ஷியாக்களின் பகல் வேசம்…

in 2010 அக்டோபர்,பொதுவானவை

  அப்துல்லாஹ் இப்னு ஸபாவிலிருந்து அஹமது நிஜாத் வரை!

 S.ஹலரத் அலி, ஜித்தாஇன்றைய ஈரானிய அதிபர் அஹமது நிஜாத் அவர்கள் தன்னை உலக முஸ்லிம்களின் காவலன் என்ற தோற்றத்தை மீடியாக்களில் ஏற்படுத்தி வருகிறார். கடந்த 50 வருடங்களாக அன்றாடம் போராடும் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பது போன்ற பாவனை காட்டப்படுகிறது. உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான “அல் அக்ஸா’ பைத்துல் முகத்தஸை, யூதர்களிடமிருந்து விடுவிக்க தினமும் தங்களை களப்பலியாக்கி கொண்டு வருவது பாலஸ்தீன முஸ்லிம்கள் மட்டுமே. ஏனைய முஸ்லிம் நாடுகள் வழமை போல் தங்கள் அமைப்பின் கூட்டத்தைக் கூட்டி “வன்மையாக கண்டிக்கிறோம்’, “கடும் கண்டனத்’ தீர்மானத்தை நிறைவேற்றி யூதர்களை எதிர்க்கிறார்கள். ஈரானும் ஒரு முஸ்லிம் நாடல்லவா. அதை அவ்வப்போது நிரூபிப்பதற்காக பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு கொடுப்பது போல், யூத, அமெரிக்க எதிர்ப்பு எனும் பாசாங்கு நாடகத்தை உலக அரங்கில் நடத்தி வருகிறது. ஈரானிய அதிபர் அஹ்மத் நிஜாத் அவர்கள் “யூதர்களின் இஸ்ரேல் நாட்டை உலக வரை படத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், யூதர்கள் மனிதர்களுக்கெதிரான விஷக்கிருமிகள்’ என்ற பலவாறு எதிர்ப்பை காட்டி ஈரானை இஸ்லாமிய அரசாக்கப் பாடுபடுகிறார். இங்குள்ள நமது ஒன்றுமறியா பப்பா முஸ்லிம்களும் ஈரானை தூக்கி வைத்து ஆடுகின்றனர்.

முன்பு “விடியல் வெள்ளி’ குலாம் முஹம்மது “இமாம் கொமைனியின் இஸ்லாமிய அரசு’ புத்தகத்தை வெளியிட்டு தனது விசுவாசத்தை வெளிக்காட்டினார். இவர் போட்ட ஈரான் பாதையில் இளைஞர்கள் சிலர் பயணிக்கிறார்கள். உண்மையில் ஈரானின் ஷியா கொள்கை பற்றி சரிவர புரியாத காரணத்தால் ஈரான் மயக்கம் இளைஞர்களை ஆட்கொள்கிறது. உதாரணமாக “பாலஸ்தீன் மக்களுக்கு ஈரான் உதவி செய்து “அல் அக்ஸா” பள்ளியை மீட்க தொடர்ந்து குரல் கொடுக்கிறது’ என்று நம்புகிறார்கள். இது உண்மையா? “அல் அக்ஸா’- ஷியா கொள்கை என்ன? ஓர் அலசல்.
எங்கே இருக்கிறது அல்அக்ஸா?- பாலஸ்தீனிலா? இல்லை… இல்லை…

இன்றைய ஈரானின் மிகப்பெரும் மார்க்க மேதையாக மதிக்கப்படுபவர் இமாம் ஜாபர் முர்த்ததா அல்அமலீ. இவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் “எங்கே இருக்கிறது அல்அக்ஸா?’ இவர் எழுதிய மற்றொரு புத்தகம் “நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாறு’

பைத்துல் முகத்தஸ் பள்ளியை பற்றி அவர் எழுதுகிறார். “உண்மையான அல் அக்ஸா பள்ளி பாலஸ்தீனில் இல்லை. அது சுவனத்தில் உள்ளது. சுவனத்தில் உள்ள பள்ளியைத்தான் நபி(ஸல்) அவர்கள் பார்த்தனர். இங்குள்ள அல்அக்ஸா பள்ளி ஒரு போலியானது. இதற்காக ஷியாக்கள் இரத்தம் சிந்தத் தேவையில்லை; என்று கூறி யூதர்கள் அல்அக்ஸா பள்ளியை உடைக்க உதவி செய்கிறார். இதுதான் ஷியா இமாம்களின் நிலைப்பாடு.

இது ஏதோ தனிப்பட்ட ஒரு இமாமின் கருத்து என்று எவரும் தட்டிவிட முடியாது. ஏனெனில் “எங்கே இருக்கிறது அல்அக்ஸா?’ உண்மையான அல்அக்ஸா சுவனத்தில் உள்ளது. பாலஸ்தீனின் அல்ல’ என்று கூறியதால் இப் புத்தகத்தை எழுதிய அல்அமலீ இமாமை ஈரானிய அதிபர் அஹமத் நிஜாத் பாராட்டி பரிசளித்து கெளரவித்துள்ளார். சிறந்த புத்தகம் என்ற பரிசினையும் அது பெற்றது.

நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் “நபி(ஸல்) அவர்கள் இரவுப் பயணத்தின்போது சுவனத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளி வந்தார்கள். இந்தப் பள்ளியை சூழ உள்ளதை அல்லாஹ் பாக்கிய முள்ளதாக ஆக்கினான்’ -அல் அமலீ 3/106.

“உமர் பின் கத்தாப்(ரழி) அவர்கள் பாலஸ்தீனுக்கு விஜயம் செய்த பொழுது அன்று “அல்அக்ஸா’ என்ற பள்ளியே இருக்கவில்லை. குறிப்பாக ஜெருசலத்தில் “அல்அக்ஸா’ என்று எதுவுமே அழைக்கப்படவில்லை”
அல்அமலீயின் நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு’ (3/137-2006 (3/137-2006 Islamic Institute of Studies)

கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே…
மற்றொரு ஈரான் இமாம் அல் மஜ்லீஸி ஒரு செய்தியை தனது நூலில் குறிப்பிடுகிறார். அபூ அப்தில்லாஹ்(அலை) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வுடைய பள்ளிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எது என்று கேட்டதற்கு மக்காவின் ஹரம் ­ரீப், மற்றும் நபியின் பள்ளி’ என்று பதிலளித்தார்கள், “நான் உங்களுக்கு என்னை அர்ப்பணம் செய்கிறேன், சிலர் “அல் அக்ஸா’ பள்ளியும் சிறப்பானது என்று கூறுகிறார்களே!” என்று கேட்டேன். அதற்கு இமாம் அவர்கள், “ஆம்! சிறப்பானது தான் அது சுவனத்தில் உள்ளது. இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் பார்த்தனர் என்று பதிலளித்தனர். நான் மீண்டும் சிலர் “அல் அக்ஸா பள்ளி பாலஸ் தீனில் ஜெருசலத்தில் இருக்கிறது என்கிறார்களே?’ என்று கேட்டவுடன் இமாம் கூறினார் “இங்குள்ள கூஃபா (Kufa) பள்ளி அதைவிட எவ்வளவோ சிறந்தது’
-அல்மஜ்லீஸின் “பிகார் அல் அன்வார்-90/22

பாலஸ்தீனில் உள்ள “அல்அக்ஸா’வை இடிப்பதற்கு யூதர்களுக்கு பச்சை கொடி காட்டிவிட்டனர் ஷியா இமாம்கள். இதுதான் உண்மை நிலவரம். மற்றபடி உலக முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு அரசியல் பண்ணுகிறார் அகமது நிஜாத். இமாம்களை மீறி ஈரானில் எதுவும் இல்லை. பொதுவாக மூன்று இடங்களை மட்டுமே சிறப்பானதாக கருதுகிறவர்கள் ஷியாக்கள்.

1. அல்லாஹ்வின் கஃபா, 2.மஸ்ஜிது நபவீ, 3.கர்பலா, நேர்ச்சை செய்து போகக்கூடிய மூன்றாவது பள்ளி கர்பலா மட்டுமே. இதுதான் ஷியா முஸ்லிம் இமாம்களின் கருத்து.

மக்கா, மதீனாவை விட அதிக நன்மை தரும் கர்பலா கப்ர்
இமாம் அபூ அப்தில்லாஹ் கூறினார்கள், எவரொருவர் “அரஃபா’ நாளன்று ஹுசைன் அவர்களின் கப்ரை தரிசிக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான நன்மைகளை எழுதி திருப்தி அடைகிறான். இந்த நன்மைகளில் 10 லட்சம் ஹாஜிகள் நன்மை, ஆயிரம் அடிமைகளை விடுவித்த நன்மை. அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்யும் ஆயிரம் குதிரைகளின் எடைக்கு எடை நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். அவ்வடியானை மலக்குகள் புகழ்ந்து “நீங்கள் நேர்வழி சென்றவர்கள்’ என்று வாழ்த்துகிறார்கள். இதற்கும் மேலாக அவர்களை அல்லாஹ் தன் அர்ஷிக்கு மேல் உயர்த்தி அவர்களை தூய்மைப் படுத்துவான். இதை “கரோபியா’ என்று பூமியில் அழைக்கப்படும். வஸாஇல் அல்ஷியா 10/360

ஆயத்துல்லாஹ் அப்துல் ஹுசைன் கூறுகிறார்கள், அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையினால், ஹுசைன் அவர்கள் கபுரை கஃபத்துல்லாஹ்விற்கு மாற்றாக அல்லாஹ் கட்டியுள்ளான். எவர்கள் மக்கா வந்து அமல் செய்ய சக்தி பெறாத மக்களுக்காக ஹுசைன் அவர்களின் கர்பலா கப்ர் உள்ளது. இங்கு ஜியாரத் செய்யும் மக்களுக்கு கூலி ஹஜ் செய்யும் ஹாஜிகளின் நன்மையைக் காட்டிலும் அதிகமாக எழுதப் படுகிறது. ( அல் தவ்ரா அல் ஹுஸைனீயா P51)

“அல்லாஹ் தன் அருள் கண்களைக் கொண்டு ஹுசைன்(அலை) அவர்களின் கப்ரை தரிசிக்க வந்த அடியார்களை முதலில் பார்க்கின்றான். அதன் பின்பு அரபா ஹாஜிகளை நோக்குகிறான். ஏனெனில் நாமெல்லாம் விபச்சாரத்தில் பிறந்த வர்களல்ல. ஆனால் அரஃபாவில் நிற்கும் ஹாஜிகளோ விபச்சாரத்தின் சந்ததிகள். ஆகவே அல்லாஹ் அரஃபா நாளன்று நம்மை முதலில் பார்ப்பது’ (வஸா இல் அல்ஷியா10/361)

“முத்ஆ’ எனும் விபச்சாரத்தை இன்றுவரை இபாதத்தாக நடைமுறைப்படுத்தி சந்ததிகளை பெருக்குபவர்கள் ஷியாக்கள் என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவும்.

ஆயத்துல்லாக்களின் கர்பலா காமெடி கலாட்டா
இமாம் அல்ஜாபர் அல்சாதிக் கூறினார் “காஃபத்துல்லாஹ்விற்கு கீழேயுள்ள பூமி, மற்ற இடங்களைப் பார்த்து பெருமையடித்துக் கூறியதாம், “நான்தான் புனிதமான பூமிக்கு தகுதியுள்ளவன். ஆகவே எனக்கு மேலே காஃபா கட்டப்பட்டுள்ளது. இந்த புனிதமான அபயமளிக்கப்பட்ட என்னை நோக்கியே மக்கள் வருகிறார்கள்’. இதைக் கேட்டு அல்லாஹ் கோபமடைந்து கூறினான். “உனக்கும் கர்பலா மண்ணுக்கும் உள்ள மகத்துவம் எவ்வளவு என்றால் ஒரு ஊசியை கடல் நீரில் முக்கி எடுத்தால் அதில் எவ்வளவு இருக்குமோ அவ்வளவுதான் காஃபா மண்ணின் பெருமை. ஆனால் கடலளவு மகத்துவம் வாய்ந்தது கர்பலா மண். இதை புரிந்து கொண்டு அடக்கமாக நடந்து கொள். இனி இதுபோல் தொடர்ந்து பெருமையடித்தால் உன்னை அப்படியே நிலத்தில் ஆழ்த்தி நரக நெருப்பில் போடுவேன்’ என்று அல்லாஹ் எச்சரித்தான். – காமில் அல்ஜியாரத்-P 270
– அல்மஜ்லிஸியின் “பிகார் அல்அன்வார்’ 101/190
( – ஹக் அல் ஃயகீன் -P 145)

கர்பலா மகிமை இன்னும் முடியவில்லை. இமாம் அபூ அப்தில்லாஹ் சொன்னதாக அல்கலீனி அறிவிக்கிறார்.

“எவரொருவர் அரஃபா நாளன்று ஹுசைன் அவர்களின் கபுரடிக்கு செல்கிறார்களோ அவர்கள் மீது புராத் நதியின் நீர் பொழியப்படுகிறது. அவர்களின் ஒவ்வொரு காலடி சுவடுகளுக்கும் கணக்கற்ற ஹாஜிகள் நன்மை கொடுக்கப்படு கிறது. இவர்களே வெற்றி பெற்றவர்கள்.
ஃபுரு அல்காஃபி 4/580

ஷியா முகமது சாதிக் அல்சத்ர் கூறுகிறார். “காஃபத்துல்லாஹ்வை விட அலி(ரழி) அவர்களின் அடக்கஸ்த்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்காவில் செய்யும் வணக்க வழிபாடுகளைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது. அலி (ரழி) அவர்கள் ஹுசைன்(ரழி) அவர்களை விடச் சிறந்தவர்கள், அதாவது கர்பலா காஃபாவை விடச் சிறந்தது என்பது போல்’.
(அல்மஸ்அலா(9)P 5 மின் கஸரத், அல் மஸாயீல்)

இமாம் அல் கூஃயீ தனது “மின்ஹஜ் அல் ஸாலீஹீன்’ நூலில் கூறுகிறார். “அலீ(ரழி) அவர்களின் பள்ளியில் தொழுவது இரண்டு லட்சம் நன்மைகள் பெற்றுத்தரும்; நபி(ஸல்) பள்ளியில் தொழுதால் பத்தாயிரம் நன்மைகள் மட்டும் கிடைக்கும். ஆஸ்கார் ரகுமான் அடிக்கடி கர்பலா போவதன் காரணம் தெரிகிறதா? அதிக நன்மைகளை அள்ளவே தவிர வேறில்லை. “கர்பலா கவாலி ஹிட்ஸ்” ஆல்பம் வெளியிடலாம்.

ஈரான் ஷியா இமாம்கள் எந்தளவு மக்கா, மதீனாமேல் மதிப்பு வைத்துள்ளனர் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்அக்ஸா எனும் பைத்துல் முகத்தஸ் பள்ளியை யூதர்களிடமிருந்து விடுவிக்க இவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. இருப்பினும் கூட்டத்தோடு கூட்டமாக கோசம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஷியாக்கள் தங்களை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டாலும் இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் வெகுதூரம். அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதனின் வாரிசுகளே இன்றைய ஷியாக்கள். இன்றைய ஈரான் அதிபர் யூத பெற்றோர்களுக்குப் பிறந்து நான்கு வயதிருக்கும்பொழுது இஸ்லாத்திற்கு வந்ததாக “தி டெய்லி டெலிகிராப்’ செய்தி வெளியிட்டது. இதை அதிகாரப்பூர்வமா யாரும் மறுத்ததாக தகவல் இல்லை.

பிற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்களின் பின்புலத்தை நாம் ஆராய வேண்டிய தில்லை. ஏனெனில் நாம் அனைவரும் அப்படி வந்தவர்களே! ஆனால் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதன் மதீனா வந்து இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம் என்ற பெயரில் முஸ்லிம்களை இரண்டாக முதன் முதலில் பிரித்தவன். அலி (ரழி) அவர்கள் மீது அல்லாஹ் இறங்கியுள்ளான். ஆட்சியாளர்கள் இறைவன் அம்சம் பொருந்தியவர்கள். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற யூத, கிருஸ்தவ, ஜொராஸ்டிர கொள்கையை கலந்து முஸ்லிம்களை பிரித்தவன். இன்றைய ஷியாக்கள் இவனது கொள்கையை கர்பலா கபுரடியில் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் தாங்கள்தான் உண்மையான முஸ்லிம்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இந்த விளம்பரத்தின் கள நாயகராக இன்று காட்சி தருபவர் ஈரான் அதிபர் அஹமது நிஜாத் அவர்கள். இவரை தமிழக முஸ்லிம் பத்திரிக்கைகள் சில இஸ்லாத்தின் காவலராக காட்சிப் படுத்துகின்றன. ஆகவே அடையாளம் காட்டுகின்றோம்.

அல்லாஹ்வின் வீட்டில் பிறந்த அலீ(ரழி) மகனார்.
ஷியாக்கள் அலி(ரழி) அவர்களை எந்த அளவுக்கு உயர்த்துகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவம். நான் Saudi Aramco Project ல் கடந்த வருடம் பணி செய்தேன். தலைநகர் ரியாத்திலி ருந்து 200 கி.மீ. தொலைவில் Khurais என்ற இடத்தில் பெட்ரோல் எடுப்பதற்காக ஆரம்ப கட்ட வேலைகள் நடந்தன. அப்பொழுது ஒரு செளதி இளைஞர் பொறியாளர் நட்புடன் பழகினார். என் பெயர் அலி என்று தெரிந்ததும் நெருங்கிய நண்பரானார். பிறகு தான் அவர் ஒரு ஷியா முஸ்லிம் என்று அறிந்து கொண்டேன்.

ஒரு முறை அவர் என்னிடம் கேட்டார். அலி (ரழி) அவர்கள் எங்கு பிறந்தார்கள்? மக்காவில் என்று பதிலளித்தேன். மக்காவில் எந்த இடத்தில் பிறந்தார்கள் தெரியுமா? அலி(ரழி) அவர்களை அவர்கள் தாயார் பாத்திமா அவர்கள் காஃபத்துல்லாஹ் உள்ளே உள்ள அறையில் பெற்றெடுத்தார்கள் என்று கூறினார். நான் உடனே அவரிடம் காஃபத்துல்லாஹ் என்ன பிரசவ ஆஸ்பத்திரியா? (Labour Ward)  இதற்காகத்தான் அல்லாஹ் கட்டினானா? அலி (ரழி) தாயாருக்கு மக்காவில் பிரசவிக்க வேறு இடமே கிடைக்கவில்லையா?

அல்லாஹ் புனிதமான தூய்மையான இடம் என்று சொல்லி உள்ளான். அதில் குழந்தை பெற்று நஜீஸ் ரத்தம் கொட்டி அசுத்தம் பண்ணலாமா? என்று கேட்டதும் அந்த ஷியா நண்பருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. என்னுடைய நம்பிக்கையை கேலி செய்கிறாய் என்று சப்தம் போட்டார். செளதியில் உள்ள ஷியா முஸ்லிம்களே இப்படி இருக்கும்போது ஈரான் ஷியாக்களை சொல்ல வேண்டியதில்லை. செளதி ஷியா நண்பர் சொல்ல வந்த செய்தி அலி(ரழி) அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அல்லாஹ்வின் வீட்டிற்குள் பிறந்தவர்கள், அல்லாஹ்வின் மகன், கிருஸ்துவர்கள் இயேசுவை மகன் என்கின்றனர். யூதர்கள் உஜைரை மகன் என்கின்றனர். (9:30) யூதர்கள் வழியில் ஷியாக்களும் அலி(ரழி) அவர்களை வரம்பு மீறி ஆராதிக்கின்றனர். இந்த அலீ(ரழி) ஆராதனை பாரம்பரிய இமாம்களிடம் இன்றும் தொடர்கிறது.

நமது தமிழக தரீக்கா முஸ்லிம்களிடமும் இந்நம்பிக்கை வேறூன்றியுள்ளதை அப்துல் காதிர் ஜீலானியைப் பற்றி மிகைத்து தங்கள் பயான்களில் சொல்வதை நாம் பார்த்திருப்போம். நபி(ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவுப் பயணம் (இஸ்ரா) சென்று அல்லாஹ்விடம் உரையாடினார்கள். அப்பொழுது அல்லாஹ் கூறினானாம். “முஹம்மதே! மெதுவாகப் பேசுங்கள்; முகைய்ய தீன் தொட்டியில் உறங்குகிறார். அல்லாஹ்வுக்கு பிள்ளை அர்ஷில்-நஃவூது பில்லாஹ்! இது ஷியாக்களினால் இங்கு ஊடுருவிய தாக்கம்.

தஜ்ஜாலை பின்தொடரும் 70,000 ஈரான் இஸ்பஹான் யூதர்கள்
நபி(ஸல்) அவர்கள் கூறிய தீர்க்க தரிசன செய்தியை நாம் மனதில் கொள்ள வேண்டும். மஷீஹுத் தஜ்ஜாலை 70,000 பாரசீக போர்வை அணிந்த இஸ்பஹான் யூதர்கள் பின் தொடர்வார்கள். முஸ்லிம்.

இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் “தயாலிச’ (வீழிதீழியிஷ்விழி) என்ற சொல்லை பயன்படுத்துகிறார் கள். பன்மை தய்லாசன் (Tayalisa) இந்த ஆடையை இன்றும் ஈரானில் உள்ள யூதர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த துண்டு வெட்டப் பட்டதோ தைக்கப்பட்டதோ அல்ல. (இஹ்ராம் துணி போன்று) இஸ்பஹான் நகரின் ஒரு பகுதி தான் “யஹுதியா’ கிராமம். யூதர்கள் முன்பு பெருமளவில் வாழ்ந்து வந்தனர்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரி நூலில் கூறுகிறார்கள்: இஸ்பஹான் வரலாறு பற்றி அபூ நயீம் இஸ்பஹானைச் சேர்ந்த கிராமமே “யஹூதியா’ ஏனெனில் இங்கு யூதர்கள் மட்டுமே பெருமளவில் வாழ்ந்து வந்தனர்.
எகிப்திய இளவரசர் அயூப் பின் ஜியாது இருந்தபொழுது அல்மஹ்தி அல் மன்சூர் அவர்கள் எகிப்தியர்களையும், பிற முஸ்லிம்களையும் “யஹூதியா’ வின் ஒரு பகுதியில் குடியமர்த்தினார்கள்.

இன்றைய ஈரான் அதிபர் தந்தையும் (Tayalisa) “சொர்ஜியன்’ என்னும் (தயாலிஸ) “தல்லித்’ துணி நெய்யும் நெசவாளி என்று பத்திரிகைகள் கூறுகின்றன. எனவே இன்றைய இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போடும் எதிர்ப்பு நாடகங்களை முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஈரானுக்கு தேவையான அணு ஆராய்ச்சி சாதனங்களை கொடுத்தவர்கள் அனைவரும் அமெரிக்க, ஐரோப்பிய யூதர்களே! தற்போது ஈரானின் அணு ஆய்வை எதிர்ப்பது போல் அனைவரும் கூச்சல் போட்டு தடை செய்வதாக மிரட்டுகின்றனர். இந்த பயம் காட்டும் வேலை ஈரானுக்கல்ல; ஈரானை பின் தொடர்ந்து பிற அரபு நாடுகளும் அணு ஆய்வுப் பணியில் இறங்கிவிடக் கூடாது என்று மறைமுக மிரட்டல் விடுகின்றனர். ஈரானின் அணு ஆயுதம் தாக்கப்போவது இஸ்ரேலை அல்ல. அது அரபு நாடுகளை மட்டுமே என்ற ரகசியம் அமெரிக்காவிற்கு தெரியும். இஸ்ரேலுக்கும் தெரியும். அப்பாவி முஸ்லிம்கள் ஈரானின், அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு நாடகங்களை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வசனத்தை இங்கு நினைவூட்டுவது சாலச் சிறந்ததாக கருதுகிறோம்.

அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள். (60:2)

ஆசிரியர் : ஷிஆக்களின் வழிகேட்டைத் தெளிவாக விளங்கி, அவர்களது வலையில் சிக்காமல் இருக்க முஸ்லிம்களை எச்சரிக்கிறோமே அல்லாமல், அவர்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பது நமது நோக்கமல்ல; அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கிறான். (பார்க்க. 42:14,21)

Previous post:

Next post: