ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!

in 2010 ஜனவரி,பொதுவானவை

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!
M.T.M. முஜீபுதீன், இலங்கை.
நவம்பர் 2009 தொடர் :5
அந்த புனிதருக்கு துதிபடி,அவர் மகிமையை முழு உலகிற்கும் அறிவிப்பார்களாக!

அவர் வல்லமை நிறைந்த வீரராகப் புறப்பட்டு போர் வீரனைப் போன்ற உறுதியுடன் ஓங்கி
கர்ச்சித்து தம்முடைய எதிரிகளை வெற்றி கொள்வார். (ஏசாயா: 42:10-13)

மேலே உள்ள பைபிளின் கூற்றுப்படி எதிர்காலத்தில் வரவுள்ள தீர்க்கதரிசி மோசஸ்
அல்லது இயேசுவும் அல்ல. அவர்கள் அரபிகளாக இருந்தனர். பைபிளின்படி கேதர் வம்சத்தில்
இறைவனின் ஒளிமிக்க நெறிநூல் அருளப்படும் என்பது உண்மையானால் அது அல்குர்ஆனாகவே
இருக்கும். கேதர்கள் வாழ்ந்த மக்கா மக்களுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர்
முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே ஆவர். மறுக்க முடியுமா?

உலகில் இருள் சூழ்ந்த காலத்தில் கேதர்களுக்கு நெறிநூல் ஒளி கிடைக்கும் என தீர்க்க
தரிசனம் கூறப்பட்டது. இதன்படி மக்கா நகரில் அறியாமை என்னும் இருள் சூழ்ந்த
காலத்திலேயே முஹம்மது(ஸல்) அவர்களுக்கு உலகில் அனைவருக்கும் நேர் ஒளி தரவல்ல
அல்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே இருள்சூழ்ந்திருந்த காலகட்டத்தில் பாரான் மலைப்
பகுதியில் வாழ்ந்த அரபுகளுக்கு வந்த தூதுத்துவம் முஹம்மது(ஸல்) அவர்களினால்
மட்டுமே கிடைக்கப்பட்டது.

முஹம்மத(ஸல்) அவர்கள் மக்கா நிராகரிப்போரின் துன்பம் காரணமாக மதீனாவுக்கு இடம்
பெயர நேர்ந்தது. இவ்வாறு இடம் பெயர்ந்து செல்பவர்களுக்கு உதவும்படி பைபிள் தேமா
தேசத்தின் மக்களுக்குக் கூறுகின்றது.

இடம் பெயர்ந்து மதீனம் சென்றவர்களும் மக்கா நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் இடம்
பெற்ற யுத்தத்தில் மக்காவிலிருந்து வந்த கேதார் கூட்டம் தோல்வி அடைந்து பெருமை
இழந்து செல்வதையும் குறிப்பிடப்படுகின்றது.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பத்தாயிரம் தோழர்களுடன் மக்காவுக்கு வந்து புனித
கஃபாவினுள் நுழைகின்ற சம்பவமும் விபரிக்கப்படுகின்றது. ஆகவே பைபிள் கூறும்
புகழுக்குரிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களாவர்.

இந்தியாவில் மக்களால் புனிதமாகக் கருதப்படும் சமய நூல்களிலும் இறுதித் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பற்றிய தீர்க்கதரிசனச் செய்திகள் காணப்படுகின்றன.
அல்குர்ஆன் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை தூதர்களுக்கெல்லாம் இறுதி
முத்திரை எனக் குறிப்பிடுகின்றது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால்
அவரோ அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும்
இருக்கிறார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்
33:40)

இதையே இந்தியாவிலுள்ள ரிக் வேதம் பின்வருமாறு கூறுகின்றது.
 

”சமுத்ரதுத்த அர்பன்” அந்த அராபியர் துதர்களுக்கெல்லாம் இறுதியாக இருப்பார். (ரிக்வேதம்
: 1:63:1)

இந்தியாவில் உள்ள மக்களால் ஆதி வேதம் என அழைக்கப்படும் ரிக்வேதத்தில் பாலைநிலமான
அராபியாவில் தூதர்களுக்கெல்லாம் இறுதி முத்திரை முஹம்மது(ஸல்) என உறுதி
செய்யப்படுவதை அவதானிக்கவில்லையா? சிந்திக்கவும் மேலும் அவதானிக்கவும்.

ஒரு மிலோச்ச புனிதமான ஆசாரியார் தமது சீடர்களுடன் தோன்றுவார். அவரது பெயர்
கதியையும் முன் வைத்துக் கூறுவர். நான் முகம்மது ஆகும். அந்த அரபு மஹா தேவரை (வானவர்
போன்றவரை) ”பஞ்சஹவ்யா”விலும் கங்கை நீரிலும் நீராட்டி அவரது அனைத்துப்
பாவங்களையும் கழுவி மனமார்ந்த பெருமதிப்பையும் பக்தியையும் முன் வைத்துக் கூறுவர்.
நான் உமக்கு கீழ்படிகின்றேன். மனித சமுதாயத்தின் பெருமையே! அரபுவாகியே! நீர், தான்
சாத்தானை ஒழிக்க ஒரு பெரும் படையைத் திரட்டி உள்ளீர். நீர் மிலேச்ச நாட்டு
எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பட்டவராகவும் உள்ளீர். நீர் அந்த மேலான
பரம்பொருளின் மீது பக்தி கொண்டவரும் அவனின் அம்சமுமாயிருக்கின்றீர். நான் உமது
அடிமை. உமது காலடியில் என்னை ஏற்றுக்கொள்ளும். (பவிஷ்ய புராணம் காண்டம்:
-3:3:5-8)

இந்தியாவிலுள்ள சமுதாயமே இவ்வசனங்களை அவதானித்து சத்திய நெறிநூலான அல்குர்ஆனை
அவதானிக்கக் கூடாதா? தூய்மையான நேர்வழியின் பக்கம் வரக்கூடாதா? சிந்தியுங்கள்.

கி.மு.6ம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களினால் மிக உயர்ந்த மனிதனாக கருதப்படும்.

கெளதம புத்தர் பின் வருமாறு உபதேசித்தார். நான் ஒரு புத்தர்(போதகர்) எனக்கு
முன்னும் பல புத்தர்கள் வந்து சென்றுள்ளனர். எனக்கு பின் இறுதிக் காலத்தில்
மைத்ரேயா தோன்றுவார் என முன் அறிவிப்புச் செய்தார். பாலி மொழியில் மைத்ரேயா
என்ற சொல்லின் பொருட் அருட் குணத்தின் அன்பின் வடிவம் என்பதாகும். அல்லாஹ்
அல்குர்ஆனில் இதே பொருளைக் குறிக்கும் அரபு சொல்லான ரஹ்மத்தன்லில் ஆலமீன்
(21:107) என இறுதி இறைத் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை அழைக்கிறான். ஆகவே
இந்த உண்மைகளை அவதானித்த பின்னாவது, அல்குர்ஆனை பார்த்து சிந்தித்து நேர்வழியின்
பக்கம் வரக் கூடாதா? ஏன் ஏக இறைவனை விடுத்து படைப்பினங்களை தெய்வமாகக் கொண்டு
வணங்க வேண்டும்.

ஹிஜ்ரி-1431 ஆண்டுகளுக்கு முன் 360 சிலைகளை தெய்வமாக வைத்து வழிப்பட்டது மக்கமா
நகர். அங்கு அறியாமையின் காரிருள் சூழ்ந்து மடமை மலிந்திருந்தது.
இச்சந்தர்ப்பத்திலேயே அல்லாஹ் அல்குர்ஆனை மனித சமூகத்திற்க அருட்கொடையாக அனுப்பி
வைத்தான். அல்குர்ஆனிலிருந்து பல விடயங்கள் முன் வைக்கப்படுவதை அவதானியுங்கள்.

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி
எச்சரிப்பராகவுமே அனுப்பியுள்ளோம். அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே
அனுப்பியுள்ளோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரா வந்த
சமுதாயத்தவரும்(பூமியில்) இல்லை.

இன்னும் அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தார்களானால் (விசனப்படாதீர்); இவர்களுக்கு
முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாக பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள்
அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும் ஆகமங்களுடனும், ஒளிவீசும் நெறிநூல்களுடனும்
வந்திருந்தார்கள். (அல்குர்ஆன் 35:24-25)

நிச்சயமாக இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;
நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மாரிக்கம் என்னும்) அறிவு
அவர்களுக்கு கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு)
மாறுபட்டனர்; எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ்
(அவரிகளுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன்: 3:19)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் புதிய ஒரு மார்க்கத்தினை அந்த அரபு
மக்களிடம் கொண்ட வரவில்லை. ஏற்கனவே உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள்
முன்வைத்த மார்க்கத்தினையே முன்வைத்தார்கள். இதனை பின் வரும் இறைவசனம்
விளக்குகின்றது.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன்
மார்க்கமாயிருக்கிறான்; ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும்,
இப்ராகிமுக்கும், மூசாவுக்கும், ஈசாவுக்கும் நாம் உபதேசித்தது என்னவென்றால்; “நீங்கள்
(அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்து
விடாதீர்கள்” என்பதையே, இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது
அவர்களுக்குப் பெரும் சுமமையாக தெரிகின்றது. நான் நாடியவர்களை அல்லாஹ் தன்பால்
தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அவனை) முன்னோக்குவோரை அவன் தன் பால் நேர்வழி
காட்டுகிறான். (அல்குர்ஆன் 42:3)

அறிவுமிக்க நெறிநூல் வழங்கப்பட்ட மக்களே, இறைவன் ஒருவனே; அவனுக்கு நிகராக எதுவும்
இல்லை. எல்லா இறைத் தூதர்களும் இதனையே போதித்தார்கள். ஷைத்தானே நமக்கு கற்சிலைகளை
வணங்க வழிகாட்டியவன் ஆவான். முன்னைய இறைத் தூதர்களுக்கு அனுப்பப்பட்ட
நெறிநூல்களும் இறைவனால் வழங்கப்பட்டவைகளாகும். ஆனால் அவற்றில் ஷைத்தானின் நச்சுக்
கருத்துக்களும், மனிதர்களின் மெளட்டீக யூகங்களும் உட்புகுந்து, அந்நெறி நூல்களை
மாசடையச் செய்துவிட்டன. நடைமுறைச் சாத்தியமில்லாத வேதாந்தங்கள் நிறைந்த வேதங்களாக
உருமாற்றப்பட்டு விட்டன. முன்னைய தூதர்கள், தமக்கு பின் இறுதியாக உங்களுக்கு
நேர்வழி காட்ட ஓர் இறைத் தூதர் வருவார் என முன் அறிவிப்பு செய்த இறுதித் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களாவர். ஆகவே, கறை படியாத சத்திய இறுதி இறை நெறிநூலான
அல்குர்ஆனின் பக்கம் வாருங்கள். முன்னைய வேதங்களில் இறைவனின் கருத்துகளும்,
ஷைத்தானின் கருத்துக்களும், இறைவனின் பெயரால் ஏமாற்றிப் பிழைக்கும் காலத்திற்கு
காலம் வாழ்ந்த மனிதர்களின் கருத்துக்களும் உட்புகுந்துள்ளன. ஒரு வேதத்தினுள் பல
வழிமுறைகள் இருக்க முடியுமா? இது ஒரே மார்க்கத்தில் பல முரண்பாடான மக்கள்
பிரிவுகளை தோற்றுவித்து பல கடவுள்கள் உருவாக வழி வகுத்து விடும் அல்லவா?
அறிவுமிக்க மக்களே, சிந்தியுங்கள். நேர்வழி பெற வாருங்கள்.

இறுதி நெறிநூலான அல்குர்ஆனில் அல்லாஹ்வின் (இறைவனின்) சில பண்புகளை பின்வருமாறு
குறிப்பிடுவதை அவதானியுங்கள்.

(நபியே!) நீர் கூறுவீராக; அல்லாஹ் அவன் ஒருவனே, அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை; அன்றியும், அவனுக்கு
நிகராக எவருமில்லை. (அல்குர்ஆன்: 112:1-4)

பல தெய்வக் கொள்கையுடையவர்களிடம் இந்த ஏக தெய்வ பண்புகளைக் கொண்ட இறைவசனங்கள்
தாக்கங்களை ஏற்படுத்தின. எதிர்ப்பையும் ஏற்படுத்தின. அன்று மக்கா நகரை சூழ
வாழ்ந்த வேதங்களை அறிந்திருந்த வேத அறிஞர்கள் முஹம்மது நபி(ஸல்) பற்றி முன்வைத்த
கருத்துக்களை அவதானியுங்கள். அக்காலத்திலேயே இச்செய்திகள் சரியாகப் பதிவு
செய்யப்பட்டவைகளாகும். இவற்றை ஸஹீஹான ஹதீஸ்கள் என அழைப்பர். இவ் உண்மைச்
செய்திகளில் இருந்து நபித்துவத்தின் முன் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முன்னைய
வேதங்களைப் பற்றி அறிந்தவர்களாக இருக்கவில்லை. ஜிப்ரீல் என்ற வானவரால் முதல்
இறைவசனம் இறக்கப்பட்டபோது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அச்சம் அடைந்தனர். ஹதீஸ்
சொல்வதை அவதானிப்போம். ஆயிஷா(ரழி) கூறியதாவது;

நபி(ஸல்) அவர்களுக்கு துவக்கத்தில் இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல
கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப்
பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது
அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்களின் தனித்திருந்தனர். தமது
குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கேயே தங்கியிருந்து)
வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டடிருந்தனர். அந்த நாட்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு
செல்வார்கள். (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தமது துணைவியர்) கதீஜா(ரழி)
அவர்களிடம் திரும்பி வருவார்கள். அதே போன்று பல நாட்களுக்குரிய உணவைக் கொண்டு
செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் சத்தியம் வரும்வரை நீடித்தது. (ஒரு நாள்)
ஒரு வானவர் அவர்களிடம் வந்து ஓதுவீராக என்றார். அதற்கவர்கள் நான் ஓதத்
தெரிந்தவனில்லையே! என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்நிலையைப் பின்வருமாறு விளக்கினார்கள்.

அவர் என்னைப் பிடித்து சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டி அணைத்தார். பிறகு என்னை
விட்டு விட்டு ஓதுவீராக என்றார்.நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது
முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டி அனைத்து
என்னை விட்டுவிட்டு மீண்டும் ஓதுவீராக என்றார். (அப்போதும்) நான் ஓதத்
தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி,
அணைத்து விட்டுவிட்டு,

படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை ‘அலக்’கில்
(கருவளர்ச்சியின் ஆரம்ப நிலை) இருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இரட்சகன்
கண்ணியமிக்கவன் என்றார். மேலும் ஆயிஷா(ரழி) கூறியதாவது; பிறகு இதையம்
படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதீன் மகள் கதீஜா(ரழி)
அவர்கள், நபி(ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்)
கதீஜா(ரழி)விடம் நடந்த செய்தியை தெரிவித்து விட்டுத் தமக்கு எதுவும் நேர்ந்து
விடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரழி)
அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ்
இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின் றீர்கள்.
(சிரமப்படவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக
உழைக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு)
உதவி புரிகின்றீர்கள் என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன்
பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் ‘வரகா’விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல்,
அசது என்பவரின் மகனும் அசது அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார்.

‘வரகா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும்
அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில்
அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண்
பார்வையற்ற பெரும் வயொதிபராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா(ரழி) என் தந்தையின்
சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வரகா
நபி(ஸல்) அவர்களிடம் இவர்தான் மூசாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ்(ஜிப்ரில்) ஆவார்
என்று கூறிவிட்டு, உமது சமூகத்தார் உம்மை உமத நாட்டிலிருந்து வெளியேற்றும்
சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்றும்
அங்கலாயித்துக் கொண்டார். (இன்ஷா அல்லாஹ் வரும்)

Previous post:

Next post: