அறிந்து கொள்வோம்!

in 2019 ஜுன்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்,

  1. ஸமூது கூட்டத்திற்கு அனுப்பப்பட்ட நபி யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    ஸாலிஹ் நபி. அல்குர்ஆன் : 7:73
  2. நகைகளை உருக்கி காளை சிற்பத்தை உருவாக்கியவன் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    சாமிரி. அல்குர்ஆன் : 20:87,88
  3. பெயர் சூட்டப்பட்டு பிறந்த நபி யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    “யஹ்யா”. அல்குர்ஆன் : 3:39
  4. விரயஞ் செய்பவர்கள் யாருக்கு சகோதரர்களாவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    “ஷைத்தான்களின்”. அல்குர்ஆன் : 17:27
  5. நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்பு பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான்?
    “பாவமன்னிப்பு தேடுவதும், தேடாமலிருப்பதும் சமமே” அல்குர்ஆன்: 63:6
  6. சிலைகளை தெய்வங்களாக எடுத்துக் கொண்டோரைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?|
    சிலர் நிராகரிப்பார்கள், இன்னும் சிலர் சபிப்பவர்களாகவும் இருப்பார்கள். அல்குர்ஆன் : 29:25
  7. யூகிப்பதை அல்லாஹ் எவ்வாறு விளக்குகிறான்?
    யூகம் சத்தியத்திற்கு எப்பயனையும் அளிக்காது. அல்குர்ஆன் : 10:36
  8. அந்நாளில் (கியாமத் நாளில்) வானம் எவ்வாறு ஆக்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான்?
    உருக்கப்ப்டட செம்பைப் போன்று ஆகி விடும். அல்குர்ஆன் : 70:8
  9. என் இரட்சகன் தவறவிடவும் மாட்டான், மறந்து விடவும் மாட்டான் என யார் கூறுகிறார்?
    மூஸா(அலை) அல்குர்ஆன் :20:49,52
  10. அல்லாஹ்வுக்கே சுஜுது செய்கின்றன என அல்லாஹ் யாரை கூறுகிறான்?
    “வானங்கள், பூமியில் உள்ள உயிரினங்கள், வானவர்கள்.” அல்குர்ஆன் : 16:49
  11. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் நிலை பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    “நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் உயிரோடிப்பவர்கள்” அல்குர்ஆன்:2:154
  12. மறுமையில் நல்லவர்களின் கூட்டத்தில் இருப்பவர் இவர் என சான்று அளிக்கப்பட்டவர் (அல்லாஹ்வால்) யார்?
    இப்றாஹீம்(அலை). அல்குர்ஆன் : 2:130
  13. அல்லாஹ் அல்குர்ஆனில் ஒரே வசனத்தை இரண்டு இடங்களில் சொல்லும் அத்தியாயம் எது?
    “அல்பகரா” அல்குர்ஆன் : 2:134,141
  14. அல்லாஹ் அல்குர்ஆனில் ஒரே வசனத்தை 31 இடங்களில் சொல்லப்படும் அத்தியாயம் எது?
    “அர்ரஹ்மான்” அத்தியாயம் : 55:13,16,18, 21,23,25,28,30,32,34,36,38,40,42,45,47,49, 52,53,55,57,59,61,63,65,67,69,71,73,75,77.
  15. “நிச்சயமாக” என்ற சொல்லை பயன்படுத்தவேண்டாம் எனவும், “அல்லாஹ்நாடினால் தவிர என்ற சொல்லை பயன்படுத்தவும் என்றும் அல்லாஹ் கூறும் அத்தியாயம் எது?
    ஸூரத்துல் கஹ்ஃப் அல்குர்ஆன் : 18:23,24
  16. வானம், பூமி இவ்விரண்டிற்கும் இடைப்பட்டவற்றை விளையாட்டாக படைக்கவில்லை என அல்லாஹ் கூறும் வசனம் எந்த அத்தியாயத்தில் உள்ளது?
    “அல்அன்பியா” அல்குர்ஆன் : 21:16
  17. யூசுப்(அலை) அவர்களுக்கு எப்போது ஞானத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்?
    “தனது வாலிபத்தை முழுமையாக அடைந்தபோது”. அல்குர்ஆன் : 12:22
  18. பயணக் கூட்டம் யூசுப்(அலை) அவர்களை கிணற்றில் இருந்து எடுத்து என்ன செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
    “அற்ப மதிப்புள்ள சில வெள்ளி நாணயங்களுக்கு விற்றார்கள்” அல்குர்ஆன்:12:20
  19. எந்த ஒரு சமூகமும் தனது தவணையை முந்தவோ, பிந்தவோ முடியாது என அல்லாஹ் கூறும் வசனம் எது?
    அல்குர்ஆன் : 15:5
  20. யார் வெற்றியடையமாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    நிச்சயமாக யார் அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ. அல்குர்ஆன்: 16:105

Previous post:

Next post: