ஐயமும்! தெளிவும்!!

in 1996 ஏப்ரல்

ஐயம்: வசனம் 2:38ல் “”நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்” என உள்ளது. அனைவம் என்ற வார்த்தை ஆதம், ஹவ்வா, மேலும் யாரை குறிப்பிடுகிறான். ஆதம், ஹவ்வா என்று இருந்தால் “”நீங்கள் இருவரும்” எனத்தானே கூறி இருப்பான். ஆகவே இதை தெளிவாக விளக்கவும்.
அப்துர்ரஹ்மான், உத்திரபேரூர்.

தெளிவு: தங்களது கேள்விக்கு விடை திருகுர்ஆனில் மற்றொரு இடத்திலே அமைந்திருப்பதைக் காணலாம். நமது ஆதிமூலப் பெற்றோர் ஆதம் ஹவ்வா(அலை) அவர்களை சுவனத்திலிருந்து பூமிக்கு அனுப்பிய போது கூறிய கூற்றை மட்டும் நீங்கள் எழுதியுள்ளீர்கள். ஆனால் அதற்கு முன்பு சுவனத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அல்லாஹ் தனது அருள் மறையில் 7:172 வசனத்தில் விளக்குவதைப் பாரீர்.

உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக தைவ்து: “”நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள், “”உண்மைதான் (நீ எங்களது இறைவன் என) நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக.

  நமது ஆதிமூலப் பெற்றோர் ஆதம் ஹவ்வா(அலை) அவர்களி லிருந்து முழு மனித இனத்தையே வெளியாக்கி தான் இம்மனித இனத்தின் இறைவன் என வாக்குமூலம் சொல்ல வைத்த ஒத்திகை காட்சியை இவ்வசனத்தில் கண்டோம். அதாவது ஆதம், ஹவ்வா(அலை) அவர்களிலிருந்து முழு மனித இனத்தையே வெளியாக்கி தான் இம்மனித இனத்தின் இறைவன் என வாக்குமூலம் சொல்ல வைத்த ஒத்திகை காட்சியை இவ்வசனத்தில் கண்டோம். அதாவது ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் அனைத்து மனித இனத்தின் பிரதிநிதிகளாக இருந்திருப்பதையும், அவர்களிலிருந்தே முழுமனித இனத்தையும் வெளிப்படுத்தி இருப்பதையும், அனைவரும் அல்லாஹ் ஒருவனே தங்கள் இறைவன் என சாட்சி மகர்ந்திருப்பதையும் இவ்விறை வசனத்தின் மூலம் நாம் அறிந்து  கொள்ள முடிகிறது.

  எனவே ஷைத்தானால் பாதிக்கப்பட்ட நமது மூல ஆதிப் பெற்றோர் ஆதம்,  ஹவ்வா(அலை) அவர்களை இப்பூமிக்கு அனுப்பும் பொழுது முழு மனித இனத்தின் பிரதிநிகளாகவே நினைத்து நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டு இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய அவ்வழியை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. துக்கமும் பட மாட்டார்கள். அன்றி யார்)இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் என்றென்றும் அதில் தங்கியிருப்பர். (அல்குர்ஆன் 2:38,39) என அறிவிக்கிறான்.

Previous post:

Next post: