அறிந்து கொள்வோம்!

in 2018 பிப்ரவரி

மர்யம்பீ, குண்டூர்,

1. ஷைத்தான் மனிதர்களுக்கு பயங்கர விரோதியாவான் என கூறும் அல்குர் ஆனின் வசனம்.
அல்குர்ஆன் : 43:62
2. பலம் பொருந்திய எனது அடியான் என அல்லாஹ் யாரை கூறுகிறான்?
தாவூத் நபி, 38:17
3. நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்த மான ஊர் எது?
மக்கா, திர்மிதி : 3860
4. தன்னிடம் குற்றவாளியாக வருபவ னைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
நரகம் மட்டுமே, அதில் அவன் சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான். 20:74
5. ஆஷீரா நோன்பு எந்த மாதத்தில் வைக்க நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்?
முஹரம் மாதம், புகாரி : 1592
6. உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விர யம் செய்யாதீர்கள் என அல்லாஹ் கூறும் வசனம் எது?
அல்குர்ஆன் : 7:31
7. பூமியை அல்லாஹ் எத்தனை நாட்களில் படைத்தான் என கூறும் வசனம் எது?
இரண்டு நாட்களில். அல்குர்ஆன் : 41:9
8. என்னுடைய சமுதாய ஆண்களுக்கு ஹராம் என நபி(ஸல்) அவர்கள் அறிவிப் பது எது?
பட்டாடை அணிவதும், தங்கம் அணிவ தும். திர்மிதி : 162
9. மக்களில் கண்ணியத்திற்குரியவர் என எந்த நபியை, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நபி யூசூப்(அலை) புகாரி : 3409
10. வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தை களை கொல்லாதீர்கள் என அல்லாஹ் கூறும் வசனம் எது?
அல்குர்ஆன் : 17:31
11. யூசூப் நபி தனது கனவில் எத்தனை நட் சத்திரங்களைக் கண்டதாக கூறினார் கள்?
11 நட்சத்திரங்கள். அல்குர்ஆன் : 12:4
12. அல்லாஹ்வின் நினைவினால் தான் உள் ளங்கள் அமைதியுறுகின்றன என்று கூறப்படும் வசனம் எது?
அல்குர்ஆன் : 13:28
13. தஜ்ஜால் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான் என்று நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள்?
40 நாட்கள், முஸ்லிம் : 5629
14. ஒரு நல்லடியாரின் பெயரைக் கொண்ட அத்தியாயம் எது?
லுக்மான், அத்தியாயம் : 31
15. ஒருவருடைய உணவு எத்தனை பேருக்கு போதுமானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இரண்டு பேருக்கு. முஸ்லிம் : 4182
16. ஒற்றை செருப்புடன் நடப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
தடை செய்தார்கள். புகாரி : 5856
17. ஜைனப்(ரழி) அவர்களின் முந்தைய பெயர் என்ன?
பர்ரா. முஸ்லிம் : 4335
18. பிறருடைய வீட்டிற்குள் செல்ல எத் தனை முறை ஸலாம் கூற நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்?
மூன்று முறை. புகாரி : 6245
19. நமது நோன்பிற்கும், வேதம் கொடுக்கப் பட்ட யூத, கிறிஸ்துவர்களின் நோன்புக் கும் என்ன வித்தியாசம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சஹர். முஸ்லிம் : 1386
20. வீடுகளில் மிகவும் பலவீனமான வீடு எது என அல்லாஹ் கூறுகிறான்?
சிலந்தியின் வீடு. 29:41

 

Previous post:

Next post: