ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்… எஸ்.எம்.அமீர், இலங்கை
ஏப்ரல் 2026 தொடர்ச்சி…
ஒருமுறைநீதிபதிஷிரைஹ்பின்அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடம் இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ் அந்த வெட்டுக் கிளியை இழிவாக்குவானாக; அதில் வலிமை மிக்க ஏழு வகைப் பிராணிகளின் உருவ அமைப்பு உள்ளது. அதன் தலை குதிரையின் தலையாகும். அதன் கழுத்து காளையின் கழுத் தாகும். அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும். அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும். அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும். அதன் வால் பாம்பின் வாலாகும் அதன் வயிறு தேளின் வயிறாகும் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் பயிர் வகைகளை நாசமாக்கும் வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பிரார்த்தனை புரியும்போது; “”இறைவா! இந்த வெட்டுக்கிளிகளில் பெரியவற்றை அழிப் பாயாக. அவற்றில் சிறியவற்றைக் கொல்வா யாக. அதன் முட்டைகளைப் பாழாக்குவா யாக; அவற்றை அடியோடு ஒழிப்பாயாக; எங்களுடைய வாழ்வாதாரங்களிலும், உணவா தாரங்களிலும் சேதம் விளைவிக்க விடாமல் அவற்றின் வாய்களைக் கட்டுவாயாக; நீ பிரார்த்தனையைச் செவியுறுபவன் ஆவாய் என்று கூறுவார்கள். ஃபிர்அவ்னுடைய சமூகத் தவர்கள் மீது அல்லாஹ் வெட்டுக்கிளிகளை அனுப்பி ஆரம்பமாக அவற்றைப் புற்பூண்டு களின் மீது ஏவிவிட்டான். அவை தானியங் களை அழிக்கலாயின. (ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி), அனஸ் பின் மாலிக்(ரழி), ஹா´ம் பின் அல் காசிம்(ரஹ்), ஸியாத் பின் அப்தில்லாஹ்(ரஹ்), திர்மிதி, இப்னு மாஜா, அபீ(ரஹ்) தஹ்தீபுல் கமால், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் : 870-875, 877)
தவளைகள் :
ஒருநாள்மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ் னுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது தவளை ஒன்றின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப் போது ஃபிர்அவ்னிடம் மூஸா(அலை) அவர் கள் நீயும் உனது சமுதாயத்தவர்களும் இந்தத் தவளைகள் மூலம் சந்திக்கவிருக்கும் பிரச் சனை என்னவென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு ஃபிர் அவ்ன் இது அப்படி என்ன பெரிய அளவில் சூழ்ச்சி செய்துவிடப் போகிறது என்று ஏளனமாகக் கூறினான். அன்றைய தினம் பொழுது சாய வில்லை. அதற்குள் தவளைகள் ஏராளமாகப் படையயடுத்தன. அவை அவர்களின் இல்லங்களிலும், உணவுப் பொருட்களிலும், பாத்திரங்களிலும், நிரம்பி வழிந்தன. அவர் களில் ஒருவர் தமது ஆசையோ, உணவுப் பொருளையோ திறந்து பார்த்தால் அது தவளை மயமாகவே காட்சி தந்தது. இறுதியில் அவர்களில் ஒருவர் மீது அவரது தொண்டைக் குழி வரை தவளைகள் அமர்ந்திருந்தன. அவர் பேசலாம் என்று நினைத்து வாயைத் திறப் பார். உடனே தவளை அவரது வாய்க்குள் துள் ளிக் குதித்துவிடும். (7:133) மேலும் இது குறித்து பைபிளில்,
“”நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக் கும்” அவை உன் வீட்டிலும், உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின் மேலும் உன் ஊழியர்கள் வீடுகளிலும் உன் ஜனங்களிடத் திலும் உன் அடுப்புகளிலும் மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும். விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம் (8:3) தஃப்ஸீர் தபரீ, தாரீ குத் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் : 875-878)என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளன;
இரத்தம் :
அவர்கள்மீதுஅல்லாஹ்இரத்தத்தைஅனுப்பினான். அதையடுத்து குளங்கள், ஆறு கள், கிணறுகள், குட்டைகள் முதலியவற்றிலி ருந்து அவர்கள் நீரை அள்ளினாலும், தமது தோல் பைகளிலிருந்து நீரை ஊற்றினாலும், அதைப் புத்தம் புதிய இரத்தமாகவே காண் பார்கள். ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தாரின் நீராதாரங்கள், யாவும் இரத்தக் கடலாயின. (7:33) இப்னு அப்பாஸ்(ரழி), சுத்தீ(ரஹ்), கத்தாதா(ரஹ்) தஃப்ஸீர் தபரீ, தாரீகுத் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 876-878)
பஞ்சம் :
ஃபிர்அவ்னின்சமுதாயத்தவர்கள்படிப்பினைபெறுவதற்காக, அவர்களைப் பஞ்சத் தாலும் கனி வகைகளின் சேதத்தாலும் நாம் தண்டித்தோம். (7:130) அதாவது; விளைச்சல் களைக் குறைத்தும், கனி வகைகளின் சேதத்தை ஏற்படுத்தியும், பல ஆண்டுகள் பட்டினியைக் கொடுத்தும், அவர்களை நாம் சோதித்தோம். இதனால், ஒரு போகத்திற்கு ஒரு பேரீச்சை மரத்தில் ஒரேயயாரு பேரீச்சம் பழம் மட்டுமே விளைந்திருக்கும் காலமாக அது இருந்தது. (ரஜாஉ பின் ஹைவா (ரஹ்) தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 867, 868)
இதுபோன்ற கடுமையான பஞ்சத்தையும் அவர்கள் தமது கண்களால் பார்த்தார்கள். ஆனாலும் அவர்களது கண்களும் பொய்தான் சொன்னது :
1. கைத்தடி, 2. பிரகாசிக்கும் கை, 3. பஞ்சம் நிறைந்த ஆண்டுகள், 4. கடல் பிளவு, 5. தேசமெங்கும் ஊர்ந்த வண்டுகள், 6. ஆடு, மாடுகளைச் சாகடித்த கொள்ளை நோய், 7. மனிதர்களைக் கொன்றொழித்த பெரு நோய், 8. கல் மழை, 9. பயிர்களை நாசமாக்கிய வெட்டுக் கிளிகள், (விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம், அத்தியாயம் : 7:10)
ஆகியஒன்பதுஅற்புதமானசான்றுகளைஅவர்களிடம் (17:101, 7:130,133) ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறுபட்ட வகையிலமைந்த சான்றுகளாகத் தொடர்ச்சியாக அல்லாஹ் அனுப்பிய போதிலும், அவற்றின் மூலமாகக் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதிலும், அவை அனைத்தையும் அவர்களுடைய “”கண் களால்” பார்த்தபோதிலும், இவை அல்லாஹ் விடமிருந்து வந்த உண்மைதான் என்பதை அவர்கள் மனதளவில் நன்றாக அறிந்திருந்தும், அவர்கள் தமது எல்லை மீறிய ஆணவத்தாலும், இறை மறுப்பாலும், எல்லை மீறலாலும், பிடி வாதத்தாலும் வேண்டுமென்றே விதண்டா வாதம் புரிந்தனர். சத்தியத்தை ஏற்க மறுத்து, இவை அனைத்தும் தெளிவான சூனியமே என்றனர். (28:36, 27:13, இப்னு அப்பாஸ் (ரழி), முஜாஹித்(ரஹ்), ளஹ்ஹாக் பின் முஸாஹிம் (ரஹ்), முஹம்மத் பின் கஅப்(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்), ரஜாஉ பின் ஹைவா(ரஹ்), தஃப் ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 355-361, பாகம் 3, பக்கம் 867-878, பாகம் 6, பக்கம் 645-651, 778-780) அவர்களுடைய கண்களும் பொய்தான் சொன்னது மீண்டும், மீண்டும்.
கொடியவனான ஃபிர்அவ்னுடையதும், அவனது படை பட்டாளத்தினருடையதும், “”கண்கள் பொய்தான் சொன்னது :
மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்து, பின்னர் நாம் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையி லேயே ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை மூழ் கடித்தோம் என்பதையும் (நினைவு கூறுங்கள்)
(2:50)
மேலும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தி னரை நாம்(தண்ணீரில்) மூழ்கடித்துவிட் டோம். இவர்கள் ஒவ்வொருவருமே அநியா யக்காரர்களாக இருந்தனர். (8:54)
ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கி (அவற்றைப் பொருட்படுத்தாது) மறதியாளர்களாகவும், அவர்கள் இருந்ததன் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம். (அப்போது) அவர்களைக் கடலில் மூழ்கடித்தும் விட்டோம். (7:136)
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம். அப்போது ஃபிர் அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண் டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறை வன் இல்லையயன்று நானும் ஈமான் கொள் கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். (10:90)
அன்றியும்அக்கடலைப்பிளவுள்ளதாகவேவிட்டுச்செல்லும். நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையி னராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையின ரையும் மூழ்கடித்தான்) (44:24)
மேலும்ஃபிர்அவ்ன்தன்சேனைகளுடன்அவர்களைப்பின்தொடர்ந்தான். ஆனால் கடல் அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது. (அல்குர்ஆன் 20:78) எவ்வாறெனில்,
இறைத்தூதர்மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு முன்னால் கடற்கரையில் நிற்க அவர்களுக்குப் பின்னே கொடியவனான ஃபிர்அவ்ன் தனது படை பட்டாளங்களுடன் நின்றிருந்தான். அப்போது மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் “”அவர்களுக்காகக் கடலில் (கைத்தடியால் அடித்து) உலர்ந்த பாதையை அமைப்பீராக! (20:77) என்று அறிவித்தான்.
வரலாற்றாசிரியரானமுஹம்மத்பின்இஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் அந்தக் கடலிடம் “”மூஸா உம்மைக் கைத்தடி யால் அடிக்கும்போது அவருக்காகப் பிளந்து வழிவிட வேண்டும் என்று ஏற்கனவே அறிவித் திருந்தான். எனவே உயர்ந்தோன் அல்லாஹ்வை அஞ்சியும் அவனது உத்தரவை எதிர்பார்த்தும் அன்று இரவு முழுவதும் கடல் கொந்தளிப்பா கவே இருந்தது.
அதற்கேற்பமூஸா(அலை) அவர்கள் தமது கைத்தடியால் கடலில் அடித்ததும் கடல் பிளந் தது. அதன் ஒவ்வொரு பிளவும் ஒரு பெரிய மலையைப் போன்று இரு மருங்கிலுமாக உயர்ந்து நின்றது. இரு மலைகளுக்கு இடையே உள்ள பகுதி திடமான பாதை போன்று ஆனது.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)