பீ.ஜே. ஆதரவாளர்கள் மறுக்க முடியுமா?

in 2009 ஏப்ரல்

பீ.ஜே. ஆதரவாளர்கள் மறுக்க முடியுமா? – அபூ அப்தில்லாஹ்

ஏகத்துவம் மார்ச் 2009 இதழில் தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம் என்ற தலைப்பில் தங்களின் வீரப்பிரதாபங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் 31-ம் பக்கத்தில் எம்மைப் பற்றி எழுதியுள்ளது வருமாறு:

முஜீபுர்ரஹ்மான் என்பவர் சார்பாக அபூ அப்தில்லாஹ் என்பவரும் (இவர் அன்று முதல் இன்று வரை பி.ஜே. என்கிற தனி மனிதரை எதிர்ப்பது ஒன்றை மட்டுமே கொள்கையாகக் கொண்டவர். அதற்காகவே பல்லாண்டுகளாக ஒரு பத்திரிகையை வைத்து பிழைப்பு நடத்துகிறார். இயக்கப் பெயர்கள் வழிகேடு என்று கூறும் இந்த அதிமேதாவி பி.ஜே. எதிர்ப்பு என்று வந்துவிட்டால் எந்த இயக்கவாதிகளுடனும் கைகோர்க்கத் தயங்க மாட்டார். சிலரை வழிகேடு என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களுடனேயே கைகோர்த்தல் இவர் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்!….. என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பேர் புகழ் வரும் என்றால் பிறருடைய கட்டுரைகளை தனது பெயரிலும் விவகாரம் என்றால் தான் எழுதி பிறர் பெயரில் வெளியிடுவதும் பீ.ஜேக்கு கைவந்த கலை. இதை அவர் நம்மோடிருந்த 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரை எமது சொந்த அனுபவத்திலேயே கண்டோம். அதே வரிசையில் இக்கட்டுரையிலும் ஒரு பெண்ணின்(?) பின்னால் மறைந்துள்ளார். அவர்கள் குறிப்பிட்டள்ள விவாத ஒப்பந்த ஆரம்பத்தில், பீ.ஜே. என்பவர் என்று முஜீபுர்ரஹ்மான் எழுதியதைக் கிண்டலடித்து விவாதத்தில் கலந்து கொண்டு, ஒப்பந்தங்கள், விவாதங்களை குழப்புவதற்கென்றே, பீ.ஜே.யால் சொல்லப்பட்டே அழைத்து வரப்படும் கலீல் ரசூல். இவர்தான் பீ.ஜே. என்பவர் என்று முஜீபுர்ரஹ்மான் எழுதியதைக் கிண்டலடித்து விவாதத்தில் கலந்து கொண்டு, ஒப்பந்தங்கள், விவாதங்களை குழப்புவதற்கென்றே. பீ.ஜேயால் சொல்லப்பட்டே அழைத்து வரப்படும் கலீல் ரசூல், இவர்தான் பீ.ஜே. என்று சுட்டிக்காட்டினார். இப்போது அவர்களே முஜீபுர்ரஹ்மான் என்பவர். அபூ அப்தில்லாஹ் என்பவர் என்று எழுதி இருப்பவர் எதைக் காட்டுகிறது? ஆம்! அவர்களுக்கென்றால் ஒரு சட்டம்: மற்றவர்களுக்குப் பிரிதொரு சட்டம் என்று நடிப்பதைக் காட்டவில்லையா? புரோகிதர்களினதும், அவர்களது கைத்தடிகளினதும் நிலை இதுதான் என்பதை உணர்த்தவில்லையா?

பீ.ஜே.யின் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு!

1987-ல் அந்நஜாத்தை கைப்பற்றுவதும் அதன் மூலம் லட்சட்சமாகப் பொருளீட்டுவதும் அபூ அப்தில்லாஹ்வின் குறிக்கோள் என்று துபைக்குக் கடிதம் எழுதினார். இன்று 2009 மார்ச்சில் பத்திரிகையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் என்று எழுதியுள்ளார்.

பீ.ஜே. அண்டப்புளுகர், ஆகாசப் பொய்யர், சிறிதும் இறையச்சமோ, மறுமை பயமோ இன்றி அவதூறுகளை அனாயாசமாக அள்ளி இறைப்பவர் என்ற எமது குற்றச்சாட்டை அவரே ஒப்புக் கொண்டிருப்பதை விளங்க முடியாதவர்கள் உண்டா?

1987-ல் சொன்னது போல், விளம்பரமே இல்லாமல் குர்ஆன், ஹதீஸை மட்டும் அந்நஜாத்தில் எழுதி லட்சலட்சமாகப் பொருளீட்ட முடியுமா? கேப்பையில் நெய் வழிகிறதென்றால் கேட்பார் மதி எங்கே சென்றது? என்று சொல்வார்கள். ஆம்! மதியில்லாதவர்கள் மட்டுமே பீ.ஜே.யின் இக்கூற்றை ஏற்பார்கள். 2009-ல் அந்நஜாத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துவதாக எழுதியுள்ளார். பீ.ஜே.க்கு நன்கு தெரியும். அவர் அந்நஜாத்தில் இருந்த 15 மாதங்களாக நாம் சல்லிக்காசு கூட சம்பளமாகவோ போனஸாகலோ, ஆதாயமாகவோ அடையவில்லை என்பது திட்டமாகத் தெரியும். 1987-ல் அட்ஹாக் கமிட்டி அமைத்து நாம் கொடுத்த வரவு செலவு கணக்கை வரிவிடாமல் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தவர் பீ.ஜே. நாம் சம்பளமாக சல்லிக் காசும் எடுக்கவில்லை என்பதை நன்கு அறிவார். எமது 21 வயதிலிருந்து சொந்தக் காலில் நின்று அல்லாஹ்வின் உதவியுடன் உழைத்து அதன் மூலம் வருவாய் ஈட்டியே பிழைப்பு நடத்துகிறோம். இன்று அல்லாஹ்வின் அருளைக் கொண்டு மூன்ற அச்சகங்களுக்கு உரிமையாளராக இருக்கிறோம். அதுவே எமது விழைப்பக்குரிய வழி.

அந்நஜாத்தின் அச்சுச் செலவில் துண்டு விழும் தொகையை நாம் அந்நஜாத்திற்குக் கொடுக்கிறோமேயல்லாமல் அந்நஜாத்திலிருந்து சம்பளமாக நாம் சல்லிக்காசும் எடுப்பதில்லை. இதுவும் பீ.ஜே.க்கு தெரியும். இப்படி நன்கு தெரிந்த நிலையில் பத்திரிகையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் என்று எழுதி இருக்கிறார் என்றால் அவர் அண்டப்புளுகர்தானே? ஆகாசப் பொய்யர் தானே? அவதூறு மன்னன்தானே? இதில் சந்Nதுகமுண்டா? அந்நஜாத் ஜூன் 86 இதழில் ‘நான் ஆசிரியப் பணிக்கு சம்பளம் வாங்கவில்லை. இனிமேலும் வாங்குவதாக இல்லை என்று அப்பட்டமான பொய்யை எழுதியவர்தானே? அது மட்டுமல்ல: அன்று அவர் ஆசிரியராக இருந்தபோது அவரின் கீழ் ஷம்சுள்ளுஹா, முஹம்மது அலீ ரஹ்மானீ, யூசுப் மிஸ்பாஹி என அவருக்கு உதவியாளர்களாக சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டிரந்தார்கள். ஆனால் இன்று நமக்கு உதவியாளர் யாருமே இல்லை. அன்று மூவர், நால்வர் என்று செய்த அதே பத்திரிகைப் பணியை, இன்று நாம் ஒருவரே செய்தாலும் அதற்காக ஊதியம் சல்லிக்காசும் பெறவில்லை. இந்த நிலையில் ‘பத்திரிகையை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்’ என்று எழுதி இருக்கிறார் என்றால் அவர் எந்த அளவு கொடிய கல்நெஞ்சம் படைத்த துரோகியாக, பொய்யராக இருக்க முடியும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

‘இஸ்லாம் அல்லாத இயக்கமில்லை: இஸ்லாத்தில் புரோகிதம் இல்லை: நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதிலிலை’ என்று உறுதி அளித்துவிட்டு, பின்னர் தனது வாக்குறுதிகள் அனைத்தையும் முறித்து, குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என ஒப்பக்கொண்டு ஓரணியில் திரண்டவர்களை இன்று பல பிரிவினர்களாக பிரித்த மாபெரும் துரோகி, நயவஞ்சகர், நம்பிக்கைத் துரோகி இவர்தான் என்பதில் சந்தேகமுண்டா? வேறு யாரும் இப்படிப்பட்ட துரோகச் செயல்களில் ஈடுபட்டதாகக் காட்ட முடியுமா? வேறு யாரும் இப்படி எமக்கு வாக்குறுதி அளிக்கவில்லை.

பீ.ஜே.யின் துரோகச் செயல்களை அதாவது நமக்கல்ல ஒன்றுபட்டுச் செயல்பட முன் வந்த முஸ்லிம் இளைஞர்களை மீண்டும் பல பிரிவுகளிலாக்கிய துரோகச் செயல்களை சாதாரணமாகச் சொல்ல முடியுமா? நாங்கள் ஆயிரம் வருடங்களாக நான்கு மத்ஹபுகளில் மட்டுமே நிலைத்திருக்கிறோம். ஆனால் அந்த நான்கையும் ஒன்றாக ஆக்கிக் காட்டுகிறோம் என்று கூறிப் புறப்பட்டவர்கள் இன்று இருபது வருடங்களில் ஏழு மத்ஹபுகளில் ஆகிவிட்டீர்களே என்று குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறுபவர்களின் முகங்களில் சுன்னத் வல் ஜமாஅத்தின்ர் காறித்துப்ப யார் காரணம்? பீ.ஜே.தானே காரணம். இது சாதாரண குற்றமா? தர்கா, தரீக்கா, மத்ஹபு புரோகிதர்களின் செயலைவிட மிகக் கொடிய செயல் இது இல்லையா? வானத்தின் கீழ் இவரை விட கொடிய புரோகிதர் உண்டா? சுயநலவாதி உண்டா?

மத்ஹபினர் முன்னோர்களின் பிக்ஹு சட்டங்களைப் பின்பற்றுகின்றனர். இவரோ இப்போது புதிதாக பிக்ஹு சட்டம் வகுத்து. தனது ஆதரவாளர்களை அதைப் பின்பற்றச் சொல்கிறார். 9:31, 42:14,21, 33:36ஈ66ஈ67ஈ68 இறைக் கட்டளைகளின்படி இது இணை வைக்கும் கொடிய குற்றம் அல்லாமல் வேறு என்ன? சொல்லுங்கள்!

குர்ஆன், ஹதீஸில் இல்லாத கருத்துக்களை நான்கு கலீஃபாக்கள் மற்றும் அனைத்து நபி தோழர்களும் இணைந்து ஏகோபித்துச் சொன்னாலும் அது மார்க்கமாகாது: மாறாக இது ‘பித்அத்’ ஆகும் என உறுதியாகச் சொல்லும் பீ.ஜே. அதே அடிப்படையில் இன்று வரை 1430 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் Nசுமித்து வைக்கும் பொருள்களுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுப்பது கடமை என்பதை மறுத்து வரும் பீ.ஜே. எந்த முகத்துடன் தனது அல்குர்ஆன் மொழியாகத்தின் இறுதியில் சுமார் 400 பக்கங்களில் மிகப் பெரும்பான்மையானவற்றில் தனது சுய கருத்துக்களைப் புகுத்தியுள்ளார்? இது கலீஃபாக்களை விட நபி தோழர்களை விட மார்க்கத்தில் நான் அதிகாரம் பெற்றவர் என்ற அகம்பாவத்தை, ஆணவத்தை, தற்பெருமையை வெளிக்காட்டுவதாக இல்லையா? 49:16-ல் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படும் ஃபிர்அவ்னின் வாரிசு என்பதைப் புலப்படுத்தவில்லையா?

ஃபிர்அவ்ன்தான் ‘நான்தான் ரப்புகளுக்கெல்லாம் மிகப் பெரிய ரப்பு’ என கொக்கரிக்கத்தவன் (பார்க்க 79:24) ஆம்! இன்றைய காலக் கட்டத்தில் பீ.ஜே.யைவிட மிகமிகக் கொடிய புரோகிதர், சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் சண்டாளர். நம்பிக்கைத் துரோகி, அமானித மோசடியாளர் வேறு யாருமே இல்லை. அதனால் தான் அவரைத் தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறோம். அவரது முகத்திரையைக் கிழித்து வருகிறோம். பாக்கரைப்பற்றி பீ.ஜே. சொல்லி இருக்கிறாரே அவர் எவ்வளவு அதிகமான நன்மைகள் செய்திருந்தாலும், அவரது இப்போதைய இறுதி நிலையை வைத்துள்ள முடிவு செய்ய வேண்டும் என்று: அது பீ.ஜே.க்கு மட்டும் பொருந்தாதா? பீ.ஜே. இதற்கு முன்னர் எவ்வளவு நன்மையான காரியங்களை செய்திருந்தாலும் இப்போதைய நிலை. அதாவது ஒன்றுபட்டு வந்த முஸ்லிம் சமுதாயத்தை அதுவும் இஸ்மா, கியாஸை நீக்கி குர்ஆன், ஹதீஸ் மட்டும் கொண்டு செயல்பட முன்வந்த சமுதாயத்தை இன்றைய அவரது சொந்த இஜ்மா, கியாஸை நடைமுறைப்படுத்தத் தூண்டும் கொடிய செயலை வைத்து. அதாவது பீ.ஜேயின் இறுதி நிலையை வைத்து முடிவு செய்வது தவறா? பாக்கருக்கு ஒரு சட்டம்: பீ.ஜே.க்கு பிரிதொரு சட்டமா? இதையா குர்ஆன், ஹதீஸ் கூறுகிறது? 7:175,176,179 இறைவாக்குகளைப் பாருங்கள்?

1984-87களில் ஒன்றுபட்டுச் செயல்பட்டவர்களைப் பிளவுபடுத்தும் ஷைத்தானிய செயல்பாட்டை பீ.ஜே. நடைமுறைப்படுத்தாமல், கடந்த 24 வருடங்களில் ஒன்றுபட்டுச் செயல்பட்டிருந்தால், இன்று முஸ்லிம் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்: சுன்னத் வல்ஜமாஅத் பள்ளிகள் என்ற நிலை மாறி, அல்லாஹ்வின் பள்ளிகள் (72:18) என்ற உண்மை நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தறிகிறவர்கள் எம்மைவிட அதிகமாக பீ.ஜே.யை வெறுப்பார்கள்: கரித்துக் கொட்டுவார்கள். பீ.ஜே. புரோகிதரை மட்டும் மிகமிக அதிகமாக நாம் ஏன் அடையாளம் காட்டுகிறோம். அவரது மறுமுகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்தே வருகிறார்கள்.

பீ.ஜே.யை விடாது தொடர்ந்து அடையாளம் காட்டி வருவதே. சமுதாயத்தை பெரிய வழிகேட்டில் இட்டுச் செல்வதில் அவரை மிகைத்தவர்கள் இன்று வேறு யாரும் இல்லை என்ற அடிப்படையில்தான்.

அடுத்து இயக்கங்களை வழிகேடு என்று சொல்லிக் கொண்டே அவர்களுடன் கைகோர்ப்பதை மாபெரும் குற்றம் எனக்கூறி தனது பக்தர்களை கொம்பு சீவி விட்டிருக்கிறார். இயக்க மேடைகளில் ஏறி அவர்களின் இயக்கங்களை ஆதரித்து நாம் பேசுகிறோமா? அவர்களின் வழிகேடுகளை நியாயப்படுத்துகிறோமா? அப்படியொரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா? சத்தியத்தை உள்ளது உள்ளபடி எந்த மேடையில் ஏறிச் சொன்னாலும் அதில் தவறு உண்டா? ஸைத்தானே அழைத்தாலும் அந்த மேடையில் ஏறி சத்தியத்தை – நேர்வழியைச் செல்வதுதான் குர்ஆன், ஹதீஸ் கொள்கை. அதுவே எமது கொள்கை. அவரது வழிகெட்ட ததஜ கொள்கைப்படி நபி(ஸல்) அவர்கள் நடந்திருந்தால் இன்று இஸ்லாம் உலகளாவிய அளவில் பரவி இருக்க முடியுமா?

குறைஷ் காஃபிர்களின் பகிரங்க வழிகேடுகளைக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய நபி(ஸல்) அவர்கள், அவர்களோடு பழகாமல் அவர்களது நல்லது, கெட்டதுகளில் கலக்காமல் ஒதுங்கி இருந்த ஆதாரத்தை இவரால் தரமுடியுமா? அப்படி இருந்திருந்தால் அவர்களது அமானிதப் பொருள்களை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்திருக்க முடியுமா? ஆகக் கொடியவர்களுடனும் நபி(ஸல்) அவர்கள் மனித நேயத்துடன் பழகிய ஆதாரங்களை மட்டுமே ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

அது மட்டுமல்ல: உள்ளத்தால் ஒப்புக் கொள்ளாமல் நாவினால் மட்டுமே ‘முஸ்லிம்’ எனக் கூறி நடித்துக் கொண்டு குறைஷ் காஃபிர்களுடன் சேர்ந்து லாத், மனாத், ஹுபல் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கூறி அவர்களை விட்டு ஒதுங்கி நடக்கவில்லை. அந்த நயவஞ்சகர்களின் நிலை பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் அடையாளம் காட்டியும், நபி(ஸல்) சமுதாயத்தைப் பிளவுபடுத்தவில்லை. ஈமான் உள்ளத்தில் நுழையாத நாட்டுப்புற அரபிகளையும், அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தில் ஒன்றுபட்டிருக்க அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதை அல்ஹுஜ்ராத் 49:14-ல் பார்க்கலாம். அதில் நிப(ஸல்) மிகமிக எசசரிக்கையாக இருந்தது நமக்குப் படிப்பினையாகும்.

இந்தப் புரோகிதர்களின் சுய விளக்கத்தைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் குர்ஆன், ஹதீஸ் கூறும் நேர்வழியை மக்களுக்கு உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறுவதோடு, மறுமையில் அவர்கள் அடையப்போகும் கொடிய நரக வேதனையை குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை (29:18, 36:17). அவர்கள் அல்குர்ஆனின் அறிவுரைகளை ஏற்காமல் அதற்க மாறாக நடந்தாலும் அவர்களைப் பற்றிய தீர்ப்பை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு, முஸ்லிம் சமுதாயத்திலேயே இருந்து வருவதால், அவர்களை இவ்வுலகில் முஸ்லிமாகவே ஏற்று 21:92, 23:52-ல் அல்லாஹ் கூறுவது போல் அவர்களையும் அரவணைத்தே நடக்க வேண்டும் என்று கூறுவNதூடு அதன்படி நாம் நடக்கியோம். 21:93, 23:53 கூறுவது போல சமுதாயத்தைப் பிளவுபடுத்தி காஃபிராக நாம் ஒருபோதும் தயாரில்லை.

10:19, 11:110, 20:129, 41:45, 42:14,21 ஆக ஆறு இடங்களில் பாவிகள், காஃபிர்கள், முஷ்ரிக்குகள், சமுதாயத்தைப் பிளவுபடுத்துவோர் பற்றிய தீர்ப்பைப் படைத்த எஜமானனான அல்லாஹ்வே மறுமைக்கென்று ஒத்திவைத்திருக்கும் நிலையில், அல்லாஹ்வின் அந்தத்தனி அதிகாரத்தை எமது கையில் எடுத்து குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் கொடிய செயலை நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம். நானே ரப்புகளுக்கெல்லாம் பெரிய ரப்ப என்று கொக்கரித்த ஃபிர்அவ்னின் வாரிசாக (79:24) நாம் ஆக ஒருபோதும் துணியமாட்டோம். முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் அனைவரையும் அரவணைத்து மனித நேயத்துடன் சகோதர வாஞ்சையுடன் பழகுவதே எமது கடமை என்Nறு செயல்படகிறோம். தக்லீதை நிலைநாட்ட விரும்புகிறவர்களே குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தி வழிகேட்டில் செல்வார்கள் என்று உறுதிபடக் கூறுகிறோம்.

அவர்களது நல்லது கெட்டதுகளில் நாமும் கலந்து கொள்கிறோம். அப்படிப்பட்டவர்களின் பின்னால் அவர்கள் எப்படிப்பட்ட கேடுகெட்ட நிலையில் இருந்தாலும், ஷைத்தானிய செயல்கள் அனைத்தையும் செய்தாலும், அவர்களுடைய தொழுகை நிராகரிக்கப்பட்டு அவர்களுடைய முகத்தில் தூக்கி எறியப்பட்டாலும, நமது தொழுகையில் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒருவருடைய சுமையை பிரிதொருவர் சுமக்கமாட்டார் என்ற அடிப்படையில் (6:164, 17:15, 35:18, 39:7, 53:38) நின்று தொழுகிறோம். உதாரணமாக களியக்காவிளையில் ஜமாலியுடன் விவாதிக்கும்போது குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தைத் தராமல் சுயக்கருத்தைச் சொல்லி மூக்கறுபட்டாரே, அப்பழியை எம்மீது சுமத்தினாரே, அந்த விவாதத்தில் பீ.ஜே. நம்மை அழைத்திருந்தால் நிச்சயமாக நாம் அவருடன் போயே இருப்போம். அதே போல் ஜமாலி முக்கடவுள் கொள்கை உடைய ஒரு கிறிஸ்தவருடனோ, பல கடவுள் கொள்கையுடைய ஒரு இந்துவுடனோ விவாதிக்க எம்மை அழைத்தால் அவருடன் இணைந்து ஒரே இறைவன் மட்டுமே என்பதை நிலைநாட்ட நாம் ஒப்புக்கொள்வோம்.

ஒரு கிறித்தவ அல்லது இந்து ஆத்திகன் ஒரு நாத்திகனோடு இறைவனின் உள்ளமை பற்றி விவாதிக்க அழைத்தால் நிச்சயமாக அவனுடன் இணைந்து இறைவனின் உள்ளமையை நிலை நாட்ட முற்படுவோம். ஆம்! எந்த மேடையில் ஏறினாலும் சத்தியத்தை நிலைநாட்டுவதே எமது கொள்கை. இதுவே குர்ஆன், ஹதீஸ் கொள்கையாகும். எங்கள் மேடையில் ஏற்றுவோம். மற்ற மேடைகளில் நாங்களும் ஏற மாட்டோம் என்பது நிச்சயமாக குர்ஆன், ஹதீஸ் அதாவது தவ்ஹீது கொள்கையாக ஒருபோதும் ஆகாது. அது தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்(ததஜ) கொள்கையாக மட்டுமே இருக்க முடியும். இந்த தறுதலைத் தனத்தை ஏற்று நாம் ஒருபோதும் செயல்படமாட்டோம். காரணம் வழிகேட்டில் இருப்பவர்களே நாங்கள் மட்டுமே நேர்வழியில் இருக்கிறோம் என் பீற்றிக் கொள்வார்கள். (பார்க்க 4:49, 53:32)

(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத்தாமே பரிசுத்தப் படுத்திக் கொள்கின்றார்களோ அவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று) அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல)வர்களைப் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணு அளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள். (4:49)

அன்றி ‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து வளர்த்து வருகையில் அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஒரு ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது. (இறந்து) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு எது சரி என்பதை அது சமயம்! அவன் உங்களுக்கு அறிவிப்பான். (6:164)

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான் வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை. (17:15)

(மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்துகொள்ளும்படி அழைத்தபோதிலும் அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்தபோதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீங்கள் அச்சஷமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலை நாட்டுகிறார்களோ அவர்களுக்குத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கின்றாரோ அவர் தன்னுடைய நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கின்றார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது. (35:18)

(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரம் பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகி இருப்பார்கள். நிச்சயமாக உங்களது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன், உங்களைப் பூமியில் இருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப் பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, நீங்கள் உங்களை தூய்மையானவர்கள் என தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான். (53:32)

Previous post:

Next post: