மாட்டிற்கும் மனிதனுக்கும் நன்மை..தீமை தரும் பசுமை செல்வம்!

in 2018 ஜனவரி,அறிவியல்

மாட்டிற்கும் மனிதனுக்கும் நன்மை..தீமை தரும் பசுமை செல்வம்!

( SUNLIGHT+CHOLOROPHYLL= ATP & PHOTOSENSITIZATION )

  • எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7

இந்த உலகத்தில் மனிதர்கள் செல்வத்தை தேடி அடைந்திட வேண்டும் என்று பலவாறாக முயற்சி செய்கிறார்கள்.ஆயினும் இப்படி கடினமாக தேடிய செல்வம் அவர்களுக்கு நன்மை அளிக்குமா? தீமை அளிக்குமா என்பதை நபி ஸல் அவர்கள் கால்நடைகளை உதாரணமாக காட்டி விளக்குகிறார்கள். இந்த ஹதீஸில், ஒரு நவீன அறிவியல் உண்மை புதைந்துள்ளது. அதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.


Image result for https://farmerdavidbarton.files.wordpress.com/2015/08/cattle-grazing-aug-15.jpg
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று, ‘எனக்குப் பின், உங்களின் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள்வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட விருப்பதைத்தான்என்று கூறிவிட்டு, உலகின் அழகையும் செழிப்பையும் கூறினார்கள். (அவற்றில்) முதலில் ஒன்றைக் கூறி, பிறகு மற்றொன்றை இரண்டாவதாகக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை, தீமையைக் கொண்டு வருமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு பதிலளிக்காமல் மெளனமாக இருந்தார்கள்.

இதைக் கண்ட நாங்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) அருளப்படுகிறதுஎன்று கூறிக் கொண்டோம். மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பது போல் (ஆடாமல் அசையாமல்) மெளனமாக இருந்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?’ என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, ‘(உண்மையிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்) நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வராது தான். மேலும், நீர்நிலைகளின் கரைகளில் தாவரங்கள் விளையும் போதெல்லாம் அவற்றைக் கால்நடைகள் மேய (அவை நச்சுத் தன்மையுடைய புற்பூண்டுகளையும் சேர்த்துத் தின்பதாலும் அதிகமாகத் தின்று விடுவதாலும்) அவை அவற்றை வயிற்று நோயால் கொன்று விடுகின்றன அல்லது மரணத்தின் விளிம்புக்கே கொண்டு போகின்றன பசுமையான (நல்லவகைத்) தாவரங்களை (தாங்கும் அளவுக்கு) உண்பவற்றைத் தவிர.

அவை அவற்றை வயிறு நிரம்ப உண்டு, சூரியனை (வெப்பத்திற்காக) முன்னோக்கி நிற்கின்றன. பிறகு சாணம் போட்டு சிறுநீர் கழித்துவிட்டு (செரித்தவுடன்) மீண்டும் மேய்கின்றன. (இவ்வாறே) இச்செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதைகளுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அச்செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச்செல்வம் மறுமை நாளில் அவனுக்கெதிராக சாட்சி சொல்லும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்; அபூ  ஸயீத் அல் குத்ரீ (ரலி);ஆதாரம்:  புகாரி 2842, 1465, 6427, முஸ்லிம் 1901.

 

உலகம் பசுமையானது.. இந்த பசுமைதான் அனைத்து உயிர்களின் உணவுச் சங்கிலியை துண்டு படாமல் பிணைத்து, இணைத்து செல்கிறது. பூமியில் உள்ள அனைத்துத் தாவரங்களும் தங்கள் இலைகளில் சூரிய ஒளியை கிரகித்து ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலம் பச்சையம் (Cholorophyll) என்ற சக்தியை சேகரிக்கின்றன. இந்த பச்சையம் உள்ள இலைகள், புல் பூண்டுகளை கால் நடைகள் மேய்ந்து சக்தி பெறுகின்றன. மனிதனும் கீரை,காய்கறி போன்ற பச்சயத்தை நேரடியாக உண்டும், பச்சையத்தை புரோட்டினாக மாற்றி வைத்துள்ள கால்நடைகளின் மாமிசத்தை உண்டும், தன் சக்தியை பெற்றுக்கொள்கிறான்.

நன்மையைத் தரும் செல்வம் எப்படி தீமையாக  மாறுகிறது என்பதை நபி ஸல் அவர்கள் கால்நடைகள் மேயும் புற் பூண்டுகளை உதாரணம் காட்டி எச்சரிக்கிறார்கள். பசுமையான புற்களை வயிறு நிரம்ப மாடுகள் மேய்கின்றன. ஆனாலும் சில சமயம் வயிறு புடைக்க தின்பதாலும், சமயங்களில் நச்சுத்தன்மையுள்ள புற், பூண்டுகளையும் சேர்த்து மேய்ந்து விடுவதாலும், அவைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கவும் நேரிடுகிறது என்று கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் இப்படி மேயும் மாடுகள் சூரியனை முன்னோக்குவதாக கூறுகிறார்கள்.

ஆடு,மாடு போன்ற கால்நடைகள் புற் பூண்டுகளை மேய்ந்து சூரியனை முன்னோக்கி அசைபோடுவதால் நன்மையும் தீமையும் ஏற்படுமா? ஆம்! நன்மையான பசுமையான தாவரங்களை உண்பதால் நன்மையையும் தீமையும் ஏற்படத்தான் செய்கிறது.எப்படி?நவீன அறிவியல் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

கால் நடைகளுக்கு வரும் பல நோய்களில் ஒன்றுதான்“போட்டோசென்சிடிசெஷன்” (Photosensitization) என்று சொல்லக்கூடிய தோல் புண் நோய். ஆடு,மாடு,குதிரை போன்ற கால்நடைகளை இந்த நோய் தாக்குகிறது. இந்த நோய் இரு காரணங்களால் உண்டாகிறது. (Primary photosensitization and Secondary photosensitization) ஒன்று, கால்நடைகள் அளவுக்கு மீறி புற்களை வயிறு புடைக்க தின்று அவைகளை  கல்லிரலால் (Liver) முழுமையாக ஜீரணிக்க முடியாமல்,, எஞ்சிய புற்களில் உள்ள பச்சையம் என்ற குளோரபில் இரத்தத்தில் கலந்து தோலின்  மேற்பரப்பிற்கு வந்து விடுகிறது.

இந்த குளோரோபில் (Cholorophyll) மேல் தோலில் தங்கி சூரிய ஒளியின் புற உதா கதிர்(Ultra-Violet rays) களைக் கிரகித்து, தோலில் மெலனின் (Melanin) என்ற நிறமி இல்லாத பகுதியை சேதப்படுத்தி தோலை புண்ணாக்கி கொன்று விடுகிறது என்று நவீன அறிவியல் கூறுகிறது.

Image result for cow PHOTOSENSITIZATION(Green forage plants generally contain a lot of chlorophyll. “In the healthy animal, phylloerlythrin is absorbed in the circulation that goes through the liver. If the liver is doing its job, it conjugates the phylloerythrin and excretes it in bile,

When liver function is impaired, however, the byproducts of chlorophyll are not properly eliminated. They spill into the blood, reaching capillaries in the skin, where they produce the photosensitization reaction.

“When too much phylloerythrin moves into the skin, photosensitization occurs when sunlight hits the skin. Although this type of photosensitization is most common when grazing green pastures.)

இரண்டாவதாக, கால்நடைகள் மேயும்போது, சில நேரங்களில் சில விஷச் செடிகளைகளையும் சேர்த்து மேய்ந்து விடுகின்றன.இந்த விஷச் செடிகளில் உள்ள விஷமானது கால்நடையின் ஈரலைப் பாதித்து விடுவதால் அவை  செயலிழந்து, விஷமானது இரத்தத்துடன் கலந்து தோலின் மேற்பரப்பில் தங்கி, சூரிய ஒளியை கிரகித்து (Photo active agent) புற ஊதா  கதிர்கள் (Ultra-Violet  rays)மூலம் தோல் பரப்பு புண்ணாகி இறந்து விடுகின்றன.

  நீர்நிலைகளின் கரைகளில் தாவரங்கள் விளையும் போதெல்லாம் அவற்றைக் கால்நடைகள் மேய, அவை நச்சுத் தன்மையுடைய புற்பூண்டுகளையும் சேர்த்துத் தின்பதாலும் அதிகமாகத் தின்று விடுவதாலும் அவை அவற்றை வயிற்று நோயால் கொன்று விடுகின்றன. என்று நபி (ஸல்) அவர்கள் அன்று கூறியதை (புஹாரி) அப்படியே, இன்று நவீன அறிவியல் ஆய்வாளர்களும் கூறுவது  சிந்திக்க வேண்டிய  ஒன்று.

 

 ( “The poisonous plant  as a  prime culprit in  damaging the  liver…This damage can be caused by a multitude of things, including blue-green algae. When it blooms on standing water and ponds in late summer, it contains a toxin that affects the liver,” says Stan Casteel, professor of toxicology, College of Veterinary Medicine, University of Missouri.)

http://www.beefmagazine.com/nutrition/why-photosensitization-cattle-can-be-serious-problem

சூரிய ஒளியின் புற ஊதா கதிர்கள், கால்நடைகளின் செல்களில் ஊடுருவி பச்சையம் என்ற குளோரோபில் செரிப்பதற்கு உதவுகின்றது. அதேசமயம் வயிறு புடைக்க உண்ணுவதாலும்,விஷமுள்ள களைச்செடிகளை உண்ணுவதாலும், ஈரல் செயலிழந்து குளோரோபில்லில் உள்ள பைலோஎரித்திரின் (Phylloerythrin) எனும் நச்சுக்கள் இரத்தத்தில் கலந்து, தோலின் மேற்பரப்பில்  தங்கி,சூரிய ஒளியுடன் வினை புரிந்து தோலை அரித்து புண்ணாக்கி கொல்லுகின்றன.

Image result for panaoromic eye one visionஇன்றைய நவீன அறிவியல் கூறும், சூரிய ஒளியால் ஏற்படும் இரு நோய்க் காரணிகளையும் ( Primary sensitization and Secondary sensitization) நபி (ஸல்) அவர்கள் அன்றே கூறியது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று.

சூரிய ஒளி படாமல் நிழலில் மேயும் போது, இந்த தோல் நோய் தாக்குவதில்லை. இந்த அறிவியல் எல்லாம் இருபதாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட மருத்துவ உண்மைகள். ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எந்த ஒரு மனிதராலும் முன்னறிவிக்க நிச்சயமாக முடியாது. ஆடு,மாடு,மனிதர்களைப் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களால் மட்டுமே இந்த நவீன அறிவியல் உண்மைகளை முன்னறிவிக்க முடியும்.

அவை அவற்றை வயிறு நிரம்ப உண்டு, சூரியனை (வெப்பத்திற்காக) முன்னோக்கி நிற்கின்றன…..” நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மாடுகள் மேயும் போதும்.ஓரிடத்தில் அமர்ந்து அசை போடும்போதும் அவை பொதுவாக வடக்கு – தெற்க்காகவே இருப்பதாக ஒரு ஜெர்மன் அறிவியல் ஆய்வு கூறுகிறது. கால்நடைகள் எந்த திசையை நோக்கியவாறு புல் மேய்வதும், அமர்ந்து அசைபோடுவதும் இருக்கிறது என்பதை கண்டறிய, ஆறு கண்டங்களிலும் உள்ள சுமார் எட்டாயிரம் பசுமாடுகளை கூகுள் எர்த் (Google Earth) படங்கள் மூலம் ஆய்வு செய்து,அவைகள் வடக்கு,தெற்கு காந்த புல திசை நோக்கியே அமர்வதாக அறிவித்தனர்

.

Image result for cattle vision rangeகால்நடைகள் மேயும்போதும், அமர்ந்து அசைபோடும்போதும் அவை காந்த புலத்தை முன்னோக்கி  வடக்கு தெற்காக அமர்கின்றன. இப்படி அமர்வதன் மூலம் இரண்டு பக்க கண்களும் சூரியனை கிழக்கு, மேற்காக நோக்க முடிகிறது கால்நடைகளின் கண் அமைப்பிற்கும்,மனிதர்களின் கண் அமைப்பிற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. நம்மால் 180 டிகிரி கோணத்தில் மட்டுமே பார்க்க முடியும். கண்ணுக்கு எதிரே உள்ள காட்சிகளை நம்மால் துல்லியமாக பார்க்க முடியும்.மாடுகளால் நம்மைவிட அதிகப்பரப்பில் 300 டிகிரி கோணத்தில் பார்க்கமுடிந்தாலும்,முகத்திற்கு நேர் எதிரே துல்லியமாக (Narrow  binocular vision-two eyes) பார்க்க முடியாது, கண்களின் இரு பக்கவாட்டுப் பரப்பை தெளிவாக பார்க்கமுடியும். (Panoramic vision-one eye)

சூரிய ஒளியால் ஜீரண சக்தியை தரும் வைட்டமின் D.

.மேலும் சூரிய ஒளி உடல் முழுவதும் பட்டு வைட்டமின் D உற்பத்திக்கு வழியமைக்கிறது. இந்த வைட்டமின் D ஜீரண சக்தியை தூண்ட உதவுகிறது. மாடு அடிக்கடி தான் தோல் பரப்பை நாக்கால் நக்கிக்கொண்டே இருக்கும். அதன் காரணம் மேற் தோலில் உற்பத்தியாகும் வைட்டமின் D யை சுவைத்து கிரகித்து ஜீரணத்திற்கு அனுப்புவதே! “அவை அவற்றை வயிறு நிரம்ப உண்டு, சூரியனை (வெப்பத்திற்காக) முன்னோக்கி நிற்கின்றன. பிறகு சாணம் போட்டு சிறுநீர் கழித்துவிட்டு (செரித்தவுடன்) மீண்டும் மேய்கின்றன. என்று நபி (ஸல்) அவர்கள் மிகத்துல்லியமாக ஜீரண சக்திக்கு சூரிய வெப்பம் அவசியம் என்று அறிவியல் உண்மையை அன்றே கூறி னார்கள்.

மனோ இச்சைப்படி அவர் பேசுவதில்லை. அவர் பேசுவது அறிவிக்கப்படும் செய்தியைத்தவிர வேறில்லை.   அல் குர்ஆன்.53:3,4.

 

(Vitamin D is called the sunshine vitamin because ultraviolet light acting on a compound on animal skin changes that compound into vitamin D. Vitamin D increases the absorption from the digestive tract and metabolic use of calcium and phosphorus. Some of the vitamin D3 formed in and on the  skin ends up in  the digestive tract as many ruminant animals consume as they lick their skin and hair.)

அது மட்டுமல்லாமல் கால்நடையின் மேற்பரப்பில் படும் சூரிய ஒளியானது அதன் திசுக்களில் ஊடுருவி அங்குள்ள குளோரோபில்லுடன் வினை புரிந்து “அடினோசைன் டிரை பாஸ்பேட்”(ATP- Adenosine-5 tri phosphate) எனும் சக்தியை உற்பத்தி செய்வதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. Journal of Cell Science in a study titled, Light-harvesting chlorophyll pigments enable mammalian mitochondria to capture photonic energy and produce ATP.

 

தமிழ்நாட்டு பசுக்களில் காராம் பசு என்ற ஓர் நாட்டு மாடு உள்ளது. காரி-கார் என்றால் கருப்பு என்பது பொருள். இந்தப்பசு உடல் முழுவதும் கருப்பு நிறமாகவே இருக்கும் நாக்கு முதல் மடிக்காம்பு வரை. காராம் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. கருப்புத்தோல் கொண்ட பசு, சூரிய ஒளியை கிரகிக்கும் தன்மை கொண்டது. இதனால், அதன் பாலில் கூடுதல் சத்துக்கள் இருக்கின்றன. காராம் பசுவின் பால் கெட்டியாக இருப்பதோடு, அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய், மணமாகவும் இருக்கும். என்று கூறப்படுகிறது கருப்பு நிறம் அனைத்து சூரிய ஒளிப்பட்டைகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும் என்பது அறிவியல்.

 

தாவரங்களின் இலைகளில் சூரிய ஒளி பட்டு, ஒளிச்சேர்க்கை மூலம் பச்சையம் என்ற குளோரபில் சக்தியை தயாரிக்கின்றன. இந்த குளோரோபில் புற்களை, கால்நடைகள் சூரிய ஒளியில் மேய்வதன் மூலம் உடல் வளர்ச்சிக்கு தேவையான சக்தி என்னும் நன்மையை பெறுகின்றன. அதே சமயம்,அதீத ஆசையால் வயிறு புடைக்க தின்றும், விஷச்செடிகளைத் மென்றும் தங்களுக்குத் தாங்களே தீமை என்னும் நோயை பெற்றுக்கொள்கின்றன.

 

இதேநிலையில்தான்மனிதனுமிருக்கின்றான்.பசுமையானதும், இனிமையானதுமான இவ்வுலகில் செல்வம் என்ற நன்மையைத் தேடி எங்கெங்கோ அலைந்து திரிகிறான்.தேடிய செல்வம் ஹலாலான வழியில்  வந்ததா, அல்லது ஹராமான வழியில் வந்ததா என்று கவலைப்படாமல் அள்ளித் தின்கிறான். அந்தோ பரிதாபம்! இறுதியில்  விஷச் செடி தின்ற மாடு போல், அவன் தேடிய ஹராமான செல்வம் மறுமையில் அவனுக்கு எதிராக நின்று நரகில் தள்ளுகிறது.ஹலாலாக சம்பாதித்த செல்வம், அவனுக்கு அரணாக நின்று சுவனத்தை தருகிறது.

 

கண்மூடித்தனமாக மேயும் மாடுகளைப்போல் மனிதர்களும் இருக்கக்கூடாது. அல்லாஹ் வழங்கிய பகுத்தறிவின் மூலம் சிந்தித்து, ஹராம்,ஹலால் பார்த்து பசுமையான,இனிமையான உலகச் செல்வத்தை தேடும் போது, இந்த நன்மையான செல்வம் மறுமையிலும் நன்மை எனும் சுவனத்தையே தரும்!

   

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக்  கூறியுள்ளோம்.      அல் குர்ஆன்.39;27

 

Previous post:

Next post: