“யார் பிற மதக் கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே” என்ற ஹதீதின் சட்டவிளக்கம்!

in 2026 மே

யார் பிற மதக் கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர்

அவர்களைச் சேர்ந்தவரேஎன்ற ஹதீதின் சட்டவிளக்கம்!

எஸ். ஹலரத் அலி

முன்னுரை : “செயல்கள் எல்லாம் எண்ணங் களைக் கொண்டே” (புகாரி 1) என்பது இஸ்லாத்தின் தங்க விதி. (றூலியிdeஐ யூற்யிe). அதே நேரம், “”யார் ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சேர்ந்த வரே!”!(அபூதாவூத் 4031) என்றும் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

ஒரு இந்து சகோதரன் மரியாதை நிமித்தம் கைகூப்பி வணக்கம் சொல்லும்போது, பதிலுக்கு ஒரு முஸ்லிமும் கைகூப்பினால் அவர்  இந்துவாகி  விடுவாரா?

இணை வைக்கும் எண்ணம் இல்லாமல் செய்தால் அது வழிகேடா?

இந்தக் குழப்பத்திற்கு குர்ஆன், சுன்னா அடிப்படையில் தெளிவான விடை காண்பதே  இக்கட்டுரையின்  நோக்கம்.

1. ஹதீதின் சரியான பொருள் :

­ப்புஹ்என்றால் என்ன?

நபி(ஸல்) தடுத்த­ப்புஹ் ஒப்பாதல்என்பது கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் குறிக்காது. இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் மூன்று நிபந்தனைகள் விதிக்கி றார்கள். (இக்திளா ஸிராத்தில் முஸ்தகீம் 1:83)

1. அது அவர்களுக்கே உரித்தான மத அடையாளமாக இருக்க வேண்டும். 

சிலுவை, குங்குமம், விக்கிரக வணக்க முறை, கைகூப்பி வணங்குதல் போன்றவை.

2. ஒப்பாகும் நோக்கம் இருக்க வேண்டும்.

அவர்களைப்பெருமைப்படுத்த, அவர்கள் மார்க்கத்தை உயர்த்தும் எண்ணம்.

3. இஸ்லாத்தில் அதற்கு மாற்று இருக்க வேண்டும்.

இஸ்லாம் சலாம், கைகுலுக்கல் என்று தனி வழி வைத்திருக்கும்போது அதை விட்டு விடுதல். ஆக, மதச்சம்பந்தம் இல்லாத உலக வி­ யங்களில் கார், கம்ப்யூட்டர், சட்டை ஒப்பா வது இந்த ஹதீதில் வராது. ஆனால் வணக்க வழிபாடு, கலாச்சார அடையாளங்களில் ஒப்பாவதுதான் தடை செய்யப்பட்டுள்ளது.

2. இஸ்லாத்தில் ஒரு செயல் ஏற்கப்பட இரண்டு  நிபந்தனைகள்.

இமாம்  நவவீ(ரஹ்)  கூறுகிறார்கள்.

அல்லாஹ்விடம் ஒரு அமல் ஏற்கப்பட வேண்டுமானால் இரண்டு வேண்டும்.

1. இக்லாஸ் எண்ணம் அல்லாஹ்வுக்காக,

2. முதாபஅத் செயல் நபிவழியில்” (­ரஹு முஸ்லிம் 12:16)

இதன் பொருள் : எண்ணம் மட்டும் போதாது. செயலும் நபி(ஸல்) அவர்கள் காட்டியதாக இருக்க வேண்டும்.

ஆதாரம் : 1 ஒருவர் லுஹர் தொழுகையை 5 ரக்அத் தொழுதால், எண்ணம் 100% அல்லாஹ் வுக்காக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும். ஏனெனில் செயல் நபிவழி இல்லை. (புகாரி : 2697)

ஆதாரம் : 2.  நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் “”மாஷா அல்லாஹ் வ ´ஃத” – “”அல்லாஹ் நாடி யதும் நீர் நாடியதும்என்றார். அவர் இணை வைக்கும் எண்ணத்தில் சொல்லவில்லை, மரி யாதைக்குத்தான். ஆனாலும் நபி(ஸல்) கடிந்து கொண்டார்கள். “”என்னை அல்லாஹ்வுக்கு இணையாக்கி விட்டாயே!”    (அஹ்மத் 1965)

ஏனென்றால் வார்த்தையே ´ர்க்கானது:

எனவே “”என் எண்ணம் சுத்தமஎன்பது ஹராமான செயலை ஹலாலாக்காது.

3. “கைகூப்பி வணக்கம்”-மார்க்கத் தீர்ப்பு என்ன?

இதில் இரண்டு கூறுகள் உள்ளன. சொல்செயல்.

. “வணக்கம்என்ற சொல்.

வணக்கம்என்றால் “”வணங்குதல்அல்லாஹ் கூறுகிறான்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” (அல்பகரா 2:163)

ஒரு மனிதனைப் பார்த்து “”உன்னை வணங்குகிறேன்என்று சொல்வது, எண்ணம் இல்லாவிட்டாலும், வார்த்தை அளவில் தவறு. இது அல்லாஹ்வின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாகும்.

. கைகூப்புதல் என்ற செயல் :

1. இது இந்து தர்மத்தின் வணக்க அடையாளம்: “”நமஸ்தேஎன்பதன் நம்பிக்கைஉனக்குள் இருக்கும் இறைவனை நான் வணங்குகிறேன்என்பதாகும். இது அகீதாவுடன் சம்பந்தப்பட்டது.

2. நபி(ஸல்) தடுத்தார்கள் : ஒரு ஸஹாபி கேட்டார். 

நாம் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர்  குனியலாமா? ”

நபி(ஸல்) : கூடாது 

கட்டிப்பிடிக்கலாமா? “கூடாது

கை கொடுக்கலாமா?” “ஆம்  (திர்மிதி 2728:ஹஸன்)

குனிவதேகூடாதுஎன்றால், கை கூப்புதல் அதைவிட வணக்கத்திற்கு நெருக்கமானது.

3. இமாம் இப்னு உஸைமீன் ரஹ் ஃபத்வா:

கைகூப்புவது வணக்கத்தின் வகையைச் சேர்ந்தது. அதை அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்வது கூடாது. “என் எண்ணம் சுத்தம்என்பது ஏற்கப்படாது” (லிகாஉல் பாபில் மஃப்தூஹ் 65)

4. அப்படியானால் கும்பிட்டால்இந்துவாகி  விடுவாரா)” 

இல்லை. ஒரே செயலால் மதம் மாறிவிடாது. 

ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேற மூன்று  நிபந்தனைகள்  தேவை :

1. அறிவு : இது ஹராம், குஃப்ர் என்று தெரிந்திருக்க  வேண்டும்.

2. தேர்வு : நிர்ப்பந்தம் இல்லாமல் சுயமாகச் செய்ய வேண்டும்.

3. நோக்கம் : “”நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இந்து மதத்தை ஏற்கிறேன்என்ற உறுதி வேண்டும்.

மரியாதை நிமித்தம், அறியாமையால் கும்பிடும் முஸ்லிம் உள்ளத்தில் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவம் இருக்கும் வரை அவர் காஃபிர் ஆகமாட்டார். ஆனால் அவர் பெரும்பாவம் செய்தவர் ஆவார். தவ்பா செய்வது கடமை.

இமாம் நவவீ ரஹ் :

முஸ்லிமல்லாதவர்களின் வணக்க அசைவுகளைச் செய்வது ஹராம். அதனால் அவன் காஃபிர் ஆகமாட்டான். ஆனால் பாவியாவான்  (அல் மஜ்மூஃ 4:445)

அடுத்து கிருஸ்துவர்கள் தங்கள் வழமைப் படிகர்த்தருக்கு ஸ்தோத்திரம்என்று வணக்கம் சொல்வார்கள். ஒரு முஸ்லிமும் பதிலாக “”ஸ்தோஸ்திரம்என்று சொல்லலாமா?

நிச்சயம் கூடாது! ஏனெனில் இன்றைய கிருஸ்தவர்களின் இறை நம்பிக்கையின்படி கர்த்தர் என்றாலே அது இயேசு கிறிஸ்து என்றே  நம்பிக்கை  கொண்டுள்ளார்கள்.

கர்த்தராகிய ஆண்டவராகிய நம் இயேசு கிருஸ்துவின் நாமத்தினாலே…!” என்றே அவர்கள்  பைபிள்  கூறுகிறது.

இயேசு கிறிஸ்து எனும் ஈஸா நபியை கிருஸ்துவர்கள் கர்த்தர் ஆக்கி இணை வைப்பு செய்வதால்… “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்என்பது  இன்று  இணை  வைப்பாகிவிட்டது.

5. வழிகேடு எப்படி வருகிறது? நபி(ஸல்) அவர்கள் ´ர்க்கின் வாசலை அடைத்தது ஏன்?

இணைவைக்கும் எண்ணம் இல்லைஎன்று இன்று கும்பிடுகிறோம். இதுவே வழி கேட்டின் முதல் படி.

நபி(ஸல்) எச்சரிக்கை :

நீங்கள் யூத, கிறிஸ்தவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்பு பொந்துக்குள் நுழைந்தா லும் நீங்களும் நுழைவீர்கள்    (புகாரி: 3456)

இமாம் ஷாதிபீ ரஹ்:

பித்அத்துகள் எல்லாம் நல்ல எண்ணத்தில் தான் உருவாகின” (அல் இஃதிஸாம் 1:121)

இன்று மரியாதைக்கு கும்பிடுவோம். நாளை நம்பிள்ளைகள்இதெல்லாம் சாதாரணம்என்பார்கள் நாளன்றைக்குமரியாதைக்குகோவில் குமபாபிஷேகம் போவார்கள். வழிகேடு படிப்படியாகத்தான் வரும். அதனால்தான் நபி(ஸல்) முதல் வாசலையே அடைந்தார்கள்.

6. இஸ்லாம் காட்டும் அழகிய மாற்று வழி:

இந்து சகோதரன் கைகூப்பினால், முஸ்லிம் என்ன செய்யவேண்டும்?

1. புன்னகை செய்யுங்கள். இது தர்மம் (திர்மிதீ 1970)

2. “அஸ்ஸலாமு அலைக்கும்சொல்லுங்கள்.

இதன் பொருள்உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்”. இதை முஸ்லிமல்லாதவருக்கும் சொல்லலாம் என்பது இப்னு அபிதீன், இப்னு உஸைமீன் போன்றோர் கருத்து.

3. கை கொடுங்கள் : இது நபிவழி. (திர்மிதீ 2728)

4. “நலமா? வாங்கஎன்று தமிழில் மரியாதையாகப் பேசுங்கள்.

எங்கள் மார்க்கத்தில் வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே. அதனால் நான் கை கொடுக்கிறேன்என்று புன்னகையுடன் சொன்னால், 99% மக்கள் புரிந்து கொள்வார்கள். இதுதான் தஃவாவும் கூட.

முடிவுரை : 

எண்ணம் + செயல் = ஈடேற்றம்

1. “யார் ஒப்பாகிறாரோ…” ஹதீத் உண்மை.

அது மத அடையாளங்களில் ஒப்பாவதைத் தடுக்கிறது. கைகூப்பி வணங்குவது அதில் அடங்கும்.

2. “”எண்ணத்தின்படி கூலிஎன்பது வணக்கங்களுக்கு. ஹராமான செயலை நல்ல எண்ணத்தில் செய்தால் அது ஹலாலாகாது. பன்றியை பிஸ்மி சொல்லி சாப்பிடுவது போல.

3. கும்பிடுவதால் ஒருவர் காஃபிர் ஆக மாட்டார். ஆனால் பெரும் பாவம் செய்தவர் ஆவார். தவ்பா அவசியம்.

4. நேர்வழி: நபி(ஸல்) காட்டிய சலாம், கை குலுக்கல், புன்னகை, இதில் மரியாதையும் இருக்கிறது. மார்க்கமும் பாதுகாப்பாக இருக்கிறது.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்க மாட்டான்ஆல இம்ரான் : 3:32

அல்லாஹ்வே மிக சிறந்தவன்.

Previous post:

Next post: