2017 ஜுன்

செய்யது அஹமது. பூமியில் குழப்பம் செய்யாதீர்கள் என்று அவர் களிடம் சொன்னால் நிச்சயமாக நாங்கள் (மத) நல்லிணக்கம் ஏற்படுத்துகிறவர்கள், சீர்திருத்தவாதி கள் என்று சொல்கிறார்கள். 2:11 அப்படியில்லை அவர்கள் குழப்பவாதிகள்தான். (பசுத்தோல் போர்த்திய புலிகள்தான்) 2:12 அவர்கள் (தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்ட அஞ்சும்) கோழைகள். 9:56 (இந்) நயவஞ்சகர்கள் உங்களிடம், நிச்சயமாக “”முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று சாட்சி சொல் கின்றனர். (சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாத) இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய் தான் சொல்கின்றனர் என்று அல்லாஹ் […]

ஐயம் : நான் இலங்கை வங்கியில் கொஞ்சம்பணம் முதலீடு செய்துள்ளேன். எனது பணத்திற்கு ஒரு சிறிய தொகையை வருட முடிவில் சேர்க்கிறார்கள். அப்படி சேர்த்த பணம் எனக்கு ஹலாலாகுமா? அதனை நான் என்ன செய்வது? .நிஸார், ரியாத். தெளிவு: இன்றைய நிலையில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்திற்கு மேல் அதிகமாகப் பெறும் பணம் வட்டியே ஆகும். வட்டி எந்த நிலையிலும், எப்படி வந்தாலும் ஹராமாகும் என்பது ஹதீஃத்களின் சாரமாகும். (ஆதாரம் […]

இப்னு தைக்கத்துல்லாஹ் நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்களிடம் காரிஜிய்யாக்கள் பற்றி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர் களா? என்று கேட்டோம். அதற்கு அபூசயீத்(ரழி) அவர் கள், காரிஜிய்யாக்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பின்வரு மாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவர். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களது தொழுகை கம்மியாக இருக்கும். (அந்த அளவுக்கு அவர்கள் அதிகமாக […]

மு.முகமது ஹனீஃப், திருச்சி நாடு, இனம், மொழி, குலம், கோத்திரம் என்று மனிதன் தனக்குள் வேறுபடுத்திக் கொள்வதெல்லாம் அவனை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக என்பதை அறியாமல் உயர்வு தாழ்வு கற்பிப்பது, பச்சை குத்திக் கொள்வது, தன் கோலத்தை மாற்றிக் கொள் வது, சவுரிமுடியை எப்போதும் தரித்திருப்பது, பெருமையாக நடப்பது, எப்போதும் மொட்டை போட்டுக் கொள்வது, பெண்கள் மொட்டையடிப்பது, ஆடையணிந்தும் அங்கங்கள் வெளியில் தெரியுமாறு பெண்கள் நடப்பது, மகரம் இல்லாதாருடன் பெண்கள் பயணிப்பது, மாற்றுமத கலாச்சாரத்தை அப்படியே […]

 இப்னு ஹத்தாது சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்துவிட்டால் கடமை தீர்ந்தது. அதன் பின்னர் அப்பொருள் காலமெல்லாம் ஒருவரிடம் இருந்தாலும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற அறிவீனமான மூடத்தனமான ஒரு சட்டம் ததஜ மத்ஹப் தலைமை இமாம் பீ.ஜை.யால் கற்பனை செய்யப்பட்டது. அது உருமாறி இப்போது மாத சம்பளம் வாங்கினாலும், வேறு எந்த வழியில் வருமானம் வந்தாலும், வந்தவுடன் அதிலிருந்து 2.5% ஜகாத் கொடுத்துவிடவேண்டும் என்ற நூதன சட்டம் சிலரால் நடைமுறைப்படுத் தப்படுகிறது. இப்போது […]

அபூ அப்தில்லாஹ் இன்று மிகப்பெரும்பான்மையினராக இருக்கும் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த மதகுருமார்களான மவ்லவிகளும் அவர்களை தக்லீத் (கண்மூடிப் பின்பற்றல்) செய்யும் முஸ்லிம்களும் நடை முறைப்படுத்தி வரும் ஒரே தவணையில் முத்தலாக் சொல்லி மனைவியைக் கணவனிடமிருந்து பிரித்து நடுரோட்டில் நிற்க வைக்கும் காட்டுமிராண்டிச் சட்டம் மக்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் முத்தலாக் விவகாரம் நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் பெரும் பாதிப்புக்குள்ளான சில பெண்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு […]

இப்னு தைக்கத்துல்லாஹ் இவர்களுடைய உடலமைப்பு உங்களை ஆச்சரியப்படுத்தும், இவர்கள் பேச ஆரம்பித்தால், (சோறு, தண்ணி வேண்டாம், மனைவி மக்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு) இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். (அந்த அளவுக்கு கலை, இலக்கியம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், வீரம், சோகம், காமெடி, சினிமா, டிராமா, மார்க்கம், லோக்கல் பாலிடிக்ஸ், இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் என்று விசாலமாக, புள்ளி விவரங்களோடு நீங்கள் அப்படியே லயித்துப் போகும் அளவுக்கு ஆளை மயக்கும் பேச்சுப் பேசுவார்கள். இப்படி வாய் கிழியப் […]

அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லலிக்கனிகள் போல் பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை அல்குர்ஆனின் வழிகாட்டல்படி 3:103 இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடக்க முற்படுவோம். அதற்கு எப்படிப்பட்ட மிக எளிய நடைமுறை கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கி அதன்படி நடக்க ஒரு கருத்தரங்கிற்கு 18.08.1438 (14.05.2017) ஞாயிறு அன்று பெரம்பலூர், துறைமங்களம், மூ.லு.மஹாலில் ஏற்பாடு செய்து கடந்த நான்கு மாதங்களாக அந்நஜாத்தில் தொடர்ந்து அறிவிப்பு செய்து வந்தோம். பெருங் கூட்டத்தை நாம் […]

அல்குர்ஆன் கூறும் : இன்பத்திலும், துன்பத்திலும் மனிதனின் நிலை! அபூபக்கர், அதிராம்பட்டிணம் (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள்தாம் நேர்வழியை அடைந்தவர்கள். (2:156,157) மனிதனை(ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டு மானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) […]

MTM. முஜீபுதீன், இலங்கை மார்ச் 2017 தொடர்ச்சி…… இவ்வாறு அங்கு வாழ்ந்த நிராகரிப்பாளர்க ளுக்கு நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் படித்துக் காட்டினான். அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்துடன் அசத்திய மார்க்கங்களைக் கலப்பது பெரும் பாவமாகும். சிலர் “”லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்வார்கள். ஆனால் பல வழிகளிலும் அல்லாஹ் வுக்கு இணை துணைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவை பெரும் பாவமான செயற்பாடுகளாகும். பின்வரும் ஹதீஃதை அவதானியுங்கள். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார் […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி, திருச்சி- மனித குல வரலாற்றில் ஏராளமான பேரழிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன.இயற்கையின் சீற்றங்களான பெரும்ம ழை,புயல்,வெள்ளம்,எரிமலை,பூகம்பம், போன்றவற்றால் மனித குலம் அழிந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நடந்த பெரும் போர்களினால் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற பேரழிவு சம்பவங்களினால் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அழிந்து விடவில்லை. ஆனால் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறும் “யாஜுஜ்-மாஜுஜ்’ எனும் பெரும் கூட்டம், இறுதி நாளில் வெளியாகி பேரழிவில் ஈடுபடும்.இக்கூட்டத்தாரை எந்த மனிதராலும், எந்த வல்லரசாலும் தோற்கடிக்க […]