ஐயம் : பிறை விசயத்தில் தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ
கட்டுப்படலாமா? M. அபூயாசீர், மதுரை

தெளிவு : பிறை விசயத்தில் மட்டுமல்ல, மார்க்கத்திற்கு உட்பட்ட விஷயங்களில்
குர்ஆனுக்கு, ஹதீஸுக்கு முரணாக தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படக்
கூடாது என்று மார்க்கம் திட்டமாகக் கூறுகிறது.

4:59 இறைவாக்கு அல்லாஹ்வுக்கு அடி பணிய வேண்டும். தூதருக்கும், அமீருக்கும்
கட்டுப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டால், குர்ஆனின்
பாலும், ஆதாரபூர்வமான ஹதீஸின்பாலும் திரும்பி விடுங்கள் என்று கூறுவது எதை
உணர்ததுகிறது? மார்க்க முரணான ஒன்றை அமீர் சொன்னாலும் கட்டுப்படக் கூடாது என்பதை
உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்க வில்லையா?

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், ஒரு ஜமாஅத்திற்கு அமீராகச் சென்றவர் கோபமுற்று
நெருப்பு மூட்டச் செய்து அதில் அனைவரையும் குதிக்கச் சொன்ன சமயத்தில், நபிதோழர்கள்
அச்சப்பட்டு பின்வாங்கி வந்து, நபி(ஸல்) அவர்களிடம் சம்பவம் பற்றி முறையிட்டபோது
நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள். நீங்கள் அமீரின் கட்டளைக்கு அடிபணிந்து
நெருப்பில் குதித்திருந்தால், அதை விட்டு வெளியே வரவே முடியாது. மார்க்க முராணான
பாவமான செயல்களில் அமீருக்குக் கட்டுப்படுவது கூடாது என்று நேரடியாக எச்சரித்த
பிரபல்யமான ஹதீஸ் மார்க்கத்திற்கு உட்பட்டே அமீருக்குக் கட்டுப்படவேண்டும். மார்க்க
முரணான ஒன்றை அமீரே கட்டளையிட்டாலும் அதற்கு அடிபணியக் கூடாது என்பது திட்டமாகத்
தெரிகிறதா? இல்லையா?

பிறையைக் கண்ணால் பார்ப்பது மார்க்கமில்லை. மாதம் பிறப்பதை அறிந்து அதன்படி
நடப்பதுதான் மார்க்கம். அன்று கண்ணால் பார்த்து மாதம் பிறந்ததை முடிவு செய்ததை இன்று
கணினி கணக்கீட்டைப் பார்த்து மாதம் பிறந்ததை அறிந்து செயல்படுவது குர்ஆனுக்கோ
ஹதீஸுக்கோ முரண் அல்ல. மாதம் பிறந்ததை கணக்கீட்டின் மூலம் திட்டமாக அறிந்த பின்னரும்
கண்ணால் பார்க்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் ரமழானின் ஆரம்ப ஒரு நோன்பையோ, இரு
நோன்பையோ விடுவது கொடிய ஹராமாகும். எனவே இதில் அமீருக்குக் கட்டுப்படவேண்டும் என்ற
பேச்சுக்கு இடமே இல்லை.

அதேபோல் ஷவ்வால் மாதம் பிறந்து விட்டதைத் திட்டமாகத் துல்லியமாக கணக்கீட்டின் மூலம்
பார்த்தபின், பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் தடை
செய்யப்பட்ட ஷவ்வால் முதல் நாளில் நோன்பு நோற்பதும் கொடிய ஹராமாகும். இங்கும்
அமீருக்கோ, தலைமைக்கோ கட்டுப்படுவது கொடிய ஹராமாகும். பெரும் பாவமாகும். 9:31,
33:36, 66,67,68 இறைவாக்குகள் சொல்வது போல் இவை நரகில் கொண்டு சேர்க்கும். ஆனால்
பெருநாள் தொழுகை சுன்னத் தொழுகையே அல்லாமல் கடமையான தொழுகை இல்லை. ஜும்ஆவுக்கும்,
ஐங்கால தொழுகைகளுக்கும் பெண்களைப் பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்தாத நபி(ஸல்) அவர்
கள் பெருநாள் திடலுக்கு மாதவிடாய்ப் பெண்கள், கன்னிப் பெண்கள் முதல் அனைத்துப்
பெண்களையும் வரக் கட்டாயப்படுத்தியது, தங்களை மறைத்துக் கொள்ள உரிய ஆடைகள் இல்லாத
பெண்களும் இரவல் ஆடை வாங்கி அணிந்து கொண்டு வரக் கட்டாயப்படுத்தியது அனைவரும் ஒன்று
கூடி மகிழவேண்டும். பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது நோக்கமே அல்லாமல் தொழுவது
நோக்கமல்ல. தொழுவது நோக்கமாக இருந்தால் தொழக் கூடாத மாத விடாய்ப் பெண்களை வரக்
கட்டாயப்படுத்த வேண்டிய தேவையே இல்லை.

மேலும் பெருநாள் கொண்டாட்டத்தை ஒரு சமயத்தில் உரிய நாளுக்கு அடுத்த நாள் கொண்டாடி
நபி(ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். மாலையாகிவிட்டதால் அடுத்த நாள்
பிற்படுத்தினார்கள் என இம்மதகுருமார்கள் கொடுக்கும் சுய விளக்கம் மார்க்கமாகாது.
அப்படியானால் அதை நபி(ஸல்) அவர்களே விளக்கிச் சொல்லி இருக்க வேண்டும்.
மாலையாகிவிட்டதால் இருட்டில் ஆண்கள், பெண்கள் அனைவரும் மைதானத்தில் வெட்ட வெளியில்
ஒன்று கூடி ஒழுக்கமாகக் கொண்டாட முடியாது என்பதால் அடுத்த நாள் திடலுக்கு வரக்
கட்டளையிட்டார்கள் என்று ஒருவர் சுய விளக்கம் கொடுத்தால் அது இந்த மதகுருமார்களின்
சுயவிளக்கத்தை விட சிறந்தது. எனவே பெருநாள் கொண்டாடும் விஷயத்தில் அமீருக்குக்
கட்டுப்பட்டு நடப்பது மார்க்க முரணான செயல் அல்ல.

*******************************************

கேள்வி: பிறை விசயமாக முஸ்லிம் நூலின் நபி மொழி எண் 1983, 1984, 1985
தெளிவாக இருக்கிறது என்று ஒரு சகோதரர் கூறுகிறார். விளக்கம் தரவும். எம்.ஏ.ஷப்னம்,
மதுரை.

தெளிவு: முஸ்லிம் நூலில் மட்டுமல்ல; பல ஹதீஸ் நூல்களில் பார்த்து வையுங்கள்;
பார்த்து விடுங்கள்; பார்க்காமல் ஆரம்பிக்காதீர்கள்; பார்க்காமல் முடிக்காதீர்கள்
என்று பதிவாகி இருப்பது உண்மைதான். ஆனால் எந்த ஒரு ஹதீஸிலும் கண்ணால் பார்த்து என்று
இல்லவே இல்லை. அன்று நபி(ஸல்) அவர்கள் கண்ணால்தானே பார்த்தார்கள் என்ற
மதகுருமார்களின் கூற்றுத் தவறாகும். நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு
முறையேனும் பிறையைப் பார்த்தார்கள் என்பதற்கும் ஒரு ஹதீஸ் கூட இல்லை. தகவலை ஏற்றுச்
செயல்பட்ட ஹதீஸ்கள் தான் காணப்படுகின்றன.

அன்று சூரிய ஓட்டத்தைத் தினசரி கண்ணால் பார்த்துத் தொழுதது போல், அன்று சந்திர
ஓட்டத்தையும் மாத முழுவதும் தினசரி பார்த்தே தேதிகளைக் கணக்கிட்டார்கள். மற்றபடி
பிறை பிறந்த 3ம் நாள் காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்துப் பிறை
பிறந்து விட்டது, நாளும், மாதமும் துவங்கிவிட்டது என்று நபி(ஸல்) கூறியதாக ஒரு
பலவீனமான, இட்டுக்கட்டிய ஹதீ ஸைக்கூட இம் மவ்லவிகளால் காட்ட முடியாது.

பின்னர் எப்படி இந்த மூட நம்பிக்கை நிறைந்த நடைமுறையை இம் மவ்லவிகள் எங்கிருந்து
பெற்றார்கள் என்று பார்க்கும்போது, மாற்றுமதக் கலாச்சாரமான யூத மதக் கலாச்சாரத்தைக்
கண்மூடிப் பின்பற்றி இம்மவ்லவிகள் மாலையில் மறையும் 3ம் பிறையைப் பார்த்து பிறை
பிறந்ததாகப் பிதற்றுகிறார்கள். அதற்கு மாறாக நபியுடைய காலத்தில் சூரிய ஓட்டத்தைத்
தினசரி பார்த்தது போல், சந்திர ஓட்டத்தையும் தினசரி பார்த்தார்கள். அப்படி
பார்க்கும் போது சிலரது கணிப்பில் மாதம் 30ல் முடிவது போன்றும் சிலரது கணிப்பில்
மாதம் 29ல் முடிவது போன்றும் பட்டது. எனவே அன்று நபியுடைய காலத்தில் இன்று வெளியூர்
வந்த தகவலின் அடிப்படையில் சர்ச்சை ஏற்படுவது போல், அன்று ஏற்படவில்லை. அதற்கு
மாறாக உள்ளூரிலேயே மாதம் 29ல் முடிகிறது என்று ஒரு பிரிவும், இல்லை மாதம் 30ல்
முடிகிறது என்று பிரிதொரு பிரிவும் ஏற்பட்டு கருத்து வேறுபாட்டுடன் ஒருவருக் கொருவர்
மோதிக் கொண்டார்கள். இந்த கருத்து வேறுபாட்டை அன்று தீர்க்கப் பிறையைப் பார்ப்பதை
விட்டு இன்றிருப்பது போல் நவீன கருவிகள் ஒன்றுமே இருக்கவில்லை.

அதன் காரணமாகச் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்து சமுதாய ஒற்றுமை காக்க அன்று
நபி(ஸல்) அவர்கள் அதைப் பார்த்து ஆரம்பி யுங்கள், அதைப் பார்த்து முடியுங்கள், அதைப்
பார்க்காமல் ஆரம்பிக்காதீர்கள், அதைப் பார்க்காமல் முடிக்காதீர்கள் என்று
கூறினார்களே தவிர, கணக்கீட்டின் அடிப்படையில் சூரியனும், சந்திர னும் இருக்கின்றன
என்று கூறும் பல குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் முரணாக மனிதக் கண்களின்
கட்டுப்பாட்டில் சந்திரன் இருக்கிறது. அதனால் பார்த்து வையுங்கள், பார்த்து
விடுங்கள் என ஒரு போதும் சொல்லியிருக்க முடியாது என்பதை தங்கள் புத்தியை
தாஃகூத்களான இம்மவ்லவிகளிடம் அடகு வைக்காமல், 47:24 சொல்வதுபோல் உள்ளத்திற்குப்
பூட்டு போடாமல் சுயமாகச் சிந்திப்பவர்கள் திட்ட மாக விளங்க முடியும்.

*********************************

ஐயம்: பிறையை முன்கூட்டியே பல வருடங்களுக்குக் கணித்துக் கூறுவது சோதிடரா?
என்று ஒரு சகோதரர் கேட்கிறார். சோதிடம் என்றால் பொய்யாகலாம். விஞ்ஞானம் பொய்யாகாது
என்று கூறினாலும் ஏற்க மறுக்கிறார். இவருக்கு எப்படிப் புரிய வைப்பது?

ஏ.ஆஃப்ரின், மதுரை.

தெளிவு: அண்ணன் கணிப்பிற்கும், கணக்கீட்டிற்குமுள்ள வேறுபாடு தெரியாமல்
பிதற்றுவதைத் தம்பி தனது மண்டையில் ஏற்றிக்கொண்டு இப்படிப் பிதற்றுகிறாரே அல்லாமல்,
உண்மையை எதார்த்தத்தை விளங்கிப் பேசுகிறவராக இல்லை.

நபி(ஸல்) அவர்களது காலத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே சகோதரர் சொல்வது
போல் கணித்துக் கூறும் சோதிடர்களும், பஞ்சாங்கமும் இருக்கத்தான் செய்தது. இதை
நபி(ஸல்) ஏற்கவில்லை. ஹிஜ்ரி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு தைமிய்யாவும்(ரஹ்)
இக் கணிப்பு முறையையே ஏற்காமல் தனது நூலில் எழுதியுள்ளார்.

ஹிஜ்ரி 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட இந்தக் கணினி கணக்கீட்டு முறை கண்டு
பிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரவில்லை. மிகச் சமீப காலத்தில் தான் இந்த நவீன கணினி
கணக்கீட்டு முறை நடை முறைக்கு வந்துள்ளது.

இந்தக் கணினி கணக்கீட்டு முறைப்படி (Calculation)  பூமி சூரியனைச் சுற்றிவர
அதாவது ஒரு வருடம் 365 நாட்கள், 5 மணி, 46 நிமிடம், 24 வினாடி எடுக்கிறது என்றும்
சந்திரன் பூமியைச் சுற்றிவர 29.53059 நாட்கள் எடுக்கிறது என்றும் சந்திர வருடம்
354:3671 நாட்கள் என்றும் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக்
கணக்கீட்டு முறைக்கும் சோதிடர்களிடம் இருக்கும் கணிப்பு முறைக்கும் கடுகளவும்
சம்பந்தமில்லை. அறிவை முறைப்படி பயன்படுத்தாத அறிவீனர்கள் மட்டுமே கணிப்பு முறையும்,
கணக்கீட்டு முறையும் ஒன்றுதான் எனப் பிதற்றுவார்கள். இவர்களின் இந்த உளறல் சுய
சிந்தனையாளர்களிடம் கால் காசும் பெறாது.

Previous post:

Next post: