நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

in 2010 ஜனவரி,பகுத்தறிவாளர்களே!

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!
அபூ அப்தில்லாஹ்
நவம்பர் தொடர் : 8
உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு என கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே உண்மையைலிசத்தியத்தைலிநேர்வழியை உள்ளது உள்ளபடி மிகச் சரியாக அறிந்து நடப்பவர்களுக்கே இறுதி வெற்றி என அபூ அப்தில்லாஹ்வாகிய நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன். சாதாரண விஷயங்களில் கூட உண்மையைக் கடைபிடிக்காத நீங்கள் உங்கள் பத்திரிகைக்கு ”உண்மை’ எனப் பெயரிட்டிருப்பது எதை உணர்த்துகிறது? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அந்நஜாத் நவம்பர் இதழில் ஜனவரி 2008ஒ இடம் பெற்ற ”பகுத்தறிவாளர்களே பகுத்தறிவைப் பகுத்துப் பார்த்தீர்களா? அபூ ஃபாத்திமா என்ற ஆக்கத்தை மீண்டும் வெளியிட்டிருந்தோம்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அக்கட்டுரையை திருவாளர் வெற்றியழகன் விமர்சித்திருக்கிறார் என்பதை ”பார்த்தீர்களா?” என்றுள்ளதை ”பார்த்திருக்கிறீர்களா?’ என்றும் ”அபூ ஃபாத்திமா’வை ”அயூ ஃபாத்திமா’ என்றும் திரித்து எழுதியுள்ளதிலிருந்து விளங்கலாம். பார்த்தீர்களா? என்பதற்கும் பார்த்திருக்கிறீர்ளா? என்பதற்கும் பெரியதொரு வேறுபாடு இல்லை. ஆயினும் இருப்பதை உள்ளதை உள்ளபடி எழுதி வினர்சிப்பதே முறையாகும். ஆனால் அபூஃபாத்திமாவை அயூஃபாத்திமா எனத் திரித்து எழுதி இருப்பது பெரும் தவறாகும். அவரது பெயரான வெற்றியழகன் என்பதை வெற்றியில்லா அழகன் என்று திரித்து எழுதினால் அவரால் ஜீரணிக்க முடியுமா?

அபூ ஃபாத்திமா என்ற பெயரையே அயூ ஃபாத்திமா எனத் தவறாக விளங்கிக் கொண்டவர் மற்றவற்றை எப்படி விளங்கி இருப்பார் என்பதை எளிதில் விளங்கலாம். இதற்குக் காரணம் என்ன? ஏற்கனவே ஒரு கொள்கையை அது தவறாக இருந்தாலும் தனது உள்ளத்தில் நிரப்பிக் கொண்டிருப்பவர் அதே நிலையில் பிரிதொரு கொள்கையை அது மிகச் சரியாக இருந்தாலும் அதை முழுமையாக உள்வாங்க முடியாது. நுனிப்புல் மேய்வதுபோல் அரைகுறையாக மட்டுமே விளங்குவார்.
உதாரணமாக ஒரு பத்திரத்தின் முழுக் கொள் அளவாகச் சாராயம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் அப்பாத்திரத்தில் அதே நிலையில் சுத்தமான பாலை ஊற்றினால் அப்பாத்திரம் அதை உள் வாங்குமா? அல்லது வெளியே தள்ளுமா? சுத்தமான பாலும் சாராயமாக மாறுமே அல்லாமல் பாலைப் பார்க்க முடியாது. பாலை அப்பாத்திரம் கொள்வதாக இருந்தால் முதலில் அப்பாத்திரத்திலுள்ள பாலை அப்பாத்திரம் ஏற்கும். திருவாளர் வெற்றியழகன் செய்த பெருந்தவறு அவரது உள்ளத்தில் நிறைந்திருக்கும் நாத்திகக் கொள்கையை அப்படியே வைத்துக்கொண்டு நுனிப்புல் மேய்வது போல் எமது இந்த ஆக்கத்தை மேல் எழுந்தவாரியாகப் பார்வையிட்டுள்ளார். அதனால்தான் பகுத்தறிவாளர்களைக் கடுமையாகவும், கொடுமையாகவும் திட்டித் தீர்த்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்.
தலைசிறந்த மருத்துவராக, பொறிஞராக, விஞ்ஞானியாக இப்படி உலகியல் துறைகளில் பெரும் அறிவு பெற்றவராகவும், அனுபவசாலி யாகவும் சிறந்து விளங்கும் அறிவு ஜீவிகளில் பலர் மனிதக் கரங்களால் செதுக்கப்பட்ட கற்சிலைக்கு முன்னால் பக்தி சிரத்தையொடு வணங்கி வழிபடுவதை பார்க்கத்தானே செய்கிறோம். வணங்கும் சிலையும் கல்லுதான். மிதிக்கும்படியும் கல்லுதான். கல்லைத் தெய்வமாக வணங்குவது காட்டுமிராண்டித்தனம், முட்டாள்தனம் எனப் பெரியார் சொன்னது அந்த அறிவு ஜீவிகளுக்கு எப்படித் தெரிந்தது? பெரும் மேதைகளான தங்களைக் காட்டுமிராண்டி என்றும், முட்டாள் என்றும் கடுமையாகவும், கொடுமையாகவும் திட்டித் தீர்க்கிறார் என்று தானே விளங்கினார்கள்; சொன்னார்கள்.

இதற்குக் காரணம் என்ன? உலகில் துறைகளில் அந்த அறிவஜீவிகள் பெரும் பெரும் ஆய்வுகள் செய்து அவற்றிலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார்களே அல்லாமல், தங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும் மூடக் கொள்கையான சிலை வணக்கத்தை உள்ளத்திலிருந்து வெளியேற்றி விட்டு, பெரியாரின் கருத்தைப் பகுத்துப் பார்க்க முற்பட்டதில்லை. அதனால்தான் உலகியல் துறைகளில் ஜாம்பவானகளாக இருந்தும் பல சிலைக் கடவுள் கொள்கையில் மூடர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த பரிதாப நிலையைத்தான் போலிப் பகுத்தறிவாளர்களிடமும் நாம் பார்க்கிறோம். அவர்களது உள்ளங்களில் நாத்திகக் கொள்கை நிறைந்து போயிருக்கிறது. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டு மக்களின் நடைமுறையிலிருக்கும் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும் அனைத்துக் கோள்களையும், அவற்றிலுள்ளவற்றையும், பகுத்தறிவற்ற ஜீவராசிகளையும், பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்து, உணவளித்து, நிர்வகித்து வரும் இணை, துணை இல்லாத் தன்னந்தனியனான ஓரிறைவனைப் பற்றி, இந்த நாத்திகர்கள் பெரும் பெரும் மேதைகளாக. சாதனையாளர்களாக ஏற்றிப் போற்றும் அறிவு ஜீவிகளைவிட பன் மடங்கு மேதைகளான, சாதனையாளர்களான ஏப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ், முஹம்மது போன்ற ஆன்மீகத் துறையில் ஜாம்பவான்களான மேதைகள் அறிமுகப்படுத்திய அந்த ஒரிறைவனைப் பற்றிய கருத்துக்களை தங்கள் உள்ளத்தில் படிந்திருக்கும் நாத்திகக் கொள்கையை சிறிது நேரம் வெளியேற்றி விட்டுப் பகுத்துப் பார்க்க முற்பட்டதில்லை. அதனால்தான் தங்களைப் பகுத்தறிவாளர்கள் எனப் பீற்றிக் கொண்டாலும் அகிலங்களைப் படைத்த தன்னந்தனியான ஓரிறைவனைப் பற்றிய அறிவில் மூடர்களாகவே இருக்கிறார்கள். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது போல், சொல்பவற்றை உள்வாங்கிச் சிந்திக்காமல் நுனிப்புல் மேய்வது போல் அரை குறையாகச் சிந்திப்பவனுக்கும் புத்தி மட்டு தான்.

இந்த அடிப்படையில்தான் ”இவர், பகுத்தறிவாளர்களைக் கடுமையாகவும், கொடுமையாகவும் தம் கட்டுரையில் திட்டித் தீர்த்திருக்கிறார். ”பகுத்தறிவு’ என்பது பற்றியும் தாறுமாறான முறையில் தரம் தாழ்ந்து எழுதி கடவுள் மறுப்பாளர்களைத் தாக்கியும் ஏசியும் கிறுக்கியிருக்கிறார்’ என்று தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார் திருவாளர் வெற்றியழகன்.

மனிதக் கற்பனையில் உண்டான பொய்க் கடவுள்கள் அனைத்தையும் திட்டமாக மறுத்து அசிலமனைத்தையும் படைத்த ஓரிறைவனை மட்டும் ஏற்று, அந்த இறைவனுக்கு அடிபணிந்து நடப்பவர்களை காட்டுமிராண்டி என்றும் முட்டாள்கள் என்றும் அயோக்கியர் என்றும் இந்தப் போலிப் பகுத்தறிவாளர்கள் திட்டித் தீர்ப்பதைவிடக் கடுமையாகவும், கொடுமையாகவும் அப்படி என்ன எழுதி விட்டோம்? ‘அறிவற்ற வாதம்’ பகுத்தறிவை முறைப்படி விளங்காத மூடர்கள்! விவேகமான செயலாக முடியுமா? ‘நுண்ணறிவுடன் பகுத்தறிய முடியாதவர்கள்’ ‘எந்த அளவு அறிவீனர்கள்’, ”அறிவிலி’ இவை தான் நாம் எழுதியுள்ளவை. இவையா பகுத்தறிவாளர்கள் என பீற்றிக் கொள்பவர்களை கடுமையாகவும் கொடுமையாகவும் திட்டித் தீர்த்திருப்பது?

அப்படியானால் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களான புனிதர்களான ஏப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ், முஹம்மது போன்ற எண்ணற்றவர்களை, அவர்களே பகுத்தறிவுக்குள் வராத ஒரே ஒரு இறைவனைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவனை மட்டுமே வணங்க வேண்டும். அந்த இறைவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்று மக்களுக்குப் போதித்த காரணத்தால், அந்த மாபெரும் மேதைகளை, ஆன்மீக அறிவில் ஜாம்பவான்களான, நாத்திகத்தைப் போதித்த அறிஞர்களை விட பல மடங்கு உயர்வான, மேலான நற்குண சீலர்களை, போதித்தபடியே நடந்து காட்டிய செயல்வீரர்களை, உத்தமர்களை காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள், முட்டாளர்கள் எனத் திட்டித் தீர்ப்பது எந்த வகையைச் சேர்ந்தது என திருவாளர் வீரமணியும், திருவாளர் வெற்றியழகனும் விளக்குவார்களா?

அடுத்து, ‘பகுத்தறிவு’ என்பது பற்றியும் தாறுமாறான முறையில் தரம் தாழ்ந்து எழுதி இருப்பதாகச் சாடியிருக்கிறார் திருவாளர் வெற்றியழகன்.
பகுத்தறிவு பற்றி அப்படி என்ன தரம் தாழ்ந்து எழுதி இருக்கிறோம். பகுத்தறிவின் எதார்த்த நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளோம். பகுத்தறிவும் குறைவான அறிவு தான். ஐம்புலன்களைக் கொண்டு கிடைக்கும் அறிவைக் கொண்டு மட்டுமே பகுத்தறிவ வேலை செய்யும். ஐம்புலன்களுக்குள் கட்டுப்படாதவற்றை பகுத்தறிவும் அறிய முடியாது என்றே விளக்கி இருந்தோம். குறிப்பிட்ட எடை நிறுக்கும் தராசில் அந்தக் குறிப்பிட்ட எடைக்கு அதிகமான எடையை நிறுக்க முற்பட்டால் அந்த தராசு தவறான எடையையே காட்டும். அதேபோல் பகுத்தறிவுக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லைக்கு அப்பாற்பட்ட பொருள் பற்றி பகுத்தறிய முற்பட்டால் அது தவறான முடிவைத் தான் தரும். அது வழிகேட்டிலேயே இட்டுச் செல்லும் என்றே விளக்கி இருந்தோம். இது எப்படி பகுத்தறிவு பற்றி தரம் தாழ்ந்து எழுதியதாகும்?
ஒரு வேளை போலி பகுத்தறிவாளர்கள் பகுத்தறிவுக்குள் அடைபடும் பொருள்கள் மட்டுமே உள்பொருள்கள்; பகுத்தறிவுக்குள் அடைபடாத பொருள்கள் இல்பொருள்கள் என அவர்களக்கென்று விதி அமைத்திருப்பதால், பகுத்தறிவையே இறுதி எல்லையாகக் கொண்டிருப்பதால், அதற்கப்பால் ஒன்றுமே இல்லை என நம்பி பகுத்தறிவையே வழிபடும் தெய்வமாக லி கடவுளாக நம்பிச் செயல்பட்டு மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்பதால், அந்த பகுத்தறிவை விமர்சித்துள்ள நம்மை ஜீரணிக்க முடியாமல் ஆத்திரப்படுகிறார்கள் போலும். சிலைகளை கடவுளாக நம்பி வழிபடும் சிலை வணங்கிகளுக்கு சிலைகள் பற்றி மூட நம்பிக்கையை தெளிவுபடுத்தும்போது அவர்களுக்கு ஆத்திரம் வருவதுபோல் பகுத்தறிவை கடவுளாக கொள்ளும் போலி பகுத்தறிவளார்களுக்கும் ஆத்திரம் பீரிட்டு வருகிறது போலும். இந்தப் போலிப் பகுத்தறிவாளர்களும் ஒரு காலத்தில், வழிபடும் தெய்வமும்ட கல்லுதான்; மிதிக்கும் படியும் கல்லுதான் என முன்காலத்தில் தோன்றி மறைந்த சிலரின் கற்சிலையை வணங்குவதை விட்டார்களே அல்லாமல் இவர்கள் பெரும் மேதைகளாகக் கருதும், சமீப காலத்தில் தோன்றி மறந்தவர்களுக்குச் சிலை வடித்து மாலை மரியாதை செய்து வழிபட்டு வரத்தானே செய்கிறார்கள். போலி சாமி சிலைகளைவிட இவர்கள் சமீபத்தில் செதுக்கி நிலைநாட்டியுள்ள சிலைகள்தான் தமிழகத்தில் மலிந்து காணப்படுகின்றன. போலி பகுத்தறிவாளர்களின் பரிதாப நிலை இதுதான். இன்னும் போலிப் பகுத்தறிவாளர்கள் வெளிப்படுத்தியுள்ள மூட நம்பிக்கைகளை அடுத்தடுத்த இதழ்களில் அலசுவோம்.

 

Previous post:

Next post: