ஐயமும்! தெளிவும்!!

in 2026 மே

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : ஒரு குடும்பத்திற்கு எத்தனை குர்பானி ஆடுகள் கொடுக்கலாம்?

ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்காகவும் தனித்தனியாக ஒவ்வொரு ஆட்டைக் குர்பானி கொடுக்க வேண்டுமா? அல்லது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்காக வும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்தால்  போதுமானதா?

ஆடுகளைக்  குர்பானி  கொடுப்பது :

தெளிவு : “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது? என்று அபூ அய்யூப் (ரழி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள்ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டதுஎன்று கூறினார்கள். அறிவிப்பவர்: அதா இப்னு யஸார், நூல்கள்: திர்மிதீ, இப்னு மாஜா 3147, தப்ரானீ.

மேற்கண்ட ஹதீதின் அடிப்படையில், ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்தினர்களுக்காக வும் ஒரு ஆட்டைக் குர்பானிக் கொடுத்தால் போதுமானது. 

அதே சமயம் அவர் விரும்பினால் எத்தனை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம். அதற்கு இஸ்லாத்தில் தடை ஏதுமில்லை! 

அலீ(ரழி) அறிவித்தார் :

நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார் கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட் டேன்.”              ஆதாரம் : புகாரி 1718

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் விளங்குவது  என்னவென்றால்,

1. ஒருவர் தனக்காகவும் மற்றும் தனது குடும்பத்தினர்களுக்காகவும் ஒரு ஆட்டையோ அல்லது மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.

2. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு வருக்காகவும் தனித்தனியாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுக்கவேண்டும் என்ற அவசிய மில்லை.

3. மாடு அல்லது ஒட்டகமாக இருந்தால் ஏழு குடும்பங்கள் கூட்டுச் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஒரு ஒட்டகத்தையோ குர் பானி  கொடுக் கலாம்.

மாடு அல்லது ஒட்டகத்தில் கூட்டுக் குர்பானி :

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக்  குர்பானி  கொடுக்கலாம்.

ஜாபிர்(ரழி)  அவர்கள்  கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து கொள்ளுமாறுஎங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.”  (முஸ்லிம் 2538)

ஜபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் கூறிய தாவது:

நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட் டோம்.”  (முஸ்லிம் 2537)

ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டு சேர போதுமானதாகும்)” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்பின் அப்துல்லாஹ்(ரழி), ஆதாரம்: அபூதாவூத் 2425

எனவே மேல் கூறப்பட்டுள்ள ஹதீத்களின் அடிப்படையில், மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம். ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

மேற்கண்ட ஹதீத்களிலிருந்து பெறும் தெளிவுகள்:

1. ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுக்கலாம்.

2. ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர் கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்ட கம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.

Previous post:

Next post: