சிலந்தி வீடு!

in 2026 மே

சையத் முபாரக், நாகை

சிலந்தி வீடு என்பது சிலந்தி கட்டுகின்ற வலை என்பது அனைவருக்கும் தெரியும். சிலந்தி தன் வீட்டை எப்படிக் கட்டுகிறது? பெண் சிலந்தி தன் உடலில் இருந்து சுரக்கும் திரவத்தைக் கொண்டு வலையைப் பின்னு கிறது. இத்திரவம் காற்றுடன் வேதிவினை புரிந்து இழையாக (நூலாக) மாறுகிறது. அந்த நூலை வட்ட வடிவில் தேவையான அளவில் சிலந்தி வலையாகப் பின்னுகிறது. சிலந்திக்கு இது வீடாகவும், இரையைப் பிடிக்கும் கருவி யாகவும் பயன்படுகிறது.

சிலந்தி தன் உடலில் சுரக்கும் திரவத்தைக் கொண்டு வீடு கட்டுவதைப் போன்றுதான் மனிதன் தன் கற்பனையில் உதித்ததில், இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்தில், தனக்கு பயத்தை ஏற்படுத்தியதில் இருந்து தெய்வங்களைச் சித்தரித்து, அவைகளை வடிவமைத்து, அவைகளை வழிபடத் துவங்கி னான்.

இவையயல்லாம் வெறும் பெயர்கள். நீங் களும் உங்கள் பாட்டன் பூட்டன்களும் தாமாக வைத்துக் கொண்டவை! இது வி­யத் தில் எந்தவோர் அறிவாதாரத்தையும் அல்லாஹ் அருளவே இல்லை. வெற்று யூகங் களையும் மனோ இச்சைகளையும்தான் பின் பற்றுகிறார்கள். உண்மையில் உங்கள் இறை வனிடமிருந்து தெளிவான வழிகாட்டுதல் வந்தே விட்டிருந்தது.       (அல்குர்ஆன் 53:23)

உங்களால் வணங்கப்படும் தெய்வங்களை நீங்கள் படைத்தீர்களா? அல்லது அவைகள் உங்களைப் படைத்ததா?

ஒரு பொருளைக் கூட படைக்க இயலா ததை, படைக்கப்பட்ட பொருளாக உள்ள தையா இறைவனுக்கு இணையாகக் கருதுகிறீர்கள்?    (அல்குர்ஆன் 7:191)

நீங்கள் வணங்கும்  தெய்வங்கள் இறை வன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? 

இறைவனல்லாதவற்றிற்கு இறைமையை வழங்கி அடிபணிந்து வந்தோர் சொல்வார்கள். “”அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களோ எங்கள் மூதாதையரோ அவனுக்கு இணையாக இன் னொன்றை கருதியிருக்க மாட்டோம் அல் லவா? எந்த ஒரு பொருளையும் தடை செய்து கொண்டிருக்க மாட்டோம் அல்லவா? இவர் களுக்கு முன்பிருந்தார்களே அவர்களும் இப்ப டித்தான் பொய்ப்பித்தார்கள். கடைசியில் நமது வேதனையை அனுபவிக்க நேர்ந்தது. உங்களிடம் இதற்கான ஆதாரம் ஏதாவது உள் ளதா? இருந்தால் கொண்டு வந்து காட்டுங்க ளேன் என அவர்களிடம் கேளுங்கள். வெற்று யூகத்தையே பின்பற்றி குருட்டாம் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்  அவர்கள்.  (அல்குர்ஆன் 6:148)

நன்மை தீமைகளை  செய்ய படைக்கப்பட்ட தெய்வங்களால்  முடியுமா?

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு நன்மையையோ தீமையையோ செய்ய  முடியாதவற் றிற்கா  அடிபணிகிறீர்கள்? (அல்குர்ஆன் 5:76)

(மேலும் பார்க்க : 10:106)

சிலந்தி எப்படி தான் கட்டிய வீடே  தனக்கு பாதுகாப்பைத் தரும் என்று எண்ணு கிறதோ அதுபோலவே மனிதன் தான் செய்த தெய்வங்கள் தனக்குப் பாதுகாப்பாக இருக் கும் என்று நினைக்கிறான். நல்லடியார்கள் பாதுகாப்பார்கள் என்றும் நினைக்கிறான். ஆனால் சிலந்தி வலை எவ்வளவு பலவீனமாக இருக்கிறதோ அப்படித்தான் மனிதன் படைத்த தெய்வங்களும் பலவீனமாக இருக் கின்றன. நம்மால் “”இவர்கள் அவ்லியாக்கள்என்று பட்டம் கொடுக்கப்பட்டவர்களின்  நிலையும்  இதுதான்.

அல்லாஹ்வையன்றி மற்றவர்களை நமக் குப் பாதுகாவலராக எடுத்துக் கொள்பவர் களுக்கு உவமை சிலந்திப் பூச்சியைப் போன்ற தாகும். அது  தன்னைச் சுற்றி வலை பிண்ணிக் கொள்கிறது. வீடுகளில் மிக பலவீனமான வீடு சிலந்தியின் வீடாகும். அவர்கள் (எனக்கு இணையாக எடுத்துக் கொண்டவற்றின் நிலை யும் இதுதான் என்பதை) அறிய வேண்டுமே!  (அல்குர்ஆன் 29:41)

சிலந்தி வலை அழகாக இருப்பதைப் போல மற்றவர்களை வணங்குபவர்களின் செயல்களும், நிராகரிப்பவரின் செயல்களும் அவர்களுக்கு அழகாக, நல்லதாக தெரிகிறது.

உயிரற்ற ஒருவனுக்கு நாம் உயிர் தந்தோம். மேலும் அவனுக்கு, மக்களுக்கு முன் நடந்து செல்ல (கண்) ஒளியையும் தந்தோம். (இந் நிலையிலுள்ள) அவன் வெளியேற முடியாத இருள்களில் சிக்கித் தவிப்பவனைப் போன்று ஆவானா?  இவ்வாறு இறை மறுப்பாளர் களுக்கு அவர்கள் செய்து வருவதைக் கவர்ச்சி யாகக் காட்டப்படுகிறது.  (அல்குர்ஆன் 6:122)

ஐந்து தூண்களில் அமைக்கப்பட்ட இஸ்லாம் எனும் மாளிகை மிகவும் பலமானது. அதில் ஈமான் பலவீனமடைந்துவிட்டால் அது சிலந்தியின் வீட்டை விட மிகவும் பலவீன மாகிவிடும். 

நம்மைப் படைத்த அல்லாஹ்வைத் தவிர, படைக்கப்பட்ட தெய்வங்களை வணங்கி னாலும், நல்லடியார்களைப் பாதுகாவலர் களாக எடுத்துக் கொண்டாலும் அவர்களால் எந்த  பயனும்  கிடையாது.

என்னை விட்டுவிட்டு எனது அடியார் களை தோழர்களாக்கிக் கொள்ளலாம் என இந்த நிராகரிப்பாளர்கள் எண்ணியிருந்தார் களா? நரகத்தைத்தான் விருந்து உபகாரமாக ஆக்கி வைத்திருக்கிறோம். இந்த நிராகரிப் பாளர்களுக்கு! (அல்குர்ஆன் 18:102)

மேலும் பார்க்க : 9:31, 13:14, 16,  24:39, 39:38.

ஆகவே, நாம் சிலந்தி வீடு போன்ற பலவீனமாக இல்லாமல் ஏகத்துவத்தில் முழு நம்பிக்கைக் கொண்டு, அதில் உறுதியாக இருந்து அனைத்துக் கடமைகளையும் செய்து முஸ்லிமாக  வாழ்வோம்.

அல்லாஹ்விற்கு  பயப்படுகிறவர்களோ, அவர்களுக்கு ஏதேனும் ஒரு வழியை காண் பித்தே தீருவான். அறியாப் புறத்திலிருந்து அள வின்றி அளிக்கவும் செய்வான். அல்லாஹ்வை சார்ந்திருப்பவர்களுக்கு அவனே போதுமான வனாகிவிடுகிறான். தான் நினைத்ததை முடிப் பவன் அல்லாஹ்! எல்லாவற்றிற்கும் அவன் ஒரு கெடுவை நிர்ணயித்தே வைத்துள்ளான்.”  (அல்குர்ஆன் 65:2,3)

முஸ்லிமாக வாழ்ந்து வெற்றி பெற அல்லாஹ் அருள்புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்

Previous post:

Next post: