ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2009 செப்டம்பர்

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்
ஜூலை 2009 தொடர் : 3
எனவே மனித இனத்தின் ஆதிபிதாக்களை நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்திய இப்லீஸின் வழியை விட்டு நீங்கி, இறைவனின் இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய அல்குர்ஆனின் நேர்வழியில் செல்வது அவசியமாகும். தொடர்ந்து இப்லீஸ் மேற்கொள்ளும் சப்தத்தையும், ஆதமையும், ஹவ்வாவையும் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ய வைக்க இப்லீஸ் மேற்கொள்ளும் சதியையும் அவதானியுங்கள்.

என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான். (அல்குர்ஆன் 15:36)

இதற்கு இறைவன் அவனுக்கு அவகாசம் கொடுத்தான்.
நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்; குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன்15:37-38)

இப்லீஸ் இறைவனிடம் மறுமை வரை வாழ அனுமதி பெற்றபின், மனித சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களை வழி கெடுப்ப தாகக் கூறினான். அவன் கூறிய வார்த்தைகளை, அவதானியுங்கள்.

(அதற்கு இப்லீஸ்) என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
(ஆனால்) அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர என்று கூறினான். (அல்குர்ஆன் 15:39-40)

இப்லீஸ் என்ற ஷைத்தான் இறைவனின் கட்டளையை மீறினான். அவன் மனித சமுதாயத்தை மறுமை நாள் வரையில் வழிகெடுப்பேன் என்று கூறினான். ஆனால் இறைவன் ஒரு சிலரை நேர்வழி காட்டி ஷைத்தானின் வழி கேட்டிலிருந்து பாதுகாப்பான். அவதானியுங்கள்.
(அதற்கு இறைவன் என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (அங்கீகாரத் துக்குரிய) நேர் வழியாகும். நிச்சயமாக என் அடியார் மீது உனக்கு எவ்வித அதி காரமும் இல்லை, உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர என்று கூறினான். நிச்சயமாக, (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்களில் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட(தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும். (அல்குர்ஆன் 15:40-44)

இறைவன் அல்குர்ஆனின் மூலம் பல இடங்களில் ஷைத்தானைப் பற்றி விளக்கி மனித சமுதாயத்தை எச்சரிக்கிறான்.ஷைத்தானின் குறிக்கோள் மனிதனை வழிகெடச் செய்து மறுமையில் நரகில் விழச் செய்வதாகும். அல்லாஹ்வின் நேர்வழி பெற்று சுவர்க்கம் செல்வதைத் தவிர்ப்பதாகும். அல் குர்ஆனில் இன்னுமோர் இடத்தில் மீண்டும் ஷைத்தானின் நோக்கத்தையும், அதன் விளைவையும் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்;

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். (ஷைத்தான் கூறினான்) உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொக யினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன் என்றும், இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடு;ப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளின் கோலங்களை மாற்றும் படியும் ஏவுவேன் என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரும் நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான். மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும;; அதை விட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.

மேலும் எவர் ஈமான் கொண்டு நற் கருமங்களை செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழ் ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வின் வாக் குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வை விட உண்மையாளர் யார்? (அல்குர்ஆன் 4:118-122)

மேலுள்ள இறை வசனங்களிலிருந்து மனிதன் மறுமையில் வெற்றி பெற வேண்டுமாயின், இம்மையில் அல்லாஹ்வின் நேர்வழியில் நடத்தல் வேண்டும். அத்துடன் ஷைத்தானின் ஆசை வார்த்தைகளிலிருந்து தவிர்த்து வாழ வேண்டும். பின்வரும் இறைவசனத்தை அவதானியுங்கள். அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களை சுவனத்தில் தங்க வைத்தபோது கொடுத்த எச்சரிக்கையும், ஷைத்தானின் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளையும் உற்று நோக்குங்கள்.

மேலும் நாம் ஆதமே! நீரும் உம் மனைவியும் இச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம். (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள் என்று சொன்னோம். (அல்குர்ஆன் 2:35)

அப்போது ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால் உங்களிருவரையும் இச்சுவனத்திலிருந்து வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர். நிச்சயமாக நீர் இ(ச்சுவனத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர் (என்று கூறினோம்).

ஆனால்,ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி, ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா? என்று கேட்டான்.

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தை படி) அவ்விருவரும் அ(ம்மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத்தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவனத்துச் சோலையின் இலைகளைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள். இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:117-121)

அல்லாஹ்வின் கட்டளையை மீறிய இப்லீஸை மறுமை நாள் வரையில் இறைவன் சபித்தான். இதனால் அவன் ஆதம், ஹவ்வா ஆகிய இருவரையும் ஆசை வார்த்தைகளினால் வழி கெடுத்தான். ஆதமையும், ஹவ்வாவையும் வழிகெடுக்க ஷைத்தான் பயன்படுத்த்pய வழி முறைகளை ஒவ்வொரு மனிதனும் அறிவது அவசியமாகும். ஷைத்தான் அவர்களிடம் இரகசியமாக தவறான ஊசாட்டத்தை ஏற்படுத்தினான். அவ் ஆசை வார்த்தைகள் அல்லாஹ்வின் கட்டளையை மறக்கச் செய்தன. அல்லாஹ் ஆதமிடம் கூறிய கட்டளைகளை ஒவ்வொன்றாக அவதானிக்கவும்.

1. ஆதமையும், அவர் மனைவியையும் சுவனபதியில் குடியிருக்கச் செய்தான்.
2. அவ்விருவரும் தாராளமாக சுவனத்தில் புசிக்க அனுமதித்தான்; ஒரு மரத்தின் கனியைத் தவிர,
3. அம்மரக் கனியை சுவைத்தால் அல்லாஹ்வை நிராகரித்தவர்களாவீர்.
4. நிச்சயமாக ஆதமுக்கும் அவர் மனைவிக்கும் இப்லீஸ் பகைவனாவான்.
5. இச் சுவனச் சோலையிலிருந்து வெளியேற்ற இடம் கொடுக்க வேண்டாம்.
6. புறக்கணிப்பின் இருவருக்கும் பெரும் இன்னல்கள் ஏற்படும்.
7. இச் சுவனத்தில் வாழும்போது பசியோ, நிர்வாணமோ ஆகமாட்டீர்.
8. இதில் தாகிக்கவோ, வெயிலில் கஷ்டப்படவோ மாட்டீர்.

இத்தகைய சுகங்களை அவ்விருவரும் பெற்றனர். ஆனால் அவர்கள் மனதில் இச்சுகங்கள் நிரந்தரமாக கிடைக்காது என்ற குழப் பத்தைஷைத்தான் விதைத்தான். ஆகவே அவர்கள் i~த்தானின் குழப்பம் காரணமாக அல்லாஹ்வின் கட்டளையை மறந்தனர்.ஆகவே வானவர்களாக அல்லது சுவர்க்கத்தில் நிரந்தர மாக இருக்க ஆசைப்பட்டு மரக் கனியை சுவைத்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தனர். இன்றைய காலத்திலும் குருமார் சுவர்க்கம் செல்ல வழிகாட்டுவதாக கூறி, நரகம் செல்ல ஷைத்தானின் மௌட்டீக கொள்கைகளை முன் வைத்து வழிகாட்டுகிறார்கள். மக்களே, இறுதி நெறிநூல் அல்குர்ஆனை அவதானித்து நேர்வழியின் பக்கம் வர முயற்சி செய்யுங்கள். இந்த நேரிய வழியை நிலைப் படுத்தவே அல்லாஹ் இறுதித்; தூதராக முஹம்மது நபி(ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். ஷைத்தான் மனித சமுதாயத்துக்கே விரோதி ஆவான்; ஆகவே அவனுடைய தீய வழியில் சென்று நரக நெருப்பை அடைந்து விடாதீர்கள்.

உலகின் முதல் மனிதன் தோன்றிய நாள் முதல் மனிதனை நேர் வழிப்படுத்துவதற்கு இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிக் கொண்டே இருந்தான். அந்த இறைத் தூதர்கள் அல்லாஹ் அருளிய இறை நெறிநூல் களின் ஒளியில், அக்கால மக்களை நேர் வழிப்படுத்தினர். அந்த இறைத் தூதர் இறந்த தன் பின்,ஷைத்தான் சில குருமார்களினதும், தலைவர்களினதும் உதவியுடன் அந்நெறி நூல்களில் பலதெய்வ கொள்கைகளைப் புகுத்தினர். கருணை மிக்க அல்லாஹ் ஒவ்வொரு கால மக்களையும் நேர்வழிப் படுத்த தொடர்ந்து நெறிநூல்களையும், இறைத் தூதர்களையும் அனுப்பிக்கொண்டே இருந்தான். அந்நெறி நூல்கள் ஷைத்தானின் துணையுடன் போலி புரோகிதர்களினால் பலதெய்வ வழிபாடுகள் நிறைந்த மதங்களாக மாற்றப்பட்டே வந்தன. இந்நிலை இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு நாற்பதாவது வயதில் 1442 ஆண்டுகளுக்கு முன் இறை நெறிநூல் அல்குர்ஆன் அருளப்படும்வரை நீடித்தது. அல்லாஹ்வின் தூதர்கள் வரிசையில் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆவர். இதன் பின் இறைநெறிநூல்கள் இறக்கப் படமாட்டாது; எனவே அல்லாஹ் இறுதி நெறி நூலான அல்குர்ஆனை எந்த மாற்றங்களும் ஏற்படாது பாதுகாப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளான். ஆகவே அல்லாஹ் அல்குர் ஆனை இன்று வரையில் எக்கூடுதலும் குறைவு களும் இன்றி பாதுகாத்து வருகின்றான். இதனை அல்குர்ஆன் உறுதிப்படுத்துவதை அவதானியுங்கள்.
நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இந்நெறி நூலை (உம்மீது) இறக்கினோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாக வும் இருக்கிறோம். (அல்குர் ஆன் 15:9) (இன்ஷாஅல்லாஹ் வளரும்)

Previous post:

Next post: