இயக்க வெறியால் பிரசாரத்துக்கே தடை! K.M. அப்துல் ஹமீது மறுபதிப்பு : திருக்குர்ஆன் முக்காலத்தையும் உணர்த்தக் கூடிய இறுதி நெறிநூல். திருக்குர்ஆனையும், நபி வழியையும் அப்படியே ஏற்று நடக்கிறோம் என்று கூறும். நம் சகோதரர்கள் இயக்க விசயத்தில் மட்டும் நாம் பல வருடங்களாக எடுத்துக்காட்டும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைத் தூக்கி எரிந்துவிட்டு, இவ்வுலகில் ஆதாயத்(பணத்)தை பெறவே இயக்கங்களை நிலைநாட்டி வருகின்றனர். உலகத்தில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நாட்டுக்கு ஒரு அமைப்பு. மாநிலத்திற்கு ஒரு இயக்கம், மாவட்டத்திற்கு ஒரு மன்றம், […]
இயற்கையின் வண்ணங்களுக்கு உயிரூட்டும் மழை நீர்! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்… “நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றான். பிறகு, அதன்மூலம் பல நிறங்கள் கொண்ட விதவிதமான கனிகளை நாம் வெளிக் கொணர்கின்றோம். மலைகளிலும் கூட வெண்மை, சிவப்பு, அடர்ந்த கறுப்பு ஆகிய நிறக்கோடுகள் காணப்படுகின்றன. அல்குர்ஆன் : 35:27 வானத்திலிருந்து பொழியும் மழை நீரைக் கொண்டே பலவிதமான நிறங்களைக் கொண்ட பழங்களும், காய்கறிகளும் உருவாவதாக அல்லாஹ் கூறுகிறான். […]
ஜமாத்துல் முஸ்லிமீன்! எஸ். ஹலரத் அலி, திருச்சி. இன்று அந்த “ஜமாத்துல் முஸ்லிமீன்” இல்லை என்பதை காரணம் காட்டி, புகாரி 3606 ஹதீதின்படி முஸ்லிம்கள் தனித்தனியாக மரவேர்களை கடித்து தனித்திருப்பதா? அல்லது ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் முஹல்லா முஸ்லிம் ஜமாத்துடன் இணைந்து ஒன்றாக இருப்பதா? ஹதீத் எதைச் சொல்கிறது? பதில் : புகாரி 3606 ஹதீதில் குறிப்பிடப்பட்ட “ஜமாத்துல் முஸ்லிமீன்” என்பது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையையும், ஒரு சட்டப்பூர்வமான தலைமையின் கீழ் இயங்கும் சமுதாயத்தையும் குறிக்கிறது. […]
நல்லதொரு குடும்பம்! புலவர் செ.ஜாஃபர் அலி மறு பதிப்பு : மனிதர்களுள் பெரும்பாலோர், “அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று வாயளவிலேயே மொழிகின்றனர். அவர்களுடைய செயல்கள் இறை நம்பிக்கையையோ, இறையச்சத்தையோ பிரதிபலிப்பதில்லை. “இம்மை இன்பம்” ஒன்றையே கருத்தில் கொண்டு ஓடியாடி உழைத்து, பொருளீட்டி, மனைவி – மக்களை மகிழ்விப்பதிலும் தம் சுய தேவைகளை–சரீர இச்சைகளை திருப்தி செய்வதிலுமே அதிகமான காலத்தைச் செலவழிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், நம் சமுதாயத்தவர்களில் பலர் சோதிடத்தை நம்புவதிலும், இராகு காலம் –எமகண்டம் பார்ப்பதிலுமே நம்பிக்கை […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் கிடைக்கும் நன்மை என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? பாதிஇரவுவரைநின்றுதொழுதநன்மை. முஸ்லிம் : 1162 2. மூன்று குழந்தைகளை மரணத்தின் மூலம் இழந்த பெண்ணின் நிலை என்னவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? நரகிற்குசெல்லாமல்தடுக்கப்படுவார்கள். புகாரி : 101 3. அபூ சுஃயானின் வணிகக்குழு பற்றி அறிந்துவர உளவாளியாக நபி(ஸல்) அவர்கள் யாரை அனுப்பி வைத்தார்கள்? புசைசாபின்அம்ர்அல்அன்சாரீ(ரழி). முஸ்லிம் : 3858 4. ஹஜ் […]
நட்பும்…! நம்பிக்கையும்…!! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இவ்வுலகில் எந்தவொரு மனிதனும் தனித்தவனுமல்லன், அதுபோல் தனித்து தனியாக வாழ்ந்திட கூடியவனும் அல்லன். ஏன் என்றால்; வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பிற மனிதர்களைச் சார்ந்தே வாழ்பவனாகவே இருக்கின்றான், இருக்கின்றோம். அதாவது கணவன், மனைவி உறவு, உடன் பிறந்த சொந்தங்களின் உறவு, நண்பர்கள் உறவு, இன்னும் ஏனைய சில உறவுகளின் தொடர்புகளுடனும் வெவ்வேறு அடையாளங்களுடன் வாழ வேண்டியவனாகவே இருக்கின்றான். இதைப் பற்றி இறைவன் கூறியிருப்பதாவது: “அவனே(இறைவனே) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அம்மனிதனுக்குப் […]
AI – யா? AQ – வா? எது சிறந்தது? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இறைவனில் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி திறமையும் சில சிறப்புக்களும் உள்ளன. அதாவது வானம், பூமி, சூரியன், சந்திரன், கடல், காற்று, நெருப்பு, நீர், விலங்கினங்கள், பறவையினங்கள், மரம், செடி இன்னும் நாம் அறிந்தவைகள், அறியாதவைகள் என்னென்ன உள்ளனவோ அவை அனைத்துக்குமாகும். “அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்” என்று கூறுவீராக! அ.கு. 13:16 ஆனால் மேற்கண்ட […]
மனித நேயம் மலர! மத சின்னங்கள் புனிதமாகுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் “மத நல்லிணக்கம்” என்பது மிக முக்கிய மானதாகும். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் நம்பக்கூடிய மத வழிபாட்டுத் தளங்களை புனிதமாக நம்புகின்றனர், மதிக்கின்றனர். அதில் தவறு ஒன்றுமில்லை, அதுவே இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும்போது ஒருவர் மற்றவரின் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அதன் விளைவு புனிதமாக மதிக்கக்கூடிய சில வழிபாட்டு தளங்கள் அவ மதிக்கும்போது […]
கோட்டையில் இருக்கும் கோமாளிகள்….!!! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலக வல்லரசு நாடுகள் என கூறப்படும் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளாகட்டும், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடுகளாகட்டும், பிரிவினைப் பெற்று சுதந்திரம் அடைந்த நாடுகளாகட்டும், மற்றும் சிறு சிறு நாடுகள் முதல் ஏனைய உலகிலுள்ள நாடுகளாகட்டும் குடிமக்கள் பதிவேட்டை (ளீஷ்மிஷ்குeஐவிஜுஷ்ஸ்ரீ யூeஉலிrdவி)ஐ தயாரித்து தங்கள் நாட்டை சார்ந்தவர்கள் (குடிமகன்கள்) என்பதற்கான அடையாள அட்டையை வழங்குவது என்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு. அதன் அடிப்படையில் உலகிலுள்ள எல்லா […]
சுன்னாவின் அவசியம்! M. சையத் முபாரக், நாகை நாம் எப்படி வாழவேண்டும்? என்பதைக் கற்றுக்கொடுக்கும் அல்குர்ஆனை நாம் ஓதுகிறோம்; ஆனால், பொருளையோ, கருத்தையோ அறியாமல், அதன் மொழி பெயர்ப்பை ஏனோதானோ என்று நமது மொழியில் படிக்கவும் செய்கின்றோம். ஆனால், அல்குர்ஆனை கருத்தூன்றி படிக்கும் எண்ணம் நம்மிடம் இல்லை; அத்துடன் சிந்திப்பதுமில்லை; அதனை உள்வாங்கி செயல்படுத்துவதுமில்லை. அதுபோல, சுன்னா பற்றிய தெளிவும், மார்க்கச் சட்ட திட்டங்களில் (சரீஆவில்) அதன் முக்கியத்துவம் பற்றிய அறிவும் நம்மிடம் இல்லை. அதனால், தான்தோன்றித்தனமாக […]
சூரியன் மேற்கில் உதிப்பதால் ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? ஹலரத் அலி. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமை நாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏற்கனவே இறைவனை நம்பாதிருந்தவர்களின் நம்பிக்கை எப்பயனுமளிக்காது. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி 6506 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்றாக கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதற்கு பதிலாக மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்பதையும், இப்பெரு நிகழ்வை மக்கள் […]
விமர்சனம்!! விளக்கம்!! விமர்சனம் : ஆகஸ்ட் 2025 அந்நஜாத் மாத இதழ் பக்கம் 30ல் “ஸலஃபிகளை” பின்பற்றலாமா என்ற கேள்விக்கு குர்ஆன் சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறிவிட்டு இறுதியில் நபித் தோழர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுப்பதே ஏற்புடையதாகும் என்று கூறி நழுவியுள்ளீர்கள். இது விசயத்தில் அந்நஜாத்தும் தடுமாற்றத்தில் உள்ளது என்கிறேன். விளக்கம் தரவும். M. அபூநபீல், தேங்காய்பட்டணம். விளக்கம் : தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நபிதோழர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுப்பதே ஏற்புடையதாகும் என்று நாம் […]
இறைவனின் பார்வையில் கண்ணியத்திற்கு உரியவர் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூஸா பின் இம்ரான்(அலை) அவர்கள் இறைவனிடம் வினவினார்கள். என் அதிபதியே! உன்னுடைய அடியார்களில் உன்னுடைய பார்வையில் மிக அதிகக் கண்ணியத்திற்கு உரியவர் யார்?” இறைவன் பதிலளித்தான் : “சக்தி பெற்றிருந்த நிலையிலும் மன்னித்து விடுகின்ற மனிதன் (தான் மற்றெல்லா மனிதர்களை விடவும் கண்ணியத்துக்குரியவன்) அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: பைஹகீ. உண்மையில் மனிதன் ஓர் ஒழுக்கப் படைப்பு ஆவான். அவனுடைய ஒழுக்கம் முழுமை பெறுகின்ற போதுதான் […]
தலையங்கம் : அரபு நாடுகளும் – அடிமைத்தனமும்….!! உலக வரலாற்றில் நடந்த ஓர் உண்மை சம்பவம்: அது என்னவென்றால்; டைட்டானிக் எனும் கப்பலுக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த கப்பலின் கேப்டன் அக்கப்பலில் பயணித்தவர்களிடம் சொன்னது, “இந்த கப்பல் முழுகுவதற்கு வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு இக்கப்பல் பாது காப்பானது. கடவுளால் கூட டைட்டானிக்கை மூழ்கடிக்க முடியாது” என்று கூறினார். ஆனால் நடந்தது என்ன? அந்த கப்பல் மூழ்கியது, அந்த கப்பலில் பயணம் செய்த பெரும்பாலோரும் கடலில் […]
ஏழைகளுக்குரியதை மோசடி செய்யாதீர்! அபூ ஃபாத்திமா மறுபதிப்பு : அவர்களுடைய செல்வத்தில் யாசிப்பவர்களுக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு. அல்குர்ஆன் 51:19 அவர்களுடைய பொருள்களில் யாசிப்போருக்கும், வறியோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு. அல்குர்ஆன் 70:24 “எதைச் செலவு செய்யவேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; “(உங்கள் தேவைக்குப் போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2:219 அல்குர்ஆனில் கடமையான தொழுகை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் ஜகாத்தும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதை அறியலாம். அது […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 ஜூலை தொடர்ச்சி… முடிவுரை : அன்பர்களே! எனது பேச்சின் சுருக்கம் இதுவே “ஒன்றை குலம் ஒருவனே தேவன்”. இதுவே நம் முதுமொழி இறைவனை ஒருவனாக ஏற்றிருந்த நாம், மதவாதிகளின் மாயையில் சிக்கி, இறைத்தூதர்களையும், மஹான்களையும் அவதாரமாக்கிப் பின்னர் சாமிகளாக்கிப் பல தெய்வ வழிபாட்டிற்கு, வழி விலகிச் சென்றுவிட்டோம். விலகிச் சென்ற பாதையிலிருந்து, நேர்வழிக்கு உங்களை அழைக்கிறேன். ஒன்றே இறை; ஒன்றே நெறிநூல்; ஒன்றே குலம்; ஒன்றே மார்க்கம் என்ற தாரக […]
ஜும்ஆ குத்பா! – அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : முஸ்லிம்கள் வாரத்தின் ஒரு நாள் ஒன்று கூடி மார்க்க உபதேசம் (குத்பா) பெறும் நாளாக வெள்ளிக்கிழமையை அல்லாஹ் அளித்து அருள் புரிந்திருக்கிறான். இதேபோல் வாரத்தில் ஒரு நாள் ஒன்று கூடும் நாளாக யூதர்களுக்கு சனிக்கிழமையையும் அல்லாஹ் அளித்திருந்தான். யூதர்களும், கிறிஸ்தவர்களும் எப்படி அந்த நாட்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி செலவிடாமல், தங்களின் மனோ இச்சைப்படி ஆக்கிக் கொண்டார்களோ அதே போல் முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை ஜும்மாவை ஜும்ஆ குத்பாவை அல்லாஹ்வின் […]
படைத்தவனும், படைப்பினங்களும் அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்திய இறுதி இறைத்தூதர்! முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு : முரண்படும் மனித நிலை : படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே மனித சமுதாயம் முழுமையும் அடிமையாகி வாழவேண்டும். மனிதர்கள் மற்ற படைப்பினங்களுக்கும், மனிதர்கள் கற்பித்தவைகளுக்கும் அடிமைகளாகுதல் இறைக்கிணையாக்கும் மாபாதகம் என்று படைப்பினங்கள் அனைத்தின் ஒரே எஜமானனாகிய வல்ல அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். மனிதர்கள் இதற்கு முரண்படுவதால், இறைக்கட்டளைகளைத் தாங்கி நபிமார்களைத் திரும்பத் திரும்ப அனுப்பி சிறு பிள்ளைக்கும் புரியும் […]
ஸிஜ்ஜீன் என்றால் என்ன? எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூலை மாத தொடர்ச்சி….. அதாவது (அந்நாளோ) அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் (நீதி விசாரணைக்காக) மனிதர்கள் (அனைவரும்) நின்று கொண்டிருக்கும் நாள். (அல்குர்ஆன் 83:6) அதாவது செருப்பு அணியாதவர்களாக ஆடை யில்லாதவர்களாக நின்று கொண்டிருப்பார்கள். மிகமிகக் கடுçமான சிரமமான நிலைக்கு உள்ளாகி இருப்பார்கள். பாவங்களில் மூழ்கி யிருந்த குற்றவாளிகளுக்கு மிக நெருக்கடியானதாக இருக்கும் அந்த இடம் . உயர்ந்தோன் அல்லாஹ்வின் கட்டளை யைப் பொறுத்து எந்த ஒரு நிலை அவர்களைச் […]
புளியம்பழ உறவுகள்….! A.N. Trichy “அவனே (இறைவனே) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அம்மனிதனுக்குப் பெற்றோர் வழி உறவுகளையும், திருமண வழி உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றல் மிக்கவனாக இருக்கின்றான். அ.கு.25:54 மேற்கண்ட வசனத்தில் மனித படைப்பைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் இறைவன் பேசுகிறான். பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை என்றும் மனித இனம் பெருக திருமண உறவு அவசியம் என்பதையும் இறைவன் கூறியுள்ளான். (அதாவது குலம், கோத்திரம், வம்சம், சமுதாயம், நாடு […]