்று பிதற்றும் ஸலஃபி மவ்லவி கள் பின்னால் செல்பவர்களும் 67:2 வசனம் கூறும் பரீட்சையில் தோல்வியுற்று நரக புகுபவர்களே. அந் நஜாத்தில் எழுதப்படும் குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்கள் இவற்றை நேரடியாகப் படித்து விளங்கா மல், அந்நஜாத்தில் அபூஅப்திலலாஹ் எழுதுவது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி அவற்றை எடுத்து நடப்பவர்களும் 67:2 இறைவாக்குக் கூறும் பரீட்சை யில் தோல்வியுற்று நரகம் புகுபவர்களே! இதை நாம் கடுமையாக எச்சரிக்கிறோம். அந்நஜாத் ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்நஜாத்தையும் தக்லீத் செய்யாதீர்கள் என சொல்லி வருகிறோம்.

ஆம்! அல்லாஹ் மார்க்கத்தை விளக்கியுள்ளது போதாது, அவனது தூதர் நடைமுறைப்படுத்திக் காட்டியது போதாது. பின்னால் வந்த அதி மேதாவி கள் விளக்கியதையே எடுத்து நடக்க வேண்டும் என்று 2:186, 50:16, 56:85, 5:3, 3:19,85 இறைவாக்கு கள் அனைத்தையும் நிராகரித்து அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் தரகராகப் புகுந்து ஆகக் கொடிய ஹராமான வழியில் மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள மதகுருமார்கள், இயக்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என யாரைத் தங்களுக் கும் அல்லாஹ்வுக்கும் இடையில் தரகராகக் கொண்டு செயல்படும் முஸ்லிம்கள் அனைவரும் 67:2 குர்ஆன் வசனம் கூறும் பரீட்சையில் தோல்வியுற்று நாளை நரகம் புகுகிறவர்களே!

ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் நரகிற்குரியவர்கள் என்று நாம் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டோம். அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்வதையே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். 32:13, 11:118,119, 25:30, 12:106 மேலும் “அக்ஃதர’ என்று 33 இடங்களிலும் “அக்ஃதரஹும்’ என்று 45 இடங்களிலும், அக்ஃதரக்கும் என்று 5:59, 43:78 இரண்டு இடங்களிலும் ஆக 80 இடங்களில் பெரும் பாலோர் நரகத்திற்குரிய செயல்களைச் செய்வோர் என அல்லாஹ் அறிவித்துள்ளான்.

சுவர்க்கத்திற்குரியோர் மிகமிகச் சொற்பமானவர்கள் என்று 2:83,246,249, 4:46,83,155, 5:13, 7:3,18, 11:40,116, 17:62, 23:78. 27:62, 32:9, 34:13, 38:24, 40:58, 48:15, 67:23, 69:41,42 ஆகிய பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

மேலும் 12:106 இறைவாக்கு உங்களில் அதிகமா னோர் இணை வைக்காமல் ஈமான் கொள்ள வில்லை என்றும், 25:30 இறைவாக்கு நாளை மறுமை யில் நபி(ஸல்) அவர்கள் தமது இந்த சமூகம் குர் ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட் டார்கள் என்று முறையிடுவதும் எதைக் குறிக்கிறது. ஆம்! ஒவ்வொரு ஆயிரத்திலும் நரகத்திற்குரியவர் கள் 999 பேர்கள் என்றும் ஒரே ஒருவரே சுவர்க்கத் திற்கு உரியவர் என்றும் நெற்றிப் பொட்டில் அடிப் பது போல் புகாரீ 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃத் கள் உறுதிப்படுத்துகின்றன.

ஆம்! அல்லாஹ் அவனது வஹீ மூலம் தொடர்புடனிருந்த தூதர் அல்லாத மனிதர்களில் நான்கு கலீஃபாக்கள், நபிதோழர்கள், தாபியீன்கள், தபஅ தாபியீன்கள், அவுலியாக்கள், இமாம்கள், மதகுருமார்கள், இயக்கங்களின் தலைவர்கள், எண்ணற்றப் பிரிவுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என எவரின் தலைமையை ஏற்று அவர்களது வழி காட்டல்படி நடப்பவர்கள் 67:2 குர்ஆன் வசனம் கூறும் பரீட்சையில் பெரும் தோல்வியுற்று நாளை நரகப் புகும் பெருங்கூட்டத்தினரே!

இந்தப் பிரிவினைவாதிகள் அனைவரும் வழி கேடர்களே எனத் திட்டமாக அறிந்து, அவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, யார் நேரடியாக குர்ஆனையும், சுன்னாவையும் அன்றாடம் படித்து அதன்படி நடக்கிறார்களோ அவர்களே 1000ல் ஒரு வராக வெற்றி பெற்று சுவர்க்கம் நுழைய முடியும்.
67:2 இறைவாக்குக் கூறும் இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை மட்டுமே என்பதை விளங்கிச் சுயமாகப் படித்து விளங்கி, விளங்கியதை மட்டுமே எழுதினாலும் 100க்கு 35 மார்க் எடுத்தாலும் வெற்றி பெற்று சுவர்க்கம் நுழைய முடியும். இந்த மவ்லவி கள் பின்னால் சென்று அல்லாஹ்வை நம்பாமல் அவர்களை நம்பி நூற்றுக்கு நூறு மார்க் கிடைத் தாலும் தோல்வியே, நரகமே. இவ்வுலகப் பரீட்சை யில் 100க்கு 100 மார்க் எடுப்பவனை காப்பி அடித்தாலும் வெற்றிக்குப் பதில் தோல்வியுறுவதை நாம் அறியத்தானே செய்கிறோம். மேலும் 18:102-106 இறை வாக்குகளும் இதையே உறுதி செய்கின்றன.

உலகப் பரீட்சைகளில் லஞ்சம் கொடுத்து அல்லது கண்காணிப்பாளர் கண்களிலிருந்து மறைத்து காப்பி அடித்து வெற்றி பெறுவது போல், வாழ்க் கைப் பரீட்சையிலும் அல்லாஹ்வுக்கு உண்டியல் களில் காசு போட்டு லஞ்சம் கொடுத்து, அல்லது அல் லாஹ்வின் கண்களை மறைத்து காப்பி அடித்து வெற்றி பெறலாம் எனப் பகல் கனவு காணாதீர்கள்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே நீங்கள் வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியடைந்து சுவர்க்கம் நுழையும் 1000ல் ஒரேயொரு நபராக தேர்வாக விரும்பினால் மனிதர்கள், மதகுருமார்கள் அனைவரையும் புறக்கணித்துவிட்டு நேரடியாக குர்ஆன், சுன்னாவைப் பற்றிப் பிடியுங்கள். பரீட்சையில் தோல்வியுற்று நரகம் புக விரும்பினால் குர்ஆன், சுன்னாவைப் புறக்கணித்து விட்டு இந்த மதகுருமார் கள், இயக்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பின்னால் செல்லுங்கள், 1000ல் 999 நபர்களுடன் நீங்கள் நரகம் செல்லலாம். முடிவு உங்கள் கையில்…

இதோ உண்மையான முஃமின்களின்-சுவர்க்க வாதிகளின் அடையாளம் :
“”முஃமின்கள் யார் என்றால் அல்லாஹ்வைப் பற் றிக் கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கி விடும். அவனுடைய (குர்ஆன்) வச னங்கள் அவர்களுக்குப்படித்துக் காட்டப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை (நம்பிக்கையை) அதி கப்படுத்தம். மேலும் தங்களுடைய இறைவனையே அவர்கள் சார்ந்திருப்பார்கள். (குர்ஆன்:8:2)
(மேலும் பார்க்க : 8:3,4, 51:55)

நாளை நரகை நிரப்புவோர்களின் அடையாளம்:
“”இன்னும், அவர்கள் (சுயமாகச் சிந்தித்து) படிப் பினை பெறுவதற்காக, இந்த குர்ஆனில் திட்டமாக (பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம். எனி னும் (இந்த குர்ஆன் வசனங்கள்) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை” (17:41)

இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவித மான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) நாம் விவரித்துள்ளோம். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) நிராகரிக்காமல் இல்லை. (17:89)

“”அல்லாஹ்(வின் வசனங்கள்) மட்டும் கூறப்பட் டால், மறுமையை நம்பாதவர்களின் இதயங்கள் சுருங்கி விடுகின்றன. மேலும் அவனையன்றி (ஸலஃபி, இமாம், அவுலியா, மவ்லவிகள் என) மற்ற வர்கள் கூறப்பட்டால் உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள். (39:45)
(மேலும் பார்க்க : 17:45-47, 25:60)

இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் நூலிலிருந்து (குர்ஆன்) உமக்கு வஹீ மூலம் அருளப் பட்டதை நீர் படிப்பீராக! அவனுடைய வார்த்தை களை மாற்றக்கூடியவர் எவருமில்லை. இன்னும் அவனையன்றி புகலிடம் எவரையும் நீர் காணமாட் டீர். (18:27)

இன்னும் (நபியே!) எவர்கள் தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அவர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர். இன்னும் எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர். ஏனெனில் அவன் தன் இச்சையைப் பின்பற்றியதால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகிவிட்டது. (18:28)

ஒட்டுமொத்த மதகுருமார்களும் தாஃகூத் என்ற வரம்பு மீறிச் செயல்படும் மனித ஷைத்தான்களே!
குர்ஆன் வசனங்களை மீண்டும் மீண்டும் படித்து விரும்பி ஏற்பவர்கள் யார்? குர்ஆன் வசனங்கள் படித்துக் காட்டப்பட்டால் வெறுப்பவர்கள் யார்? என்பதை குர்ஆனே நேரடியாகக் கூறுகிறது. 8:2-4, 23:1-11 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அவர்கள் ஆயிரத்தில் ஒன்றான முஃமின்களுடைய பட்டியலில் இருக்கிறார்களா? ஆயிரத்தில் 999ல் இருக்கும் மறுப்பாளர்கள், நரகவாசிகள் பட்டியலில் இருக்கிறார்களா என அவர்களே தீர்மானிக்கலாம்.

Previous post:

Next post: