ஐயமும்! தெளிவும்!!

in 2017 ஜுன்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நான் இலங்கை வங்கியில் கொஞ்சம்பணம் முதலீடு செய்துள்ளேன். எனது பணத்திற்கு ஒரு சிறிய தொகையை வருட முடிவில் சேர்க்கிறார்கள். அப்படி சேர்த்த பணம் எனக்கு ஹலாலாகுமா? அதனை நான் என்ன செய்வது? .நிஸார், ரியாத்.

தெளிவு: இன்றைய நிலையில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்திற்கு மேல் அதிகமாகப் பெறும் பணம் வட்டியே ஆகும். வட்டி எந்த நிலையிலும், எப்படி வந்தாலும் ஹராமாகும் என்பது ஹதீஃத்களின் சாரமாகும். (ஆதாரம் : முஸ்லிம், திர்மதீ, அபூதாவூத்) நிர்ப்பந்தத்தின் காரணமாக வங்கியில் முதலீடு செய்வதை நியாயப்படுத்துவதற்கும், அதனால் கிடைக்கப்படும் வட்டிப் பணத்தைக் கொண்டு நன்மையைக் கருதாமல் ஏழைகளுக்கு கொடுத்துவிடலாம் என்பதற்கும் திருகுர்ஆனிலும், ஹதீஃத்களிலும் ஆதாரங்களைக் காண முடியவில்லை. நிர்ப்பந்தத்தைக் காரணப்படுத்துபவர்களின் முடிவு அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் உள்ள விஷயமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : வெளிநாடு செல்லும் நண்பர்கள் ஊரை விட்டு கிளம்பும்போது பள்ளிவாசலுக்குச் சென்று ஃபாத்திஹா ஓதிவிட்டு கிளம்புகிறார்கள். இது சுன்னத்தா?  .முஹம்மது அலி, ஜித்தா

தெளிவு : ஃபாத்திஹா இடம் பெறாத நிகழ்ச்சி இல்லவே இல்லை போலும், ஏதாவது பிரயாணத்திற்குப் புறப்படும்போது ஏன்? போருக்குப் புறப்படும் போதும் ரசூல்(ஸல்) அவர்கள் பள்ளிக்குச் சென்று, 2 ரகாஅத்துகள் நபில் தொழுதுவிட்டுச் சென்றதை நாம் ஹதீஃத் நூல்களில் காணமுடிகிறது. ஃபாத்திஹா ஓதி சென்ற தற்கு ஆதாரமில்லை. அதே போல் பிரயாணத்தி லிருந்து திரும்பியதும், நேராக பள்ளிக்குச் சென்று இரு ரகாஅத்துக்கள் தொழுது வீடு சென்றதாகவும் காணுகிறோம். எனவே, 2 ரகாஅத் நபில் தொழுது செல்வதே சுன்னத்தாகும், ஃபாத்திஹா ஓதி செல்வ தல்ல, அல்லாஹ் போதுமானவன்.

ஐயம் : சிறு வயது முதல் தொழாமல் பின் ஒரு காலத்தில் தொழ ஆரம்பிக்கிறோம். இப்படி தொழ ஆரம் பித்தவர்கள் விடுபட்ட தொழுகையை கழா செய்து தொழலாமா? ஹி.சையது முகமது, நாகப்பட்டினம்,  சைய்யது முபாரக், ஜுபைல், அரேபியா.

தெளிவு : தொழுகையைப் பற்றிய வியத்தில் அந் தந்த சரியான நேரத்தில் தொழுவதே முக்கியம், அவ் விதம் தொழாமல் பின் சேர்த்து விடுபட்ட (புreழிrவி தொழுகைகளை தொழ குர்ஆனிலோ, ஹதீஃதிலோ ஆதாரமில்வலை. ஞாபக மறதி, தூக்கம் போன்றவற் றால் விடுபட்ட தொழுகையை திருப்பித் தொழ ஆதாரமுள்ளது. சிறு வயதில் விடுபட்ட தொழுகை களை தொடர்ந்து கழாவாக தொழவோ, ரமழா னின் தராவீஹ் தொழுகையை (ஷாபிஈ மத்ஹபுபடி) உமர்கழா நிய்யத்தில் தொழலாம் என்பதற்கோ எவ்வித குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்கள் கிடையாது.

சிறு வயது முதல் தொழாமல் இருந்தவர் தொழ ஆரம்பித்தால் தொடர்ந்து இனி விடாமல் அந்தந்த தொழுகைகளை சரியான நேரங்களில் தொழ வேண் டும். தொழாமல் இருந்தமைக்கு அல்லாஹுவிடம் இறைஞ்சி பாவ மன்னிப்பு கோர வேண்டும். இனி அவ்விதம் இருக்கமாட்டேன் என கங்கணங் கட்டிக் கொள்ளவேண்டும். சிறு வயது முதல் தொழாமல் இருந்தமைக்கு அல்லாஹுவிடம் பாவ மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : நிக்காஹுக்குப் பின் சிலரால் ஓதப்படும் துஆ வில் கமா அல்லஃப்த்தபைன யூசுபவஜுலைகா வென்று (அதாவது யூசுபு(அலை) அவர்களையும், ஜுலைகா அவர்களையும் நீ சிறப்பாக இணைத்து வைத்தது போல் இத் தம்பதிகளையும் இணைத்து வைப்பாயாக! எனும் பொருளில் மவ்லவிகள் கூட ஓதுகிறார்கள். அப்படி என்றால் யூசுபு(அலை) அவர் களுக்கும், ஜுலைகா அவர்களுக்கும் திருமணம் நடந்ததாக குர்ஆனிலோ, ஹதீஃதிலோ ஆதார முண்டா? முஹம்மது ஸலீம், திருச்சி

தெளிவு : அவ்வாறு, மவ்லவிகள் என்று சொல்லப் படுவோர்தான் ஓதுவார்களே தவிர, உண்மையான அசல் அறிஞர்கள் ஒருபோதும் ஓதமாட்டார்கள். காரணம், அவ்விருவருக்கும் திருமணம் நடந்ததாக அல்லாஹ்வும் கூறவில்லை. அவனது ரசூல்(ஸல்) அவர்களும் கூறவில்லை. ஜுலைகாவாக கூறப்படும் அப்பெண்ணைப் பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும்போதெல்லாம் அஜீஸின் மனைவி, அஜீஸின் மனைவி என்றே கூறியிருக்கிறான். ஜுலைகா என்ற பெயரே குர்ஆனில் இல்லை.

பைபிள் போன்ற மாற்று மத நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பட்ட கப்ஸாக்கள், கட்டுக்கதை களின் மொத்த உருவமாகிய கஸஸுல் அன்பியா போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு நாம் அவ் வாறு ஓதிவிட்டால் என்ன பதில் சொல்வது? என்று கருதியே இந்த துன்பத்திற்கு அதை ஓதாமல் விட்டு விடுவதே மேல் என்ற சிறந்த முடிவுக்கு இவர்கள் வந்துவிட்டார்கள் போலும். எனவே தற்சமயத்தில் பல மவ்லவிகள் இதனை ஓதுவதை விட்டு விட்டனர்.

ஐயம் : தொழுகை முடிந்ததும் அஸ்தஃபிருல்லாஹ் என 3 தடவைகள் கூறுகிறார்களே! நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை நினைத்து அஸ்தஃபிருல்லாஹ் கூறுகிறோமே அது போன்றதா? தொழுகை முடிந்தபின் இப்படி கூறுவது அவசியமா அல்லது தொழுகையில் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காக சொல்லப்படுவதா? விளக்கம் தரவும். உடன்குடி, நாஸர், துபை.
தெளிவு : பர்ழான தொழுகை முடிந்து சலாம் கொடுத் தவுடனே நபி(ஸல்) அவர்கள் அஸ்தஃபிருல்லாஹ் என மூன்று தடவைகள் கூறக் கூடியவர்களாக இருந் தார்கள் (ஆதாரங்கள்: முஸ்லிம், அபூதாவூத், நஸயீ அஹ்மத்) என்ற நபிமொழிப்படி நாம் கூறுவது அழ கிய சுன்னத் (நபிவழி) ஆகும். இதற்காக எந்தக் காரணங்களைக் கூறினாலும் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அவர்களை நமது நேர்வழிகாட்டி யாக ஏற்றுள்ள நாமும் கூற வேண்டும் என்ற உண் மைக் காரணம் மேல்நோக்கியிருக்கும். எனவே நபிவழியயன செய்வீர்களாக!

ஐயம் : “”துஆ ஹாஜாத்” என உருதுவில் அச்சடிக்கப்பட்ட ஒரு பக்க துஆவை அனுப்பியுள்ளோம். அத னைப் பார்த்து சரிகண்டு குர்ஆன், ஹதீஃத் வெளிச் சத்தில் தெளிவுபடுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். அமல் செய்ய ஏதுவானதா? கீழை இப்னு மோதியார் மற்றும் தெளஹீத் சகோதரர்கள் அபூதாபி.

தெளிவு : தாங்கள் அனுப்பியிருந்த “”துஆ ஹாஜாத்” என்ற ஒரு பக்க துஆவின் ஜெராக்ஸ் காப்பியை கண்ணுற்றோம். அதிலுள்ள அரபி துஆவில் எந்த தவறான பொருளுமில்லை. அதற்கும் மேலாக அந்த துஆவில் ஏறத்தாள 30 அல்லாஹுவின் அழகிய திரு நாமங்கள் (அஸ்மாஉல் ஹுஸ்னா) இரண்டு திருகுர்ஆனின் வசனங்களுள்ளன அல்லாஹுக்கு இணை வைக்கும்படியான எந்த வாசகமும் இடம் பெறவில்லை. ஆனால் இந்த துஆவை ஓதுவதால் கிடைக்கும் பலாபலன்கள் என அவர்கள் ஆரம்பத்தில் உருது மொழியில் எழுதியுள்ளவை பொய்யானவையாகும். ஒவ்வொரு மனிதனிடமுள்ள பலஹீனத்தை பயன்படுத்திக் கொண்டு இதனை வியாபாரமாக்கியுள்ளனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் ஆரம்பத்தில் எழுதியுள்ளவை என்ன என்பதைப் பாருங்கள்.

எவரொருவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின் னும் குறிப்பாக ஜும்ஆ தொழுகைக்குப் பின் இந்த துஆவை ஓதி வருகிறாரோ அவருக்கு அல்லாஹ்
1. எல்லா பயம், கவலைகளிலிருந்து பாதுகாத் தருள்ளான்.
2. அவனது விரோதிகளிலிருந்து பாதுகாத்து உதவுவான்.
3. பெரும் செல்வந்தனாக்கி வைப்பான்.
4. அவன் நினையா புறத்திலிருந்து உணவளிப்பான்.
5. அவனது வாழ்வை இலகுவாக்கி வைப்பான்.
6. அவனது கடன் தொல்லைகள் மலையளவிலி ருந்தாலும் அதிலிருந்து அவன் பாதுகாக்கப் படுவான்.

இந்த துஆவை ஓதினால் மேற்படி பலாபலன்கள் கிடைக்கும் என்பது உண்மையானால் அதனை அல்லாஹ் தனது நெறிநூலில் அறிவித்திருக்க வேண்டும் அல்லது நபி(ஸல்) அவர்கள் இதனை தெரிவித்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆதாரங் களை குர்ஆனிலோ, ஹதீஃத்களிலோ நாம் காண முடியவில்லை. எனவே இந்த துஆவில் எந்தவித மான தவறான கருத்துக்களும் இல்லையயனினும் மேற்படி பலாபலன்களுக்காக இதனை ஓதலாமென நாம் ஊகிப்பதோ, மக்களுக்கு எடுத்துரைப்பதோ தவறானதாகும். அதாவது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத வழியில் பித்அத்தான முறையில் ஓதப்படும் துஆவாகும் என்பதை அறியவும்.

ஐயம் : ஜனாஸா எடுக்குமுன் பாதிஹா ஓதுகிறார்கள், கூடுமா? ஜனாஸா எடுக்கும் முன் மனைவி சந்தனத்தை தொட்டால் மஹர் இழந்ததாக சொல் கிறார்கள் உண்மையா? பாத்திமா, எஸ்.மும்தாஜ், கூத்தாநல்லூர்.

தெளிவு : ஜனாஸா எடுக்குமுன் பாத்திஹா ஓதுவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. ஜனாஸா எடுக்கு முன் மனைவி சந்தனத்தை தொட்டால் மஹர் இழந்ததாக சொல்வதும் ஆதாரமற்ற செயலாகும். இவையணைத்தும் நாமாக மார்க்கமாக்கி வைத்தி ருக்கும் அனாச்சாரங்களாகும். அல்லாஹ் இது போன்ற அநாச்சாரங்களிலிருந்து நம்மைப் பாது காப்பானாக. ஆமீன்.

ஐயம் : குமரி மாவட்டம் கோட்டாரில் 1986ல் நடை பெற்ற முனாளராவில் தங்களின் பங்கு என்ன? விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் யார்? யார்? குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் அடிப்படையில் தான் விவாதம் நடைபெற்றதா? அதன் உண்மை நிலையை இளைய தலைமுறையினர் அறிய தெளிவுபடுத்தவும். வார்னர் நதீர், நாகர்கோவில்.

தெளிவு : 30.10.1984ல் திருச்சி தூய சின்னப்பர் இறையியல் கல்லூரியில் (றீமி. Pழிற்யிவி றீeதுஷ்ஐழிrதீ) நாம் “”சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” (பல்சமய சிந்தனை) என்ற தலைப்பில் பேசியது நூலாக வெளிவந்தது. அதைப் படித்துப் பார்த்த இன்றைய ஜாக் நிறுவனர் றீ.கமாலுத்தீன் மதனி, தனது ஊர் நாகர்கோவிலில் அதிகமான மவ்லவிகள் இருப்பதாகவும், அங்கு வந்து இதே கருத்தைப் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 1985 ஆரம்பத்தில் அங்கு போய் உரையாற்றினோம்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அங்கிருந்த அரபி மதரஸா நிறுவனர் அப்துர்ரஜ்ஜாக் காதிர் (அஹரம்) மற்றும் தலைமையாசிரியர் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி இருவரும் மத்ஹபுகளை ஆதரித்துக் கடுமையாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். அவை அனைத்திற்கும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களை மட்டுமே கொடுத்தோம். சில மாதங்களில் இம்தாதி மத்ஹபுகளின் கேடுகளை உணர்ந்து அதை விட்டு வெளியே வந்தார். அது அவர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழி வகுத்தது. அது முற்றி முனாழராவில் போய் முடிந்தது. அந்த முனாழராவில் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என நான்கின் அடிப்படையில் விவாதிப்பது என இம்தாதி ஒப்புக் கொண்டு விவாத ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டுக் கொடுத்து விட்டார். இம்தாதி அப்போதுதான் மத்ஹபை விட்டு வெளி வந்ததால் இஜ்மா, கியாஸின் உண்மை நிலை அறியாத நிலையில் ஒப்பந்தத்தில் கையயழுத் திட்டுக் கொடுத்து விட்டு வந்துவிட்டார்.

1985ல் சங்கரன்பந்தல் அரபி மதரஸாவில் ஆசிரியராக இருந்த பீ.ஜையும் “”பல்சமய சிந்தனை” நூலைப் படித்துவிட்டு எம்மோடு தொடர்பு கொண்டாலும், மத்ஹபு பிடியில்தான் இருந்தார். 1985 இறுதியில் நாம் திருச்சியில் நடத்திய மார்க்க விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக எம்மிடம் வாக்களித்துவிட்டு வாக்கு மாறி விட்டார்; வரவில்லை. அதற்கு அவர் தனது நெருங்கிய நண்பனிடம் கூறிய காரணம் “”அது மத்ஹபுகளை எதிர்க்கிறக் கூட்டம்; அதனால் வரவில்லை” என்பதாகும். அந்நஜாத்தில் மத்ஹபுகளை எதிர்த்து எழுதக்கூடாது என்று கடிதம் எழூதினார். மத்ஹபுகளின் வழிகேட்டைப் பற்றி அந்நஜாத்தில் எழுதா விட்டால், பத்திரிகை நடத்த வேண்டிய அவசியமே இல்லை என்று கூறி பீ.ஜையுடைய நிபந்தனையை நாம் ஏற்கவில்லை. அதனால் பீ.ஜை. தனது கோரிக் கையைக் கைவிட்டுத்தான் அந்நஜாத் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். ஆரம்பத்தில் மத்ஹபுகளைப் பற்றிய தெளிவற்ற நிலையில் இருந்தாலும் முழைரா இடம் பெற்ற ஜூலை 1986ல் குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் காட்டி பீ.ஜையை ஓரளவு தெளிவுபெறச் செய்தோம். அதனால் இஜ்மா, கியாசின் கேடுகள் பற்றி அப்போது விளங்கி வந்து கொண்டிருந்தார். அதனால் இம்தாதி ஒப்புக் கொண்டு வந்துள்ளபடி குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்ற நான்கின் அடிப்படையில் விவாதம் செய்ய முடியாது என அடம் பிடித்தார். அப்போது நாம் பீ.ஜையைப் பார்த்து பீ.ஜை. இம்தாதீ தவறாக இஜ்மா, கியாஸ் அடிப்படையிலும் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுத்து விட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நாம் விவாதம் செய்யப் பின்வாங்கினால் அதையே சாக்காகக் கொண்டு நாம் தோற்றுவிட்டோம் என்று நாடு முழுக்க அவதூறு பரப்ப அதுவே காரணமாகிவிடும். அதனால் அவர்கள் இஜ்மா, கியாஸ் என்றோ அல்லது வேறு எதைக் கூறினாலும் அது குர்ஆன், ஹதீஃத்களுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்க மாட்டோம் என்று கூறினால் அதை அவர்களாலும் மறுக்க முடியாது. ஏற்றே ஆகவேண்டும். ஆக இந்த அடிப்படையில் விவாதம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது.

விவாதம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே நாம் நாகர்கோவில் சென்று விட்டோம். அன்று இரவு கலாச்சாரப் பள்ளியின் மாடியில் வைத்து விவாதத்தை எப்படி நடத்துவது, அதற்குரிய ஒழுங்குமுறைகள் பற்றி எல்லாம் பேசி முடிவெடுத்தோம். அடுத்த நாள் அங்கு வேலை எதுவும் இல்லாததால் பக்கத்திலுள்ள காயல் பட்டினம் சென்று அங்கு தஃப்லீகில் நம்மோடு நெருங்கிப் பழகிய மவ்லவிகளிடம் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே ஒரே நேர்வழி என்ற கருத்துப் பற்றி எடுத்து சொல்லி விட்டு வருவோம் என்ற எண்ணத்தில் அங்கு சென்றுவிட்டோம்.

நாம் நாகர்கோவில் வந்துள்ள விஷயம் எதிர் தரப்பினருக்குத் தெரிந்துவிட்டது. ஏற்கனவே 1985 ஆரம்பத்தில் கமாலுதீன் மதனியின் அழைப்பின் பேரில் நாம் அங்கு சென்று அங்குள்ள மவ்லவிகளிடையே மத்ஹபுகளின் வழிகெட்ட நிலையை குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்கள் மட்டுமே கொண்டு தெளிவுபடுத்தி இருந்தோம். அதன் பின்னர்தான் இம்தாதி மத்ஹபை தெளபா செய்து மீண்டு வந்ததும் அவர்கள் அறிந்ததே. எனவே நாம் விவாதத்தில் பங்கு கொண்டால் அவர்களின் விவாதங்கள் எடுபடாது. பிசுபிசுத்துப் போய்விடும் என அஞ்சி ஒரு தந்திரம் செய்தனர். விவாதத்தில் மவ்லவிகள் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும். மவ்லவி அல்லாத யாரும் பங்கு பெறக்கூடாது என்று புதிய விதியைக் கொண்டு வந்தனர்.

நம் தரப்பு மவ்லவிகள், S.K பீ.ஜை. இந்த இடத்தில் கொஞ்சம் விவேகமாக நடந்து இருக்க வேண்டும். ஏற்கனவே குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் நான்கின் அடிப்படையில் விவாதிக்கும் ஒரு சிக்கலில் மாட்டி இருக்கிறோம். இம்தாதி அறியாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால் இந்தத் தவறான நிலை. எனவே ஒப்பந்தச் சமயத்தில் மவ்லவிகள் மட்டுமே விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை நீங்கள் வைக்கவில்லை. இப்போது புதிதாக வைக்கிறீர்கள். எனவே ஏற்க முடியாது என்று நம் தரப்பினர் சொல்லி இருந்தால், ஒன்று எதிர் தரப்பினர் அதை ஏற்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்கும் அவர்கள் பிடிவாதம் பிடித்தால் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் நான்கின் அடிப்படையில் நடக்க இருந்த விவாதம் நடைபெறாமல் போயிருக்கும்.

அதற்கு மாறாக நம் தரப்பினரும் புரோகித இனமாக இருந்ததால் இனம் இனத்தோடுதானே சேரும். அதனால் நம் தரப்பினரும் எதிர் தரப்பின ரின் நியாயமற்றக் கோரிக்கையை ஏற்றனர். நாம் காயல்பட்டினத்திலிருந்து வந்தவுடன் நம்மிடம் நடந்ததைக் கூறினர். எமக்கு எந்தவித கலக்கமும் ஏற்படவில்லை. ஆனால் பீ.ஜையோ அன்று இரவு எம்மைத் தூங்க விடவில்லை. நம் பக்கத்தில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டார். இதற்கு என்ன பதில சொல்லுவது? இதற்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டார். அவை அனைத்திற்கும் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே எடுத்துக் கொடுத்தோம். அவர் தெளிவு பெற்றிருப்பார் என்று நம்பினோம்.

ஆனால் விவாத அரங்கில் அவர் தடுமாறியதைக் கண்டு, நாம் போய் ஒரு மறைவிடத்தில் உட்கார்ந்து கொண்டு எதிர் தரப்பினரின் கேள்விகளுக்கு விடை யாக குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்தை ஒரு பேப்பரில் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தோம். ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தார் பீ.ஜை. இதைக் கவனித்த எதிர் தரப்பினர், பதுருத்தீன்(இலங்கை) அபூபக்கர் முதலியார் அதையும் தடுத்து விட்டனர். அதனால் பீ.ஜையின் தடுமாற்றம் அதிகரித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்போது நீங்கள் இந்த மேடையில் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்ற நான்கின் அடிப்படையில்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இனி எதிர்கால உங்கள் பிரச்சார பணிகளிலும் இந்த நான்கின் அடிப்படையில்தான் செயல்படுவீர்கள் என ஒப்புக் கொள்கிறீர்களா? என்று இடக்கான கேள்வியை முன்வைத்தனர்.

நாம் ஒப்பந்தத்தை பார்த்து பீ.ஜை. தடுமாறிய போதே “”இஜ்மா என்றாலும், கியாஸ் என்றாலும் வேறு எப்படிச் சொன்னாலும் அது குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டு இருந்தால் எங்களுக்கு மறுப்பில்லை. குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்டால் ஏற்கமாட்டோம்” என்று தெளிவுபடுத்தியதை நினைவில் கொண்டு அதையே அவர்களுடைய கேள்விக்குப் பதிலாகச் சொல்லி இருந்தால் அவர்களின் வாய் அடைபட்டிருக்கும். அதற்கு மாறாக பீ.ஜை. தடுமாற்ற நிலையிலும் அவசரத்திலும் அது இந்த மேடைக்கு மட்டும்தான் என உளறிவிட்டார். அவ்வளவுதான். பீ.ஜையின் இந்த மூடத்தனமான பதில் எதிர் தரப்பினருக்குப் பெரும் வாய்ப்பாகப் போய்விட்டது. பெரும் கலவரத்தையே தூண்டி விட்டனர். கேளுங்கள் இவர்களின் பேச்சை. மேடைக்கு ஒரு பேச்சாம். வெளியில் ஒரு பேச்சாம் இந்த நயவஞ்சகர்களை விட்டு வைக்கலாமா? என மக்களைத் தூண்டிவிட்டனர். அப்போது அங்கு கூடி இருந்த மக்களில் மிக அதிகமானோர் சுன்னத் ஜமாஅத்தினரே. எனவே பெரும் கலவரமே ஏற்பட்டுவிட்டது. மேடையேறி எம் அணியினரைத் தாக்க முற்பட்டுவிட்டனர். பீ.ஜை. எஸ்.கே, இம்தாதி மூவரையும் சுற்றி நின்றுப் பாதுகாத்து அவர்களைப் பக்கத்திலிருந்த பள்ளியின் மிஃறாப் அருகில் கொண்டு சென்று எதிர் அணியினரின் கொடும் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் கட்டாயம் ஏற்பட்டது.

அதற்குக் காரணம் பீ.ஜையின் நிதானமற்ற, முறையற்ற நயவஞ்சகப் பேச்சே என்பதை மறுக்க முடியுமா? உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் இந்த நயவஞ்சகப் பேச்சு பீ.ஜை. 1985ல் நம்மோடு சேர முன்பும், நம்மோடு இருந்த போதும் நம்மை விட்டு வெளியேறிய பின்பும் இன்று வரை பொய்யன் பீ.ஜையிடம் தொடர்ந்து காணப்படுகிறது. அவரது இந்தத் தீய பழக்கமே இன்று வரை அவரை நேர்வழிக்கு வரவிடாமல் தடுக்கிறது. இந்த வழிகெட்ட நயவஞ்சகப் போக்கை அவர் மாற்றிக் கொள்ளாத வரை 6:153 இறைவாக்குக் கூறும் நேர் வழியை அவர் ஒருபோதும் அடையப் போவதில்லை.

முஸ்லிம்களே கடும் எச்சரிக்கை !
மதகுருமார்களான மவ்லவிகள் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள் தான், ஜின் இன இப்லீஸ் என்ற இயற்பெயரையுடைய அல்லாஹ்வால் விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகள்தான் என்று ஆரம்பத்திலிருந்தே அடை யாளம் காட்டி வருகிறோம். இதோ அதற்கு இன்னொரு வலுவான ஆதாரம்.

இன்று இந்துக்கள் என்று அழைக்கப்படும் மக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் இம்மூட மவ்லவிகள் முஸ்லிம்களிடையே அரங்கேற்றி வயிறு வளர்த்து வருவதை நாம் நன்கு அறிவோம். அதற்கு மாறாக அவர்களிடம் காணப்படும் மிகச் சரியான நடைமுறையை இம்மவ்லவிகள் ஏற்பதில்லை. அது என்ன? சூரியன், சந்திரன், பூமி இவற்றின் மத்தியப் புள்ளி ஒரே நேர்கோட்டிற்கு வருவது பழைய மாதம் முடிந்து புதிய மாதம் ஆரம்பித்துவிட்டது என்பதையே உறுதிப்படுத்துகிறது. அனைத்து விஞ்ஞானிகளும் அதையே புதிய மாதம் (ஹிeழ னிலிலிஐ) ஆரம்பித்து விட்டது என்று உறுதியாகக் கூறுகின்ற னர். இந்துக்கள் அந்த நாளை அமாவாசை-கடந்து செல்லும் மாதத்தின் இறுதிப் பகுதி, புதிய மாதத்தின் ஆரம்பப் பகுதி என்று உறுதியாகச் சொல் கின்றனர். அமாவாசைக்கு அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளை-பிரதமை என்று மிகச் சரியாகக் கூறுகின்றனர்.

இந்துக்களின் பல வழிகேடுகளை நேர்வழி என்று சொல்லி அரங்கேற்றி வரும் இம்மவ்லவிகள் பிறை விவகாரத்தில் அவர்களின் மிகச் சரியான பிறைக் கணக்கை ஏற்கத் தயாரில்லை. அதற்கு மாறாக யூதர்கள் கி.மு. 383-ல் அதாவது இன்றைக்குச் சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் கற்பனையில் நடைமுறைப் படுத்திய கண்ணுக்குத் தெரிந்த 3-ம் பிறையை 1ம் பிறையாக வழிகேட்டை மார்க்க மாக்கியதைக் கண்மூடிப் பின்பற்றி இந்த மூட முல் லாக்களும் வழிகெட்டுச் செல்கின்றனர். கி.மு. 383ல் யூதர்கள் கற்பனை செய்த நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற வழிகேட்டையும் இம்மவ்லவிகள் பிடிவாதமாகவே பின்பற்றுகின்றனர். அவர்களின் வழிகேட்டை நிலைநாட்டப் பொய்யன் பீ.ஜை. சங்கமத்திற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் முதல் நாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அல்லாஹ் வின் தூதர் அவர்கள் மாதத்தின் 3-ம் நாளைத்தான் முதல் நாளாக எடுத்துக் கொள்ளக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யை சொல்லித் திரிகிறார். அவரைப் போல் நபி(ஸல்) அவர்களும் சூரியனும், சந்திரனும் கணக்கின்படியே சுழல்கின்றன என்று அல்லாஹ் குர் ஆனில் பல வசனங்களில் கூறி இருப்பதை நிராகரித்து குஃப்ரிலாகி சந்திரனின் சுழற்சி மனிதனின் கண்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நபி(ஸல்) சொன்னதாக சொல்லும் பொய்யன் பீ.ஜை. எந்தளவு மாபெரும் வழிகேட்டில் இருக்கிறார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆக வழிகேடுகளையே தேர்ந்தெடுத்து அவற்றையே நேர்வழியாகக் கூறி மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவதே இம்மவ்லவிகளின் அசல் குறிக்கோள். அல்லாஹ் அல்குர்ஆனில் 8 இடங்களில் தாஃகூத் மனித ஷைத்தான்கள் என்று கூறி இருப்பது இம்மவ்லவிகளையே! தூய ஒரே மார்க்கத்தில் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எத்தனைப் பிரிவு களை உண்டாக்கி வயிறு வளர்க்கிறார்களோ, அத்தனைப் பிரிவுகளின் மவ்லவிகளும் தாஃகூத்கள் தான். மனித ஷைத்தான்கள்தான். இந்த மவ்லவி களில் எவர் பின்னால் சென்றாலும் நீங்கள் உங்கள் இடத்தை நரகில் முன்பதிவு செய்து கொள்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். கடுமையாக எச்சரிக்கிறோம். மேலும் நாளை ஆதம்(அலை) தூக்கி நரகில் எறியும் ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேரில் இருப்பீர்களே அல்லாமல் சுவர்க்கம் செல்லும் 1000ல் ஒரேயொருவராக இருக்கமாட்டீர்கள்! பெரும்பான்மையினரின் நிலையை 6:116, 5:100, 32:13, 11:118,119 இன்னும் அதிகமானோர், அதிக மானோர் என்று வரும் வசனங்கள் அனைத்தையும், புகாரீ 3348, 4741 முஸ்லிம 379 ஹதீஃத்களையும் நீங்களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள். எச்சரிப்பது மட்டுமே எம்கடமை!

Previous post:

Next post: