தொழுகையாளிகளுக்கும் கூலி கொடுக்கப்பட்டால்….?

in 2017 ஏப்ரல்

இப்னு ஹத்தாது.

ஐங்காலத் தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமை. தொழுகை இல்லாதவர்கள் நாளை மறுமையில் ஒருபோதும் சுவர்க்கம் நுழைய முடியாது. நிரந்தர நரகமே அவர்களின் கூலியாகும். ஐங்கால தொழுகை மற்றும் கடமையாக்கப் பட்ட மார்க்கப் பணியை இவ்வுலகில் மக்களி டம் கூலியை எதிர்பாராமல் நாளை மறுமையில் மட்டுமே அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண் டும் என்று நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங் கள் மிக அழுத்தமாகக் கூறிக்கொண்டிருக்கின் றன. இந்த நிலையில் இமாம்கள் தங்கள் ஐங் கால தொழுகைகளுக்கும் மனிதர்களிடம் பேரம் பேசி கூலி-சம்பளம் வாங்கிக் கொண்டே தொழ வைக்கின்றனர்.

இதற்காக மாதம் குறைந்தது ரூ.5000/-லிருந்து பல்லாயிரம் வரை சம்பளத்திற்கே-கூலிக்கே தொழ வைக்கின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் வாட்சப்பில் ஒரு தவ்ஹீத்(?) பள்ளிக்கு இமாம் தேவை. சம்பளம் 15,000/-லிருந்து 20,000/- வரை கொடுக்கப்படும் என்ற அறிவிப் பைப் பார்த்திருக்கலாம். இப்போது விசயத் திற்கு வருவோம். ஓர் இமாம் மாதம் 6000/- சம்பளம் பெறுகிறார் என்றால் ஒரு நாளைக்கு 200/- ரூபாய், ஒரு தொழுகைக்கு 40/- ரூபாயா கும். இமாமுக்கு ஒரு தொழுகைக்கு 40/- ரூபாய் கூலி கொடுக்கப்படுகிறதென்றால், அங்கு வந்து தொழும் ஒவ்வொரு தொழுகையா ளிக்கும் ஒரு தொழுகைக்கு ரூ.25/- கொடுப்ப தில் எந்தத் தவறும் இல்லைதானே! பல கோடி களுக்கு அதிபதியான ஒரு பெரும் பணக்காரர் அவர் வசிக்கும் அந்த மஹல்லா பள்ளிக்குத் தொழ வரும் ஒவ்வொரு தொழுகையாளிக்கும் ஒரு தொழுகைக்கு ரூ.25/- வீதம் ஒரு நாளைக்கு ரூ.125/- கொடுக்கப்படும் என அறிவிப்புச் செய்தார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? ஒரு தொழுகைக்கு ஒன்று, இரண்டு வரிசைகள (ஸஃப்) கூட தேறாத அப்பள்ளியில் கூட்டம் குவியும். பள்ளி நிரம்பி வழியும் ஜும் ஆவுக்குக் கூடும் கூட்டத்தை விட அதிகக் கூட் டத்தைப் பார்க்கலாம். பள்ளியில் இடம் பற் றாக்குறை ஏற்படும். மாற்றார் கூட குல்லாவை மாட்டிக்கொண்டுப் பள்ளிக்கு வந்து பணம் பெற முற்படுவர். பணம் படுத்தும் பாடு, பரிதாப நிலை இதுதான்.

அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அல்லாஹ்வின் பொருத்தம் நாடி கடமையான ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் கேவலம் அற்பக் காசுக் காக முண்டியடித்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள் என்றால் அவர்களது உள்ளத்தில் ஈமான்-இறை நம்பிக்கை இருப்பாதக நம்ப முடியுமா? 49:14 குர்ஆன் வசனம் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்களாக மட்டுமே அவர்கள் இருக்க முடியும்.

இப்போது சிந்தியுங்கள்! காசுக்காக மட் டுமே தொழ வரும் இப்பெயர்தாங்கி முஸ்லிம் களுக்கும், காசுக்காகவே தொழ வைக்கும் இமாம்களுக்கும் வேறுபாடு உண்டா? அவர் கள் ஈமான் உள்ளத்தில் நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்கள் என்றால் இந்த இமாம் களின் உண்மை நிலை என்ன? உண்மையி லேயே இந்த இமாம்களின் உள்ளத்தில் அல் லாஹ் மீதும், மறுமையிலும் அசைக்க முடியாத, உறுதியான நம்பிக்கை இருந்தால், தங்கள் மீது விதிக்கப்பட்டக் கடமையான ஐங்காலத் தொழுகைகளை அற்பமான இவ்வுலகக் காசுக்கு விற்றுவிட்டு, நாளை மறுமையில் தொழுகையற்றவர்களான ஃபிர்அவ்ன், காரூன், நம்ரூது, ஹாமான, அபூஜஹீல் போன்றோர் களுடன் நிற்கத் தயாராவார்களா? ஆழ்ந்து சிந்தியுங்கள்! அல்லாஹ்வின் சட்டத்தை நிராகரித்து சம்பளம் இல்லாவிட்டால் அவரும் அவரது குடும்பமும் மண்ணையா தின்பார்கள் என்று கேட்பது ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டும் கேள்வியாகும் (பார்க்க : 15:39)

ஐங்காலத் தொழுகைக்கும் அதிகபட்சம் 2டி மணி, குழந்தைகளுக்குப் பொருள் அறியாமல் வெறுமனே கிளிப்பிள்ளைப் பாடமாக குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க 2டி மணி ஆக 5 மணி நேரம் போக, தூக்கத்திற்கு 8 மணி போனால் எஞ்சியுள்ள 11 மணி நேரத்தை எதில் கழிக்கி றார்கள்? சிந்தியுங்கள். மக்கா, மதீனா முதல் உலகம் முழுவதும் இமாம்களுக்குச் சம்பளம் கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது என்பதும் வீண் வாதமே. கடந்த 1000 வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் ஒரு நிலை என்பதும் வீண் வாதமே. காரணம் இம் மவ்லவிகளின் இந்த வாதத்தை ஏற்பதாக இருந்தால் இன்று உலகிலுள்ள எல்லா மதங் களின் மதகுரு மார்களும் பல்லாயிரம் ஆண்டு களாக 9:34 இறைவாக்கை நிராகரித்து ஹரா மான வழிகளில் மக்கள் சொத்தை அபகரித்துச் சாப்பிடுவதும் சரிதான். அனைத்து மதங்களின் மதகுருமார்களும் அவர்களை நம்பியுள்ள மக்களை நேரான வழியில் தான் இட்டுச் செல்கிறார்கள். எம்மதமும் சம்மதமே என இம்மவ்லவிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்வார்களா?

எப்படி முன் சென்ற சமூகங்களின் மதகுரு மார்களும் அவர்களது பக்தர்களும் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளைப் படித்துக் காட்டும்போது, முன் சென்ற அடியார்கள எல் லாம் அறியாதவர்களா? இப்போது நீ புதிதாக வந்து சொல்ல வந்துவிட்டாய் என்று கூறி சத்தி யத்தை மறுத்தார்கள். அபூலஹப் அப்படியே மறுத்தான். அபூ ஜஹீல் அப்படியே மறுத்தான். இப்படி முன் சென்றவர்களைக் கூறி தங்களின் வழிகெட்டச் செயல்களை நியாயப்படுத்திய வர்கள் அனைவரும் நரகிற்குரியவர்கள். இந்த உண்மையை கீழ்க்காணும் குர்ஆன் வசனங் களை நீங்களே படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

2:170, 5:104, 7:28,70,71, 10:78, 11:62,87,109, 12:140, 14:10, 21:53,54, 26:73,76, 31:21, 37:69, 34:43, 37:17, 53:23, 56:48, 43:22,23 இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் பொறுமை யாகக் கவனமாகப் பிடித்து உணர்கிறவர்கள் விளங்குவார்கள். மனிதர்களில் முன்சென்ற எவரையும் சொல்லி குர்ஆனுக்கும் ஆதாரபூர்வ மான ஹதீஃத்களுக்கும் முரணாக எக்கருத்தை யும் எவ்வழக்கத்தையும் எடுத்து நடப்பது பெருத்த வழிகேடு என்பதை அறிய முடியும்!

ஆம்! மார்க்கத்தில் முன் சென்றவர்களின் நடைமுறைகளை ஆதாரமாக எடுத்து வைப்ப வர்கள் பகிரங்க வழிகேட்டில் இருக்கிறார்கள். நாளை நரகை நிரப்பும் பெரும்பாவிகள் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளுங்கள்! (பார்க்க 33:36, 2:159-162)

2:134,141 இறைவாக்குகள் சென்று போன நல்லடியார்கள் பற்றியே நம்மிடம் கேட்கப் படாது. நம்மைப் பற்றி மட்டுமே நம்மிடம் கேட்கப்படும் என்று திட்டமாகக் கூறி இருக் கும் நிலையில் முன்சென்றவர்கள் கூறியதாக, எடுத்து நடந்ததாகக் காலம் காலமாக ஒரு செயல் நடந்து வருவதாகக் கூறி குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களுக்கும் முரணாகக் கடை பிடிக்கும் செயல்கள் நமக்கு அழகாகத் தெரிந்தாலும், அவை அல்லாஹ்விடம் ஏற்கப் படாது; நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை இம்மவ்லவிகள் அறிந்தால் அது அவர் களுக்கும், அவர்களது பக்தகோடிகளுக்கும் நன்மை பயக்கும். மேலும் 2:159-162,186, 7:3, 18:102-106, 33:36,66-68, 59:7 குர்ஆன் வசனங் களைப் படித்துப் படிப்பினை பெறுங்கள்.

அன்பார்ந்த மவ்லவிகளே உங்கள் நாளைய நலனுக்காகவே உங்களை இவ்வளவு கடுமை யாக விமர்சிக்க நேரிடுகிறது. நிரந்தரமான மறு உலகோடு இவ்வுலகை ஒப்பிட்டால் இவ்வுலகு ஒரு வினாடி கூடத் தேறாது. இந்த அற்பமான உலகில் உங்களின் ஒரு ஜான் வயிற்றை ஹரா மான வழிகளில் நிரப்ப நிரந்தரமான மறு உலகை நாசப்படுத்திக் கொடிய நரகில் விழுந்து ஒப்பாரி வைக்க வேண்டுமா? (பார்க்க: 33:36, 66,67,68) ஆழ்ந்து சிந்தியுங்கள்.

தாருந்நத்வா உலமாக்கள் சபையில் இருந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த உமர் (ரழி), அலீ(ரழி) இருவரும் அதை விட்டு வெளி யேறி வந்து தங்கள் கைகளால் கடுமையாக உழைத்தே தங்கள் வயிற்றைக் கழுவினார்கள். ரிஜ்கை அளிப்பவன் அல்லாஹ், பறவையினங் கள் தங்கள் முதுகில் உண்வை சுமந்து கொண்டா புறக்கின்றன. அன்றாடம் அல்லாஹ் அவற்றிற்கு உணவளிக்கவில்லையா? அதுபோல் அல்லாஹ்வையே முழுக்க நம்பி ஹலாலான எத்தொழிலாக இருந்தாலும் உங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கூலி-சம்பளம் வாங்காமல், கூலி-சம்பளத்தை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர் பார்த்து அல்லாஹ்வுக்காக மட்டுமே தொழ வைக்க முன்வாருங்கள். அல்லாஹ் நிச்சயம் உங்களுக்கு அருள் புரிவான். ஆமீன்.

Previous post:

Next post: