அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்…

in 2017 செப்டம்பர்

தோழர் ஹம்துல்லாஹ்

அல்லாஹ்வைத் தவிர கடவுள் வேறில்லை, அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 20:8)

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திரு நாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை விட்டு விடுங்கள்-அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 7:180, 17:110, 20:8, 59:24).
அவனே அல்லாஹ், அவனைத் தவிர கடவுள் வேறில்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன்:59:22)

அவனே அல்லாஹ் அவனைத் தவிர கடவுள் இல்லை, அவனே பேரரசன், மிகப் பரிசுத்த மானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைத்த வன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித் தானவன்- அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மை யானவன். (அல்குர்ஆன்: 59:23)

அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உருவாக்குபவன், உருவமளிப் பவன் அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக் கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே (தஸ்பீஹு) துதிக்கின்றன- அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன் :59:24)

நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்-ரஹ்மான் (அருளாளன்) என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு பல அழகிய திருநாமங்கள் இருக்கின்றன என்று கூறுவீராக ! (அல்குர்ஆன்: 17:110)

இவ்விறை வசனங்களை மீண்டும், மீண்டும் கூர்ந்து கவனித்துப் படியுங்கள். இவையனைத்தும் அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன என்பதை தெரிவிக்கின்றன. எனவே, அல்லாஹ் என்பது அவனுடைய முழு முதற்பெயராகவும், மற்ற அனைத்தும் அவனு டைய பண்புகளை, குணநலன்களை அறிவிக் கும் அடையாளப் பெயர்களாகவும் நாம் விளங்கலாம். அதனை விளக்கும் விதமாக நம் அருமை நபி(ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஃத்)கள் தெரிவிக்கின்றன.

அரபி மொழியில் ஹதீஃத் என்றால் செய்தி என்ற பொதுவான பொருளிருந்தாலும் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில்-மார்க்க ரீதியாக ஹதீஃத் என்றால் அல்லாஹுவாலோ அல்லது அவனுடைய இறைத் தூதர்களாலோ அறிவிக்கப்பட்ட செய்தி என்றே பொருள் கொள்ளப்படும். இதன் பன்மைச் சொல் “”அஹாதீஸ்” என்பர். இதனடிப்படையில் அல்லாஹ்வுக்கான அழகிய திருநாமங்கள் என்ற செய்தி நம் அருமை நபி(ஸல்) அவர்களின் கூற்றாக சுனன் இப்னு மாஜா, திர்மிதி என்ற இரு ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால், இவ்விரண்டிலும் அல்லாஹ்வுக்கான அழகிய திருநாமங்கள 99 என வரிசைப் படித் திருந்தாலும் பற்பல குளறுபடியான வேறுபாடுகளுடன் ஒரே மாதிரியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில பெயர்கள் ஒரே சொல்லை இலக்கண ரீதியான பற்பல வெவ்வேறு அரபிச் சொற்களால் கூறப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக திருகுர்ஆனில் இடம் பெற்றுள்ள பற்பல பெயர்கள் விடுபட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்க விஷயம். எனவே ஹதீஃத் கலாவல்லுனர்கள் சுனன் இப்னு மாஜா, திர்மிதி என்ற இவ்விரு ஹதீஃத் நூல்களில் இடம் பெற்றுள்ள இவ்விரு செய்தி (ஹதீஃத்)கள் பல வீனமானது (ழயீப்) ஏற்கத்தக்கதல்ல என ஆரம் பக் காலத்திலேயே அடையாளம் காட்டிச் சென்றுள்ளனர். இருப்பினும் அல்லாஹ்வுக் கான அழகிய திருநாமங்களைப் பற்றி அறிய ஓர ளவு உதவுவதை நாம் மறுக்க முடியாது என்பது ஏகனின் அருட்கொடை எனலாம். இதனடிப் படையில் நாம் இங்கு சுனன் இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ள நபி மொழியை அடிப்படையைக் கொண்டு அல்லாஹ்வுக்கான அழகிய திரு நாமங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போமாக! இதைப் பற்றிய தெளிவான ஞானத்தை நம் மனைவருக்கும் நல்குவானாக!
ஏகனின் முழு முதற்பெயரான அல்லாஹ்வைப் பற்றி பார்ப்போம் :

அல்லாஹ் என்ற சொல் “”இலாஹ்” என்ற பூர்வீக செமிடிக் மொழியிலிருந்து பிறந்தது. செமிடிக் மொழி என்பது மிக மிக பழமை மிக்க மொழியாகும். இந்தியாவில் தென்னிந்திய மொழியன தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற நான்கு மொழிகளைத் “”திராவிட மொழிகள்” எனக் குறிப்பிடுகிறோம். அதே போல மத்திய ஆசிய கண்டத்தின் பூர்வீக மொழிகளாக “”ஹீப்ரு, அராபிக், அராமிக், கோத்திக், புநீ´யன்” செமிடிக் மொழிகள் என அழைக்கப்படுகின்றன.

ஏகனிறைவனால் மூஸா(அலை) அவர்க ளுக்கு யூத சமுதாயத்தினர்களை நேர்வழி காட்ட அருளப்பட்ட “”தவ்ராத்” என்ற வேதம் ஹீப்ரு மொழியிலும், ஈசா(அலை) அவர்களுக்கு “”இன்ஜீல்” என்ற வேதம் அராமிக் மொழியிலும், தாவூத்(அலை) அவர்களுக்கு “”ஜபூர்” என்ற வேதம் அராமிக் மொழியிலும், இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு “”சுஹ்புகுள்” என்ற வேத ஏடுகள் கோத்திக் மொழியிலும், ஹூத்(அலை), ஸாலிஹ்(அலை), யூனுஸ்(அலை) ஆகியோ ருக்கு புநீ´யன் அராமிக், கோத்திக் போன்ற மொழிகளில் அருளப்பட்டிருக்கலாம் என மத்திய ஆசிய கண்டத்தின் மொழி வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். இம்மொழிகள் அனைத்தும் அரபிக் மொழி போல வலது புறத்திலிருந்து இடது புறமாக எழுதக் கூடியவை. பெரும்பாலும் ஒரே மாதிரியான சப்தம், ஒலி உச்சரிப்புககளைக் கொண்டவை.

இம்மொழி அனைத்தும் அல்லாஹ்வின் இறுதி தூதர்(ஸல்) அவர்கள் மூலம் இறுதி வேத மன திருகுர்ஆன் அருளப்பட்டு இஸ்லாம் பரவ பரவ பெரும்பாலான மத்திய ஆசிய கண்ட மக்களிடம் இஸ்லாமும், குர்ஆனும் வழக்கத்தில் வர காலப்போக்கில் அம்மொழிகள் சிதைந்து அழிந்து விட்டன. இன்று அராபிக் மொழியே அரசு மொழியாக உள்ளதைக் காண லாம். இருப்பினும் அவர்களது அன்றாட பேச்சு வழக்கத்தில் பழைய மொழிச் சொற்கள் புழக் கத்தில் இருப்பதையும் இன்றும் காணலாம்.
இந்தியாவின் வேத மொழியான சமஸ்கிருதம் இந்திய விடுதலைக்கு பின் எப்படி இந்திய அரசு இயந்திரங்களால்-சமஸ்கிருத மொழிக்கு முக்கியமளித்து உயிரூட்ட முற்படுகிறதோ. அதே போல ஆனால், சுமார் 60,70 வருடங்களுக்கு முன் யூதர்களுக்கென இஸ்ரேல் என்ற ஒரு தனி நாடு உருவான பின், யூதர்கள் தங்களின் வேத மொழியான ஹீப்ரு மொழிக்கு இஸ்ரேல் அரசு இயந்திரங்கள் முக்கியம் கொடுத்து உயிரூட்ட முற்படுகின்றனர். ஆனால் இரண்டு அரசுகளும் வாய் பேசா ஊமைகள், காது கேளா செவிடர்களுக்கு மட்டும் அரசு தொலைகாட்சிகள் மூலம் விடுமுறை நாட்களில் ஒலிபரப்பு செய்வதையும் காணலாம்.

பூர்வீக செமிடிக் மொழிகள் அனைத்திலும் கடவுள் என்பதற்கு இலாஹ் என்ற சொல் வழக்கத்திலுள்ளது. இதனை யூத கிறித்துவர்களின் வேத நூல்களிலும் அவர்களின் பேச்சு வழக்கத் திலும் “”ஈல்” அல்லது ஏல் அல்லது எலோவா அல்லது எலி எனக் குறிப்பிடுவதைக் காணலாம். கிறித்துவர்கள் தங்களின் இரட்சகராக ஏற் றுள்ள ஜீசஸ் ஈஸா (அலை) அவர்களை அவர்கள் கூற்றுப்படி சிலுவையில் ஏற்றும் போது ஏலி! ஏலி! லிமா சபக்தனி ( என் கடவளே! என் கடவளே! நீ ஏன் என்னை கைவிட்டு விட்டாய்!) என அவரது கடவுளை அழைத்ததாக இன்றும் தங்கள் மக்களிடம் உபதேசிப்பதைக் காணலாம். அனைத்து முஸ்லிம்களிடமும் அல்லாஹ் என்ற பொது சொல் வழக்கத்தில் இருப்பது போல யூதர்களிடம் இது மிக மிக வழக்கத்திலுள்ள பொது சொல்.

“இலாஹ்” என்றால் (கட+வுள்) கடவுள் என்று நம் தமிழ் மொழியில் பொருள் கெள்ளலாம். கட+உள்=நம் உள்ளத்தைக் கடந்தவன்: நம் உள்ளத்தால் உணர முடியாதவன், நம் உள்ளத்தின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன்; உணர முடியாதவன் என்று பொருள். தமிழில் கடவுள் என்பது சிறந்த அர்த்தமெனலாம். பொது மக்கள் எதனை கடவுளாக கூறுகிறார்களோ, பாவிக்கிறார்களோ, ஏற்று வழிபடுகிறார்களோ அவற்றிக்கு இக்குணம், இப்பண்பு உள்ளதா? என சிறிது சிந்தித்தாலே போதும் அவர்கள் ஏகன் ஒருவன் மட்டுமே! அவனை மட்டுமே நமது உள்ளத்தால் உணர முடியாது, நம் உள்ளத்தின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன்; நம் நினைவுகளுக்கு புலப் படாதவன் என விளங்கி ஏகத்துவ கடவுளான அல்லாஹ்வை ஏற்பார்கள என்பது திண்ணம். எனவே, நம் தமிழக சகோதரர்களிடையே இக் கருத்தினை முன் வைத்து இஸ்லாமிய அழைப் புப் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

“இலாஹ்” = கடவுள் என்பது அரபி மொழியில் பொது பெயராகும். அத்துடன் அல் என்ற சொல் சேருகின்ற போது அது குறிப்பிட்ட பெயராகும். அதாவது அல்+இலாஹ் = அல்லாஹ் என்று மாறுகிறது. இதுவே அல்லாஹ் என்பதன் உண்மைப் பொருளாகும் என்பதை நினைவில் கொள்க!

மக்கள் பொதுவாக வணக்கதிற்குரியதாக ஏற்றுள்ள அனைத்தையும் கடவுள் = இலாஹ் என்று கூறலாம் என்பதற்கு இறைத்தூதர் யாகூப்(அலை) அவர்கள் வாயிலாகவும் மறுமையில் ஈஸா(அலை) அவர்களிடம் அல்லாஹ் கேள்விக் கேட்கும் அறிவிப்பையும் பாருங்கள்:-

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல்,இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை – ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம் எனக் கூறினர். (அல்குர்ஆன் : 2:133).

இவ்வசனத்தில் யாகூப்(அலை) மற்றும் அவரது மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாய னையே – வணங்குவோம் என்று கூறியிருப்பதிலிருந்து இலாஹ் என்பது அல்லாஹ் ஒருவனை மட்டுமே குறிக்கிறது எனக் கூறலாம். கிறித்துவர்கள் ஈஸா(அலை) அவர்களையும் அவரது தாய் மர்யம்(அலை) அவர்களையும் இரு கடவுள்களாக ஏற்றிருந்ததாகவே அல்லாஹ் குறிப்பிடுவதையும் பாருங்கள்:

மர்யமுடைய மகன் ஈஸாவே, அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது, அவர், நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்.

என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார். (அல்குர் ஆன் :5:116)

இவ்வசனங்கள் மூலம் இலாஹ் என்ற அரபிச்சொல் பொதுப் பெயராக அல்லாஹ்வே அங்கீகரித்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் அல் என்ற உரிச் சொல்லை அதன் முன் இணைப்பதன் மூலம் அது குறிப்பிட்ட ஒரயொரு கடவுளான அல்லாஹ்வை மட்டும் குறிக்கும். அதுவே அல்+இலாஹ்=அல்லாஹ் என்று ஆனது என்பதையும் விளங்கலாம். நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி அல்லாஹ்வை நம் புறக் கண்களால் காணவோ, பகுத்தறிவால் உருவகப்படுத்தவோ முடியாது. அவனைப் பற்றி அவனுடைய உள்ளங்கத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்காதீர்கள்: அது உங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என மார்க்க வல்லுனர்கள் நம்மை எச்சரித்துள்ளதை மொழி ரீதியான சரித்திர நூல்களில் பரவலாகக் காண லாம். ஆனால் அவனுடைய படைப்பின் அத்தாட்சிகளைக் கொண்டு அவனது வல்ல மையை, சிறப்பை உணரலாம். அவனுடைய குணநலன்களையும், அளப்பரிய பண்புகளை யும் விளங்கலாம், அதற்கொப்பவே இப்பூமிக்கு அவனுடைய சிறப்பு பிரதிநிதியாக அனுப்பப் பட்ட மனிதனை தன் குணநலன்களையும், பண்புகளையும் கொண்டவனாக அனுப்பி யுள்ளதாக = அல்லாஹ் (ஆதி மனிதர்) ஆதத்தை தன் உருவில் படைத்ததாக நம் திருத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த நபிமொழி புகாரி, முஸ்லிம் நூல்களில் இடம் பெற்றுள்ளது. நம் உள்ளத்தைக் கடந்த, பகுத்தறிவால் உணர முடியாத அல்லாஹ்வை, இந்நபிமொழியின் அடிப்படையில் ஒரு சில உலமாக்கள் அல்லாஹ்வுக்கு நமக்கிருப்பதை போல கை, கால், வாய், செவி புலன்கள் இருப்பதாகவும் வாதிடுவது இலாஹ் என்ற அரபிச் சொல்லின் பொருளறியாமையையும், தங்களது குறுகிய அறிவால் அனைத்தையும் படைத்து, பக்குவப்படுத்தி பரி பாலித்து, பாதுகாத்து, போஷிக்கும் அனைத்தையும் அறிந்த மிகமிகப்பெரியவனை விளங்க முற்படுவது அறிவுடைமையாகாது.

அவனை ஓரளவு விளங்கிக் கொள்வதற்காகவே குர்ஆனில் அவனுடைய அத்தாட்சிகளைப் பார்க்கும்படியும் ; படிப்பினைப் பெற்று பயனடைய நம்மை அடிக்கடி பற்பல இடங்களில் அறிவுறுத்துகிறான். அவனுடைய அளப்பெரும் குணநலன்களையும், அளப்பரிய பண்புகளையும் தன்னுடைய பெயர்களாகக் குறிப்பிடுகிறான். அதனையே நாம் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் என்கிறோம். இத் திருநாமங்கள் அனைத்தும் அல்லாஹ் என்ற முழு முதற்பெயரின் உள்ளடக்கம், அனைத்து பெயர்களின் அளப்பெரும் குணநலன்களும் அளப்பரிய பண்புகளும் அல்லாஹ் என்ற ஒரே பெயரைக் குறிக்கும் என்பதை உணர்ந்து அறிய வேண்டும் என்ற முன்னுரையுடன் அல்லாஹ் வின் அழகிய திருநாமங்கள் பற்றி விரிவாக ஆராய்வோமாக! அதற்கான நேரான வழியை யும், அறிவையும், எழுதும் ஆற்றலையும் மக்களுக்கு விளங்க வைக்கும் வல்லமையும் நமக்கு அல்லாஹ் அருள இரு கரமேந்தி யாசித்தவர் களாக ஆரம்பிக்கிறோம். ஆமீன். யா ரப்பல் ஆலமீன்!

Previous post:

Next post: