சிந்தனை செய் மனமே!

in 2017 அக்டோபர்

– அபூ அனீஸ்

“”நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத்தாருக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது” (அல்குர்ஆன்:16:11) “”மேலும் இந்த உதாரணங்களை மனிதர்கள் சிந்திக்கும்  பொருட்டு  நாம்  விளக்குகிறோம்.            (அல்குர்ஆன் : 59:21)

இறை நெறிநூலான கண்ணியம் மிக்க- பரிசுத்த குர்ஆனை பொருள் அறிந்து படிக்கும் சமயத்தில், அல்லது பிறரிடமிருந்து செவி வழி யாகக் கேட்கும் சமயத்தில், குர்ஆன் கூறும் விளக்கங்கள் நம் சிந்தனையை தூண்டுகிறது. மனம் சிந்தனை செய்ய ஆரம்பிக்கும் போது, நமது சிற்றறிவுக்கு இன்னும் பல தெளிவு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இது குர்ஆனில் மட்டும் அல்ல. ஹதீஸ்கள் மற்றும் ஏனைய எந்த விசயங்களாயினும் சரி, சிந்தனை செய்தால் நமக்கு மேலதிகமான விளக்கங்கள் கிடைக்கும்.தவறான சிந்தனை தவறான வழிக்கு இட்டுச் சொல்லும்! அதை மறந்து விடாதீர்கள்!

எமது சிந்தனையில் எமக்கு கிடைத்த சிலவற்றை பகிர்வு செய்யும் எண்ணத்துடன் இத்தொடரை ஆரம்பிக்கிறோம். நீங்களும் சிந்தனை செய்யுங்கள்.சிந்திப்போம்!  வாருங்கள்  இப்போது!!

55:29 இறை வசனம் கூறும் விளக்கத்தை கவனியுங்கள். “”வானங்களிலும் பூமியில் உள்ளோர் (அனை வரும் தங்களுக்கு வேண்டியதை) அவனிடமே கேட்கின்றனர்…” என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தில் நான் சிந்தித்தது எதை? இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தினர் அல் லாஹ்வை இறைவனாக ஏற்கவில்லை; அப் படிப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் கேட்டி ருக்க முடியாதே. நிலைமை இவ்வாறு இருக்க, “”அல்லாஹ்வோ, வானங்களிலும் பூமியில் உள் ளோர் அவனிடமே கேட்கின்றனர்” என்று கூறுகிறானே? இந்த இறை வசனம் தான் என்னை சிந்திக்க வைத்தது! சிந்தனையின் விளைவு! எனக்குள் கேள்வி கள்  பிறந்தன?  விடையும்  கிடைத்தது!!

ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப் பிடம், கல்வி, திருமணம், இன்னும் விதவித மான மாறுபட்ட தேவைகள் உலகில் பற்பல உண்டு. அதேபோல குடும்பத்தில் குழப்பம், நோய், சண்டை சச்சரவு, அடி-உதை, போலீஸ் ஸ்டே­ன், கோர்ட்டு, சொத்து பிரித்தல், வீட் டுக்கு வீடு பிரச்சனை, நாட்டுக்கு நாடு பிரச் சனை போன்ற இன்னும் விதவிதமான மாறு பட்ட  பிரச்னைகள்  உலகில்  பற்பல  உண்டு.

உலகெங்கும் உள்ளவர்களின் தேவைகள் அனைத்தையும், அவர்கள் கேட்டாலும் கேட் காவிட்டாலும், படைத்தவன் என்ற அந்தஸ் தில் இறைவன் படைப்பினங்களுக்கு கொடுக்க வேண்டும் அல்லவா? கொடுக்க வேண்டியவர் களுக்கு கொடுக்க வேண்டிய அளவு, கொடுக்க வேண்டிய தரம், கொடுக்க வேண்டிய விதம் மற்றும் அனைத்தையும் அவன் விரும்பியவாறு கொடுத்து வருகிறான். அல்லது படிப்பினை பெறுவதற்காக கொடுக் காமலும் இருந்து வருகி றான். இது உலகெங்கும் கண்கூடாக  நடைபெற் றுக்  கொண்டிருக்கும்  மறுக்க  முடியாத நிஜம்.

அதேபோல உலகெங்கும் உள்ளவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் அவர்கள் பிரார்த்தித்தாலும் பிரார்த்திக்காவிட்டாலும் படைத்தவன் என்ற அந்தஸ்தில் படைப்பினங் களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டி இருக் கிறதல்லவா? தீர்க்க வேண்டியவர்களுக்கு தீர்க்க வேண்டிய அளவு, தீர்க்கக வேண்டிய விதம் மற்றும் அனைத்தையும் கவனித்து தீர்த்து வருகிறான். அல்லது படிப்பினை பெறுவதற் காக தீர்க்காமலும் இருந்து வருகிறான். இது உலகெங்கும் கண்கூடாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்  மறுக்க  முடியாத  நிஜம். இவை இறைவனின் அன்றாட வேலையாக இருப்பதாக 55:29 வசனத்திலேயே கூறுகிறான்.

அல்லாஹ்வை இறைவனாக ஏற்காதவர்கள், அல்லாஹ்விடம் கேட்டிருக்க முடியாது, மாறாக அவர்கள் யாரை வணங்குகிறார்களோ அவர்களிடமோ அல்லது அவைகளிடமோ தான் கேட்டு இருப்பார்கள். அவர்கள் என்ன நினைப்புடன் கேட்டு இருப்பார்கள்? நாம் இறைவனிடம் கேட்கிறோம் என்ற நினைப்பில் கேட்டு இருப்பார்கள். அப்படி என்றால், ஒருவன்தான் இறைவன் என்ற நிலையில், இறைவனிடம் கேட்பதாக நினைத்த அவர்க ளின் பிரார்த்தனையின் நிலை என்ன? உண்மை யில் யார் இறைவனோ அவனைத்தானே சென் றடைய வேண்டும்? ஆக யாரிடம் கேட்டாலும் கேட்பது எல்லாம், எல்லாவற்றையும் அறிந்த ஒரே இறைவனிடம் தான் போய் சேர்கின்றன புரியவில்லையா?தவறான விலாசம்! சரியான பட்டுவாடா! (ராங் அட்ரஸ்- ரைட் டெலிவரி!)

நீங்கள் ஒரு விலாசத்தில் வசிக்கிறீர்கள். அந்த வீட்டை காலி செய்து விட்டு அடுத்த வீதி யில் உள்ள வேறு வீட்டுக்கு மாறி விடுகிறீர்கள். உங்களது பழைய விலாசத்துக்கு ஒரு கடிதம் வருகிறது. பழைய வீட்டில் நீங்கள் வசித்திருந் ததை அறிந்த போஸ்ட்மேன், அடுத்த தெருவில் இருக்கும் உங்களைத் தேடி வந்து உங்களுக்கு வந்த கடிதத்தை, உங்களிடம் கொடுக்கிறார்.

அதே போலத்தான் மனிதர்கள் யாரிடம் பிரார்த்தித்தாலும், போய் சேரவேண்டிய ஒரே இறைவனிடம் சேர்ந்து விடுகிறது. அவனைப் பொருத்தவரை அவன் கருணையாளன். எந்த மதத்தினராய் இருந்தாலும், அவர்கள் எல்லோ ரையும் அவனே படைத்தவன். அறியாமையில் அவர்கள் வேறு யாரிடம் கேட்டாலும், இறை வன் நான்தான் என்று மேலே காட்டிய 55:29 வசனத்தின் பிரகாரம் அவற்றை கேட்டு கொள் கிறான். தவறு செய்யும் குழந்தையின் தேவை களை பூர்த்தி செய்யும் தாயைப் போல, தகப்ப னைப் போல; வித்தியாசம் என்னவென்றால், தாய்-தகப்பனின் அன்பை விட இறைவன், அவன் படைத்தவற்றின் மீது காட்டும் அன்பு அளவிட  முடியாதது.

அப்படியயன்றால், அந்த ஒரே இறைவன் உண்மையிலேயே யார்? ஆழமாக சிந்தித்து தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு வரின்  கடமை  அல்லவா?

அதற்கும் முன், வேறு கோணத்தில் இன்னும் சிந்திப்போம்! இறைவன் அல்லாதோரிடம் பிரார்த்திக்கி றார்களே, அந்த பிரார்த்தனை எங்கே போகி றது? பிரார்த்திப்பவரைப் பொறுத்த வரை அவர் யாரிடம் பிரார்த்திக்கிறாரோ அவரிடம் போய் சேர்கிறது என்பது அவரின் நம்பிக்கை. அப்படி போய் சேர்கிறதா? சேராது, ஏனேனில் இறந்து விட்டவர்களிடமோ அல்லது வெறும் கற்களிடமோ பிரார்த்தித்தால், அப்பிரார்த் தனை எப்படி ஒரு ஜடத்திடம் அல்லது ஒரு கல்லிடம் சென்றடையும்? சென்றடையாது அல்லவா? அப்படி என்றால் அப்பிரார்த்தனை பிரார்த்தித்தவருக்கே திரும்பி வந்து விடுமா? அதாவது பிரார்த்தனை நிறைவேறாதா? அப் படி என்றால் இவர்களைப் படைத்தானே அந்த உண்மையான இறைவன், அவன் இவர்களை எதற்கு படைத்தான்?

எனவே, இப்போது உண்மையான இறை வன் யார் என்பதை அறிய வேண்டிய அவசி யம்  வந்து  விட்டது.குர்ஆன் கூறுவதை சிந்திப்போம், வசனத்தை பாருங்கள் : அது “”(குர்ஆன்) அகிலத்தார் அனைவருக் கும்  நல்லுபதேசம்” (68:52) என்றும் “”எல்லாவற்றிற்கும் அவனே இறைவனாக இருக்கிறான்” (6:164) என்றும். அகில உலகத்தையும் படைத்து பரிபாலித்து பரிபக்குவப்படுத்துவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ்  அனைத்தும்”  (1:1)  என்றும். “”(இறக்காமல்) என்றென்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” (2:225) என்றும்.

இன்னும் பற்பல வசனங்களிலும், அல்லாஹ், தான்தான் எல்லா உலகங்களுக்கும் இறைவன் என்று அறிவிக்கிறான். எல்லோரிட மும் மனித நேயத்துடன் அன்பு செலுத்த சொல்லும் இஸ்லாம், அகில உலகிற்கும் இறை வன் அல்லாஹ்  ஒருவன் தான் என்ற கொள் கையில் மட்டும். ”இஸ்லாத்திற்கு விட்டுக் கொடுத்தல் இல்லை”  (No Compromise)
எனவே எல்லோருடைய தேவைகளும் பிரார்த்தனைகளும் உண்மையான ஒரே இறைவனை  வந்து  சேர்கின்றன.  சிந்தையை தூண்டிய இந்த 55:29 இறை வசனம் வேறெந்த நூலிலும் உண்டோ? இந்த வசனத்தையும் இதை தொடர்ந்து வரும் அடுத்த  வசனத்தையும்  பாருங்கள்.

“”வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அவ னிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் (அக்) காரியத்திலேயே இருக்கிறான்.  55:29

“”ஆகவே (மனித வர்க்கம், ஜின் வர்க்கம் ஆகிய) நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடையில் எதைப் பொய்யாக்குவீர் கள்?” 55:30  என்று சவால் விடுகிறான்.

Previous post:

Next post: