பெருமையடிப்பவரின் நாளைய நிலை!

in 2015 பிப்ரவரி

பின்னர், நாம் வானவர்களை நோக்கி ஆதமுக்குப் பணிந்து ஸுஜூது செய்யுங்கள் என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்தான். ஆணவமும் கொண்டான். இன்னும் அவன் நிராகரிப்போரை சார்ந்தவனாகி விட்டான். (2:34)

மேலும், அல்லாஹ்வையே, வணங்குங்கள். அவனுடன் எதனையும் இணையாக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கி உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவனாக, பெருமை உடையவனாக இருப்பவனை நேசிப்பதில்லை. (4:36)

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப்பின், நாம் அருட் கொடைகளை அவனுக்குச் சுவைக்கச் செய்தால், என்னை விட்டு தீங்குகளெல்லாம் போய்விட்டன என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் பெரு மகிழ்ச்சியும், பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (11:10)

அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்பவனை விட அல்லது வஹீயின் மூலம் அவனுக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டது என்று கூறுபவனை விட அல்லது அல்லாஹ் இறக்கி வைத்த (இவ் வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன் என்று கூறுபவனை விடப் பெரிய அநியாயக்காரன் யார்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனைகளில் இருக்கும்போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், வானவர்கள் தம் கைகளை விரித்தவர்களாக (இவர்களிடம்), உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள். உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறிக் கொண்டிருந்ததின் காரணமாக இன்றைய தினம் நீங்கள் இழிவு தரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள். இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள் என்று கூறுவதை நீர் காண்பீர்! (6:93)

ஆனால், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து (அவற்றை ஏற்பதை) விட்டும் பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (7:36)

அவருடைய சமூகத்தாரிலிருந்து (நம்பிக்கை கொள் ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள், பலஹீனர்களாக கருதப்பட்ட அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி “”நிச்சயமாக “ஸாலிஹ்’ அவரு டைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “”நிச்சயமாக நாங்கள்” எதைக் கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அ(ந்தத் தூ)தை நம்புகிறவர்களே!” என்று (பதில்) கூறினார்கள். (7:75)

(எவ்வித) நியாயமுமின்றி, பூமியில் பெருமையடிப்பவர்களை, என் வசனங்களை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பிவிடுவேன். அவர்கள் வசனங்கள் யாவையும் கண்டபோதிலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், தவறான வழி யைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்)வழியாக எடுத்துக் கொள்வார்கள். அது (ஏனெனில்), அவர்கள் நம் வசனங்களைப் பொய்யயனக் கூறினார்கள். இன்னும், அவற்றை விட்டும் அலட்சிய மானவர்களாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலாகும். (7:146)

ஜீவராசிகளில் வானங்களிலுள்ளவையும், பூமியிலுள் ளவையும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது (சாஷ்டாங்கம்) செய்கின்றன. இன்னும், வானவர்களும் (அவ்வாறே சாஷ்டாங்கம் செய்கின்றனர்) அவர்களோ (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை. (16:49)

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்துவிடவும் முடியாது. (17:37)

வானங்களிலும், பூமியிலும் உள்ளோரெல்லாம் அவ னுக்கே உரியோராவார்கள். மேலும், அவனிடம் இருப்பவர்கள் அவனை அடிபணிவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவும் மாட்டார்கள். (21:19)

இன்னும், அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பார்கள், மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், சாந்தியுண்டாகட்டும் என்று சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (25:63)

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண் டாக்கவும் விரும்பாதவர்களுக்கே நாம் (சொந்தமாய்) ஆக்கி வைப்போம்; எனெனில் (நல்ல) முடிவு (நம்மை) அஞ்சுவோருக்குத்தான். (28:83)

அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல்-அவன் தன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல் பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான். ஆகவே, அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (31:7)

(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட் டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். ((31:18)

நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில், அவர்கள் அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். (32:15)

எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அவர் அறிந்து கொள்ளட்டும்), தூய்மையான வாக்குகளெல் லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன. (35:10)

(பதில் கூறப்படும்) “”மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆனால், அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய், நிராகரிப் போரில் ஒருவனாகி இருந்தாய்”. (39:59)

அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார் களே அவர்களுடைய முகங்கள் மறுமை நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (39:60)

அவர்கள் எத்தகையோரென்றால் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்கின்றார் கள். அது, அல்லாஹ்விடத்தித்திலும் நம்பிக்கை கொண்ட வர்களிடத்திலும் கோபத்தால் பெரிதாகிவிட்டது. இவ் வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வொரு இதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான் (என்றும் அவர் கூறினார்). (40:35)

அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலவீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி, “”நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர் களாக இருந்தோம். எனவே, எங்களை விட்டும் இந் நெருப் பிலிருந்து ஒரு பகுதியையாவது நீங்கள் தடுத்து விடுபவர் களா?” என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவூட்டுவீராக!). (40:47)

(அப்போது) நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கி றோம். நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார் களுக்கிடையில் தீர்ப்புச் செய்துவிட்டான் என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள். (40:48)

நிச்சயமாக தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களில் எவ்வித ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின் றார்களே, அத்தகையவர்கள் அவர்களுடைய இதயங்களில் பெருமையைத் தவிர (வேது எதுவும்) இல்லை. ஆனால், அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன் யாவரையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (40:56)

உங்கள் இறைவன் கூறுகிறான். என்னையே நீங்கள் பிரார்த்தியுங்ள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன், நிச்சயமாக எவர்கள் என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார் களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (40:60)

அன்றியும், ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாய மாகப் பெருமையடித்துக் கொண்டு “எங்களை விட வலிமை யில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள். அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமை யில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும், அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். (41:15)

ஆனால், நிராகரித்தவர்களிடம் “”உங்களுக்கு என் வச னங்கள் படித்துக் காண்பிக்கப்படவில்லையா அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டீர்கள். இன்னும், நீங்கள் குற்றவாளிகளான சமூகத்தாராவும் இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்). (45:31)

(நபியே!) நீர் கூறுவீராக! “”நீங்கள் பார்த்தீர்களா? இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தது. இதை நீங்கள் நிரா கரித்துவிட்ட நிலையில்-இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றது (வரவேண்டியிருந்தது) என் பதில் சாட்சியங் கூறி நம்பிக்கை கொண்டுள்ளார். (ஆனால், இதை ஏற்காது) நீங்கள் பெருமையடித்தீர்கள், நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான். (46:10)

அன்றியும், (நரக)நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், உங்களுடைய நல்லவைகளை உங்களுடைய உலக வாழ்க்கையிலேயே நீங்கள் போக்கி விட்டீர்கள் இன்னும் அவற்றைக்கொண்டு சுகம் அனுபவித்தீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமை யடித்துக் கொண்டும், பாவம் செய்து கொண்டும், இருந்த காரணத்தால் இழிவுக்கும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள் (என்று அவர்களுக்குக் கூறப்படும்) (46:20)

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் (அல்லாஹ்வை) மிகவும் அஞ்சுபவராக இருக்கின் றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (49:13)

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின்மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்த வற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்) கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (57:23)

அவனே அல்லாஹ், அடிபணிவற்குரிய இறைவன் அவ னைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனே பேரரசன், மிகப் பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பன், பாது காப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்ப வன், பெருமைக்குரியவன், அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையனவன். (59:23)

அன்றியும், நீ அவர்களுக்கு மன்னிப்பதற்காக (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்த போதெல் லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக்கொண்ட னர். மேலும் தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர். அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடி வாதமாகவும், பெரும் அகம்பாவம் கொள்வோராகவுமே இருக்கிறார்கள். (71:7)

(போர்வை) போர்த்திக்கொண்டு இருப்பவரே! நீர் எழுந்து (மக்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! மேலும், உம் இறைவனைப்பெருமைப்படுத்துவீராக!
(74:1-3)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண் டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள் ளேன் என்று சொன்னது. சொர்க்கம் எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள் என்று கூறியது. அல்லாஹ் சொர்க்கத்திடம், நீ என்னுடைய அருள் உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன் என்று கூறினான். நரகத்திடம் நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன் என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் போதும்! போதும் என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும் (நரகத்திற்கெனப் புதிதாக யாரை யும் அல்லாஹ் படைப்பதில்லை,மாறாக) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான். (புகாரி:4850)

ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரழி) அறிவித்தார் :
நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை பின் வருமாறு கூறக் கேட்டேன். சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில் பலவீன மானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்) அவர்கள் அல் லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறூவார்க ளானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப் பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்க ளுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள், பெருமை அடிப்பவர்கள் ஆவர். (புகாரி : 4918, 6071, 6657)

Previous post:

Next post: