கண்ணைக் கொடுத்து பெண்ணைப் படைத்தவன் கொடியவனா?

in 2026 மே

கண்ணைக் கொடுத்து பெண்ணைப் படைத்தவன் கொடியவனா?

A. நஜ்முதீன்

வரலாற்று மூலம் ஆட்சியாளர்களில் யார் யாரெல்லாம் கொடியவர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்துள்ளோம்.

உதாரணம் :  ஃபிர்அவ்ன்

மேலும் மனிதர்களிலும் சிலர் கொடியவர்களாக இருந்தார்கள், இருக்கின்றார்கள் என்பதையும்  அறிவோம். அதுபோல் இறைவனையும் கொடியவன் என  கவிஞர்களில்  சிலர்  கூறினார்கள்.

அதாவது :

கண்ணைக் கொடுத்து, பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவன்என்பதாக,

மனிதர்களை படைத்து உடலில் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்புக்களை கொடுத்து படைத்திருக் கும்போது இந்த கவிஞர்கள் கண்ணைக் கொடுத்துள்ள (படைத்துள்ள) இறைவனை கொடியவன்  என  கூறக்  காரணம்  என்ன?

நிச்சயமாக கண்ணுக்கு மட்டுமே உடலி லுள்ளுறுப்புக்களின் தனி சிறப்பு உண்டு என் பதை அறிந்தோ, அறியாமலோ இந்த கவிஞர் கள்இறைவன் கொடியவன்என தவறாக கூறியுள்ளார்கள். நமது (மனிதர்களில்) உடலில் உள்ள உறுப்புக்களில் ஒவ்வொன்றும் தக்க கார ணத்தோடே  இறைவன் படைத்துள்ளேன். அதி லும் ஏனைய உறுப்புக்களை விட கண்களுக்கு மட்டும் தனி சிறப்பு இருக்கும்போது இந்த கவி ஞர்கள்  இவ்வாறு  புலம்ப  காரணம்  என்ன?

பொதுவாக கண்கள் வெளிச்சத்தை உணர்ந்து பொருட்களின் வடிவம், நிறம், தூரம் ஆகிய வற்றை அடையாளம் காண உதவுகின்றன என்பது மட்டுமே பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ளனர்.

அது உண்மையாக இருந்தாலும் அதற்கும் மேலாக கண்கள் மட்டுமே மூளையுடன் (யயூபுணூஹி) நேரிடையாக இணைக்கப்பட்டுள்ள உறுப்பாகும். அதாவது நாம் பார்க்கும் பார்வைகளை கண்கள் மூளைக்கு அனுப்பி அதன் மூலம் அதை உடனடியாக செய்தியாக மாற்றி புரிவதற்கு  மூளை  உதவுகின்றன.

எவ்வாறு  என்றால்;

உதாரணம் : மகிழ்ச்சி, துக்கம், கோபம் போன்ற உணர்வுகளை கண்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன.

சுருக்கமாகச் சொன்னால்;

கண்கள்தான் உலகத்தையே காண உதவுகின்றன. இப்படிப்பட்ட கண்களை கொடுத்த இறைவனை கொடியவன் என்று கூறும் இந்த கவிஞர்கள்தான் கண் இருந்தும் குருடர்களாக இருக்கின்றார்கள்.

அதாவது :    “”கண்ணுக்கு மை அழகு,

கவிதைக்கு பொய் அழகு

என்பதே கவிஞர்கள் வாதம். எனவே தான் இறைவன்  கூறியுள்ளான்.

வழிகேடர்களே கவியர்களைப் பின்பற்று கின்றனர்” (26:224)

மேலும்  இறைவன்  கூறியுள்ளான்;

(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக்  கொடுக்கவில்லையா?  (90:8)

மேலும்  மற்றொரு  வசனத்தில்,

மனிதர்களின் கண்கள் செய்யும் சூதுகளையும் உள்ளங்கள் மறைப்பவற்றையும் அல்லாஹ்  நன்கு  அறிவான்  (40:19)

மேலும் மற்றொரு வசனத்தில் இறை மறுப்பாளர்களாக இருக்கும் மனிதர்களைப் பார்த்தும்  இறைவன்  கூறுகிறான்.

பூமியில் இவர்கள் சுற்றித்திரிந்து பார்க்கவில்லையா, (அவ்வாறு பார்ப்பாளர்களாயின்) உணர்ந்துக் கொள்ளக்கூடிய உள்ளங்களை யும், கேட்கக்கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே! உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை. அவர்களின் உள்ளங்கள் தான் குருடாகிவிட்டன  (22:46)

மேலும் மற்றொரு வசனத்தில் கண்களை மூடிக் கொள்கின்றவர்களைப் பார்த்து இறைவன்  கூறுகிறான்.

எவன் இறைநூலிலுள்ள (குர்ஆனிலுள்ள) நல் உபதேசங்களைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாக) சாட்டி விடுவோம். அவன் அவனுக்கு இணை பிரியாத நண்பனாகி விடுவான்  (43:36)

நிச்சயமாக அவர்களுடன் உள்ள அந்த ஷைத்தான்கள்தான் அவர்களை நேரான பாதையில்  இருந்து  தடுத்து  விடுகின்றனர்.

எனினும் அவர்களோ! தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள்”. (43:37)

(உலகில் பெரும்பாலோரின் நிலைமை இது தான். இறைவனின் வழிகாட்டி நூல் (குர்ஆன்) இருந்தும் அதை படிக்காமல் மனித கரங்களால் எழுதிய பல மஸாயில் நூல்களை படித்துவிட்டு நேரான வழியில் இருப்பதாக நினைக்கின்றார்கள்)

Previous post:

Next post: