“மறுபடியும்” (பிறை)

in 2009 ஜனவரி

“மறுபடியும்” (பிறை) இன்ஜினியர், விருதுநகர்.

இவர்கள் (முனாஃபிக்குகள்) தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களை கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 63:2)

கோமாளிகளின் பேச்சுகள் கேலியாகவும், சுவாரஸ்யமாகவும், ரெண்டும் கெட்டானாகவும் இருப்பதால், அப்பேச்சுக்களுக்கு கை தட்டும் ஒரு கூட்டம் எப்பொழுதுமே இருந்துதான் உள்ளது. இக்கோமாளிகள் முனாஃபிக்குகளேயாவர். முனாஃபிக்குகள் தான் நேரத்திற்கு நேரம் மாறுபட்டும். விளங்காமலும், தெளிவில்லாமலும் பேசுவார்கள்; விளக்கெண்ணை ஆலோசனைகளை வழங்குவார்கள்: பச்சோந்திகள் போல் இடத்துக்கு இடம் பேச்சை மாற்றிக் கொள்வார்கள்.

ததஜ(தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்)வினர். பிறை பற்றி வழங்கிய ஐந்து ஆலோசனைகளும் மண்டி விளக்கெண்ணெய் தான். மாநிலம், ஒட்டுமொத்த தமிழகம், மாவட்டம், ஒரு ஊரார், ஒரு பகுதி, யாராவது, கிளை  என்ற நன்றாக ஜவ்வுமிட்டாய் வியாபாரம் பார்த்துள்ளனர். எவரும் சாமானியமாக புரிந்து கொள்ள முடியாத அற்புத ஆலோசனைகள்! என்னவோ இந்த சமுதாயத்தின் மீது சாபக்கேடு!!

சின்னத்திரை நடிகரின் பேச்சு கவர்ச்சியாக உள்ளது என்பதற்காக, எந்த ரப்பர் ஆலோசனைகளையும், எப்படித்தான் அன்னாரின் பக்த சிரோன்மணிகள் தாங்கிக் கொள்கிறார்களோ! சமீபத்தில் வெளியான, யானைப்பாகன் கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. அழகிய இளவரசி, முடமான அசிங்கமான யானைப்பாகனை விரும்பியே தீருவேன் என்றால் என்னதான் செய்ய முடியும்? அண்ணனின் பேச்சு  நன்றாக இருக்கிறது என்பதற்காக தங்களைத் தாங்களேவா அழித்துக் கொள்வார்கள்!

சின்னத்திரை நடிகராவது இவ்வுலகில் பக்தர்கள் அளிக்கும் விதவிதமான ஆடை ஏராளமான வசூல் செய்யப்பட்ட பணம் படாடோபம். என்று வெகு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்? அவரின் விசிறிகள் அவ்வாறா வாழ்கின்றனர்? தாய், தந்தை, மனைவி பிள்ளைகள் அனைவரையும் பிரிந்து வட்டிக்கு கடன் வாங்கி, வெளிநாடு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். பிழைக்க போனவர்கள், பிழைப்பை மறந்து விட்டு வாங்கிய கடன், வட்டிகளைக் கட்டுவதை விடுத்து நாயகனுக்கு வாரி வாரி வழங்குகின்றன. ஐயோ பாவம்! நாயகனாவது இம்மையில் சுகம் காணுகிறார்; பக்தகோடிகள் இம்மையிலும் துன்பம் அனுபவிக்கின்றனர். தொடர்ந்து “தக்லீத்”லிலேயே விழுந்து கிடந்தால் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி, மறுமையிலும் துன்பம் அனுபவிப்பார்!!

நாயகனின் விசிறிகள். அவர் கடந்து வந்த பாதையைப் புரட்டிப் பார்க்க மாட்டீர்களா?

இதோ பட்டியல்:

1. அந்நஜாத்

2. ஒரு மன்பஈயிடமிருந்து பறிக்கப்பட்ட புரட்சி மின்னல் அதுவே பின்பு அல்மூபீன் பின்னர் அதுவே ஏகத்துவம்.

3. அல் ஜன்னத் (ஜாக்)

4. உணர்வு (தமுமுக) பின்னர் (ததஜ)

5. தீன்குலப் பெண்மணி (ததஜ) பட்டியல் இன்னும் நீளும்?

பக்தர்களை தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பதில் அண்ணன் வல்லவர். கைது செய்யப்பட்டு மாட்டிக் கொண்டால், அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்.

உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஆவேசமாகப் பேசி, ரசிகர்களை பழிவாங்குபவர்களாக்கினார். அதனால் கோவை கலவரம் வெடித்தது. அவர் எப்படியே தப்பித்துக் கொண்டார். ஆனால் மாட்டிக் கொண்ட பக்தர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டது. அவர்களை விடுவிக்க இன்றுவரை எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை. அவரின் நெருங்கிய மெளலவி நண்பர் கைதாகி சிறை சென்றபோது, கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார். அவரின் சொந்த ஊரைச் சேர்ந்த அரசியல் கட்சி சகோதரர்கள்தான் உதவி செய்தனர். அந்நண்பர் இச்சம்பவத்திற்குப் பின்பு நாயகனின் வாடையே வேண்டாம் என்று ஒதுங்கி, காப்பாற்றிய அரசியல் கட்சீயிலேயே சேர்ந்து விட்டார்.

6.12.2008 அன்று பாபர் மசூதி இடிப்பு தின ஆர்ப்பாட்டத்தை ததஜ நடத்தியது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அண்ணன் கலந்து கொண்டு கைதாகியதாகத் தெரியவில்லை. இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்யக் கூறியவர். அன்றைக்கு அப்பள்ளியை இடிப்பதற்குக் கரசேவகர்களை அனுப்பியவரை ஆதரித்தார். ஒருபக்கம் ஆர்ப்பாட்டம்; மறுபக்கம் ஆதரவு பக்தர்களுக்கு இந்த முனாஃபிக் தனத்தை உணரும் நாள் வருமா?

தலைப் பிறையைப் பற்றி, முன்கூட்டியே தெரிந்து கொள்ளுவதற்கு, வல்ல அல்லாஹ்வின் வாக்குப்படி (அர்ரஹ்மான், மற்றும் யாசீன் அத்தியாயங்கள்) கணக்கிட்டு (Calculation) துல்லியமான காலண்டர் வெளியிடப்பட்டது.

ஆனால் அண்ணன் போட்டிக்கு ஒரு உத்தேச காலண்டரை போட்டார். தலைப்பிறையைப் பார்த்தேதான், முதல் விறையை முடிவு செய்தாக வேண்டும் என்றவரின் கூற்றுப்படி மாத பிறை காலண்டரே போட முடியாதே? பின்னர் வருட காலண்டர் எவ்வாறு போட முடியும்? இந்த சின்ன விசயத்தைக் கூட பக்தர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம்தானே!

ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு, ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் பிறை தெரிந்தே ஆக வேண்டும் என்று கூப்பாடு போட்டுவிட்டு, பின்பு அந்தர்பல்டி அடித்து மாநிலம், ஒட்டுமொத்த தமிழகம், மாவட்டம், ஒரு ஊரார், ஒரு பகுதி, யாராவது, கிளை என்ற குழப்பிவிட்டு, பின்பற்ற முடியாத ஒரு சிவகாசி உத்தேச காலண்டர் போட்டுள்ளார்.

“வல்ல அல்லாஹ்வின் உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, உமக்கு நன்மை கொடுக்கப்படும்? – ஹதீஸின் ஒரு பகுதி புஹாரி 2/1295, முஸ்லிம் 3/3991, முஅத்தா மாலிக் 1452.

என்ற நபி(ஸல்) அவர்களின் வாக்குப்படி வல்ல அல்லாஹ்வின் உவப்பிற்காக காலண்டர் போடாமல், ஏட்டிக்குப் போட்டியாக ஒரு பொய் காலண்டர் போட்டு, உண்மை காலண்டரை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார். வல்ல அல்லாஹ்வின் நாட்டமின்றி யாரையும் எதுவும் செய்ய, எந்த மனித முயற்சியாலும் முடியாது.

இந்த நவீன தக்லீத் வாதி, பழைய தக்லீத்(மத்ஹபு வாதிகள்) வாதிகளின் பெருநாட்களிலேயே இவர்களின் பெருநாட்களையும் வருமாறு பார்த்துக் கொள்வார். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்களின் ஆதரவை பெற்று விடலாம் என்று கருதுகிறார். மேலும் பழைய தக்லீத்வாதிகள் அதிகமாக உள்ளதால், அவர்களின் ஆதரவு அவசியம் என்றும் நினைக்கிறார். புதிய தக்லீத்வாதிகள். பழைய தக்லீத்வாதிகளின் நாளில் பெருநாட்களைக் கொண்டாடுவதால், பழைய தக்லீத் வாதிகள் சின்னத்திரை நாயகனிடம் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கி வருகின்றனர். இதை நாமே அனுபவபூர்வமாகக் கண்டோம்.

இம்மயக்கம் நிலைத்திருக்கப் போவதில்லை. ஏனெனில், சின்னத்திரை நாயகன் சிலரை சில நாட்கள் இம்மயக்கம் நிலைத்திருக்கப் போவதில்லை. ஏனெனில், சின்னத்திரை நாயகன் சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம். பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாட்களிலும் ஏமாற்ற முடியாது.

ஏனெனில் சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றிபெற மாட்டான்.” அல்குர்ஆன் 20:69

“நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெறமாட்டார்கள்”. அல்குர்ஆன் 28:37

இந்த நவீன தக்லீதுவாதிகளின் நாயகனின் பிறை, ஜகாத், மற்றும் பிற தடுமாற்றங்களினால் இவரின் பக்த கோடிகளில் சிலர், சுய சிந்தனையின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

ஒரு மெளலவி உமரி, ததஜ பள்ளியைக் கைப்பற்றி, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை ‘மக்கா’ நாளில் நிறைவேற்றினார்.

கைப்பற்றுதல் என்றதும், ததஜவினர் ஒரு JAQH பள்ளியை அபகரிக்கும் முயற்சியில் வெற்றி பெறாமல், கோர்ட்களுக்கு அலைந்து திரிவது ஞாபகத்திற்கு வருகிறது. இந்நிகழ்வுகளினால் மனமொடிந்து, உடல்நலமிழந்த ஒரு மென்மையான மதனி, “கோமாவில்” படுத்து பின்பு இறந்துவிட்டார். (இன்னாலில்லாஹ்…)

“நிச்சயமாக வல்ல அல்லாஹ் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்பதை மறந்து ஆட்டம் போடுகின்றனர். வல்ல அல்லாஹ்வின் தண்டனை இறங்கம்பட்சத்தில், இந்த நவீன தக்லீத்வாதிகள், நிச்சயமாக, அத்தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்வார்களாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் மிக நன்கறிந்தவன்!

 

Previous post:

Next post: