பொதுவானவை

அபூ அப்தில்லாஹ் இதோ இறுதி நெறிநூல் அல்குர்ஆன் பறைசாற்றுகிறது! நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். மேலும், நானே உங்கள் இறைவன். ஆகையால், எனக்கே நீங்கள் வழிபடுங்கள். (21:92) (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்கக்) காரியங்களில் பிளவுபட்ட னர்; அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  (21:93) நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். எனவே, நீங்கள் இறை உணர்வுடன் (பயபக்தி) நடங்கள். (23:52) ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் (மார்க்கக்) காரியத்தைத் தமக்கிடையே […]

முஹிப்புல் இஸ்லாம் எளிமை : படிப்பறிவில்லாத பாமரனும் எளிதாய்ப் புரியும் வண்ணம் அல்லாஹ்வின் ஒருமை-ஐ அல்லாஹ் அல்குர்ஆனில் படம் பிடித்துக் காட்டியுள்ளான். வாழ்வின் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் ஒருமையைப் பிரதிபலிக்கச் செய்வது மானுடத்தின் நீங்காக் கடமை. இறை ஒருமை மொழிய, எழுத, முழங்க மட்டுமன்று. வாழ்வில் வாழ்வியலாக்கி ஒழுகுவதற்கே!

அபூ ஃபாத்திமா ஒரே ஆணிலிருந்தும் ஒரே பெண்ணிலிருந்தும் ஆரம்பமான மனித வர்க்கம் இன்றுவரை பல்லாயிரம் கோடிகளாகப் பல்கிப் பெருகி விட்டது. மாண்டவர்கள் போக இன்று இவ்வுலகில் எட்டு நூறு கோடிக்கும் மேல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் மிகப் பெரும் பான்மையினர் மனித இனத்தில் பிறந்திருந்தாலும், பகுத்தறிவுடன் படைக்கப்பட்டிருந்தாலும், பகுத்தறிவற்ற மிருகங்களைவிட கேடுகெட்ட வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு இழிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். (பார்க்க : […]

அல்லாஹ்வின் கயிறான குர்ஆனை ஜமாஅத்தாகப் பற்றிப் பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்…(3:103) நபியின் வருகைக்கு முன்னர் குறைஷ்கள் எப்படி நரக விளிம்பில் இருந்தார்களோ அதேபோல் இன்று முஸ்லிம்கள் நரக விளிம்பில்தான் இருக்கிறார்கள். (பார்க்க: 49:14, 12:106, 9:31) பெயரளவில் இருக்கும் இந்திய முஸ்லிம்களுக்கு 10:103, 22:38, 30:47 இறைவாக்குகள் அளிக்கும் உத்திரவாதப்படி அல்லாஹ்வின் காப்பாற்றுதலோ, பாதுகாப்போ, உதவியோ நிச்சயமாகக் கிடைப்பதாக இல்லை. காரணம் நாம் முஸ்லிம்களாக இருக்கிறோமே அல்லாமல் முஃமின்களாக இல்லை. 800 ஆண்டுகள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்கள், […]

இப்னுஸதக்கத்துல்லாஹ் தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவன்) என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது, அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும். என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

விமர்சனம் : நீங்கள் ஒட்டுமொத்த மவ்லவிகளையும் மிகக் கடுமையாக விமர்சிப்பதாகவும், அவர்களிலும் சிலர் நல்லவர்களாக 6:153 குர்ஆன் வசனக் கட்டளைப்படி நேர்வழி நடப்பவர்களாக இருக்கவும் கூடும் எனப் பலர் உங்களைக் குறை கூறுகிறார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன? ஷாஜஹான், சுப்ரமணியபுரம். விளக்கம்: அந்நஜாத் ஒவ்வொரு மாத இதழின் 2-ம் பக்கத்தில் “”மார்க்கத்தை உள்ளது உள்ளபடிச் சொல்லும் அரபி மொழி ஆணவம் பேசாத, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளாத நபிமார்களின் வாரிசுகளை விமர்சிக்காமல் முழு மரியாதை செலுத்துகிறோம்” என்று […]

MTM. முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2013 தொடர்ச்சி…. இஸ்லாத்தில் பலதாரமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி : அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்). அல்லது உங்கள் வலக் கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே […]

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…. அன்புள்ள சகோதரர் மவ்லவி பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கு அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஷரஹ் அலி, உடன்குடி கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் உறுதிமொழிகள் இதோ : “”நிச்சயமாக முஃமின்கள்(யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வையுங்கள். (49:10)

அபூ அப்தில்லாஹ் அல்லாஹ் கூறுகிறான்: “”…. அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள்; பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாய்த் திரியாதீர்கள்”. (2:60) “”…. ஏனெனில், குழப்பம் உண்டாக்குவது கொலையிலும் கொடியது….” (2:191) குழப்பம் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் உரிய தென ஆகும் வரை அவர்களுடன் போராடுங்கள்…  (2:193)

எஸ்.முஹம்மது ஸலீம், தொடர்புக்கு : 9842696165 இஸ்லாம் மட்டும்தான் விஞ்ஞானத்திற்கு முரண்படாத மார்க்கம் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களில் மிக அதிகமானோர் விஞ்ஞானம் கூறும் மிகத் துல்லியமான சந்திரக் கணக்கீட்டை மறுத்துக் கொண்டு, பிறையைப் புறக்கண்களால் பார்த்துத்தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் சூரியனை மட்டும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தங்களது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பாரபட்சம் காட்டும் இத்தகையவர்களின் நட வடிக்கை சரிதானா என்பதை குர்ஆன் […]

இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது. அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் புத்தகம்   ஆய்வுத் தொடர் : 20 – M.அப்துல் ஹமீது, திருச்சி. “திருக்குர்ஆனின்  சிறப்புகள்” எனும் தலைப்பில் சில சூராக்களை (குறிப்பாக யாசீன் சூரா) சிலாகித்து பல விஷயங்களை ‘அமல்களின் சிறப்புகள்” புத்தகம் எழுதியிருக்கிறது. அவற்றில் மிகைப்படுத்தப்பட்டு பல விஷயங்கள் உள்ளன. அப்புத்தக ஆசிரியருக்கு மிகைப்படுத்தப்பட்டவைகள் உறுத்தலாக இருந்திருக்கும் போல் தெரிகிறது. எனவே எழுதுவதை எல்லாம் எழுதிவிட்டு ஒரு சில குறிப்பையும் தருகிறார். ஆசிரியரின் அக் குறிப்பாவது:

விமர்சனம்: மார்ச் 2002  அந்நஜாத் இதழில் வந்த விளக்கங்களுக்கு விமர்சனம்.’ 1. ஷவ்வால் முதல் நாள் பெருநாள் கொண்டாடித்தான் தீரவேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. 2. அதற்கு மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை. அதனால் தான் தொழக்கூடாத மாதவிடாய் பெண்கள், தக்க காரணமின்றி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் ஈத்கா வருமாறு கட்டளையிட்டார்கள்.

அனைத்து அகிலங்களையும் படைத்து அணுவளவும் பிசகாது பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக நிர்வகித்து வரும் இணை, துணை, இடைத்தரகர் இல்லாத எல்லாம் வல்ல ஏகனான இறைவன், மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பும் போதே தெள்ளத் தெளிவாகக் கட்டளையிட்டே அனுப்பியுள்ளான். அது வருமாறு: “”நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு(ஒரே) நேர் வழி வரும் போது என் வழியைப் பின்பற்றுவோருக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” எனக் கூறினோம்.(2:38)

பிறை நாள்காட்டியின் அத்தியாவசியம் குறித்த ஆய்வு மற்றும் கருத்தரங்கம்!! நாள்:  14.11.2012 இடம்: L.KS. மஹால். (அரிஸ்டோ) 2,திண்டுக்கல் ரோடு, திருச்சி தொலைபேசி:0431-2415859

அபூ அப்தில்லாஹ் சத்தியத்தினுள்ளே மனிதக் கற்பனைகள் நுழையும்போது அது கருத்து வேறுபாடுகளாக உருவெடுக்கிறது. அது இறுதியில் ஒன்றுபட்ட மனித சமுதாயத்தைப் பல மதத்தவர்களாக, அவர்களையும் பல கூறுகளாகப் பிரித்து விடுகிறது. ஆதம்(அலை) காலம் முதல் இன்று வரை இதுவே தொடர் கதையாக இருக்கிறது.

பஷீர் அகமது, புதுக்கோட்டை. நாம் பரபரப்பான வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கிறோம். பொருளாதார தேடலுக்கு நேரம் அதிகம் தேவைப்படுகிறது. வாரத்தில் கிடைக்கும் ஒரு நாள் ஓய்வை கூட கல்யாணம், விருந்து என்று ஓடி விடுகிறது. அவ்வப்பொழுது நடக்கும் உறவினர் வீட்டு மவுத் நிகழ்வுக்கு கூட, நம்மில் பலர் ஏதோ வருகை பதிவேட்டில் Attendenace கையயழுத்து போடுவது போல போய் தலையை காண்பித்துவிட்டு ஓடி வந்து விடுகிறார்கள். மனித நேயங்களை தொலைத்து, வாழும் வாழ்க்கைக்கு நாம் பழகி விட்டோம். அதனால் […]

அபூ அப்தில்லாஹ் கேப்டன் அமீருத்தீன் ஆகஸ்ட் 2009-ல் பதிப்பித்த “”நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “மைனர்’ பெண்ணை மணந்தார்களா? என்ற சிறிய நூலை ஆய்வுக்காக அனுப்பி இருந்தார்கள். அந்நூலில் புகாரீ, முஸ்லிம் முதல் பெரும்பாலான ஹதீஃத் நூல்களிலும், வரலாற்று நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தகவலை விமர்சித்து-மறுத்து நடுநிலையாளர்கள் மறுக்க முடியாத வரலாற்று ஆதாரங்களைத் தொகுத்துத் தந்திருந்தார். கடந்த 1000 வருடங்களாக இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என மார்தட்டும், ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா எனப் பெருமை […]

இப்னு ஹத்தாது அந்நஜாத் 1986 ஏப்ரலில் ஆரம்பித்ததிலிருந்து மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என பெருமை பேசும் மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அவர்களைப் பற்றிய விமர்சனங்களே அந்நஜாத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுவருகின்றன. கடந்த 27 வருடங்களாக இந்நிலையே நீடித்து வருவதால் அந்நஜாத் வாசகர்களில் சிலர் விரக்தியுற்று, எப்போது பார்த்தாலும் ஒரே புரோகிதர், இடைத்தரகர் என்று முஸ்லிம்கள் பெரிதும் மதித்துப் போற்றும் மவ்லவிகளை மிகக் கடுமையாக விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கி றீர்களே! மார்க்கத்தில் சொல்வதற்கு வேறு விஷயங்களே […]