தொழுகையாளிகளின் கவனத்திற்கு…

in 2018 ஜனவரி

S. முஹம்மது சலீம், ஈரோடு.

தமிழக முஸ்லிம்களில் ஐவேளைத் தொழுகைகளை இமாம் ஜமாஅத்தோடு பேணுதலாக தொழக்கூடியவர்கள் பத்து சத வீதத்திற்கும் குறைவானவர்களே. இந்த குறைவான தொழுகையாளிகளிலும் அதிகமானோர் தொழுகையின் அடிப்படைச் சட்டங்களைக் கூட அறியாமல் தொழுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஸஃப்புகளை (வரிசைகளை) எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். இந்த அலட்சிய போக்கு சமுதாயத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என் பதை ஒவ்வொரு தொழுகையாளியும் நபி மொழிகளின் வாயிலாக அறிந்து தன்னை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையில் ஸஃப்புகளை சீர் செய்வது குறித்து சில விஷயங்களை அறிந்து கொள்வோம்.

வரிசைகளை சீராக்குதல் :
நபி(ஸல்) அவர்கள் (தொழுகையைத் துவக்குவதற்கு முன் மக்களை பார்த்து) உங்கள் வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! வரிசைகளுக்கிடையே (இடைவெளி யில்லாமல்) நெருக்கமாக நில்லுங்கள். தோள்களுக்கு சமமாக நில்லுங்கள் என்று கூறுவார்கள். அறிவிப்பாளர் : அனஸ்(ரழி), நூல் : நஸாயீ 806.

கண்ணியத்திற்குரிய தொழுகையாளிகளே! இந்த நபிமொழியில் கூறப்பட்டுள்ளதைப் போன்று தோளோடு தோள் சேர்த்து வரிசைகளை நெருக்கமாக அமைத்துத்தான் நாம் தொழுகின்றோமா? இல்லையே! இந்த நபி மொழிக்கு மாற்றமாக ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன், பின் முரணாகவும், பல அங்குலங்கள் இடை வெளிகள் விட்டும் தொழுகின்றோம். தொழுகையில் வரிசைகள் சீர்கெட்டு இருப் பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகவும் இல்லை. மாறாக யாராவது இந்த நபி மொழியை செயல்படுத்தும் விதமாக நமது தோளோடு, காலோடு சேர்ந்து ஒட்டி நின் றாலும் அதை விரும்பாமல் சற்று விலகி நின்று தொழுகின்றோம். வரிசையில் இவ் வளவு இடைவெளி விடக்கூடாது. நெருக் கமாக நில்லுங்கள் என்று கூறினாலும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் தொழு கின்றோம்.

சாதாரண விஷயமல்ல :
தொழுகையில் வரிசைகளை சரி செய் யும் வி­யத்தில் நபி(ஸல்) அவர்களின் வழி முறையை அறியாமல் அல்லது அறிந்திருந்தும் நடைமுறைப்படுத்தாமல் தொழு வதால் நாம் இரண்டு விதமான மோசமான நிலைகளை சந்தித்து வருகிறோம்.

முதலாவது மேசமான நிலை :
நபி(ஸல்) அவர்கள் (தொழுகையைத் துவக்குவதற்கு முன் மக்களை பார்த்து) உங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்! வரிசைகளுக்கிடையே (இடை வெளி இல்லாமல்) நெருக்கமாக நில்லுங்கள்! தோள்களுக்கு சமமாக நில்லுங்கள்! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வனின் மீது ஆணையாக ஷைத்தான்கள் தொழுகை வரிசையின் இடைவெளியில் கறுப்பு ஆடுகளைப் போன்று நுழைவதை நான் காண்கிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ்(ரழி), நூல்கள் : நஸாயீ 806, அபூதாவூது 571 அல்லாஹ்வுடன் உரையாடும் பாக்கியம் பெற்ற நேரத்தில் கூட நாம் ஸஃப்புகளை சரியாக அமைக்காமல் இடைவெளி விட்டு தொழுவதன் மூலம் ஷைத்தான்களுக்கு இடம் தருவதால் நம் உள்ளங்களில் மாறுபாட்டை ஏற்படுத்திக் கொண்டு உலகில் வாழ்கிறோம்.

இரண்டாவது மோசமான நிலை :
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தொழுகையில்) உங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். இல்லை யயனில் அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்தி விடுவான். அறிவிப்பாளர் : நுஃமான் பின் பUர்(ரழி), நூல்: புகாரி : 717, இப்னு மாஜா 984.

அல்லாஹ்வின் சட்டங்களை பேணி நடக்க வேண்டும். முஸ்லிம்கள் அனை வரும் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறக்கூடிய தொழுகையாளிகளிடையே இன்று எங்கு பார்த்தாலும், போட்டி, பொறாமை, சண்டைகள் மற்றும் கருத்து மோதல்கள் உருவாகி வருவதை நாம் பார்க்கிறோம். இந்த மோசமான நிலைகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது, நாம் நம்முடைய தொழுகையில் வரிசைகளை ஒழுங்காக அமைக்காமல் தொழுவதினால்தான் என்பதை உணர்ந்து ஒவ்வொரு தொழுகையாளியும் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு சமுதாயத்தில் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு காரணம், “தொழுகை யில் வரிசைகளை சரியாக அமைத்து தொழவில்லை. ஆகவேதான் கடும் கருத்து வேறுபாட்டுடன் இன்று காணப்படுகின்றீர்கள் என்று அன்று வாழ்ந்த மக்களை பார்த்து நபித்தோழர் அபூ மஸ்ஊது(ரழி) அவர்கள் கூறியதையும் (பார்க்க நஸாயீ 798) நாம் நமது மனங்களில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஸஃப்பில் தோளோடு தோளாக, காலோடு காலாக சேர்த்து ஒட்டி நின்று தொழுவது சற்று சிரமமாக தெரியலாம்.

இந்த சிரமத்தை சகித்துக் கொண்டால் வெளியில் நாம் ஒற்றுமையாக நிம்மதியாக வாழலாம். மாறாக தொழுகையில் நாம் நமது மன விருப்பத்தின்படி நபிவழியை மதிக்காமல் வரிசைகளை அமைத்துக் கொண்டு பத்து நிமிட சிரமங்களைக் கூடப் பொருத்துக் கொள்ளாமல் தொழுதால் வெளியுலகில் மாறுபாடுகள் கொண்ட வானங்களுடன் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை புரிந்து செயல்படு வோமாக.

அல்லாஹ்வின் அருள் கிடைக்காதவர்கள் :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தொழுகை வரிசையில் (இடைவெளி விடாமல்) சேர்ந்து தொழுபவரை அல்லாஹ் (தன் அருளுடன்) சேர்த்துக் கொள்கிறான். தொழுகை வரிசையில் (சேர்ந்து தொழாமல் இடைவெளிவிட்டு தொழுவதன் மூலமாக வரிசைகளை) துண்டிப் போரை, மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (தன் அருளிலிருந்து அவரை துண் டித்து விடுகின்றான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), நூல் : நஸாயீ 810.

ஸஃப்ஃபில் நெருக்கமாக நிற்பதன் மூல மாக ஒரு வரிசையில் பத்து பேர் நின்று தொழ முடியும் என்ற நிலையில் இடை வெளி விட்டு தொழுவதன் மூலமாக எட்டு பேர் மட்டுமே தொழக்கூடிய நிலையை ஏற்படுத்தி, இரண்டு நபர்களை வரிசையில் சேரவிடாமல் தடுக்கும் அனைவரும் அல் லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கப் படுவார்கள் என்று மேற்கண்ட நபி மொழி மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

ஸஃப்பில் நெருக்கமாக நின்று தொழுது அல்லாஹ்வின் அருளை பெறும் கூட்டத் தில் நாம் இருக்க வேண்டுமா? அல்லது நமது இஷ்டப்படி வரிசையில் நின்று இடை வெளி விட்டு தொழுது அல்லாஹ்வின் அருளை பெறாதவர்கள் கூட்டத்தில் இருக்க வேண்டுமா?

நபித்தோழர்களின் அழகிய நடைமுறை :
உங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் எனது முது குக்கு பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தமது தோள்புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும், தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள் ளலானார்கள். அறிவிப்பாளர் : அனஸ்(ரழி), நூல்: புகாரி : 725

ஸஃப்பில் இடைவெளி விட்டு நின்று தொழுத ஸஹாபாக்களிடம் நபி(ஸல்) அவர்கள் உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிய உடனே இடைவெளி விடாமல் வரிசைகளை சரி செய்து ஸஹாபாக்கள் தொழுததைப் போன்று நாமும் தொழுவதற்கு இனியும் தயக்கம் காட்டலாமா?

இமாம்களின் பொறுப்பு :
தொழுகையை நிலைபெறச் செய்யும் காரியங்களில் முதன்மையானதாக விளங் கும் ஸஃப்புகளை சீரமைக்கும் வி­யத்தில் மக்களுக்கு தலைமை தாங்கி தொழுகை நடத்தும் இமாம்கள் எந்த அளவு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நபி மொழிகளின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகை வரிசைகளுக்குள் புகுந்து ஒரு பகுதியிலிருந்து மறு பகுதி வரை இடை வெளியைச் சரி செய்வார்கள். எங்கள் தோள்களையும், நெஞ்சங்களையும் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள் (மக்களை நோக்கி உங்கள் வரிசைகளில்) “”ஒழுங்கின்றி நிற்காதீர்கள் இல்லையயனில் உங்கள் உள்ளங்கள் பிளவுபட்டுவிடும்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப்(ரழி), நூல்: நஸாயீ 802

நுஃமான் பின் பUர்(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகை வரிசைகளை (வளைந்த) அம்பு களைச் சீர்படுத்துவது போன்று சீராக்குவார் கள் (ஒருநாள்) ஒருவரின் நெஞ்சு,தொழுகை வரிசையிலிருந்து (சற்று விலகி) வெளியே றியவாறு இருந்ததை நபியவர்கள் கண்டார் கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள் இல்லையெனில்  அல்லாஹ் உங்கள் உள்ளங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி விடுவான் என்று சொன்னதை நான் கண் டேன். நூல்:அபூதாவூது 566

மேலும் வரிசைகளை சீரமைக்கும் வி­ஷயத்தில் நபி வழியில் நடந்த ஸஹாபாக்கள் செலுத்திய கவனத்தையும் பார்ப்போம். உமர்(ரழி) அவர்கள் (மக்களுக்கு தொழு விப்பதற்கு முன்) இரு தொழுகை அணிக ளுக்கு இடையில் சென்றால் (மக்களை பார்த்து) “”சீராக நில்லுங்கள்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக் கிடையே இடைவெளியை காணாதபோது தான் முன்சென்று (தொழுகைக்காக) தக்பீர் கூறு வார்கள். நூல்: புகாரீ : 3700

(கலீஃபா) உமர்(ரழி) அவர்கள் வரிசை களை ஒழுங்குபடுத்துவதற்கென்றே ஒரு மனிதரை நியமித்திருந்தார்கள். வரிசைகள் சரியாக அமைந்துவிட்டன என்று தெரிவிக் கப்படாத வரை அவர்கள் (தொழுகைக் காக) தக்பீர் கூற மாட்டார்கள். நூல் : முஅத்தா 337

(கலீஃபாக்களான) உஸ்மான்(ரழி) அலீ (ரழி) ஆகியோர் வரிசைகளை சரிசெய்யும் வி­யத்தில் தனி கவனம் செலுத்தி வந்தார்கள். மேலும் (தொழுகை வரிசைகளை) சீராக்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறுவார் கள். நூல் :முஅத்தா 338

அலீ(ரழி) அவர்கள் (தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன்) “”இன்ன மனிதரே! முன்னால் தள்ளி வாருங்கள்: இன்ன மனிதரே! பின்னால் தள்ளி நில்லுங்கள் என்று கூறி வரிசைகளை சரி செய்வார்கள். நூல் : திர்மிதி (ஹதீஃத் எண் 210க்கு திர்மிதி இமாம் கூறும் விளக்கப் பகுதியை பார்க்கவும்)

முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயம் மேலான நிலையை அடையும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்த ஒற்றுமையை பார்த்து எதிரிகள் நம்மீது தாக்குதல்கள் தொடுக்க பயப்படுவார்கள். ஒற்றுமையே சமுதாயத்தின் பலம் என்றெல்லாம் ஒற்றுமையை குறித்து நீண்ட நெடிய உரைகள் நிகழ்த்தும் இமாம்கள் மேற்கண்ட ஹதீஃத்களில் உள்ளவாறு செயல்பட்டால் மட்டுமே உண்மையான ஒற்றுமை முஸ் லிம்களிடத்தில் ஏற்படும்.

இதை விடுத்து ஜும்ஆ தொழுகையில் மட்டும் “”உங்களில் வரிசைகளை சரிசெய்து கொள்ளுங்கள்” என்று வெற்று சடங்கைப் போன்று கூறுவதனால் நிச்சயமாக எந்த ஒரு பயனும் ஏற்படாது. இதை நாம் கண் கூடாகவே பார்த்து வருகிறோம். ஆகவே தொழுகை நடத்தும் இமாம்களே! நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி ஒவ் வொரு தொழுகையிலும் வரிசைகளை சரி செய்ய முன்வந்து சமுதாய ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Previous post:

Next post: