ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2012 நவம்பர்

MTM. முஜீபுதீன், இலங்கை
அக்டோபர் மாதம் தொடர்ச்சி…

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ்(அலை) அவர்களை நோக்கி) “”(எனது செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத் தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?” என்று கேட்பான். அதற்கு நூஹ். அவர்கள், “”ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)” என்று பதிலளிப்பார். பிறகு, அல்லாஹ் நூஹ் அவர்களுடைய சமுதாயத்தினரிடம், “”இவர் உங்க ளுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்து விட்டாரா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “”இல்லை, எங்களிடம் எந்த இறைத் தூதரும் வரவில்லை” என்று பதில் கூறுவார்கள். உடனே, அல்லாஹ் நூஹ் அவர்களிடம், “”உங்களுக்காக சாட்சியம் சொல்பவர் யார்?” என்று கேட்பான். நூஹ் அவர்கள், “”முஹம்மது(ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தினரும் (எனக்காக சாட்சியம் சொல்வார்கள்)” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள்(இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். “”இவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடு நிலையான சமுதாயமாக ஆக்கினோம்” என்றும் புகழுயர்ந்த இறைவனின் (2:143) வசனம் இதைத்தான் குறிக்கின்றது (புகாரி: 3339)

மேலே முன்வைத்த ஆதாரங்களிலிருந்து முன்னைய இறை நெறிநூல்களிலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். அறிவு மிக்க மனித சமுதாயமே உங்களைப் படைத்த இறைவன் ஒருவனே. அவனுக்கு இணையில்லை. தனக்கே உதவி செய்ய முடியாத சிலை களை தெய்வமாக கொண்டு வணங்குவது பெரும் பாவமாகும். ஷைத்தானின் தீய வழி களைப் பின்பற்றாதீர்கள். அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட அல்குர்ஆனை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அருளச் செய்துள்ளான். நேர்வழி பெறுவோர் உண்டா? சிந்தியுங்கள்.

அன்று நபித்துவத்துக்கு முன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னைய நெறிநூல்களையோ, வரலாறுகளையோ கற்று அறிந்தவர் அல்ல. எழுத வாசிக்கத் தெரியாத உம்மி நபியாக இருந்தார். அவ்வாறாயின் எவ்வாறு ஆதம் (அலை), நூஹ்(அலை), இப்ராஹீம்(அலை), மூசா(அலை), ஈசா(அலை) போன்ற இறைத் தூதர்களின் வரலாறுகளை துல்லியமாகக் கூற முடியும். அவர்கள் இறைவனின் இறைத் தூதராக இருந்த காரணத்தினாலேயே சரியாக கூற முடிந்தது. இந்து வேதங்களிலும், யூத, கிறித்தவ வேதத் தொகுப்புகளிலும் தேய்வடைந்து காணப்படும் நூஹ்(அலை) அவர்களின் வர லாற்று உண்மைகளை அல்குர்ஆன் விபரிப்பதை அவதானியுங்கள்.
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமு தாயத்தாரிடம்: “”நீர் உம் சமுதாயத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அது பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரசூலாக) அனுப்பினோம்.

“”என் சமுதாயத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்ச ரிக்கை செய்பவன்” என்று கூறினார்.
“”அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் எனக்கும் வழிப்படுங்கள்.”
“”(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான் மேலும் ஒரு குறிக்கப்பட்ட தவணை வரை அவன் உங்க ளுக்கு அவகாசமளிப்பான் நிச்சயமாக அல் லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத் தப்படமாட்டாது. (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).

பின்னர் அவர் “”என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமுதாயத்தாரை இரவிலும், பகலி லும் (நேர்வழியின் பால்) அழைத்தேன்.
“”ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர் வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்த தல்லாமல் வேறில்லை.”
“”அன்றியும், நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காது களில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர். மேலும் தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர். அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும், பெரும் மமதை-பெருமையடித்துக் கொள்வோரா கவுமே இருக்கின்றார்கள்”.
“”பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்த மாக அழைத்(தும் போதித்)தேன்.”

“”அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன். இரகசிய மாக அந்தரங்கத்திலும் பேசினேன்.”
மேலும், “”நீங்கள் உங்களுடைய இறைவனி டம் மன்னிப்புத் தேடுங்கள் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன் என்றும் கூறினேன்.”
“”(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்பு வான். அன்றியும் அவன் உங்களுக்குப் பொருட் களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான். இன்னும் உங்களுக்காகத் தோட் டங்களை உண்டாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண் டாக்குவான். உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மை யையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.

“”நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளி லிருந்துப் படைத்தான். ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்தி ருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில் லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான். பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான். அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான். அதில் நீங்கள் செல்வ தற்காக விசாலமான பாதைகளையும் அமைத் தான்.” (என்றும் போதித்தான்)
(அல்குர்ஆன் 71:1-20)

இவ்வாறு நூஹ்(அலை) அவர்கள் நீண்ட காலம் (பார்க்க 29:14) அல்லாஹ்வின் நேர்வழி யின் பக்கம் வர வேண்டினாலும், அம்மக்களில் அநேகமானவர்கள் நிராகரிப்பவர்களாகவே இருந்தனர். மிக மிகச் சொற்பமானவர்களே நூஹ் (அலை) அவர்களை விசுவாசித்தனர். இதனால் நூஹ்(அலை) அவர்கள் பின்வருமாறு அல்லாஹ்விடம் முறையிடுவதாக அல்குர்ஆன் விளக்குகின்றது. அவதானியுங்கள்.
நூஹ் கூறினார்: “”என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். அன்றி யும், எவர்களுக்கு அவர்களின் பொருளும், அவர்களின் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்த கைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்ற னர். மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.”

மேலும் அவர்கள்: “”உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சய மாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.

“”நிச்சயமாக அவர்கள் அநேகரை வழி கெடுத்து விட்டனர். ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.”

ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.

அப்பால் நூஹ் கூறினார்: “”என் இறைவா! பூமியின் மீது இந்த காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டுவிடாதே.
நிச்சயமாக, நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்து விடுவார்கள். அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.

“”என் இறைவா! எனக்கும், என் பெற்றோ ருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமி னான ஆண்களுக்கும், முஃமினான பெண்க ளுக்கும், நீ மன்னிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்.) (அல்குர்ஆன் : 71:21-28)

நூஹ்(அலை) அவர்கள் அவ்வாறு பிரார்த்தித்தார்கள். அதன் பின் எவ்வாறு அல்லாஹ் பிரளயத்தை ஏற்படுத்தினான் என்ற விபரங்களை அல்குர்ஆன் பின்வருமாறு விபரிக்கின றது. அவதானியுங்கள்.

மேலும் நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப் பட்டது. “”(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார். ஆதலால் அவர்கள் செய்வதைப் பற்றி நீர் விசாரப் படாதீர்.

“”நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும். அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்”

அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்ற போதெல்லாம் அவ ரைப் பரிகசித்தனர்(அதற்கு) அவர், நீங்கள் எங்க ளைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக “”நீங் கள் பரிகசிப்பது போலவே, (அதி சீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.

“”அன்றியும், எவன் மீது அவனை இழிவுபடுத் தும் வேதனை வருமென்றும், எவர்மீது நிலைத் திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்.)

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி) “”உயிர்ப் பிரணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை(அக் கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படு வார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்ட வர்களையும் ஏற்றிக் கொள்ளும்” என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ள வில்லை.

இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள் இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயரா லேயே (நிகழ்கின்றன.) நிச்சயமாக என் இறை வன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவ னாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.

பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களைச் சுமந்து கொண்டு செல்லலாயிற்று. (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்ப லில்) ஏறிக்கொள். காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.

அதற்கு அவன்: “”என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான்(தப்பி) விடுவேன்” எனக் கூறினான். இன் றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ் வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர் களில் ஒருவனாகி விட்டான்.

பின்னர், “”பூமியே! நீ, உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக் கொள்” என்று சொல்லப்பட்டது நீரும் குறைக்கப் பட்டது (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்துவிட்டது (கப்பல்) ஜூதி மலை மீது தங்கியது. அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும் பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சய மாக உண்மையானது. நீதி வழங்குவோர்களி லெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கி றாய்” எனக் கூறினார்.

அ(தற்கு இறை)வன் கூறினான்: “”நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்க மில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந் தான். ஆகவே நீர் அறியாத விசயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர் களில் ஒருவராகி விட வேண்டாம் என்று திட்டமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்”.

“‘என் இறைவா! எனக்கு எதைப் பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாது காப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.

“”நூஹே! உம்மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும், அபிவிருத்தியுடனும் நீர் இறங்குவீராக. இன் னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களைத் தீண்டும்” என்று கூறப்பட்டது.

(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்வு களில் உள்ளதாகும். நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம். நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன்னர் இதனை அறிந்திருக்கவில்லை. நீரும் பொறு மையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர் களுக்குத் தான் (கிட்டும்) ஹூத் : 11:36-49

(இன்ஷா அல்லாஹ் தொடரும்…..)

Previous post:

Next post: