அறம் செய்ய விரும்பு…

in 2018 பிப்ரவரி

A.B. அஹமது
புதுக்கோட்டை

இனிய தமிழ் மொழியில் ஓர் அற்புதமான வாசகம் இது. இந்த உபதேசத்தை மறுப்போர் உலகிலேயே கிடையாது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தமிழ்மொழி மூலமாக உல கிற்கே ஒற்றை வரியில் வழிகாட்டும் இந்த வாசகத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அறம் செய்வது ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாக இருக்கிறது.
அறம் என்றால் “”கொடை” என்ற தர்மத்தை மட்டும் குறிக்கவில்லை. அறம் சார்ந்த செயல் செய்தல், நல்ல நண்பர்களோடு இருத்தல், அண்டை வீட்டுக்காரனுக்கு நீதி செலுத்துதல், பிறன்மனை நோக்காமல் இருத்தல் எல்லாமே அறம் சார்ந்த செயல்கள் தான்.

ஏழைப் பிள்ளைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதும், படிப்பு செலவுக்கு பணம் கட்டுதல் எல்லாமே அறம் சார்ந்த செயல்களே.
அறம் பற்றி தமிழ் இலக்கியங்கள் அதிகமதிகம் சொல்லுகின்றன.

இன்றைய காலத்தில் பட்டிமன்றங்களில் அல்லது இலக்கிய பேருரைகளில் இந்த அறம் எனும் தலைப்பு புகழ் பெற்றது. மக்களிடம் அறம் குறைந்து வருகிறது என்று பேச்சாளர்கள் சொல்லி சீறுவார்கள். நாட்டிலே அறம் தேய்ந்து போய்விட்டது எனவும் பேச்சாளர்கள் உரக்க சொல்லுவார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சொல்லப் பட்ட அறம், அறம் சார்ந்த வாழ்வு, அறம் சார்ந்த சமூகம், அறம் சார்ந்த அரசியல் எல்லாம் இப்பொழுது இல்லை என்று ஏன் சொல்லுகிறார்கள்?

அறம் என்பது தர்மம் செய்க என்ற பொருளை மட்டும் உடையது அல்ல. அறம் என்பது ஒழுக்க நெறிகளையும் குறிக்கும்.
அறம் அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது.

இந்த அறம் என்பதை இலக்கிய சொற்பொழிவில் கிடைக்கும் உபதேசமாக இருந்தால் அது உள்ளத்தின் அடியில் இறங்காமல் போய்விடு கிறது. அப்படி அல்லாமல் அறம் செய்தால் உன் வாழ்வில் நன்மை கிடைக்கும். உன் குடும்பத் திற்கு நன்மை கிடைக்கும். உன் வாரிசுகளுக்கும் நன்மை கிடைக்கும் என்று சொல்லும்போது அது மனதை என்னமோ செய்கிறது. அறம் செய்ய தூண்டுகிறது.

இன்னும் ஒரு படி மேலே போய் “”நீ அறம் செய்யும் போது உலக பாராட்டுக்காக செய்யாதே! உலகை படைத்த ஒரு இறைவனுக்கு பயந்து அந்த இறைவனின் அன்பை அருளை எதிர்பார்த்து செய். அந்த இறைவ னுக்கு அரபி மொழியிலே அல்லாஹ் என்று பெயர் என்று ஒருவர் சொன்னார். அவர் தான் முகமது நபி(ஸல்) என்பவர்.

அந்த நபி முகம்மது(ஸல்)லை மனதார ஏற்று உறுதி மொழி சொல்லியுள்ள மக்கள் செய்யும் அறம் மகத்தானது. யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே செய்ய விரும்புவார்கள். பொதுவாக மனித மனம் தப்பு செய்வதை ரகசியமாக செய்ய நினைக்கும். ஆனால் நபி முகம்மது(ஸல்)லை ஏற்றுள்ள மனம் மட்டும் நன்மை செய்வதை ரகசியமாக செய்ய விரும்பும். காரணம் அறம் செய்து அதன் பிரதிபலனை மக்களிடம் கேட்கமாட்டார்கள். எல்லோரையும் படைத்த உலகின் ஒரே இறைவனான “”அல்லாஹ்விடம்” மட்டுமே எதிர்பார்த்து செய்வதால், இந்த இடத்திலே சராசரி முஸ்லிம்களை பற்றி சொல்லியாக வேண்டும். தர்மம் செய்து தான் உண்டு, தன் வேலை உண்டு என்று வாழும் முஸ்லிம்கள் உலகில் அதிகம். (முஸ்லிம் பெயர் வைத்துக் கொண்டு கெட்ட செயல் செய்பவர்கள் உலகிலே உண்டு அதை மறுக்க வில்லை. அவர்கள் நபி முகம்மது(ஸல்)லை பற்றி அறியாத மக்கள் குர்ஆனை பற்றி புரியாத கைசேதத்துக் குரிய மக்கள், அதை தனியாக பார்ப்போம்) தான் உண்டு தன் வேலை உண்டு என வாழும் முஸ்லிம்கள் நம்மில் அதிகம் தொழுவார்கள், நோன்பு வைப்பார்கள், மது அருந்த மாட்டார்கள், வட்டி வாங்க மாட்டார்கள். ஏழை எளிய மக்களுக்கு பண உதவி, பொருளதவி செய்வார்கள், மாற்று மத சமூகத்தினர், முஸ்லிம்களை பார்த்து இவர்கள் நல்லவர்கள் என்றும் சொல்வார்கள்.

இந்த நல்ல முஸ்லிம்களுக்கு முக்கியமான செய்தியை பின்வருமாறு குர்ஆன் சொல்கிறது.
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள், நல்லதைச் செய்ய) ஏவுகிறார்கள், தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர், இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ள வர்கள்) (3:114)

அவர்கள் எது குறித்து உபதேசிக்கப்பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையை விட்டு விலக்கிக் கொண் டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்த வர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். (7:165)

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள், தொழு கையையும் நிலைநிறுத்துவார்கள், நாம் அவர் களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய் வார்கள். நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள், இத்தகையோருக்கு மறுமையில் (சுவனபதியயன்னும்) நல்ல வீடு இருக்கிறது. (13:22)

“”ஆயிரம் நல்லவர்களை விட ஒரு சீர்திருத்த வாதியையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று அரபியில் முதுமொழி ஒன்று உள்ளது. ஏனெனில் ஒரு சீர்திருத்தவாதி மூலம் ஒரு சமூகத்தையே அல்லாஹ் பாதுகாக்கின்றான். அதே நேரம் ஒரு நல்லவர் தன்னை மட்டுமே பாதுகாக்கின்றார். ஆகவேதான் அல்லாஹ் கூறுகின்றான்.

“மேலும் உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக் கும் நிலையில் நியாயமின்றி அழித்துவிடு வதில்லை” (11:117)

இந்த இறை வசனத்தை சற்று கவனியுங்கள். நல்லவர்களாக இருந்தால் என்று கூறவில்லை. மாறாக சீர்திருத்தம் செய்பவர்களாக இருந் தால் என்றுதான் கூறுகின்றான்.

அறத்தை பற்றி தமிழ் இலக்கிய கூட்டங்களில் அற்புதமாக பேசும் தமிழ் அறிஞர்களே! தமிழை நெஞ்சார நேசிக்கும் நல் உள்ளங்களே! அறம் சார்ந்த வாழ்க்கை வேண்டும் என விரும் பும் நல்லோர்களே, அறத்தை மட்டும் போதித் தால் அது மேடையோடு காணாமல் போய்விட வாய்ப்பு உண்டு. மாறாக அறம் செய்து அதா வது நல்லது செய்து, தீமையையும் விலக்கி வாழ்ந்தால் தான் அறம் தழைக்கும். நன்மையை ஏவி தீமை தடுத்தல் என்பது குர்ஆன் சொல்லும் வாழ்வியலாகும். அது நிரூபிக்கப்பட்ட உண்மை. தான் உண்டு தன் வேலை உண்டு என வாழும் முஸ்லிம் சமூகம் மேலே உள்ள குர்ஆன் போதனைகளை உணர்ந்தால் அறம் தழைக் கும். அந்த

சூழலில் அனைத்து சமூகமும் முஸ்லிம்களோடு தோளோடு தோள் நிற்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
நல்லவராக இருப்பதோடு, சீர்திருத்தம் செய்பவராகவும் மாறுங்கள்.
அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்.

Previous post:

Next post: