முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்பட தொழுகையும், நபி(ஸல்) கூறிய அணி வகுப்பும் அவசியம்!

in 2017 செப்டம்பர்

அபூ ஆத்திஃபா

தொழுகையில் முறையாக அணி வகுத்து நிற்பது தொழுகையின் அம்சங்களில் ஒன்றாகும்.
“(தொழும்போது) உங்கள் வரிசைகளைச் சரி செய்து கொள்ளுங்கள்! ஏனெனில் வரிசையைச் சரி செய்து கொள்வ தானது தொழுகையின் பரிபூரணத் தன்மையின் ஓர் அம்சமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம்) (புகாரியின் மற்றொரு அறிவிப்பில் “”தொழுகையை நிலைநாட்டும் அம்சங்களில் ஒன்றாகும்” என்பதாக உள்ளது)

இந்த ஹதீஃதின்படி அணி வகுத்து வரிசையில் நிற்பது முக்கியமான ஒரு அம்சமாக உள்ளது. இன்று முஸ்லிம்கள் தொழுகையைப் பற்றி கவலைப் படாமல் ஒற்றுமை பற்றி மட்டும் கவலைப்படுவது வீண் முயற்சியாகும் தொழுகையின் அணிவகுப்பு, “உள்ளங்கள் ஒற்றுமை ஏற்பட ஏதுவாகும்’ என்று கீழ்கண்ட ஹதீஃத் கூறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக அணி வகுக்கும்போது) வரிசையின் இடையில் வந்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரை எங்கள் நெஞ்சையும், தோள் புஜங்களையும் தடவிக் கொண்டு (அணி வகுப்பை சரி செய்தவர்களாக) நீங்கள் முன்னும் பின்னுமாக மாறுபட்டு நிற்க வேண்டாம். அவ்வாறாயின் உங்கள் உள்ளங்கள் மாறுபட்டு விடும் என்று எச்சரிக்கை செய்வார்கள். மேலும் நிச்சயமாக முதல் வரிசையில் உள்ளவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகள் நற்பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் கூறுவார்கள். (பர்ராஉபின் ஆஜிப்(ரழி), அபூதாவூத்)

மேலும் தொழுகையில் நிற்கும்போது தோளோடு தோள், காலோடு கால் சேர்த்து அணி வகுத்து நிற்கவேண்டும் என்று கீழ்க்காணும் ஹதீஃத்கள் கூறுகிறது.
3. நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தை மக்கள் பக்கம் திருப்பியவர்களாக அவர்களை நோக்கி “”உங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்” என்று மும்முறை கூறிவிட்டு, “”அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் உங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்!” இல்லை என்றால் அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் மாறுபாட்டை உண்டாக்கி விடுவான் என்றார்கள். இவ்வாறு அவர்கள் (எச்சரிக்கை) செய்த பின்னர் (ஸஹாபாக்களில்) ஒருவர் தன் தோள் புஜத்தைப் பிற நண்பருடைய தோள் புஜத்துடன், தம் முட்டுக் காலை பிறருடைய கரண்டை மொழியுடனும் சேர்ந்து வைத்துக் கொண்டதை தான் பார்த்திருக்கிறேன் என்று நுஃமானுபின் பUர்(ரழி) அவர்கள் கூற நான் கேட்டிருக் கிறேன்.
(அபுல் காஸிமில் ஜத்லீ(ரழி), அபூதாவூத்)

நபி(ஸல்) அவர்கள் உள்ளங்களில் மாறுபாடு இல்லாமல் இருக்க அணிவகுப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்கள். முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையை பேணி தொழுவதுடன் அணி வகுப்பிலும் கவனம் கொண்டு சரி செய்தால் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம் சமுதாயத்திடையே ஒற்றுமை ஏற்பட்டுவிடும். முஸ்லிம்கள் இதில் கவனம் செலுத்துவார்களா?

Previous post:

Next post: