காதியானிகளின் மோசடி பாரீர்!

in 2012 செப்டம்பர்,காதியானிகள்

அபூ அப்தில்லாஹ்

பல வருடங்களுக்கு முன்னர் அல்பகரா:2:4 இறைவாக்கு “”உமக்கு அருளப்பட்டுள்ளதையும், உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றையும் அவர்கள் நம்புகிறார்கள்” என்றும் “”அவர்களே தம் இரட்ச கனின் நேரான வழியில் இருப்பவர்கள், வெற்றியாளர்கள்” என 2:5 இறைவாக்கிலும் அல்லாஹ் சொல்லியிருப்பதை எடுத்து எழுதி, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஒரு நபி வந்து அவர் மீது நம்பிக்கைக் கொள்வதாக இருந்தால், முக்கியமான இந்த இடத்தில் “உமக்குப் பின்னர் அருளப் படுவதையும் அவர்கள் நம்புவார்கள்” என்று நேரடி யாகத் தெளிவாக அல்லாஹ் சொல்லியே இருப்பான். எனவே இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான்; அவர்களுக்குப் பின்னர் நபி இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தோம்.

காதியானிகளின் வழமையான வார்த்தை ஜாலங்களைக் கொண்டும், நபி(ஸல்) அவர்களின் காலத் தில் அபுல் ஹிக்கம்-ஞானத் தந்தை என்று குறைஷ்களால் போற்றப்பட்டவனும், இறுதித் தூதரால் அபூ ஜஹீல்-மூடர்களின் தந்தை என இழித்துரைக் கப்பட்டவனுமான அபூ ஜஹீல் கையாண்ட அரபி இலக்கண, இலக்கியப் புலமைகளை இந்தக் காதியானிகளும் கைகொண்டு “”வபில் ஆகிரத்தி ஹும் யூஃக்கினூன்” என்று அல்லாஹ் கூறியிருப்பது பின்னர் வரும் நபியை நம்பிக்கை கொள்வது பற்றியே ஆகும் எனப் பொய்யுரைத்து அன்றைய சமாதான வழியில் எழுதி இருந்தார்கள்.

அரபி மொழி கல்லாத நாம் அடே மூடர்கள்! “”ஆகிரத்” என்பது மறுமையைக் குறிக்கிறது. பின்னர் வரும் நபியைப் பற்றி அது சொல்லவில்லை. பின்னர் வரும் நபியை பற்றிச் சொல்வதாக இருந்தால் “”வமா உன்சிலமின் கப்லிக்” என்றிருப்பது போல் “”வமா யுன்சிலு மிம்பஃத்” என்றிருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருந்தோம். அன்று எமக்குப் பதிலளிக்க வக்கற்று வாயடைத்துப் போய் இருந்த காதியானிகள், நீண்ட காலமாகி விட்டதால் அவர்களின் பக்தர்கள் மறந்து போயிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஜூன் 2011 அவர்களின் மாத இதழ் பக்கம் 9-ல் அந்நஜாத்தும் புரோகிதமே! என்ற தலைப்பில் புதுக் கரடி விட்டிருக்கிறார்கள். அவர்களின் கதையளப்பைப் பாருங்கள்.

“”2.5 வசனத்தில் நபியின் வருகையைப் பற்றி அல்லாஹ் இங்கு கூறியிருந்தால் பின்னர் ஒரு நபி வருவதைப் பற்றியும் கூறி இருப்பான். ஆனால் அல்லாஹ் அந்த வசனத்தில் அவர்கள் உமக்கு அருளப்பட்டதன் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டதன் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் எனக் கூறுகிறான். ஆக அல்லாஹ் இங்கு முந்தைய நபிமார்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தை யும் ஹஸ்ரத்(?) நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கப் பட்ட வேதத்தையும் பற்றிக் கூறுகின்றானே தவிர நஜாத் கூறுவது போல் நபியின் வருகையைப் பற்றி அல்ல என்பதை நஜாத்தை இடைத் தரகராகவோ, புரோகிதராகவோ நம்பாமல் சுய மாக சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்” என கரடி விட்டிருக்கிறார்கள்.

அபூ ஜஹீல் போல் அரபி பெருமை பேசும் காதியானிகள் இங்கும் “”முந்தைய நபிமார்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் எனப் பன்மையில் எழுதாமல் “”இறக்கப்பட்ட வேதத்தையும்” என்று ஒருமையில் எழுதி இருப்பதே அவர்களின் இலக்கண இலக்கியப் புலமையை அம்பலப்படுத்துகிறது.

அதாவது திருடன் மற்றவர்களைத் திருடன் என்பது போல், அயோக்கியன் மற்றவர்களை அயோக்கியன் என்பது போல் பொய்யன் மற்றவர்களைப் பொய்யன் என்பதுபோல் இடைத் தரகர்களாக, புரோகிதர்களாக, எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக குருகுல மடமான புரோகித மதரஸா நடத்தி அதில் படித்து H.A. பட்டம் பெற்று வருபவர்கள் மவ்லவி, ஆலிம், ஹஸ்ரத் எனக் கூறிக் கொண்டு அவர்களை கூலிக்கு மாரடிக்க வைக்கும் காதியானிகள், 33:36 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து குர்ஆன் வசனங்களுக்கு எவ்வித சுய விளக்கமும் கொடுக்காமல் குர்ஆன் வசனங்களை உள்ளது உள்ளபடி மட்டும் எடுத்துக் கொடுப்பதோடு எந்த நிலையிலும் அந்நஜாத்தை தக்லீது செய்யாதீர்கள் என்று பகிரங்கமாக தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நஜாத்தை இடைத்தரகராகவோ புரோகிதராகவோ நம்பாமல் சுயமாக சிந்திப்பவர் புரிந்து கொள்ள முடியும் என்று காதியானிகள் எழுதி இருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? ஆம்! ஆலிம், மவ்லவி, ஹஸ்ரத் எனப் பெருமை பேசும் மதகுருமார்களையோ, அந்நஜாத்தையோ தக்லீத் செய்யாமல் குர்ஆன் வச னங்களுக்கு 33:36 இறைக் கட்டளைப்படி தத்துவம், உள் அர்த்தம், வெளி அர்த்தம் எனக் கொள்ளாமல் குர்ஆனில் உள்ளதை உள்ளபடி சிந்தித்து விளங்குகிறவர்கள் காதியானிகளின் கப்சாக்களை நிச்சயம் விளங்க முடியும்.

காதியானி மவ்லவிகளின் விளக்கம்:
இப்போது பாருங்கள், அல்லாஹ் 2:4 காதியானிகளின் குர்ஆன்படி 2:5 “”உமக்கு அருளப்பட்ட தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றையும் அவர்கள் நம்புகிறார்கள்” என்றே இருக்கிறது. அருளப்பட்டவை என்றால் அதன் நேரடிப் பொருள் இறைவன் புறத்திலிருந்து வஹி மூலம் செய்திகள் அறிவிக்கப்பட்டு அவற்றைப் பெற்றவர்கள். காதியானிகள் 33:36 இறைக் கட்டளையை நிராகரித்துக் கூறுவது போல், இறைவன் கூறும் நெறிநூல்களை, முல்லாக்களின் மொழியில் வேதங்களையே இந்த வசனம் கூறுகிறது என்றால் அல்லாஹ் நேரடியாக அருளப்பட்ட கிதாப்-நெறிநூல்கள், முல்லாக்களின் மொழியில் வேதங்கள் என்றே குறிப்பிட்டிருப்பான்.

காதியானிகளின் சுய விளக்கப்படி இறுதி நபிக்கு முன்னால் வந்த அனைத்து நபிமார்களும் நெறிநூல்கள் கொடுக்கப்பட்டவர்களா? ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோருக்கு வஹி மூலம் செய்திகள் அறிவிக்கப்பட்டனவே அல்லாமல் நெறி நூல்கள்(வேதம்) கொடுக்கப்படவில்லையே. நெறி நூல்கள்(வேதம்) கொடுக்கப்படாத அந்த நபிமார்களைப் பற்றி இந்த 2:4 இறைவாக்குக் குறிப்பிட வில்லை என்பதுதான் காதியானிகளின் சுய விளக்கமா? என்னே மதியீனம்!

மதகுருமார்களான ஆலிம்கள், மவ்லவிகள் ஹஸ்ரத்மார்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், மக்களை தங்களின் அற்ப உலக ஆதாயங்களுக்காக வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகில் தள்ளுகிறவர்கள் என்று நாம் கூறுவதை காதியானிகளும் உறுதிப்படுத்துகிறார்கள்.

சுய விளக்கத்திற்கு மேல் சுயவிளக்கம்!
33:36 இறைக் கட்டளையை நிராகரித்து 2:39 சொல்வது போல் குஃப்ரிலாகி குர்ஆன் வசனங்களுக்கு சுயவிளக்கம் கொடுப்பது, அந்த சுய விளக்கம் பெருந்தவறு என்று குர்ஆனைக் கொண்டு அம்பலப்படுத்தப்பட்டால், வாயடைத்து சில காலம் மெளனமாக இருந்து விட்டு, மக்களின் மறதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு பிரிதொரு வழிகெட்ட சுய விளக்கம் கொடுப்பது மதகுருமார்களுக்குக் கைவந்த கலை. அதற்குக் காதியானி மதகுருமார்களும் விதிவிலக்கல்ல. அந்த வரிசையில் 2:4 இறைவாக்குக்கு பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சுயவிளக்கம். அது குர்ஆனைக் கொண்டு வழிகெட்ட விளக்கம் என நிலைநாட்டப் பின்னர் இப்போது அதே 2:4 இறைவாக்கு வேறொரு வழிகெட்ட சுயவிளக்கம். மதகுருமார்களில் எவருமே 33:36 இறைக்கட்டளையை நிராகரித்து 2:39 சொல்வது போல் காஃபிராகாமல் இல்லை. நிரந்தர நரகை அடைய நேரிடுமே என்ற அச்சம் இந்த மத குருமார்களுக்குக் கடுகளவும் இருப்பதாகத் தெரிய வில்லை.

நேர்வழி நடப்பவர் யார்?
குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்களுக்கு எவ்வித சுய, தத்துவ விளக்கமும் கொடுக்காமல், அவ்வசனங்களில் நேரடியாகச் சொல்லப்பட்டவற்றை அப்படியே ஏற்று நம்பிச் செயல்படுகிறவர்கள், நாளை மறுமையில் விசாரணையின்போது அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கும்போது, அல்லாஹ் இதை ஏன் இப்படி நம்பிச் செய்தாய்? என்று கேட்கும் போது “”யா அல்லாஹ் நான் 7:3, 18:102-106, 33:36, 29:69 போன்ற உனது கட்டளைகள்படி சுயமாக முயற்சித்து நீ சொல்லியுள்ளதை அப்படியே ஏற்றுச் செயல்பட்டேன். இறுதித் தூதருக்குப் பிறகு யாரையும் அவ்லியாவாக-வழிகாட்டியாக-நபியாக ஏற்காமல் நானே விளங்கி அப்படியே செயல்பட்டேன் என்று கூறினால், அல்லாஹ் விடமிருந்து வேறு கேள்வி பிறக்க வழி இருக்கிறதா? இல்லவே இல்லை.

அதற்கு மாறாக நான் இன்னார் கொடுத்தத் தத்துவ விளக்கத்தை அவரின் சுயவிளக்கத்தை, நபி என்று பிதற்றியவரின் விளக்கத்தை ஏற்று அதன்படி நடந்தேன் என்று பதில் கூறினால் அதற்கு உடனடி யாக என்ன கேள்வி வரும்? நான் அவர்களின் தத்துவ விளக்கத்தை, சுய விளக்கத்தை ஏற்று நடக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேனா? குர்ஆன் 2:186, 7:3, 18:102-106, 33:36 வசனங்களில் யாரையும் தத்துவ விளக்கமோ, மேல் விளக்கமோ கொடுப்பவர்களாக எடுத்து நடக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருப்பதை நீ படித்து உணரவில்லையா? என்றே அல்லாஹ் கேட்பான். இறைவனதும், இறுதித் தூதரதும் வழிகாட்டலைப் புறக்கணித்துப் பின்னால் வந்தவர்களின் தத்துவ விளக் கத்தையும் சுய விளக்கத்தையும் எடுத்து நடப்பவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு 33:66, 67,68 இறைவாக்குகள் கூறுவது போல் அழுது பிரலாபிப்பார்கள். எவர்களின் துர் போதனைகளைக் கேட்டு வழிகெட்டுச் சென்றார்களோ அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும்படி யும், மகத்தான சாபத்தை அளிக்கும்படி அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள் என்று கூறும் நேரடி குர்ஆன் வசனங்கள் காதியானிகளுக்கும், காதியானி புரோகிதர்களுக்கும் உறைக்காது.

“நபி” என்பதைப் புரியாத மக்குகள்!
காதியானிகள் அரபி இலக்கண இலக்கியத்தில் பண்டிதர்கள் என்றும் நாமோ அரபி மொழி கல்லாததால் அவாம் என்றும் உளறும் அவர்களுக்கு எப்படி புரோகிதத்தின் பொருள் புரியவில்லையோ அதேபோல் நபி என்ற அரபி பதத்திற்கும் பொருள் புரியவில்லை. வெட்கக் கேடு! ஹஸ்ரத், மவ்லவி, ஆலிம், அல்லாமா எனப் பிதற்றிக் கொண்டு 3:103. 105, 6:153,159, 30:32, 42:13,14, 21:92,93, 23:52-56 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை 2:39 இறைவாக்குக் கூறுவது போல் நிராகரித்து குஃப்ரிலாகி மற்ற வழிகெட்டப் பிரிவுகளின் மதகுருமார்களைக் கண்மூடிப் பின்பற்றி, அதே பாணியில் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி வயிறு வளர்க்கும் இக் காதியானிகள், அதாவது புரோகிதத் தொழிலை ஜாம் ஜாம் என வளர்த்துக் கொண்டு, குர்ஆன், இறுதி நபியின் நடைமுறைகளுக்கு 33:36 இறைக் கட்டளைக்கு முரணாக வேறு கருத்து கொண்டு, கலீஃபாக்கள், நபிதோழர்கள், ஸலஃபுகள், கலஃபு கள், மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், பொய் நபிகள் என எவரையும் 7:3, 18:102-106, 59:7, 33:66-68 போன்ற இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து வழிகாட்டிகளாக ஏற்கக் கூடாது, பின்பற்றக் கூடாது; எம்மையோ, அந்நஜாத்தையோ ஒரு போதும் தக்லீது செய்யக் கூடாது; அப்படி தக்லீது செய்தால் நாளை மறுமையில் நாங்கள் ஒருபோதும் பொறுப்பு ஏற்க மாட்டோம், என்று அந்நஜாத் ஆரம்பித்ததிலிருந்து திட்டமாகச் சொல்லி வரும் நிலையில், “”நஜாத்தை இடைத்தரகராகவோ, புரோகிதராகவோ நம்பாமல், சுயமாக சிந்திப்பவர்கள்” என்று காதியானிகள் எழுதி இருப்பது எதைக் காட்டுகிறது? புரோகிதத்தின் பொருள் புரியாத மூடர்கள் காதியானிகள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்டவில்லையா?

எப்படிப் புரோகிதத்தின் பொருள் அறியாமல் காதியானிகள் பிதற்றி இருக்கிறார்களோ அதே போல் நபியின் பொருள் அறியாமல் மூடத்தனமாகப் பிதற்றியுள்ளனர். 49:16 இறைவாக்குக் கூறு வதுபோல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் அதிமேதாவிகளாகி (நவூதுபில்லாஹ்) 42:21 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே இணையாளர்கள் ஆகிக் கொடிய ´ர்க்கில் மூழ்கி இருக்கிறார்கள் இக்காதியானிகள். எப்படி என்று பாருங்கள்!

2:4 அவர்களது அகராதியில் 2:5
“”(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அரு ளப்பட்டதின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்-மறுமையை உறுதியாக நம்புவார்கள்”. (அல்குர்ஆன் அல்பகரா: 2:4)
இந்த வசனத்திற்கு என்ன பொருள் கொண்டிருக்கிறார்கள் காதியானிகள்? இந்த இறைவாக்கு இறைவனால் இறக்கப்பட்ட வேதங்களைக் குறிக் கின்றதே அல்லாமல் நபியின் வருகையைப் பற்றி இந்த 2:4 இறைவாக்குக் குறிப்பிடவில்லை என்பதே காதியானிகளின் வெற்றுப் பிதற்றல். இங்கும் “”அந்நஜாத்தும் புரோகிதமே” எனப் பிதற்றி இருக்கிறார்களே, அது உண்மையில் காதியானிகள் புரோகிதர்களாக இருந்து கொண்டு 4:112 குர்ஆன் வசனம் கூறுவது போல் அப்பழியை அந்நஜாத் மீது சுமத்துகிறார்கள். மற்ற வழி கெட்டப் பிரிவினர்கள் தங்களின் மொழி பெயர்ப்புகளில் அடைப்புக் குறிக்குள் (வேதம்) என்று எழுதி இருப்பதை அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடித்துக் கொண்டு அப்பழியை அந்நஜாத் மீது சுமத்துகிறார்கள்.

அல்லாஹ் “”கிதாப்-நெறிநூல்” என்று சொல்லாமல் “”இறக்கப்பட்டது” என்று தவறுதலாகச் சொல்லி விட்டான் (நவூதுபில்லாஹ்) என்று 49:16 இறைவாக்குக் கூறுவதுபோல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள் காதியானிகள். அனைத்துப் பிரிவுகளின் மதகுருமார்களின் இப்படிப்பட்ட பொருளற்றப் பிதற்றல் காரணமாகத் தான் அல்குர்ஆன் மட்டும்தான் அல்லாஹ்வால் இறக்கப்பட்டது. அதை மட்டுமே பின்பற்ற வேண்டும்; இறுதி நபியின் நடைமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை எனக் கூறிக்கொண்டு அதிலும் பல பிரிவுகள் தோன்றியுள்ளன.

2:4 இறைவாக்கு நெறிநூல்கள் கொடுக்கப்பட்ட நபிமார்களையும், நெறிநூல் கொடுக்கப்படாத நபிமார்களையும் இணைத்து ஒட்டுமொத்த நபிமார்களைக் குறிக்கிறதே அல்லாமல், நெறிநூல்கள் கொடுக்கப்பட்ட நபிமார்களை மட்டுமோ, அல்லது நெறிநூல்களை (புரோகிதர்களின் அகராதியில் வேதங்கள்) மட்டுமோ குறிப்பிடவில்லை என்பதை காதியானிகள் ஏற்காவிட்டாலும் உண்மை அது தான். “நபி’ என்ற அரபி பதத்திற்கு செய்தியைப் பெற்று அறிவிப்பவர் என்பதே பொருள். இஸ்லாமிய வழக்கில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்பதே பொருளாகும். அப்படி இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்ற சில நபிமார்களுக்கு நெறிநூல்கள் கொடுக்கப்பட்டும் உள்ளன. பல நபிமார்களுக்கு நெறிநூல்கள் கொடுக்கப்படாமலும் உள்ளன.

உதாரணமாக இப்றாஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்ஹாக்(அலை) அவர்களின் மகனார் யாகூப்(அலை) அவர்களின் சந்ததிகளில் எண்ணற்ற நபிமார்கள் வந்துள்ளனர். அவர்கள் பனீ இஸ்ர வேலர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்க ளுக்கே பல நபிமார்கள் வந்துள்ளனர். அவர்களின் சிலரின் பெயர்கள் குர்ஆனிலும் இடம் பெற்றுள்ளன.

அவர்களில் மூசா(அலை), தாவூது(அலை), ஈசா (அலை) மூவருக்கு மட்டுமே தவ்றாத் (3:3) ஜபூர் (4:163) இன்ஜீல்(3:3) ஆகிய மூன்று நெறி நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற நபிமார்களுக்கு நெறி நூல்கள் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரபூர்வமான செய்திகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நெறிநூல்கள் கொடுக்கப்படாத நபிமார்களும் உண்டு என்பதை உறுதியாக அறிய முடிகிறது. ஆயினும் அந்த நபிமார்கள் நேர்வழியை இறைவன் புறத்திலிருந்து வஹி மூலம் பெறும் கட்டாயத்தில் இருந்தார்கள்.

முன்னைய நெறிநூல்கள் தற்காலிகமானவை!
காரணம் இறுதி நெறிநூல் அல்குர்ஆனுக்கு முன்னர் அருளப்பட்ட நெறிநூல்கள் நிறைவு பெறாமல் தற்காலிகமாக இருந்த காரணத்தால் அவை உடனுக் குடன் பதிந்துப் பாதுகாக்கப்படவில்லை, பாதுகாக்க அல்லாஹ் கட்டளையிடவில்லை. எனவே அவற்றில் இம்மதகுருமார்கள் அற்ப உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு பல கற்பனைக் கட்டுக் கதைகளைப் புகுத்தி, நடைமுறைச் சாத்தியமற்ற வேதாந்தங்களாக்கி அவற்றையே இந்த மதகுருமார்கள் “”வேதங்கள்” என மக்களிடையே புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள்.

எனவே இறுதி நெறிநூல் கொடுக்கப்பட்ட இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த நெறிநூல் கொடுக்கப்பட்ட நபிமார்களும், நெறிநூல் கொடுக்கப்படாத நபிமார்களும் நேர்வழிச் செய்திகளை இறைவன் புறத்திலிருந்து வஹி மூலம் பெறும் கட்டாயத்தில் இருந்தார்கள். அது வல்லாது முன் காலத்தில் வேறு வழியே இருக்கவில்லை.

டம்மி நபி தேவையா?
அதற்கு மாறாக 5:3, 3:19,85, 15:9 இறை வாக்குகள் கூறுவது போல் மார்க்கம் நிறைவு பெற்று, அல்லாஹ்வின் கட்டளைப்படி உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டதோடு, இறுதி நெறி நூலில் உலகம் அழியும் வரை எவ்வித மாற்றமும் இல்லை. அல்குர்ஆன் கூறுவது மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம், அதில் 33:36 இறைவாக்கு கூறுவதுபோல் வேறு அபிப்பிராயம் கொண்டு பலப் பிரிவுகளை, பிளவுகளை, மதங்களை கற்பனை செய்து நடப்பவர்கள் நாளை மறுமையில் திட்ட மாகப் பெரும் நட்டத்தில் இருப்பார்கள், நரகமே அவர்களின் இருப்பிடம் என்று நேரடியாகக் கூறிக் கொண்டிருக்க, இந்த அனைத்து இறைவாக்குகளையும் 2:39 இறைவாக்குக் கூறுவதுபோல் நிராகரித்து குஃப்ரிலாகி இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பெற்ற இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பிறகு உலகம் அழியும்வரை இறைவன் புறத்திலிருந்து புதிதாக வஹி மூலம் நேர்வழிச் செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிக்கும் ஒரு நபி வரவேண்டிய அவசியம்-தேவை என்ன என்பதை இக்காதியானிகள் விளக்குவார்களா?

அல்குர்ஆன் நிறைவு பெறவில்லை (நவூதுபில்லாஹ்) அதில் இறைவன் புறத்திலிருந்து வஹி மூலம் செய்திகளைப் பெற்று சேர்க்க வேண்டிய செய்திகள் இருக்கின்றன. அதனால் நபி முஹம்மது(ஸல்) அவர் களுக்குப் பின்னர் நபி வரவேண்டி இருக்கிறது. அந்த நபிதான் குலாம் முஹம்மது காதியானி என இக்காதியானிகள் கூறுகிறார்களா?

மார்க்கம் நிறைவுபெற்று, பதியப்பட்டு யுக முடிவு வரை இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று இறுதி நெறிநூல் தெளிவாகத் திட்டமாகக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதாவது நபி மார்களின் வருகை முற்றுப் பெற்றுவிட்டது, முஹம்மது(ஸல்), அவர்கள் தான் இறுதி நபி, அதற்குப் பின்னர் நபி வர வேண்டிய தேவை எதுவும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்க இந்த அத்தனை இறை வாக்குகளையும் 2:39 இறைவாக்கு கூறுவது போல் நிராகரித்து குஃப்ரிலாகிப் பிதற்றும் இக்காதியானிகள் நேர்வழி நடப்பவர்களா? புத்தியை அவர்களிடம் கடன் கொடுக்காமல் சுயமாகச் சிந்தித்து விளங்குங்கள்.

காதியானிகள் பிதற்றுவது போல் 2:4 இறை வாக்கு அவர்கள் அறிவீனமாகப் பிதற்றும் வேதங்கள் என்ற நெறி நூல்களை மட்டும் குறிப்பிட வில்லை. நெறிநூல் கொடுக்கப்பட்ட நபிமார்களுக்கு அருளப்பட்டவற்றையும், நெறிநூல் கொடுக்கப்படாத நபிமார்களுக்கு அருளப்பட்ட நேர்வழிச் செய்திகளையும் உள்ளடக்கியதே! எனவே இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பெற்ற இறுதி நபிக்குப் பின்னர், இறைவன் புறத்திலிருந்து புதிதாக நேர் வழிச் செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிக்க ஒரு நபி வந்து அவரை ஈமான்-நம்பிக்கை கொள்வதாக இருந்தால், அல்லாஹ் திட்டமாக, தெளிவாக இந்த 2:4 இறைவாக்கில் “”வமா உன்சில மின் கப்லிக்” என்பதை அடுத்து “”வமா யுன்சிலு மிம்பஃத்” என்று சேர்த்து திட்டமாக நேரடியாகக் கூறி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் அப்படிக் கூறவே இல்லை. எனவே திட்டமாக அஹ்மதின் அடிமை அதாவது குலாம் அஹ்மத் என்ற பெயரையுடையவர், முஹம்மது(ஸல்) அவர்கள் முன் அறிவிப்புச் செய்த 30 பொய்யர்களில் ஒருவரே அல்லாமல் நபி அல்ல; அவரை நபியாக ஏற்றிருப்பவர்கள் நாளை மறுமையில் ஒதுங்கும் இடம் நரகமே என்பதை 2:39, 18:102-106, 33:36,66-68 சந்தேகத்திற்கு இடமில்லாமல் திட்டமாக அறிவிக்கின்றன.

இதோ ஆதாரம்!
காதியானிகள் பொய்யர்கள், அநியாயக்காரர்கள், மோசடிப் பேர்வழிகள், உருட்டல் புரட்டல் செய்பவர்கள், தங்களின் சூன்யப் பேச்சால், வார்த்தை ஜாலங்களால் மக்களை மதிமயக்கி நரகத்திற்கு இட்டுச் செல்பவர்கள் என்பதற்கு இதோ ஆதாரம்!

அந்நஜாத் மே 2011 பக்கம் 25-ல் இடம் பெற்றுள்ள செய்தி வருமாறு:
அல்லாஹ் 2:2-5 இறைவாக்குகளில் பயபக்தி யுடையவர்கள் யார்? அவர்களுடைய தன்மைகள் எவை எனத் திட்டமாகத் தெளிவாக அறிவிக்கிறான். அவர்களே நேர்வழியில் இருப்பவர்கள் என உறுதி கூறுகிறான். அவற்றில் 4வது இறைவாக்கு உமக்கு அருளப்பட்ட அல்குர்ஆன் மீதும், முன்னைய நபிமார்களுக்கு அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள் என்று அறிவிக்கிறானே அல்லாமல், உமக்குப் பின்னர் அருளப்படுபவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள் என்று அறிவிக்க வில்லை.

இப்படி அந்நஜாத்தில் எழுதி இருப்பதை அற்ப உலகியல் ஆதாயங்களையே அசல் நோக்கமாகக் கொண்ட காதியானிகள் அவர்களின் நபிவழி ஜூன் 2011 பக்கம் 9-ல் எப்படித் திரித்து வளைத்து எழுதி அர்த்தத்தை அனர்த்தமாக்கி இருக்கிறார்கள் என்பதை நீங்களே படித்துப் பாருங்கள். அது வருமாறு.

திருக்குர்ஆன் 2:4வது இறைவாக்கு உமக்கு அருளப்பட்ட அல்குர்ஆன் மீதும், முன்னைய நபிமார்களுக்கு அருளப்பட்டவை மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று அறிவிக்கிறதே அல்லாமல் உமக்குப் பின்னர் அருளப் படுபவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள் என்று அறிவிக்கவில்லை….
முத்திரை நபிக்குப் பிறகு ஒரு நபி வந்து அந்த நபியை ஏற்று அவரது அறிவுரைகளின்படி நடப்பது மார்க்கமாக இருந்தால், முன்னைய நபிமார்களுக்கு அருளப்படுபவையையும் நம்பி ஏற்று நடக்க வேண்டும் என்று கட்டளையிடாமல் விட்டிருப்பானா? (அந்நஜாத். மே. 2011 பக்கம் 25)

அந்நஜாத்தில் எழுதப்பட்டுள்ளதையும் மோசடிப் பேர்வழிகளான காதியானிகள் திரித்து வளைத்து மறைத்து எழுதி இருப்பதையும் நீங்களே படித்துப் பார்த்து அவர்களின் மோசடிப் புத்தியை நீங்களே விளங்கிக் கொள்ளுங்கள்.

இதேபோல்தான் அவர்களின் அக்டோபர், நவம்பர் 2011 இதழ்களில் அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு என்றும் மார்ச், ஏப்ரல் 2012 இதழ்களில் “”டம்மி நஜாத்தின் கம்மி அறிவு” என்றும் தங்களின் வார்த்தை ஜாலங்களாலும், புரட்டுகளாலும், இதர மதகுருமார்கள் நடத்துவது போல் குருகுல புரோகித மதரஸாக்களை நடத்தி அதில் H.A.. பட்டத்துடன் வெளிவரும் புரோகிதர்களுக்கு ஹராமான வழியில் சம்பளம் கொடுத்து புரோகிதத் தொழிலை ஜாம் ஜாம் என நடத்திக்கொண்டு, அப்படிக் கூலிக்கு மாரடிக்கும் மதப் புரோகிதர்களை உற்பத்தி செய்யும் குருகுல மடங்களான மதரஸாக்களை நடத்தாமலும் அதில் பட்டம் பெற்று வரும் ஆலிம் என பெருமை பேசும் ஜாஹில்களை வெளியாக்காததோடு, இப்புரோகிதர்களை மிகமிகக் கடுமையாக குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் அம்பலப்படுத்தும் அந்நஜாத்தும் புரோகிதமே, அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு என்றெல்லாம் எழுதி தங்களை நம்பியுள்ள, தங்களின் வசீகர வலையில் சிக்கியுள்ள அப்பாவிகளை ஏமாற்றி நரகில் தள்ளும் இக்காதியானிகள் எப்படிப்பட்ட மோசக்காரர்களாக, பாவிகளாக இருக்கிறார்கள் என்பதை நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக அறிய முடியும்.

இப்படி அர்த்தமில்லாமல் பிதற்றித் தங்களின் கண்மூடி பக்தர்களை ஏமாற்றி வரும் காதியானிகள் நாம் 1988ல் வெளியிட்ட “காதியானிகளின் ஆகாசப் புளுகு” என்ற நூலை வரிக்கு வரி விமர்சித்துத் தனி நூல் அச்சிட்டு இலவசமாக விநியோகிப்போம் என சவால் விட்ட இக்காதியானிகள் அந்நூல் வெளி வந்து 25 வருடங்கள் உருண்டோடியும் அவர்கள் வாக்களித்தபடி அதை வரிக்கு வரி விமர்சித்துத் தனி நூல் வெளியிடவில்லை. அதேபோல் அந்நஜாத் செப்டம்பர் 2011 இதழில் கேட்டிருந்த 6 கேள்விகளுக்கும் இன்று வரை பதில் அளிக்கவில்லை. அதற்கு வக்கில்லை. ஆம்! காதியானிகள் பேசினால் பொய் பேசுவார்கள், வாக்களித்தால் மாறு செய்வார்கள், வாதித்தால் விதண்டா வாதம் செய்வார்கள் என்பது உறுதிப்படுகிறது. இம் முக்குணங்களும் 4:145 இறை வாக்குக் கூறுவது போல் நரகில் அடித்தட்டில் கிடந்து வெந்து கரியாகும் நயவஞ்சகர்களின் (முனாஃபிக்) குணம் என்பது இறுதித் தூதரின் எச்சரிக்கை.

Previous post:

Next post: