மோஸஸ் எனும் மூஸா (அலை) வரலாறு…

in 2026 மே

மோஸஸ் எனும் மூஸா (அலை) வரலாறு

S.H. அப்துர் ரஹ்மான்

மார்ச்  மாத  தொடர்ச்சி……

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்அந்த (ஒரே) இறைவன் பெயரால்….

இறை நூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறை நூலில் பல இடங்களில் விரிவாக வருகிறது.

மூஸா(அலை) அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்றபோது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக்கூடும்என்று கூறினார்.

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார். “உங்களிருவரின் விசயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார். அதற்கு, “இம் மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிவிட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்டமுடியாது. மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்என்று அவ்விருவரும் கூறினார்கள். 

ஆகையால்  அவ்விருவருக்குமாக அவர்களின் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டினார், பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக  இருக்கின்றேன்  என்று  கூறினார்.

(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு  வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்என்று கூறினார்.

அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயம் இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்!”

(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்; “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன். ஆயினும், நீர் பத்து(ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்”.

(அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்) இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொள்வதற்கு அந்த இறைவனே சாட்சியாக இருக்கிறான்.

ஆகவே மூஸா(அலை) தம் தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார். அவர் தம் குடும்பத்தாரிடம்நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள். நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்என்று  கூறினர்.

அவர் நெருப்பின் அருகே வந்தபோது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்துமூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இரட்சகனாகிய அந்த இறைவன்  என்று  கூப்பிடப்பட்டார்.

உம் கைத்தடியைக் கீழே எறியும்என்றும் (கட்டளையிடப்பட்டார்) அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின்வாங்கி ஓடினார்; (அப்பொழுது); “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”

உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளிமிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படும் போது உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்  (என்றும்  அவருக்கு  கூறப்பட்டது)

(அதற்கு அவர்); “என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்  என்று  கூறினார்.

இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் அவர் என்னை விட பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் உண்மைப்படுத்துவார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்)

(இறைவன்) கூறினான்; “நாம் உம் கைகளை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து  விடுவீர்கள்”.

ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்; “இது இட்டுக்கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லைஎன்று கூறினார்கள்.

(அப்போது மூஸா) கூறினார்: “அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்,  இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்”.

இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறொரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயை மூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்கவேண்டும். மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்என்றே  கருதுகின்றேன்.

மேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர். மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக் கொண்டு வரப்படமாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள். ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்துவிட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்.
(28:21-40)

இறைநூலில்  20வது  அத்தியாயத்தில் :

எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள். (அதற்கு இறைவன்) “நீங்களிருவரும் அஞ்சவேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கின்றேன்  என்று  கூறினான்.

ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று; “நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு; மேலும் அவர்களை வேதனைப்படுத்தாதே; திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும் எவர் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாகஎன்று சொல்லுங்கள்(என்று அல்லாஹ் கட்டளை யிட்டான்)

எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்) (இதற்கு ஃபிர்அவ்ன்) “”மூஸாவே! உங்களிரு வருடைய இறைவன் யார்?” என்று கேட்டான்.

ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன் தான் எங்கள் இறைவன்என்று கூறினார். “அப்படியயன்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?” என்று கேட்டான். “இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லைஎன்று (மூஸா பதில்) சொன்னார்.

“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம்மழைநீரைக் கொண்டு நாம் பலவிதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்)

“(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேயவிடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன”.

இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

நாம் நம்முடைய அத்தாட்சிகளை எல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையயல்லாம்) பொய் எனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டான். “(மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு; எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்.

அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப்பாட்டை (எல்லோரும் வந்து காணக்கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்)

யவ்முஜ் ஸீனத்” (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப் பெறும் ளுஹா (முற்பகல்) நேரமும் ஆக இருக்கட்டும்என்று மூஸா(அலை) சொன்னார்.   (20:45-59)

(இறைவன் நாடினால் தொடரும்…)

Previous post:

Next post: