அமல்களின் சிறப்புகள்

in 2018 பிப்ரவரி

அமல்களின் சிறப்புகள்….
ஒரு திறனாய்வு!
தொடர் : 33

M. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்

கடந்த இரண்டு இதழ்களில் திக்ரைப் பற்றி ஆய்வு செய்யப்பட்ட அமல்கள் இன்ஷா அல்லாஹ் இந்த இதழிலும் தொடர்கிறது.
எப்படி, எப்போது திக்ர் செய்ய வேண் டும் என்று இறை வசனங்களுக்கு மாற்றமாக வும், ஸஹீஹான வேறு ஹதீஃத்களை இவர்கள் செய்யும் திக்ருக்கு ஆதாரமாகக் காட்டி தில்லு முல்லு செய்திருப்பதையும் சென்ற இரண்டு இதழ்களில் பார்த்தோம்.
அல்லாஹ்வின் கட்டளைகள் அவ்வாறி ருக்க, “”ஜலாலிய்யா” என்ற ராத்திபு நூலில் கூறப்பட்டுள்ள திக்ரு வார்த்தைகளை கவனித்தால், அதில் அர்த்தம் தரக்கூடிய எந்த பொருளும் இருக்காது.

“”இல்லல்லாஹ்” என்று ஒரு வார்த் தையை கூட்டமாக சப்தமிட்டு திரும்பத் திரும்ப திக்ர் செய்வார்கள். “”அல்லாஹ்வைத் தவிர” என்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தமாகும். இதில் என்ன அர்த்தம் அவர் களுக்கு கிடைத்து விட்டது? அடுத்து “”ஹூ-ஹூ” என்ற ஒரு வார்த்தையை கூட்டமாக சப்தமிட்டு திரும்பத் திரும்ப திக்ர் செய்வார்கள். “”அவன்-அவன்” என்பது தான் இந்த வார்த்தையின் அர்த்தமாகும். இதிலும் என்ன அர்த்தம் அவர்களுக்கு கிடைத்து விட்டது? இந்த திக்ர்கள் அர்த்தம் இல்லாத ஒரு காட்டு கத்தல் – அவ்வளவு தான்.

இரவு நேரங்களில் மின்சார விளக்குகள் பிரகாசிக்க, வந்திருக்கும் நபர்கள் எதிர் எதிர் வரிசையில் முகத்திற்கு முகம் பார்த்து உட்கார்ந்து கொண்டு சில வார்த்தைகளைக் கொண்டு திக்ர் செய்து கொண்டு இருப்பார்கள். திடீரென்று பிரகாசித்துக் கொண்டிருக்கும் விளக்குகள் அணைக்கப்படும். கும்மிருட்டாக இருக்கும். இருட்டு திக்ர் இப்போது ஆரம்பமாகப் போகிறது என்று இதற்கு அர்த்தம்! இந்த ஒரு நேரத்திற்காகத் தான் திக்ர் செய்பவர்கள் ஆவலோடு காத்து இருப்பார்கள். திக்ர் செய்பவர் களுக்கு கூலி கொடுத்து தத்தமது வீடுகளில் வழமையாக இதனை நடத்தி வருபவர்களும் இந்த இருட்டு திக்ர் நடைபெறப் போகும் நேரத்தை எதிர்பார்த்து தாங்களும் அதில் கலந்து கொள்ள ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருப்பார்கள்.

உட்கார்ந்து திக்ர் செய்து கொண்டிருந்த நபர்கள் இப்போது இரண்டு வரிசைகளில் முகத்திற்கு முகம் பார்க்கும்படியாக எதிர் எதிர் வரிசையில் தயாராக இருட்டில் எழுந்து நின்று கொள்வார்கள். இது உச்ச கட்டம்! “”ஹூ-ஹூ”(அவன்-அவன்) என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். “”ஹூ” என்று முதல் எழுத்தை சொல்லும்போது ஒவ் வொரு வரிசையிலும் உள்ளவர்கள் தலை யையும் உடலையும் லேசாக முன்னுக்கு தள்ளி, அடுத்த “”ஹூ” சொல்லும்போது முன்னுக்கு தள்ளிய தலையையும் உடலை யும் ஒரு சேர ஆட்டி, லேசான சப்தத்துடன் பின்னுக்குத் தள்ள ஆரம்பிப்பார்கள். போகப் போக, நேரம் ஆகஆக, சப்த தொனி (வால்யும்) ஏறிக்கொண்டே போகும்.

அதே நேரத்தில் ஆட்டத்தின் வேகத்தையும் அதிகரித்துக் கொண்டே போவார்கள். உச்ச ஸ்தாயியில் ஒவ்வொருவரும் உடலை ஆட்டி ஆட்டி எதிர் வரிசையில் இருப்பவர் மீது பாய்வது போல பாசாங்கு செய்து “”ஹூ-ஹூ”,””ஹூ-ஹூ”,””ஹூ-ஹூ” (அவன்-அவன், அவன்-அவன், அவன்-அவன்) என்று சொல்லிக்கொண்டே, இன் னும், இன்னும் சத்தமாக வால்யத்தை ஏற் றிக்கொண்டே, அதே நேரத்தில் உடலை ஆட்டும் ஆட்டத்தையும் வேகவேகமாக அதாவது ஒரே நேரத்தில் இரண்டையும் வேகவேகமாக செய்து கொண்டிருப்பார் கள். இந்த சமயத்தில் சிலருக்கு கட்டி இருக் கும் வேஷ்டி இடுப்பிலிருந்து அவிழ்ந்து இறங்கி கொண்டிருக்கும். பக்தி பரவசத்தில் லயித்து போயிருக்கும் அவர்கள் வேஷ் டியை இடுப்பில் கட்டிக் கொள்வதில் கவனம் செலுத்தாமல் கையில் பிடித்துக் கொண்டே “”ஹூ-ஹூ” (அவன்-அவன்) என்று கூறி எதிர் வரிசையினர் மீது பாய்ந்து கொண்டே இருப்பார்கள். இந்த காட்சி, பார்ப்பதற்கு அகோரமாக இருக்கும். இந்த நேரத்தை பக்தி பரவசத்தின் உச்ச கட்டமாக நினைத்து செயல்படுத்துவார்கள்.
சில மஜ்லிஸ்களில் இதை “”ஹூ ஹூ அல்லாஹு” என்று கூறியும் எதிர் வரிசையில் உள்ளவர்கள் மீது பாய்வது போல பாசாங்கு செய்வார்கள்.

இறை வசனம் 7:205ல் காலையிலும், மாலையிலும் திக்ர் செய்யுமாறு அல்லாஹ் கட்டளை இட்டிருந்தாலும், அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். இரவு ஊரெல் லாம் அடங்கியபின், 11 அல்லது 12 மணி அளவில் திக்ரை ஆரம்பிப்பாரகள். 3 மணி வரை சில சொற்களைக் கொண்டு திக்ர் செய்வார்கள். அதில் “”லா இலாஹா இல்லல்லாஹு”(அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை) என்ற கலிமாவைக் கொண்டும் திக்ர் செய்வார்கள்.

மீசானின் ஒரு தட்டில் உலகத்தையும் உலகில் உள்ள எல்லாவற்றையும் வைத்து விட்டு, “”லா இலாஹா இல்லல்லாஹு” என்கின்ற கலிமாவை மற்றொரு தட்டில் வைத்து எடை போட்டால், “”லா இலாஹா இல்லல்லாஹு” என்கின்ற கலிமாவின் எடை அதிகமாக இருக்கும் என்று அறிவுறுத் தப்பட்ட, உயர்வு மிக்க கண்ணியம் வாய்ந்த அந்த கலிமாவை இந்த திக்ர் மஜ்லிஸில் சத்தமாக சொல்லும் முறை உண்மை முஸ்லிமை வேதனைப்படுத்தாமல் இருக் காது. அதாவது மேலே காட்டியவாறு, “”ஹூ-ஹூ”, “”ஹூ-ஹூ”, என்று எப்படி மெதுவான தொனியில் ஆரம்பித்து, போகப் போக வேகவேகமாக உச்ச தொனிக்கு சென்று உடலை ஆட்டுவதையும் உச்ச தொனியில் கத்துவதையும் எதிர் வரிசையில் இருப்பவர்கள் மீது பாய்வது போல செய் வாரகளோ, அதே போல இந்த புனிதம் வாய்ந்த கலிமாவையும் சொல்வார்கள்.

அதாவது “”லா இலாஹா” என்ற சொற் களை லேசான சப்தத்துடன் நின்ற நிலையிலேயே சொல்லிவிட்டு, “”இல்லல்லாஹு” என்ற சொல்லை அடித்தொண்டையில் அழுத்தத்துடன் வேகமாக மிரட்டுவது போல சொல்லிக்கொண்டே எதிர் வரிசை யில் இருப்பவர்கள் மீது பாய்வது போல பாசாங்கு செய்து, பக்தி பரவசத்தை துவக்கி வைப்பார்கள். போகப் போக தொனி, உடல் ஆட்டம் இரண்டையும் இன்னும் இன்னும் என்ற ரீதியில் வேகவேகமாக சத் தத்தை (வால்யூமை) ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். கிட்டத்தட்ட முரட்டுத்தன மாக பக்தி பரவசம் ஏற்பட்டு டான்ஸ் ஆடுவது போல அச்செயல் இருக்கும். தங்க ளுக்கு தூக்கம் வரக்கூடாது என்பதற்காக புனிதம் வாய்ந்த இந்த கலிமாவை டான்ஸ் ஆடி கொச்சைப்படுத்துவார்கள். இதேபோல “”இல்லல்லாஹ்-இல்லல் லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர-அல்லாஹ் வைத் தவிர) என்ற வார்த்தையையும் பயன்படுத்தி குறைத்துக் கொள்வார்கள்.

இந்த காட்டு கத்தலுக்கும், டான்சுக்கும் பெயர் திக்ராம் .இதெல்லாம் பக்தியாம்! இஸ்லாத்தை களங்கப்படுத்த ஏதோ ஒரு சதிகார கும்பலால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிவேலையாக இது இருக்குமோ என்று ஐயம் கொள்ளத் தோன்றுகிறது. சம்மந்தமே இல்லாத ஹதீஃத்களை இவர்களின் திக்ரு களுக்கு ஆதாரமாகக் காட்டி முஸ்லிம்களை ஏமாற்றி வருவதே “அசி’ ஆசிரியர் அவராகவே தரும் ஆதாரம். இந்த ஹதீஃத் என்ன செய்தியை அறிவிக்கிறது? இவர்களின் திக்ர் எப்படி இருக்கிறது சிந்தியுங்கள்!
7:205 இறை வசனத்தில் மனதில் பணிவு டனும், அல்லாஹ்வின் அச்சத்தோடும், சொல்லில் சத்தம் இல்லாமலும் திக்ர் செய்யு மாறு அல்லாஹ் கூறி இருப்பது போல இந்த திக்ர் நடைபெறுகிறதா என்றும் சிந்தியுங் கள். அல்லாஹ் குர்ஆனின் 59:24, 17:110, 7:180 வசனங்களில் கட்டளை இட்டிருப் பது போல திக்ர் மஜ்லிஸில் செய்யவில்லை. மாறாக அர்த்தம் இல்லாத சொற்களைக் கூறுகிறார்கள்.கூட்டமாக உரத்த குரலில் சத்தமாக திக்ர் செய்கிறார்கள். டான்ஸ் ஆடு வது போல ஆட்டம் போடுகிறார்கள். சுவர்க்கத்தை யாசிக்கவில்லை. நரக நெருப்பை விட்டும் பாதுகாவல் தேட வில்லை. இவ்வாறாக அல்லாஹ்வின் கட்ட ளைக்கு மாற்றமாக செயல்படுவதால் அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதும் இல்லை. கூட்டாக திக்ர் செய்யும்படி எந்த இறைவசனமும் கூறவில்லை.

மாறாக தனியாக திக்ர் செய்யும்படி தான் அல்லாஹ் கட்டளை இட்டு இருக்கிறான். அதற்கிணங்க, இறைக்கட்டளை களை அப்படியே செயல்படுத்திக் கொண்டி ருந்த நபி(ஸல்) அவர்கள், வேறு எவருடனும் சேர்ந்து கூட்டாக திக்ருகள் செய்ததும் இல்லை. அவ்வாறு செய்யுமாறு உம்மத் துக்கு கட்டளை இடவுமில்லை. திக்ர் மஜ்லிஸ்களை ஏற்படுத்தவும் இல்லை. ஆக, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை ஹதீஃதில் சொல்வதாக “அசி’ ஆசிரியர் புதிய தாக அர்த்தம் கூறி மக்களை காட்டுமிராண்டியாக செயல்பட வைத்தது பித்அத் என்ற வழிகேடாகும்.

ஜும்ஆ அன்று மிம்பரில் நபி(ஸல்) அவர் கள் உபதேசித்த ஹதீஃத் ஒன்றை உலகெங் கிலும் உள்ள ஒவ்வொரு பள்ளிவாயில்களி லும் இன்று வரை தவறாமல் செய்து வருகின்றனர். அந்த ஹதீஃதாவது, “”உங்களி டையே இரண்டை விட்டு செல்கிறேன். அந்த இரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டு வாழும் காலம் எல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்-குர்ஆன், மற்றொன்று நான் காட்டித் தந்த வழிமுறை-ஹதீஃத் என்றும், “”நான் காட்டித் தந்தது தான் மார்க்கம். அதில் கூட்டவோ, குறைக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படி கூட்டினால் ஒவ்வொரு செயலும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச் செல்லும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

அந்த சுன்னத் இன்றளவிலும் ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஏறக்குறைய எல்லாப் பள்ளி களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் வழிகேட்டை அறிமுகப் படுத்தி, வழிகெட்டு போனவர்களை “”தான் செய்யும் திக்ர் சரியானதுதான்” என்று நம்ப வைத்து, கழுத்தை அறுப்பதை, “”அசி” புத்தகம் பக்கம் : 376ல் இனி அடுத்து ஆய்வு செய்வோம். (இன்ஷா அல்லாஹ் இனியும் வரும்)

 

Previous post:

Next post: