அறிந்து கொள்வோம்!
ரஹிமுத்தீன், குண்டூர்
1. வேதம் அருளப்பெற்று அதன் வழி நிற்காத வர்களை எதற்கு உதாரணம் என அல்லாஹ் கூறுகிறான்?
கழுதையைப் போன்றவர்கள். அ.கு. 62:5
2. உயிரினங்களில் அல்லாஹ்விடம் கீழ்த்தர மானவர் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
மார்க்கத்தை விளங்கிக் கொள்ளதவர்கள். அல்குர்ஆன் 8:22
3. விருந்தில் கலந்து கொள்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள அல்லாஹ் கூறுகிறான்?
உணவு உண்டபின் பேசிக் கொண் டிருக்க வேண்டாம். அல்குர்ஆன் 33:53
4. இரு கடல்களின் தரம் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
ஒன்று மதுரமான சுவைநீர், மற்றொன்று உப்புடன் கசப்பு நீர். அல்குர்ஆன் :25:33
5. பூமியை என்ன செய்து வருவதாக அல்லாஹ் கூறுகிறான்?
பூமியின் ஒரப் பகுதியை குறைத்து வரு வதாக கூறுகிறான். அல்குர்ஆன் 21:44
6. தன்னிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் நாட்களில் எவ்வளவு என அல்லாஹ் கூறுகிறான்?
ஆயிரம் ஆண்டுகள். அல்குர்ஆன் 22:47
7. அல்குர்ஆன் எவ்வாறு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
விளங்குவதற்கு எளிதாக இருப்பதாக. அ.கு. 54:17
8. லா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ் என் றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
ஆற்றலும், சக்தியும் அல்லாஹ்வுக் கேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 18:39
9. நம்மால் அறியமுடியாத ஞானங்கள் எவை என அல்லாஹ் கூறுகிறான்?
இறுதிநாள், மழை, சம்பாதிப்பது, கரு மரணிப்பது. அல்குர்ஆன் 31:34
10. பூமியிலுள்ள அதிகமானோரைப் பின் பற்றியவர்கள் என்ன ஆவார்கள் என நபி(ஸல்) அவர்களுக்கு வஹீயின் தாக்கம் நீங்கியதும் என்ன நடக்கும் என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்?
நெற்றியில் வியர்வை சொட்டும். புகாரி:2
11. இஸ்லாம் எதன் மீது நிறுவப்பட்டுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கலிமா, தொழுகை, ஜகாத், ஹஜ், நோன்பு. புகாரி : 8
12. ஈமானின் அடையாளத்தில் ஒன்று எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அன்சாரிகளிடம் அன்பு கொள்வது. புகாரி : 17
13. அல் ஹில்ம் என்றால் என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சகிப்புத்தன்மை. முஸ்லிம் : 189
14. மற்ற நபிமார்களை விட ஆறு வியங்க ளில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதில் முதலாவது எது?
சுருக்கமான ஆனால் விரிவான பொருள் கொண்ட வார்த்தைகள். முஸ்லிம்:5239
15. நரகத்தில் இப்னு லுஹை என்பவன் எனக்கு காட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சிலைகளுக்காக “”யாஇபா” என்ற ஒட்டகங்களை அவிழ்த்துவிட்டான். முஸ்லிம் 9010
16. நேர்ச்சையால் என்ன பலன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கஞ்சனிடமிருந்து செல்வம் வெளிக் கொணரப்படும். முஸ்லிம் : 16399
17. வாகனத்தில் செல்பவர் யாருக்கு ஸலாம் கூறவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நடந்து செல்பவருக்கு. முஸ்லிம் : 2160
18. அஸ்ர் தொழுகையை தவறவிடுபவரின் நிலை என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தனது குழந்தையை இழந்தவன் போலாவான். முஸ்லிம் 2886