அமைதி(ஸலாம்)…!! இல்லாத அரசியல்…!!

in 2026 பிப்ரவரி

அமைதி(ஸலாம்)…!! இல்லாத அரசியல்…!!

அமைதி என்பது சண்டை, சச்சரவு இல்லாத வாழ்க்கையை மட்டும் குறிப்பது அல்ல. அது ஆழ்மனதில், குடும்பத்தில், சமூகத்தில், உலகில் பாதுகாப்பு, நம்பிக்கை, நல்வாழ்வுடன்  இருப்பதை  குறிப்பதாகும்.

ஆனால் இப்போது விடிந்தால் எந்த நாட்டில் யாருக்கு என்ன நடக்கும் என்ற பயத்தில் ஆண்டி முதல் அரசன் வரை வாழ்கிறார்கள். இதற்கு உதாரணம் சென்ற 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி  நடந்த  சம்பவம்.

இரவு படுக்கைக்கு போகும்போது அந்நாட்டின் (வெனிசுவேலா (VENEZUELA) அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி இருவரும் மறுநாள் அமெரிக்காவால் கைதியாக உலகின் முன் காட்டப்பட் டார்கள்.

இந்த நிகழ்வு இன்று உலகிலுள்ள உயர் பதவியில் உள்ளவர்கள் முதல் அனைத்து அரசி யல் தலைவர்கள் வரை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் :

பெட்ரோல் இருப்பு, ஆயுதப் போட்டி, பொருளாதாரம், அநீதியே ஆகும். அதாவது கொடுமை, தனியுரிமை மீறல், பாகுபாடு, அவசரம், கோபம், பொய்யான தகவல், ஆதிக்க அரசியல் உலகை ஆட்டிவைக்கிறது.

அதன் விளைவு :

நீதி  (Justice)இல்லை, 

சம உரிமை (Equality)  இல்லை,

மனித கண்ணியம்  (Human Dignity) மறுக்கப்படுதல்,

பாதுகாப்பு (Security) இல்லை,

சட்டம்+நெறி (Law+Ethics) சரியாக இல்லை,

உண்மை  (Truth)உறங்குகிறது.

உரையாடலில் உண்மை இல்லை, பொறுமை  இல்லை.

மேற்கண்டவைகள் சரியாக இல்லாத தால்  உலகில்  அமைதி  இல்லை.

ஆயினும் மதங்களும், மார்க்கமும் அமைதியைத்தான் போதிக்கிறது. உலகில் கடவுளை நம்பக்கூடியவர்களே அதிகம் இருந்தும்அமைதி  இல்லை.

என்ன  காரணம் :

மன அமைதியை பெறுவதற்காக அவன் தன்னிடமுள்ள அனைத்தையும் செலவழித்தும்மன அமைதி மட்டும் இல்லை

உலக நாட்டாண்மை நானே எனக் கூறும் அமெரிக்கா நாட்டின் அதிபரின் (டிரம்ப்) புலம்பல்  என்ன  தெரியுமா?

நாளை நான் அமெரிக்கா நாட்டின் அதிபராக இருப்பேனா என்பது நிச்சயம் இல்லை  என்பதாகும்.

ஐந்து ஆண்டுகள் அதிபர் பதவியில் இருப்பதற்காக அமர்த்தப்பட்ட அமெரிக்கா அதிபரின் நிலைமையே இதுவென்றால் மற்றவர்களின் நிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

உலக தலைவர்கள் அனைவரும் அமைதியை நிலைநாட்டவே பாடுபடுவதாக மேடையில் முழங்குகிறார்கள். ஆனால் அவர்களே அமைதியில் இல்லை. பதட்டத்தில் வாழ்கிறார்கள்.

இதற்கு  தீர்வு  என்ன?

உலகில் மனிதர்களுக்கு அமைதிக்கான வழியை காட்டுவது அவர்களை படைத்த ஏக இறைவனால் மட்டுமே முடியும். எவ்வாறு என்றால், ஒரு பொருளை உருவாக்கியவனே அதனுடைய இயக்கத்தை  நன்கு  அறிந்தவன்  ஆவான்.

ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி, பின்னர் வழிகாட்டி இருக்கின்றானே அவன் தான் எங்கள் இறைவன்  (அல்குர்ஆன் 20:50)

மேற்கண்ட வசனம் உங்கள் இறைவன் என்பவன் யார்? எனறு ஃபிர்அவ்ன் கேட்டதற்கு பதிலாக மூஸா(அலை) கூறியதாக  குர்ஆனில்  இடம்பெற்றுள்ளது.

இத்தகைய பதிலை எதிர்பார்க்காத இறைமறுப்பாளரான ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்க  இயலவில்லை. எனவே அவன் (ஃபிர்அவ்ன்) தன் வாதத் தின் திசையை மாற்றிக்கொண்டு, “எங்களுடைய முன்னோர்களின் நிலை என்ன?” என்று கேட்டு அவனுடைய சபையில் இருந்த அனைவருக்கும் மூஸா(அலை) அவர்களை பகையாளியாக்க நினைத்தான். அதற்கு மூஸா(அலை) கூறினார்கள். “அவர்களுடைய நிலையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிவான், அவர்கள் செய்து வந்த செயல்களின் குறிப்புகள் இறைவனின் பதிவு புத்தகத்தில் இருக்கின்றன. எனவே என் இறைவன் அதன்படி தீர்ப்பளிப்பதில் தவறுவதுமில்லை, மறப்பதும் இல்லைஎன கூறி ஃபிர்அவ்னின் திசை திருப்பும் வாதத்தை வென்றார்கள்.

இங்கு இந்த வசனமும் சம்பவமும் குறிப்பிட  காரணம், 

இறை மறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள் எல்லா காலங்களிலும் இவ்வாறு தான் இருந்தார்கள். அதாவது ஆட்சி, அதிகாரம் இருந்தும்அமைதிஇல்லாமலே இருந்தார்கள். இன்றும் அதே நிலைதான். எல்லா வகையான தொழில்நுட்பமும் வளர்ந்தும் அமைதியின்மை ஆட்சியாளர்களையும், மக்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு  தீர்வு  என்ன?

படைத்தவன்  கூறுகிறான்;

அல்லாஹ் அமைதி இல்லத்தை (தாரூஸ் ஸலாம்) நோக்கி (இஸ்லாத்தை மட்டுமே மார்க்கமாக ஏற்றுக்கொள்ளுமாறு) அழைக்கிறான். தான் நாடியோரை நேரான வழியில்  செலுத்துகிறான்”.  (அல்குர்ஆன் 10:25)

அமைதியை போதிக்கும் மார்க்கமானஇஸ்லாம்உலகிலுள்ள அனைவருக்கும் சொந்தமான மார்க்கம். இது மனிதர்களைப் படைத்த ஏக இறைவனால் வழங்கப்பட்டதாகும்.

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்ட  மார்க்கம்  இஸ்லாமாகும்(அல்குர்ஆன் 5:3)

இவ்வுலகில் நமக்கு இரு கடமைகளை இறைவன்  விதித்திருக்கிறான்.

ஒன்று : இறைவனுக்கு செய்யக்கூடிய கடமை. அது அவனை மட்டுமே வணங்கவேண்டும், படைப்புகளை வணங்கக் கூடாது.

 இரண்டு : மனிதர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள். அதாவது பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உற்றார், உறவினர்கள், அண்டை வீட்டார், ஏழைகள், அனாதைகள் என அனைவருடன் நல்ல முறையில்  நடந்துகொள்வது.

இஸ்லாம்என்பதற்குஸலாம்அமைதி என்பது பொருளாகும். யாரெல்லாம் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்று கடைப்பிடித்து வாழ்கின்றார்களோ அங்கே  அமைதி  கிடைக்கும்.

இறைவனை நினைவு கூர்வதால் மட்டுமே  உள்ளங்கள் அமைதியடைகின்றன.

Previous post: