ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2012 ஜனவரி

MTM.முஜீபுதீன், இலங்கை

டிசம்பர் 2011 தொடர்ச்சி:
அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் நோக்கம்:
உலகில் ஒவ்வொரு பொருளும் வீணாக அல்லாஹ்வினால் படைக்கப்படவில்லை. எல்லா வகையான உயிரினங்களும், அல்லாஹ் வின் விதிக்கமையவே செயற்படுகின்றன. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லா ஏனைய உயிரினங்களும் அல்லாஹ்வின் திட்டத்தின் அடிப்படையில் செயற்படு கின்றன. அவை யாவும் அல்லாஹ்வின் கணித அளவுத் திட்டப்படியே இயங்கி வருகின்றன. எல்லா படைப்புகளும், மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வை வணங்கி வழிபட உதவி யாகவே படைக்கப்பட்டுள்ளன. மனிதனும், ஜின்களும் படைக்கப்பட்ட நோக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு விளக்குகின்றான்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே யன்றி நான் படைக்கவில்லை.
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.

நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். (அல்குர்ஆன் 51:56-58)

இந்த இறைவசனம் மூலம் அல்லாஹ் ஜின்களையும் மனிதனையும் அல்லாஹ்வை வணங்குவதற்காகவே படைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றான். அத்துடன் அல்லாஹ்வுக்கு எவரும் உணவளிப்பதில்லை; அல்லாஹ்வே சகல உயிரினங்களுக்கும் உணவளிப்பதாக குறிப்பிடுகின்றான். மேலும் இறைவன் குறிப்பிடுவதை அவதானியுங்கள்.
அல்லாஹ் தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளையும் அளித்தான்; அவனே உங்களை மரிக்கச் செய்கின்றான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப் பான்; இவற்றில் ஏதேனுமொன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக் கின்றனவா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர் கள் இணை வைப்பதை விட்டும் மிக உயர்ந்தவன். (அல்குர்ஆன் : 30:40)

அன்று மனிதன் இறந்து போன நல்ல மனிதர்களையும், சிலைகளையும் முன்னோர்களின் சடங்கு சம்பிரதாயங்களையும் வழிபட்டனர். இத் தீய வழியை முன்பு இறைநெறி நூல்கள் வழங்கப்பட்ட வேதக்காரர்களும் பின் தொடர்ந்தனர். இத்தீய வழிமுறையைத் தவிர்த்து அல்லாஹ் இறக்கிய இறைநெறி நூலின் வழியையே ஏற்று, அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை இறுதி இறைத் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தபோது குறை´ நிராகரிப்பாளர்கள் கொதித்தெழுந்தனர். நபி யையும் சிறுபான்மையான முஸ்லிம்களையும் துன்புறுத்தினர். கொலை செய்யவும் முற்பட்ட னர். தான் பிறந்த, வாழ்ந்த, நேசித்த மக்கா நகரை விட்டு மதீனா நோக்கி இடம் பெயர்ந்து செல்லக் காரணமாக இருந்தனர். இத்தனைக்கும் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? ஓர் இறைவனையே வணங்கி வழிபட வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கமைய வலியுறுத்தியமையே ஆகும். மேலும் அல்குர்ஆன் முன்னர் இறை நெறி நூல்கள் வழங்கப்பட்டவர் களை நோக்கி பின்வருமாறு விளக்குகின்றது. அவதானித்து மடமையிலிருந்தும், முன்னோர் கள் சென்ற அறியாமை வழியிலிருந்தும் நீங்கு வதற்கும், சிந்தித்து நேர்வழியை அடைவதற்கும் முயற்சியுங்கள். முன்னைய இறைநெறி நூல்கள் அவற்றின் தூய வடிவில் இல்லை. ஆகவே அல்குர்ஆனை அவதானியுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததி யினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலை வர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான். “”நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின் றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசு வாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப் பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங் களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங் களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க் கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்”.

அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித் தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம். (இறை) வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்று கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடி யைப் பற்றி (நபியே!) தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக் கின்றான்.

அன்றியும் எவர்கள் தங்களை, “”நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக் கொள்கி றார்களோ அவர்களிடம் இருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்க ளுக்கு எடுத்துக்காட்டுவான்.

வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்க ளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கிறார்; இறை நூலிலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப் பவற்றில் பல வி­யங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்போது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளி யும், தெளிவுமுள்ள (அல்குர்ஆன் என்னும்) நெறிநூலும் உங்களிடம் வந்திருக்கிறது.

அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப் பொருத்தத்தைப் பின்பற்றக்கூடிய அனை வரையும் பாதுகாப்புள்ள நேர்வழியில் செலுத் துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.

திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ்(ஈசா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர் களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள(பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கின்றான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

யூதர்களும், கிறித்தவர்களும் “”நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும், நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேத னைப் படுத்துகிறான். அப்படியல்ல! “”நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடிய வர்களை அவன் மன்னிக்கின்றான். தான் நாடி யவர்களைத் தண்டிக்கவும் செய்கின்றான். இன்னும் வானங்களிலும், பூமியிலும், அவற் றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும் அவன் பக்கமே(எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.

வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈசாவுக்குப் பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “”நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப் பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக் கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சய மாக வந்து விட்டார். இன்னும் அல்லாஹ் எல் லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடைய வனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 5:12 முதல் 19 வரை)

அன்று நேர் வழி எது என அறிய முடியாது இருந்த மக்களுக்கு அல்லாஹ்வின் நேர் வழியைக் காட்டுவதற்கு இறுதி இறை நெறி நூலை இறக்கி அருளினான். அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக்கூடிய ஏக இறைவன் வேறு யாருமில்லை; முஹம்மது நபி(ஸல்) அவர் கள் அல்லாஹ்வின் அடிமையும், இறைத் தூதரும் ஆவார்கள் என வாயினால் மொழிந்து, இதயத் தால் நம்பிக்கை கொண்டு, அதன் அடிப் படையில் வாழ்கின்றபோதே அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் நோக்கின்படி வாழ முடி யும். இதன்படி வாழ்கின்ற போதே இம்மை யிலும், மறுமையிலும் வெற்றி அடைய முடியும். இதுவே முன்னைய இறைத் தூதர்களும் காட்டிச் சென்ற நேர்வழியாகும்.

அல்லாஹ்வின் நேர்வழியின்படி வணக்கம் என்பது அல்லாஹ் எவற்றையயல்லாம் மனிதர் கள் செய்யலாம் என அனுமதியளித்திருக்கின் றானோ அவற்றைச் செய்வதும், எவற்றையயல் லாம் செய்யக் கூடாது என தடை விதிக்கின்றானோ அவற்றையயல்லாம் செய்யாது தவிர்த்து வாழ்வதையும் வணக்கம் எனலாம். உதாரணமாக அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுவது வணக்கமாகும். அதுபோல் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்காது தவிர்த்து வாழ்வதும் அல்லாஹ்வை வணங்குவது ஆகும்.

இந்தப் பூமியில் அல்லாஹ் மனித சமுதாயத்தை படைத்ததன் நோக்கம், காலத்திற்குக் காலம் தூதர்கள் மூலம் இறைநெறி நூல்களை அனுப்பி சத்தியமும், அசத்தியமும் தெளிவாக முன் வைக்கப்படுகின்றபோது, அல்லாஹ்வின் அருளினால் சத்தியத்தை ஏற்று அசத்தியங்களைத் தவிர்த்து வாழும் மனிதன் யார் என்பதை சோதிப்பதற்காகவேயாகும். இச்சோதனையிலிருந்து எம்மனிதனும் தப்ப முடியாது. இச் சோதனையில் யார் அல்லாஹ்வையும், அவ னின் இறைத் தூதரையும் விசுவாசித்து பரிபூர ணமாக அல்லாஹ்வின் நேர்வழியில் அல்லாஹ் வின் அருளால் சென்றானோ அம் மனிதனே வெற்றி பெற முடியும். இந்த உலகுக்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை அடைந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வைப் பரிபூரணமாக விசுவாசித்த முஸ்லிம்களுக்கு ஷைத்தானியத் தனமான வழிகளை முற்றாகத் தவிர்த்து அல்குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் வாழவேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவ்வாறு பூரணமாக வாழ்வதனூடாகவே மறுமையில் வெற்றியடைய முடியும். ஆனால் அன்று வாழ்ந்த முன்னைய இறைநெறி நூல்களை விசுவாசித்த அநேகமான வேதக்காரர்கள் அச்சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர்களின் காலத்திற்குப் பின் அவ்வாறு வாழவில்லை என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

“”அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் குருமார் களையும், தம் துறவிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்.” (என்று தொடரும் வசனம்) (அல்குர்ஆன் 9:31)

இவ்வசனத்தில் அல்லாஹ் மர்யமுடைய மக னாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொண்டனர் என்று சொல்வதற்கு முன்னரே முதன்மைப்படுத்தித் தம் மதகுருமார்களையும் துறவிகளையும் தெய்வங்களாக்கி வணங்கிய தாகக் குறிப்பிடுகிறான். இதன் விளக்கம் மத குருமார்களும், துறவிகளும் அல்லாஹ் ஹலா லாக்கியதை ஹராமாக்கிக் கூறுகின்ற போதும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்கிக் கூறுகின்ற போதும் குருமார்களும், துறவிகளும் சொன்னதை ஏற்று பின்பற்றுவதையே அல்லாஹ் இங்கு வணக்கம் எனக் குறிப்பிடு கின்றான். ஆகவே அல்லாஹ்வின் நேர்வழியை விட்டு குருமார்களினதும், துறவிகளினதும் கோணல் வழியை ஏற்றுப் பின்பற்றுவதையே நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் அல்லாஹ்வை விட்டு மற்றவர்களை தெய்வமாக்கியதாக விளக்கம் தருகின்றது.

அன்று இறைநெறி நூல்கள் வழங்கப்பட்ட சமுதாயத்தினர் தமது இறைத் தூதர்கள் இறந்ததன் பின் அல்லது ஈசா(அலை) உயர்த்தப்பட்ட தன் பின் அந்த இறைத்தூதர்களின் அல்லது அக் கால நல்ல மனிதர்களின் அடக்கத்தலங்களில் சித்திரங்களையும், சிலைகளையும் வைத்து வணங்க அல்லது வழிபட முற்பட்டனர். அங்கு நினைவுச் சின்னங்களை நிறுவினர். அவ்விடங் களில் மூட நம்பிக்கைகளை உருவாக்கி, பல தெய்வ வணக்க வழிபாட்டுடன் விழா எடுத்து வழிபடும் இடமாக மாற்றினர். இந்நடை முறைகள் நேர்வழிக்கு மாற்றமானவை ஆகும். இதனை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பெரும் பாவமான மடமை நிறைந்த செயற்பாடுகள் என இனம் காட்டினர்.

அன்று யூதர்களும், கிறித்தவர்களும் அவர் களின் பெரியார்கள், நபிமார்கள் இறந்ததின் பின் அவர்களின் சமாதிகளில் சித்திரங்களை யும், சிலைகளையும் நிறுவி வணங்கும் இடங்களாக மாற்றினர். அங்கு சென்று நேர்ச்சைகளை மேற்கொண்டால் தமது தேவைகள் நிறை வேறும் என நம்பினர். இதனால் ஒவ்வொரு ஊர்களிலும் சமாதி வழிபாடுகளும், சிலை வணக்கமும் நிலைபெற்றது. இவை யாவும் இறைத் தூதர்களின் மறைவின் பின் மெளட்டீக குருமார்களினால் புதியவைகளாக உருவாக்கப்பட்டவைகளாகும். இந்த இறைவ னுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளை அல் குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்) அவர்களும் இறைவனுக்கு இணை வைக்கும் செயற்பாடுகள் என விளக்கினர். பின்வரும் ஹதீஸ்களை அவதானியுங்கள்.

ஆயிஷா(ரழி) கூறியதாவது:
உம்முஸலமா(ரழி) அபீஸீனியாவில் தாம் கண்ட கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களி டம் தெரிவித்தார்கள். அது “மாரியா’ என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங் களையும் உம்மு சலாமா(ரழி) குறிப்பிட்டார்கள். அப்போது நபி(ஸல்), “”அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்க ளின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்”. என்று கூறினார்கள். (புகாரி: 434)

அன்று முதல் இன்று வரை அவ்வாறாக மனிதன் பெரியார்களையும், தலைவர்களையும் அவர்கள் மரணித்த பின் சிலைகளை அமைத்து வணங்குகிறார்கள். அவ்வாறு வணங்கும் மக்களே இதற்கு இறைதூதர்களின் வாழ்க்கையில் ஆதாரம் காட்ட முடியுமா? இவ்வாறு செய்யும்படி மூசா (அலை) அல்லது ஈசா(அலை), அல்லது நூஹ் (அலை), அல்லது பெளத்தர்கள் புனிதமாக மதிக் கும் புத்தர் போன்றோர் சிலைகளை வைத்து தம்மை வணங்க வேண்டும் என கூறியிருக்கிறார்களா? இல்லவே இல்லை; அவர்கள் சிலை வைத்து தம்மை வணங்கும்படி கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது. இதுவே உண் மையாகும். இதேபோல் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்த சமாதி வணக்கங்களையும், சிலை வணக்கங்களையும் கடுமையாக எதிர்த்தனர். அவ்வாறான இடங்க ளில் விழா எடுப்பதற்கும், மிருகங்களை பலியிடு வதற்கும், நேர்ச்சை செய்வதற்கும், அவ்வாறான இடங்களில் அவ்வாஹ்வைத் தொழுவதற்கும் தடை விதித்தார்கள். பின்வரும் ஹதீஸ்களை அவதானியுங்கள்.

ஆயிஷா(ரழி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கிய போது தமது போர்வையைத் தமது முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும் போது அதைத் தம் முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும் போது “”தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறித்த வர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்” எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித் தார்கள். (புகாரி: 435)

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போதனை யின்படி மரணித்தவர்களின் அடக்கஸ்தலங் களை வணங்குமிடமாக மாற்றுவது இறைவ னுக்கு இணைவைப்பதற்கான வழிகளாக அமை கின்றன. இதனால் நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். இந்தப் பயம் மட்டும் இல்லையா யின் நபி(ஸல்) அவர்களின் கப்றைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என நான் அஞ்சுகின்றேன். (புஹாரி 1330) நபிமார்கள் எங்கு மரணிக்கிறார் களோ அவ்விடத்திலேயே அடக்கப்படுவார் கள். மேலும் அவதானியுங்கள்.

நாங்கள் ஃபளலா பின் உபைத்(ரழி) அவர்க ளுடன் ரோம் நாட்டிலுள்ள “ரோடிஸ்’ தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத்(ரழி) அவர்கள், அவரது கப்றைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர்””அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கப்றைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட் டதை நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 1763)

பின்வரும் ஹதீஸ்களையும் அவதானியுங்கள்.
அலீ பின் அபீதாலிப்(ரழி) அவர்கள் என்னிடம் “‘அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த அலு வலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகின்றேன். எந்த உருவச் சிலையையும் நீர் அழிக்காமல் விடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாகாமல் விடாதே! என்று கூறினார்கள். (முஸ்லிம்:1764)

மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரழி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “”எந்த உருவப் படங்களையும் நீ அழிக்காமல் விடாதீர்!” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. மேலும் அவதானியுங்கள்.

கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவை யால்) பூசப்படுவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.  முஸ்லிம்: 1765)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அடக்கத் தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்: அவற்றின் மீது உட்காராதீர்கள். முஸ்லிம் : 1769)

கப்றுகளை தரை மட்டத்திலிருந்து உயர்த்தக் கூடாது. இதைப் போன்றே, கப்றின் மேற் பகுதியை களிமண் அல்லது காரையால் பூசு வதோ, அதன் மேல் கட்டடம் கட்டுவதோ கூடாது. நூஹு (அலை) அவர்களின் காலத்தின் முன் வந்த சமுதாயம் தமது பெரியார்கள் மர ணித்த பின் அவர்களின் கப்றுகளுக்கு மேல் படங்களை வைத்து வழிபட்டதினாலேயே பல தெய்வ வணக்கங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆகவே இவ்வாறான வணக்க வழிபாடுகளை எல்லா இறைத் தூதர்களும் எதிர்த்தே இருந் திருக்கிறார்கள். மூசா(அலை) அவர்களிடம் அக் கால மக்கள் பின்வருமாறு கேட்டார்கள். இதனை அல்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள். அவதானி யுங்கள்.

அபூ வாகித் அல்லைஸீ(ரழி) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் ஒரு முறை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் “ஹுனைன்’ என்னும் (இடத்தை) நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். வழியில் ஓர் இலந்தை மரத்தை, நாங்கள் கடந்து செல்ல நேர்ந்தது. அப்போது நபி(ஸல்) அவர் களிடம், “”அல்லாஹ்வின் நபியே! இறை மறுப் பாளர்களுக்கு “”தாத்து அன்வாத்’ (என்னும் இலந்தை மரம் ஆயுதங்களை மாட்டி வைப்பதற்காக) இருப்பதைப் போன்று, எங்களுக்கு இந்த மரத்தை “தாத்து அன்வாத்தாக’ ஆக்குங் கள்’ என்று கூறினோம்.

இறை மறுப்பாளர்கள் தம் ஆயுதங்களை ஓர் இலந்தை மரத்தில் தொங்க விட்டுவிட்டு, அதைச் சுற்றிலும் வழிபாடு செய்வதற்காகத் தங்குவது வழக்கம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், “”அல்லாஹ் மிகப் பெரியவன்; இது இஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம் “அவர்களுக்கு கடவுளர் இருப்பதைப் போன்று எங்களுக்கும், ஒரு கட வுளை ஏற்படுத்துவீராக! என்று கூறியதைப் போன்று இருக்கின்றதே; நிச்சயமாக நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் போன பாதை யிலேயே பயணிப்பீர்கள்” என்று கூறினார்கள்.  (நூல்: திர்மிதீ, முஸ்னது அஹ்மத்)

அன்றும் இன்றும் மக்களிடையே ஒரு மூட நம்பிக்கை நிலவுகின்றது; தமது பாதுகாப்பு கருதி யும், தமது தேவைகள் நிறைவு பெறுவதற்கும், தாம் நினைத்ததில் வெற்றி பெறுவதற்கும் சில மரங்களில் சில பொருட்களைத் தொங்க விடு கின்றனர். இவை மடமையான பாவமான இறை வனுக்கு இணை கற்பிக்கும் செயற்பாடாகும். மூசா(அலை) அவர்களின் சமூக மக்களும் இதனையே மூசா(அலை) அவர்களிடம் கேட்டார்கள். அல்குர் ஆன் இதனைப் பின் வருமாறு கூறுகின்றது.

இஸ்ரவேலர்களை நாம் கடல் கடக்கச் செய் தோம். பின்னர் அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்து வந்தனர். அப்போது “”மூசாவே! இவர் களுக்கு கடவுளர் இருப்பதைப் போன்று எங்க ளுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக” என்ற னர். அதற்கு அவர், “”நீங்கள் அறியா மக்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்.

இவர்கள் எதில் (ஈடுபட்டு) உள்ளார்களோ அ(ந்த வழிபாடான)து அழிந்து போகும்; இவர் கள் செய்து கொண்டிருப்பது வீணாகிப் போகும் (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 7:138,139)

இஸ்ரவேலர்கள் மூசா(அலை) அவர்களு டன் வரும்போது சிலைகளை வழிபடும் ஒரு கூட்டத் தைச் சந்திந்தனர். இவர்கள் மூசா (அலை) அவர் களிடம் தமக்கும் சிலைகளைக் கடவுளாக்கித் தரும்படி வேண்டினர். அதற்கு மூசா(அலை) நீங்கள் அறியாதவர்களாக இறைவனுக்கு இணையாக கடவுள்களைக் கேட்கின்றீர்கள். இவ்வாறான வணக்க வழிபாடுகள் அழியக் கூடியவை; வீணாகக் கூடியவை என விளக்கி னார்கள். அதுபோல மரங்களில் வாள்களைத் தொங்க விடுவதும், சிலைகளை வணங்குவது போன்றதாகும். இவையாவும் மடமையான கடவுள் நம்பிக்கையாகும் என அல்லாஹ் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்குர்ஆனில் வெளிப்படுத்தினான்.

இன்றைய நவீன சமுதாயங்களிலும் மக்கள் தமது தேவைகள் நிறைவேறுவதற்காக பல வடிவங்களில் கழுத்திலும், இடுப்பிலும், கைக ளிலும், சிலர் காதுகளிலும் தமது மத புரோகி தர்களிடம் இருந்து பெற்ற தாயத்துக்களை அணிகின்றனர். ஏக இறைவனிடம் பிரார்த் திப்பதற்கு மேலதிகமாக இச் சிறிய தெய்வங்களை அணிந்து கொள்கின்றனர். இந்த தாயத்து டப்பாக்களும் இறைத் தூதர்களின் பார்வை யில் போலிச் சிலைகள்; கடவுள்களே ஆகும். இன்று கிரிக்கெட் வீரர்களும், இறைவனிடம் பிரார்த்தித்தது போதாது என பக்தி என்ற போர்வையில் குருமார்களிடம் மண்டியிடுகின்றனர். அவ்வீரர்களுக்காக பயிற்றுவிப்பா ளர்களைக் கொண்டு கொடுத்த பயிற்சிகள் மடமையானதா? அறிவுமிக்க மக்களே சிந்தி யுங்கள். இவ்வாறு இறுதி இறை நெறி நூல் வழிகாட்டவில்லை. நபி(ஸல்) அவர்களும் இதனை மடமையானதாகவும், பாவமான தாகும் என விளக்குகிறார்கள். சிந்திப்போர் உண்டா?

அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரழி) அவர்கள் ஒரு நாள் மனைவி ஸைனப்(ரழி) அவர்களின் கழுத்தில் ஒரு கயிறு தொங்குவதைக் கண்டு, “”இது என்ன கயிறு?” என்று கேட்டுவிட்டு உடனே, அந்தக் கயிற்றை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறுத்து எறிந்து விட்டு, “”என்னுடைய குடும்பத்தினர் இது போன்ற ´ர்க்கை (இறைவனுக்கு இணை வைத்தலை)விட்டும், எச்சரிக்கையாக இருக்க கடமைப்பட்டுள்ளார்கள்! மேலும், மந்திர வேலைகள் செய்வது; தாயத்து போடுவது; முடிச்சு போடுவது இவை யாவும் ´ர்க் (இணை) வைத்திடும் செயல் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) கூறினார் கள். (நூல்: அபூதாவூத் :3883)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: