அறிந்து கொள்வோம்! K. ரஹிமுதீன், குண்டூர் 1. இஷா தொழுகயை ஜமாஅத் ஆக தொழுபவருக்கு கிடைக்கும் நன்மை என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? பாதிஇரவுநின்றுவணங்கியநன்மை. முஸ்லிம் : 1162 2. மறுமை நாள் நெருக்கத்தில் மதீனாவில் எத்தனை நிலநடுக்கம் ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? மூன்று. முஸ்லிம் : 5642 3. எந்த மாதத்தில் 10 நாட்கள் நல்லறங்கள் செய்வது சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? துல்ஹஜ். […]
வருமுன் காப்போம்….. நரம்புகள் சுருண்டாலும்… நம்பிக்கைகள் சுருளவேண்டாம்… அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக மனிதர்களிடம் ஒரு நல்ல கலாச்சாரம் உண்டு. அது என்னவென்றால், தெரிந்த ஒருவரை நாம் சந்திக்கும்பொழுது நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது. மேலும் அப்பா, அம்மா, மனைவி, மக்கள் நலமாக இருக்கிறார்களா? என்று கேட்பது. ஆனால் யாருமே சந்திக்கும்பொழுது உங்கள் சொத்துக்கள் பத்திரமாக இருக்கின்றதா என்று கேள்வியாக கேட்பதில்லை. தெரிந்தோ, தெரியாமலோ இத்தகைய நலம் விசாரிக்கும் நல்ல பழக்கத்திற்கு பல நன்மையும் உண்டு. ஏன் […]
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிலை! M. சையத் முபாரக், நாகை முக்கியத்துவம் : குர்ஆன் மூலாதாரம் : அதாவது, .நமது வாழ்வின் அனைத்தையும் வடிவமைப்பதாக இருப்பது அல்குர்ஆன் ஆகும். சுன்னா: நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் நபி(ஸல்) அவர்களின் நற்பண்புகளுடன் கூடிய வாழ்வு நெறி (வழிகாட்டி). அதாவது, அல்குர்ஆனின் கொள்கைகளைப் பிரதிபலித்து, சுருக்கமாகக் கூறியதை தெளிவாக விளங்கச் செய்து, அதனைப் பின்பற்றச் செய்வது சுன்னா ஆகும். (குறிப்பு : சுன்னா என்பது நபி(ஸல்) அவர்களின் […]
நீங்கள் எதை வணங்குகிறீர்கள்? S.H. அப்துர் ரஹ்மான் தூதரே! அவர்களுக்கு இப்ராஹீமுடைய செய்தியையும் படித்து காண்பிப்பீராக! அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” எனக் கேட்டபோது, அவர்கள், “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். நாங்கள் அவற்றின் வணக்கத்திற்காக நிலை கொண்டுள்ளோம்” என்று கூறினார்கள். “அவைகளை நீங்கள் அழைக்கின்ற சமயத்தில் உங்களுக்கு அவை (காது கொடுத்து) செவி சாய்க்கின்றனவா” என்று இப்றாஹீம் அவர்களிடம் கேட்டார். “அல்லது(அவைகளை நீங்கள் வணங்கினால்) உங்களுக்கு பலன் தருகின்றனவா? அல்லது (வணங்காவிட்டால்) […]
கோபம் என்ன செய்யும்??? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் கோபம் என்பதும் மனிதர்களின் ஒரு பொதுவான உணர்ச்சி. இது மனித உள்ளத் தின் உணர்ச்சிகளில் ஒன்றும் கூட. அதாவது உடலியல் ரீதியாக வெளிப்படும் செயல்பாடு களில் ஒன்றாகும். கோபம் வராத மனிதர்களே கிடையாது. ஆனால் சின்ன சின்ன வியங் களுக்கு எல்லாம் கோபப்படுவது தான் தவறு. பொதுவாக கோபம் வரக்காரணம் தான் நினைப்பது நடக்காது போது வரும், அப்ப டியே நடந்தாலும் தான் விரும்பிய விதத்தில் நடக்காமல் இருந்தால் […]
யாருமே கனிக்கவில்லை! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “எதை விட்டும் நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் (இறைவனிடம்) நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு இறைவன் அறிவிப்பான்” என்று கூறுவீராக! அ.கு. 62:8 பள்ளிவாசல் மைக் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இன்னார் வபாத்தாகிவிட்டார் (இறந்து விட்டார்)இன்ஷா அல்லாஹ் அவருக்கு இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு இந்த பள்ளி கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : “ஸலஃப்‘ என்பவர்கள் யார்? இவர்களுடைய கொள்கை என்ன? இவர்கள் கூறுவதை மார்க்க ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமா? தெளிவு : இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்ற தூய நிலையில் நபி(ஸல்) அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட தூய இஸ்லாமிய மார்க்கம். மிகக் குறுகிய காலத்தில், வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்ட புரோகிதர்களால் மதமாகத் திரிக்கப்பட்டது. ஸலஃபிகள் என்று அரபி மொழியில் அழைக்கப்படும் பின்னால் வந்தவர்கள் தூய மார்க்கத்தை தர்கா சடங்குகள், மத்ஹபுகள், […]
தலையங்கம் : முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்? அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பொதுவாக இன்று நம்மைப் போன்ற முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும். முஸ்லிம் என்ற பெயரில் வழிகேட்டிலிருக்கும் ஈரான் சியாக்களையா? அல்லது அல்லாஹ்வாலும் நபிமார்கள், மலக்குகளாலும் சபிக்கப்பட்ட சியோனிச யூத இஸ்ரேலியர் களையா? என்ற கேள்விக்கு சரியான பதில். இன்று நேர்மையின் பக்கமும், அப்பாவி பாலஸ்தீனர்கள் பக்கமும் நிற்கும் சியா முஸ்லிம்கள் ஈரானை ஆதரிப்பதும், துவா செய்வதுமே நமது கடமை! தொடர்ந்து அநியாயமும், அக்கிரமும், அப்பாவி ஆண், […]
அழைப்புப் பணி! – அபூ அப்தில்லாஹ் நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான நபிமார்கள், செய்துவந்த தூய பணியான, அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி. இந்த உம்மத்தின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தமது உம்மத்தவர்கள் செய்யும் நிலையில் அவர்களைத் தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள். “நம்பிக்கை கொண்டு சாலிஹான அமல்கள் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் எடுத்துச்சொல்லி அதனால் […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 ஜூன் தொடர்ச்சி… “முஹம்மது(ஸல்) அவர்கள் புரோகிதத்தின் வசிகர வலையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கிழித்தெறிந்துவிட்டார்கள். அல்குர் ஆனின் ஞானபோதனைகள் மூலமே ஒவ்வொருவரும் இறைவனுடன் நேரடித் தொடர்புகொள்ள உரிமை ஏற்பட்டுவிட்டது. இதன்மீது எந்தப் புரோகிதக் குழுவினரும் எப்படிப்பட்ட தடை உத்திரவையும் பயன்படுத்த வழி இல்லாமல் போய்விட்டது” என்று டாக்டர் ஜூலியஸ் ஜெர்மான்ஸ் என்பவர் கூறுகிறார். கைசேதமே ஒருமுஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தையும், அல்குர்ஆனையும் விளங்கி வைத்திருக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் […]
இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்!! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம்! அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நியமானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுதல்” என்பதை நாம் பரவலாய், வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக்கிறோம். வரவேற்கத்தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோசமாய் மாறிவிடாமல், நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கப்படுகிறதா? இல்லையே! ஒரு சில விசயங்கள் நீங்கலாய்…!? […]
வருமுன் காப்போம்….. சர்க்கரையும்… அக்கறையும்… அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 2025 ஜூன் மாத தொடர்ச்சி…. (2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் “வருமுன் காப்போம்‘ கட்டுரை வருவது வாசகர்கள் அறிந்ததே. மார்க்க ரீதியாக மக்கள் எவ்வாறு எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை கடந்த 40 ஆண்டு களாக மக்களிடையே அதன் உண்மை தன்மையை அந்நஜாத் தெளிவுபடுத்தி வைப்பதுபோல் மருத்துவ ரீதியாக மக்கள் விழிப்புணர்ச்சி அடைய நாம் எழுதி வருவது வாசகர்களிடையே மற்றும் சில மருத்துவர்களிடையே கூட நல்ல வரவேற்பை […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1 எதை நாம் மீறமாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான்? வாக்குறுதி. அல்குர்ஆன் 3:9 2. அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் சித்தப்பா யார்? அபூலஹப். அல்குர்ஆன் 111:1-5 3. இன்று மீலாது விழா கொண்டாடுவோர் யாரைப் பின்பற்றி கொண்டாடுகிறார்கள்? அபூலஹபை. 4. நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய முதல் பெண் யார்? அபூலஹபின் அடிமைப் பெண். ஸுவைபிய்யா ஆதாரம் நூல் முஹம்மத் பக்கம் 75 5. […]
நபி(ஸல்) விட்டுச் சென்ற ஜமாத்துல் முஸ்லிமீன் எங்கே? S.H. அப்துர் ரஹ்மான் ஜமாத்துல் முஸ்லிமீன் நபி(ஸல்) விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையிலான ஜமாஅத், கலிமாவை ஏற்ற முந்தியவர்கள், மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிக்கள் (கலிமா சொல்லிய பின்பு சிலை வணக்கமும் புரிந்தவர்கள்) அனைவரும் ஒன்றாக இருந்த ஒரே தலைமையில் ஆன அல்ஜமாத். (ஹிஜ்ரி 1 -11 வரை) ஜமாத்துல் முஸ்லிமீன் நான்கு கலிபாக்கள் விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையில் ஆன ஜமாத், கலிமாவை ஏற்ற மூமின்கள், […]
ஸிஜ்ஜீன் என்றால் என்ன? எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. (அளவையிலும், எடையிலும், மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக! அவர்கள் எத்தகையோரென்றால், (தங்களுக்காக) மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால், நிறைவாக (அளந்து) வாங்கிக் கொள்கின்றனர். (ஆனால்) மற்ற மனிதர்களுக்கு அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் மோசடி செய்து அவர்களை நஷ்டப்படுத்தி விடுகின்றனர். அத்தகையோர் நிச்சயமாக, தாம் (மறுமை யில் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில் லையா? மகத்தான ஒரு நாளைக்காக, அதாவது […]
இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் நாடினால்)…? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “இன்ஷா அல்லாஹ்” என்ற இந்த சொல் முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான சொல்லாகும். எவ்வாறு “மாஷா அல்லாஹ்” என்ற சொல் பிரபலமானதாக இருக்கிறதோ அதைவிட பன்மடங்கு பிரபலமான சொல்லாகும் இது. அதாவது முஸ்லிம்களாக இருக்கக் கூடிய ஆண், பெண் இரு வகுப்பாரும் தன் வாழ்நாளில் பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய சொல்லாகும். “இன்ஷா அல்லாஹ்” என்ற இந்த சொல்லை உபயோகப்படுத்தாத முஸ்லிம்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு இது ஒவ்வொரு முஸ்லிம்களின் வாழ்வுடன் […]
பாவமன்னிப்பு கேட்டால்… இறைவன் மன்னிப்பானா? தண்டிப்பானா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “மனிதர்களின் தவறுகளுக்காக அவர்களை (உடனுக்குடன்) இறைவன் தண்டிப்பதாக இருந்தால் எந்த உயிரினத்தையும் பூமியின் மீது இறைவன் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும் நிர்ணயிக்கப்பட்ட நாள் வரை திருந்துவதற்காக அவர்களுக்கு அவகாசமும் வழங்குகிறான். அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட நாள் வந்து முடிந்ததும் (தண்டிக்கவும் செய்யலாம், மன்னிப்பும் வழங்கலாம். தன் அடியார்களை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான். அ.கு. 35:45 மேற்கண்ட வசனத்தில் இறைவன் மூன்றுவித கருத்தை கூறுகிறான். முதலாவது: தன்னுடைய […]
பொய்க்கு மட்டும் பச்சைக் கொடியா? A.N. Trichy. போர் என்று வந்தால் அதில் முதலில் பலிகடாவாக ஆவது “உண்மை‘. அந்நாளில் (முதல் உலக போர், மற்றும் இரண்டாம் உலகப்போர்) வதந்திகள் வாய் வார்த்தை யாகத்தான் பரவின. ஆனால் இப்போது மீடியா மூலம் அது இறக்கை கட்டிப் பறக்கின்றன. அதிலும் இந்தியா–பாகிஸ்தான் போர் என்றால் இந்தியா மீடியாக்கள் பல வதந்திகளை பரப்புவதில் முழுமூச்சாக இருக்கின்றன. உ.ம். : கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பஹ்லகாம் தாக்குதலுக்கு பின்பு […]
அடையாள அட்டை…. N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு. இன்றைய நவீன உலகில் உலகிலுள்ள 95 சதவீத மக்களுக்கு அடையாள அட்டை உள்ளது. நமது இந்திய நாட்டிலும் ஆதார் கார்டு, பான்கார்டு, வோட்டர் கார்டு, ரேன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் கார்டு, மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டு போன்ற பல அடையாள அட்டை சுமார் 90 சதவீத மக்களுக்கு உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை கொண்டு அவர் பெயர் என்ன, அவர் பிறந்த தேதி என்ன, அவருடைய முகவரி என்ன, […]
எளிமையான சொற்கள்! வலிமையான பலன்கள்!! M. சையத் முபாரக், நாகை. அல்லாஹ்விற்கு ஏற்ற, அவன் விரும்புகின்ற, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தச் சொற்களை (திக்ர்களை) நாம் சொல்லும்போது அதற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம். அவைகளைப் பற்றித் தெரிந்தும் நாம் அவைகளைக் கூறாமல் தவிர்த்து விடுகிறோம். அதற்குக் காரணம், அதன் மதிப்பு இம்மையில் தெரியாததே. நாளை ஃபஜ்ர் தொழுகைக்கு பள்ளிவாச லுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 தரப்படும் என்று அறிவிப்புச் செய்தால், […]