தியாகத் திருநாள் சிந்தனை!
– K.M.H.
மறு பதிப்பு :
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வருடத்தில் இரண்டு நாட்களைப் பெருநாளாகக் கொண்டாட அனுமதி அளித்துள்ளது. ஒன்று ஈகைத் திருநாள்; மற் றொன்று தியாகத்திருநாள். யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று பெருங்கொண்ட சமுதாயங்களும் ஏகோபித்து போற்றிப் புகழும், இறைவனின் நெருங்கிய நேசரும், தூதருமான நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாக உள்ளத்தை நினைவு கூர்ந்து கொண்டாடுவதே தியாகத் திருநாளாகும்.
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் தமது விருந்தாப்பிய வயதில் இறைவனிடம் அழுது, கெஞ்சி, மன்றாடி, வேண்டிப் பெற்ற மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை, அவர்களின் துள்ளித் திரியும் பருவத்தில் அறுத்துப் பலியிடுவது போல் ஒரு கனவு கண்டார்கள். நபிமார்களின் கனவில் ஷைத் தான் குறுக்கிடமுடியாது எனவே நபி இப்ராஹீம் (அலை) அதை இறைவனது உத்திரவாக எடுத்துக் கொண்டு, அதை நிறைவேற்ற முடிவு செய்து, நம் அருமை மகனிடம் அபிப்பிராயம் கேட்கிறார்கள். அருமை மகனும் இறைவனது கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்படுவதாகவும், அதில் பொறுமை காட் டுவதாகவும், தந்தை நமது கனவை நிறைவேற்றி அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணியுமாறும் கேட்டுக்கொள்கிறார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் தமது அருமை மகனை தமது கரத்தா லேயே அறுத்துப் பலியிட முற்பட்டு விட்டார்கள். ஆனால் அல்லாஹ், நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் தனக்கு எந்த அளவு வழிபடுகிறார்கள்; கட்டுப்படுகிறார்கள்; தமது நஃப்ஸை எதிர்த்துப் போராடுகிறார்கள். என்று சோதித்துப் பார்க்கவே, இவ்வாறு கனவில் அறிவித்தான். எனவே நபி இப்ராஹீம் (அலை) எவ்விதத் தயக்கமுமின்றி துணிந்து அச்செய லில், ஈடுபட முற்பட்டதை அறிந்ததும், அல்லாஹ், அதைப் பொருந்திக் கட்டளையிட்டான் (பார்க்க 37:100 முதல் 113) நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாக உள்ளத்தின் காரணமாக, இன்னொரு மகனான, யூத கிறிஸ்தவர்களின் மூதாதையான நபி இஷ்ஹாக்(அலை)கைக் கொண்டு நன்மாராயம் கூறியுள்ளான்.
தமக்கு ஒரே ஒரு மகன் தானே இருக்கிறான். அதுவும் நீண்ட நாட்கள் அழுது மன்றாடி அல்லாஹ் விடம் பிரார்த்தித்து பெற்ற மகனல்லவா? அவனை எப்படி இழப்பது என்று இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் யோசிக்கவில்லை; தயங்கவில்லை; அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய முற்படவில்லை. உடனே அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுகிறார்கள். அதனால் அல்லாஹ் வின் பொருத்தம் கிடைத்ததோடு இன்னொரு மகன் இஷ்ஹாக்(அலை)கையும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்துள்ளான். அவர்களின் அழகிய நடைமுறைகளை இறுதி நாள் வரை முஸ்லிம்கள் கடைபிடிக்கக் கட்டளை இட்டுள்ளான். அவர்களின் தியாக உள்ளத்தை வருடா வருடம் நினைவு கூற முஸ்லிம்களுக்குக் கட்டளை பிறப்பித்துள் ளான் அல்லாஹ்.
இன்று முஸ்லிம்கள் நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் இந்தத்தியாகச் செயலிலிருந்து பாடம் படிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அல்லாஹ்வின், மிகக் கடினமான, மனம் சிறிதும் விரும்பாத, நஃப்ஸுக்கு எதிரான அந்தக் கட்டளையை, நபி இப்ராஹீம்(அலை) மனமுவந்து நிறைவேற்றத் துணிந்து, அதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தமும் இரு மடங்கு ஆதாயமும் பெற்றார்கள். அது போல் முஸ்லிம்கள் தங்கள் நஃப்ஸுக்கு எதிரான காரியங்களாக இருந்தாலும் அல்லாஹ்வின் கட்ட ளைகளை மனமுவந்து நிறைவேறற முன்வரவேண்டும். 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 இறைவனது கட்டளைகளை உடனடியாக ஏற்று சகல மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம், குழு போன்ற பிரிவுகளிலிருந்து விடுபட்டு ஓரணியில் ஒரே தலை மையில் ஒன்றுபட வேண்டும். அல்லாஹ்வின் 22:78, 41:33 இறைக்கட்டளைகளின்படி தங்களை “”முஸ்லிம்கள்” என்று மட்டுமே அழைத்துக் கொள்ள முன்வரவேண்டும். பிரிவுகள் எவ்வளவு தான் தங்களின் மனதிற்குப் பிரியமாக இருந்தாலும், உள்ளம் நேசித்தாலும், அவை கொண்டு உலகில் உல்லாச வாழ்க்கையும், கோடி கோடியாக பணமும் கிடைத்தாலும் அவை அனைத்தையும் தியாகம் செய்து உதறித்தள்ள முன்வரவேண்டும். இதுவே உண்மையான விசுவாசத்தின் அடை யாளமாகும். அப்படி தியாகம் செய்வது, இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத் தோடு ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை என்பதையும் உணர வேண்டும். அப்படி தியாகம் செய்ய முன் வந்தால் முஸ்லிம்கள் இரட்டிப்பு ஆதாயம் அடையவார்கள்.
அதுபோலவே குர்ஆன், ஹதீதுக்கு முரணாக, சட்ட விரோதமாக, இஸ்லாத்தில் நுழைந்துள்ள புரோகிதர்கள் தங்களின் புரோகிதத் தொழிலைத் தியாகம் செய்ய முன்வரவேண்டும். நபி(ஸல்) அவர்களது காலத்திலோ, நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துச் சொன்ன அதற்கடுத்த மூன்று தலைமுறைகளிலோ புரோகிதர்கள் யாருமே இருக்கவில்லை. தொண்டைத் தொழிலாக்கித் தொப்பையை நிரப்பும் மிக, மிக அசிங்கமான செயல் யாரும் செய்த தாக வரலாறு இல்லை. ஏன்? இந்தப் புரோகிதர்கள் ஏற்றிப் போற்றும், நல்லடியார்கள், அவுலியா அல் லாக்கள் என்று சொல்லும் நான்கு இமாம்களில் யாருமே மார்க்கப் பணியை தங்களின் பிழைப்புக் குரிய வழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. சொந்த மாக தொழில், வியாபாரம் என ஈடுபட்டு கை நிறைய சம்பாதித்து, பிறருக்கும் தாராளமாகக் கொடுத்தும், தங்கள் பெண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்ததாகத்தான் வரலாறு இருக்கிறது. அதனால் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அபிவிருத்தி (பரக்கத்) இருந்தது.
தொண்டைத் தொழிலாக்கி, தொப்பையை நிரப்பும் மிக மிக அசிங்கமான, மிக மிக அநாகரீக மான கேடுகெட்ட பழக்கம் மத்ஹபுகள், தரீக்காக்கள் தோன்றிய பின்னரே ஏற்பட்டுள்ளது. இன்று மத்ஹபு, தர்கா, தரீக்கா, இயக்கம், கழகம் குழு என பிரிவுகளை உண்டாக்கி ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் அழுத்தமாகச் சொல்லும் முஸ்லிம் சமு தாயத்தைப் பிரித்துத் துண்டாடி ஏமாற்றிப் பிழைக்கும் புரோகிதர்களே, தொண்டை தொழிலாக்கித் தொப்பையை நிரப்பும் அசிங்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர். எப்பொழுது இந்தப் புரோகிதர்கள் இஸ்லாத்தின் கொல்லைப்புற இடுக்கு வழி யாக நுழைந்தனரோ அன்று ஏற்பட்டதுதான் முஸ்லிம்களின் வீழ்ச்சிப் படகம்; அது தொடர்ந்து இன்று வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள். இன்று முஸ்லிம்களை விட எள்ளி நகையாடப்படும் ஒரு சமுதாயம், இழிவையும், கேவலத்தையும், துன்பம் துயரங்களை ஒட்டு மொத்தமாகவும் அனுபவிக்கும் வேறு ஒரு சமுதாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்று வானத்தின் கீழ் வாழும் சமுதாயங்களில் அல்லாஹ்வின் வெறுப்புக்கு அதிகமாக ஆளாகி நிற்கும் சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். காரணம் மற்ற சமுதாயங்களை வழி நடத்திச் செல்லும். நாளை மறுமையில் சாட்சி சொல்லும் சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். மேலும் வேறு சமுதாயங்களுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டலான தூய்மையான நெறிநூல்கள் இல்லை. மற்ற அனைத்து சமுதாயங்களின் நெறி நூல்களும் மனிதக் கரங்களால் மாசுபட்டு, அவற் றின் தூய்மையை இழந்துவிட்டன. இறைவன் இறக்கியருளிய அதே தூய்மையான நிலையில் நிலைத்து இருப்பது அல்குர்ஆன் மட்டுமே. அந்த குர்ஆனை தங்களின் இறைநூலாக ஒப்புக்கொண்டுள்ள முஸ்லிம்கள், அதன்படி நடக்காமல், இந்தப் புரோகிதர்களின் கற்பனைகளையும், கட்டுக் கதைகளையும், சுயபுராணங்களையும் எடுத்து நடப் பதே இறைவனின் கோபத்திற்குரிய முக்கிய காரணமாகும்.
எனவே முஸ்லிம்கள் புரோகிதர்களைப் புறக்கணிக்கவேண்டும். அல்குர்ஆனை நேரடியாகப் பார்த்து, சிந்தித்து, விளங்கி அதன்படி நடக்க முன்வர வேண்டும். புரோகித முல்லாக்களும், தொண்டைத் தொழிலாக்கித் தொப்பையை நிரப்பும் இந்த இழிசெயலை விட்டு நீங்கி, சுயமாக உழைத்துச் சாப்பிடுவதுடன், அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நாடி, அல்குர்ஆனில் உள் ளதை உள்ளபடி, எவ்வித கூடுதல், குறைவு இன்றி, ஒளிவு மறைவின்றி எடுத்துச் சொல்ல முன்வர வேண்டும். இது அவர்களின் நஃப்ல் விரும்பாத ஒரு செயல்தான். கடினமான ஒரு செயல்தான்.
ஆயினும் இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நெடுங் காலம் பிள்ளை இல்லாமல் ஏங்கி, பலமுறை அடுத்தடுத்து பிரார்த்தித்துப் பெற்ற அருமந்த பிள்ளை இஸ்மாயீல்(அலை) அவர்கள் அறுக்கத் துணிந்த அந்தத் தியாகச் செயலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிகச் சாதாரண செயலே.
இந்தத் தியாகத் திருநாள் தினத்தில் முஸ்லிம்களும், புரோகித முல்லாக்களும் தங்களின் நஃப் ஸுடைய போராட்டத்தை எதிர்த்து இந்தத் தியாகங்களைச் செய்ய முன் வருவார்களா? பொறுத்தி ருந்து பார்ப்போம்.
முஸ்லிம்களும், புரோகித முல்லாக்களும் அல்குர்ஆனின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிவது சாத்தியமில்லை; முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவதும் சாத்தியமில்லை என்பது அறிவு ஜீவி களின் தீர்வாக இருந்தால், அல்லாஹ் முஸ்லிம்களைப் பொருந்திக் கொள்வதும் சாத்தியமில்லை; அவர்களுடைய இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் நீங்குவதும் சாத்தியமில்லை. அவர்கள் இழந்து விட்ட பழம் பெருமைகளை மீண்டும் அடைவதும் சாத்தியமில்லை என்பதோடு, இவ்வுலகில் மட்டுமில்லை, மறுமையிலும் மகத்தான வேதனையும் துன்பங்களும், துயரங்களுமே தொடரும் என்பதையும் உணர்வார்களாக, முஸ்லிம் சமுதாய ஒற்றுமைக்கு அல்லாஹ் அல்குர்ஆனில் காட்டிய இந்த வழிகள் சாத்தியமில்லை என்று கூறிவிட்டு, முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக இவர்களாக தவ்ஹீத் ஜமாஅத்துகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு என்றோ, பல கட்சிகள் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டு இஸ்லாத்தின் பெயரால் கூட்டணி என்றோ, இவர் கள் சுயமாக திட்டம் தீட்டி அதன்படி நடக்க முற் படுவது, அல்லாஹ்வின் கோபத்தை மேலும் அதி கரிக்கவே செய்யும். 8:31, 42:21 இறைக்கட்டளைப் படி குற்றமாகும். உண்மையான இறைவிசுவாசிகள் அல்லாஹ்வின் கட்டளைகள் நடைமுறை சாத்தியமில்லை என்று அவர்களின் அறிவு சொன்னாலும், தங்களின் நஃப்சுக்கு மாறாக, அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றவே முற்படுவர். அந்த சின்னஞ்சிறிய கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் இன்றைய முஸ்லிம்களை இணைத் தருள்வானாக.