வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?

in 2026 மே

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?

அபூ இஸ்ஸத், இலங்கை

ஏப்ரல்  2026  தொடர்ச்சி

இறை நிராகரிப்போருக்கு (நபி) நூஹுடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவி யையும் அல்லாஹ் கெட்ட உதாரணமாகக் கூறுகிறான்:

நிராகரிப்போருக்கு (நபி) நூஹுடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்கு (மனைவியராக) இருந்தனர். பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடியவில்லை. இவர்கள் துரோகம் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடிய வில்லை. இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களிடம்) நரக நெருப்பில் நுழைவோர் களுடன் நீங்களிருவரும் நுழைந்து கொள்ளுங்கள்என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன் : 66:10)

தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட கொடியோனான ஃபிர்அவ்னுடையதும், அவனது படை பட்டாளத்தினரும் :

மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்து, பின்னர் நாம் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை மூழ்கடித்தோம் என்பதையும் (நினைவு கூறுங்கள்)  (2:50)

ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும். அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள். ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம். இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் (தண்ணீரில்) மூழ்கடித்தோம். அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். (.கு.8:54)

ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கி (அவற்றைப் பொருட் படுத்தாது) மறதியாளர்களாகவும் அவர்கள் இருந்ததன் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம். (அப்போது) அவர்களைக் கடலில்  மூழ்கடித்தும்  விட்டோம்.     (7:136)

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம். அப்போது ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள் ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் கொள்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன் என்று கூறினான்.   (10:90)

அன்றியும், அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறிஇறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்) (44:24)

ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டி விட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் 17:103)

மேலும் ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். ஆனால் கடல் அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது. (அல்குர்ஆன் 20:78) எவ்வாறெனில்;

இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு முன்னால் கடற்கரையில் நிற்க அவர்களுக்குப் பின்னே கொடியவனான ஃபிர்அவ்ன் தனது படை பட்டாளங்களுடன் நின்றிருந்தான். அப்போது மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ், “அவர்களுக்காகக் கடலில் (கைத்தடியால் அடித்து) உலர்ந்த பாதையை அமைப்பீராக!” (20:77) என்று அறிவித்தான்.

வரலாற்றாசிரியரான முஹம்மத் பின் இஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ் அந்தக் கடலிடம்மூஸா உம்மைக் கைத்தடியால் அடிக்கும்போது அவருக்காகப் பிளந்து வழிவிட வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தான். எனவே உயர்ந்தோன் அல்லாஹ்வை அஞ்சியும் அவனது உத்தரவை எதிர்பார்த்தும் அன்று இரவு முழுவதும் கடல் கொந்தளிப்பாகவே  இருந்தது.

அதற்கேற்ப மூஸா(அலை) அவர்கள் தமது கைத்தடியால் கடலில் அடித்ததும் கடல் பிளந்தது. அதன் ஒவ்வொரு பிளவும் ஒரு பெரிய மலையைப் போன்று இரு மருங்கிலுமாக உயர்ந்து நின்றது. இரு மலைகளுக்கு இடையே உள்ள பகுதி திடமான பாதை போன்று ஆனது. இது போன்று இஸ்ரவேலர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு வழி என்ற வகையில் பன்னிரெண்டு வழிகளாகக் கடல் பிளந்தது. மேலும் அவர்கள் ஒருவரையயாருவர் பார்த்துக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு பிளவுக்கும் இடையே ஜன்னல்கள் இருந்தன. அதனைத் தொடர்ந்து கடலின் தரைப் பகுதிக்கு அல்லாஹ் சூடான, வெப்பக் காற்றை அனுப்பி வைத்தான். எனவே அது உலர்ந்து திடமாகி நிலப் பரப்பை  போன்று  மாறிவிட்டது.

இரவோடு இரவாக எகிப்திலிருந்து வெளியேறிய குழந்தைகள் நீங்கலாக ஆறு லட்சம் பேருக்கும் அதிகமான இஸ்ரவேலர்களின் படையணியின் முன்னணியில் இறைத்தூதர் ஹாரூன்(அலை) அவர்களும், அன்னாருடன் யூஷீஉ பின் நூன்(அலை) அவர்களும், ஃபிர்அவ்னின் சமூகத்தைச் சேர்ந்த இறை நம்பிக்கையாளர் ஒருவரும், நின்றிருக்க, இறைத் தூதர் மூஸா(அலை) அவர்களும் கடலைக் கடந்தனர். அவர்களின் அணியின் கடைசி ஆள் கடலிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஃபிர்அவ்னும் நூறாயிரம் பேர் கொண்ட அவனுடைய படையினரும் கரையின் மறு முனைக்கு வந்து சேர்ந்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி), ளஹ்ஹாக்(ரஹ்), கத்தாதா(ரஹ்), அதாஉ அல்குராசானீ(ரஹ்), சுத்தீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் : பக்கம் 556-561, பாகம் 5, 759-761, பாகம் : 6, பக்கம் 559-563)

அன்றியும், அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 44:24) என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ், இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். அதனால் தான் கடல் பிளவுபட்ட நிலையிலேயே உலர்ந்த பாதையாக இருக்க கடலினை மூஸா(அலை) அவர்கள் விட்டுச் சென்றார்கள். (இப்னு அப்பாஸ் (ரழி), முஜாஹித்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் : 8, பக்கம் 321-326)

கடல் பிளந்து கொண்ட கட்டாந்தரையின் தெருவினிலே கடந்து சென்ற இஸ்ரவேலர்களையும் இறைத்தூதர் மூஸா(அலை), ஹாரூன்(அலை) அவர்களையும், விசாலமான ஏழு பாதை களையும்கண்ணால்கண்ட ஃபிர்அவ்னும், அவனுடைய படையினரும், ஒருவர் விடாமல் எல்லோரும் கடலுக்குள் இறங்கினார்கள். அப்போது கடல் அவர்கள் அனைவரையும் மூடிக்கொண்டது அன்றைய தினத்தை விட அதிகமானதொரு பெரும் கூட்டம் ஒருபோதும் காணப்பட்டதேயில்லை. அவர்கள் அனைவரதுகண்களும்பொய்தான் சொன்னது. பிறகு அவர்களுக்காக வானமும் (அழவில்லை) பூமியும், அழவில்லை, சிறிது அவகாசம் கூட அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. (44:29,24, 20:78, 10:90, 2:50 இப்னு அப்பாஸ்(ரழி), அனஸ்(ரழி), யஸீத்பின் ஜுபைர்(ரழி), அலீ(ரழி), உப்பாதா பின் அப்தில்லாஹ்(ரஹ்), கத்தாதா(ரஹ்), முஜாஹித்(ரஹ்), இப்னு அபீஹாத்தம்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 321-331) இவ்வாறே,

எகிப்தின் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டுப் பின்னால் வருவோருக்குப் பெரும் படிப்பினைக் காகப் பாதுகாக்கப்பட்டுப் பாத்திரமாகக் கெய்ரோ நகர் அருங்காட்சியகத்தில் இன்றளவும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஃபிர்அவ்னின் இழிவடைந்த சடலம் (10:90-92, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 556-561) 

இஸ்ரவேலர்களில்  ஒருவரான :

சுற்றிவர அடர்ந்திருந்த பேரீச்சை மரங்கள் அவற்றுக்கிடையே அழகாக அமையப் பெற்று அதன் நாலா பாகங்களிலும் எல்லாத் திசைகளிலும் தொடர்ந்து குறைவின்றி மிகச் சிறந்த பயன்களை வாரி வழங்கித் தாராளமாக அள்ளித் தரும் மரங்கள், இனிய கனிகள், பலவிதமான செழிப்பான, பசுமையான, உணவு தானியப் பயிர்கள் அவற்றுக்கிடையே பல கிளைகளாகப் பிரிந்து இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருக்கும் அழகிய வற்றாத நதிகள் என பல சிறப்பான அம்சங்களைக் கொண்ட இரண்டு செழிப்பான திராட்சைத் தோட்டங்களைச் சொந்தமாகக் கொண்ட இஸ்ரவேலர்களில் ஒருவரான (18:32-44) அத்துடன், தங்கம், வெள்ளி போன்ற ஏனைய கனிமச் செல்வங்களும் கிடைக்கப் பெற்றவரான; (18:32-44, முஜாஹித்(ரஹ்) புகாரி 5, பக்கம் 414, 18:34 ஆவது வசனத்தின் விரிவுரை, அஜாயிபு கிர்மானீ, சுஹைலீ, தஃப்ஸீர், அல்குர்துபி, இப்னு கஸீர்: 5:431-443)

வசதியான பல பெண்களை மணமுடித்துத் தங்கம், வெள்ளி, இதர பொருட்கள் என அதீத செல்வச் செழிப்புடனும், சிறந்த வசதி வாய்ப்புடனும் சாமானியர்கள் எளிதில் சந்திக்க முடியாத அளவுக்குக் கடுமையான பாதுகாப்புக்கு அப்பால் வாழ்ந்த இஸ்ரவேலர்களில் ஒருவரான (18;32-44) அஜாயிபு கிர்மானீ, சுஹைலீ, தஃப்ஸீர்  அல்குர்துபி,  இப்னு  கஸீர்  5:431-443)

அவர் தமது தோட்டங்களில் நாலா பக்கங்களிலும் எல்லாத் திசைகளிலும் பயன்தரும் மரங்கள், இனிய கனிகள், உணவு தானியப் பயிர்கள் என சதா செழித்திருப்பதையும் அவற்றுக்கிடையே வற்றாது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் கால்வாய்களையும், நதி களையும்,  அலங்காரமாகக்  கண்ட  அவர்.

இவை ஒருபோதும் அழியாது; இவற்றுக்குச் சேதமோ முடிவோ கிடையாது என எண்ணி விட்டார்; அதனால், அவரது தோட்டத்தில் கூலி வேலை செய்து காலத்தைக் கழிக்க எண்ணி உதவி கேட்டுச் சென்ற முந்திய பங்காளி ஒருவரிடம்.

நீ மறுமையை நம்புகின்றாயா? நானெல்லாம் மறுமையை நம்பவில்லை. அது ஏற்படும் என்று எண்ணவே இல்லை. நீ ஒரு முட்டாள் உன்னுடைய முட்டாள்தனத்திற்கு நான் எனது தோட்டத்தில் வேலை தருவதாக இல்லை நான் எனது பங்குப் பணத்தை என்ன செய்தேன் எனப் பார்த்தாயா? இப்போது அது கொழுத்த செல்வமாக மாறியிருப்பதைப் பார்த்தாயா? ஆக நான் சம்பாதித்தேன். அதனால் உன்னைவிட அதிகமான செல்வமும் கூடுதலான ஆள் பலமும் ஏராளமான பணியாட்களும் ஊழியர்களும் உள்ளனர். எனக்கு அதிகமான பிள்ளைகளும்  இருக்கின்றார்கள். நீதான் உனது பங்கு பணத்தை அல்லாஹ்வுக்காகச் செலவு செய்து முட்டாளாகி விட்டாய். நீ வெளியே போ என்று கர்வத்தோடு கூறினான். (18:32-44, அஜாயிபு கிர்மானீ, சுஹைலீ, தஃப்ஸீர் அல்குர்துபி, இப்னு கஸீர் 5:431-443) மேலும்,

யுக முடிவு நாள் ஏற்படும் என நான் எண்ணவில்லை. நான் மீண்டும் எழுப்பப்பட்டு அல்லாஹ்விடம் கொண்டுசெல்லப்பட்டேன்  என்றாலும் அங்கும் கூட என் இறைவனிடம் இதைவிட அழகான நற்பேறுதான் கண்டிப்பாக எனக்குக் கிடைக்கும் அவனிடம் எனக்கு மதிப்பு இல்லையயன்றால், அவன் இவற்றை எல்லாம் எனக்கு இம்மையில் வழங்கியிருக்க மாட்டான் என்றார். (41:50, 19:77, 18:32-44) அஜாயிபு கிர்மானீ, சுஹைலீ, தஃப்ஸீர் அல்கர்துபி, இப்னு கஸீர் 5:431-443) அவர் அதீத பெருமையும், ஆணவமும் கொண்டவராக! வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை அலட்சியம் செய்தார் அந்தப் பாவத்தின் விலையாக;

அந்தச் செழிப்பான தோட்டத்தின் மீது பெரும் இடியுடன் கூடிய கனமழையை அல்லாஹ் அனுப்பி அதை அடியோடு இருந்த இடம் தெரியாமல் அழித்தான். அப்போது அது எதுவும் முளைக்காத, கால் வைத்தால் வழுக்கும் அளவுக்கு வெறும் கட்டாந்தரை போன்று மாறிவிட்டது. அப்போது அவர் அந்தத் தோட்டத்திற்காகத் தாம் அழித்த செலவினங்களை எண்ணித் துக்கப்பட்டவராகத் தமது கைகளைப் பிசைந்துகொண்டார். அந்தோ! நான் எனது இறைவனுக்கு யாரையும் இணை கற்பிக்காமல் இருந்திருக்க வேண்டுமே! என்று அழுது புலம்பினார். அப்போது அவருக்கு அல்லாஹ்வையன்றி உதவி செய்ய யாருமே இருக்க வில்லை. தாமே சமாளிக்கும் நிலையிலும் இல்லை. (18:32-44, இப்னு அப்பாஸ்(ரழி), ளஹ்ஹாக் (ரஹ்), கத்தாதா(ரஹ்), அஜாயிபு கிர்மானீ, சுஹைலீ, தஃப்ஸீர் அல்குர்துபி, இப்னு கஸீர் 5:431-443)

Previous post:

Next post: